01 May, 2011

ஆன்லைன்ல யாராவது புத்தகம் வாங்கி இருக்கீங்களா!!!ப்லீஸ் ஹெல்ப்

3 சந்தேகங்கள்

 1) ஜெயா டீவில மந்திரம் ஒரு தந்திரம்னு ஒரு மேஜிக் நிகழ்ச்சி வருது.அதுல அவர் பண்ற மேஜிக்லாம் ரொம்ப ஆச்சர்யமூட்டும் விதத்துல இருக்கு.பொதுவா எனக்கு மேஜிக் மேல அவ்வளோ நல்ல அபிப்பிராயம் கடயாது.இருந்தாலும் இந்த நிகழ்ச்சி ரொம்ப பிரம்மிக்க வைக்குது!!!!இப்போ கேள்வி-- அவர் பண்ற மேஜிக் எல்லாம் நிஜமாவே பண்றாரா இல்ல காமரா ட்ரிக்கா!!!!! பார்த்தவங்க,விஷயம் தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்!!!!

***********************************

2)டாடா மீதும் அவர்களுடய கம்பெனி பொருட்கள் மீதும் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பவள் நான்!!!! அவருடய வாழ்க்கை வரலாறு நிறய பேருக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை!!!! ரொம்ப இன்ஸ்பைரிங்கா இருக்கும்!!!நான் பதிவா போடறேன் சமயம் கிடைக்கும்போது!!!! அவர்களுடய குழுமத்துல இருந்து டாடா ஃபோட்டான் ப்லஸ் அப்படிங்கற ப்ராடக்ட் பெஸ்ட் ப்ராடக்ட் ஆப் த இயர் விருது வாங்கிருக்கு.டாடா ஃபோட்டான் ப்லஸ் மட்டும் இல்ல அந்த வகைல வர்ர யூ.எஸ்.பீ மோடம் எதுவுமே நல்ல சர்வீஸ் குடுக்கல!!!! நான் உபயோகித்தபோது 3ஜி வரவில்லை!!! இனிமேலும் அது மற்ற நாடுகள்ள வந்த அளவு இங்க ரீச் ஆகுமான்னு தெரியல!!!!  எந்த அடிப்படைல இந்த பொருளுக்கு பெஸ்ட் ப்ராடக்ட் விருது குடுத்தாங்க!!!!!! இப்போ என்னோட சந்தேகம் எங்கிட்ட தண்டமா ஒரு டாடா ஃபோட்டான் யூ.எஸ்.பி மோடம் கெடக்கு.அதை எப்படி டிஸ்போஸ் பண்றதுன்னு கொஞ்சம் சொல்லுங்களேன்!!!

**************************************

3)லாஷ்ட்டா ஒண்ணு!!! ஆன்லைன்ல யாராவது புத்தகம் வாங்கி இருக்கீங்களா!!! எந்த தளத்தில்!!! எப்போ...அதை பத்தி கொஞ்சம் விவரம் சொன்னீங்கன்னா எனக்கு ரொம்பவும் உபயோகமா இருக்கும்!!!! எதாவது ஹிட்டன் காஸ்ட் இருக்கா ஏமாத்திபுடுவாய்ங்கேளா!!!! அவசரமாக 1 புத்தகம் தேவைப்படுகிறது!!!!அதனால ப்லீஸ் ஹெல்ப்

விஷஸ் !!!!

நம்ம கே.பாலச்சந்தருக்கு தாதா சாகேப் பால்கே(டைப் அடிக்கரத்துக்குள்ள மூச்சு முட்டுது!!! யப்பா)  விருது குடுத்துருக்காங்க!!!யூ ஆர் ரியல்லி க்ரேட் சார்!!!! ஹாட்ஸ் ஆப்!!!
மே 1 இந்த பதிவ போடுவதால்

1)இனிய மே தின வாழ்த்துக்கள்!!!
2)ஹாப்பி பர்த்டே தல!!! இந்த வேஉஷமாவது ஒரு ஹிட்டு குடுங்க...ரொம்ப நாளாச்சு உங்க ஹிட்ட பாத்து!!!!

12 comments:

  1. நான் பிசினெஸ் ஸ்டான்டார்ட், எகானமிஸ்ட், இந்தியன் பிளாசா, லாண்ட்மார்க் ஆன் நெட், ப்ளிபார்ட், அமேசான், ஹார்வர்ட் பிசினெஸ் பப்ளிஷேர் போன்ற நிறுவனங்களில் இணையம் மூலம் புத்தகங்கள் வாங்கி உள்ளேன்.
    புத்தக விலை, தபால் கட்டணம் இருந்தால் அதை மட்டுமே வாங்குவர்.

    சில நேரங்களில் இணையம் மூலம் வாங்கும் பொழுது தள்ளுபடியும் கொடுப்பர்.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. மன்னிக்கவும் தொலைபேசி எண்;- 04286 223233

    ReplyDelete
  4. வணக்கம் கிருத்திகா அவர்களே,

    உங்களைப் போன்ற புத்தக பிரியர்களுக்காகவே நாங்கள் ஒரு இணையதளம் நடத்திவருகிறோம். எங்களது நிறுவனத்தின் பெயர் ஜீவா புத்தகாலயம். நாமக்கல்லில் செயல்படுகிறது. ஆன்லைனில் புத்தகங்களை பெற www.noolulagam.com இணையதளத்திற்கு செல்லவும். இவற்றில் நீங்கள் உருப்பினர் ஆகலாம். மேலும் உங்களுக்கு தேவையான புத்தகங்களை ஆர்டர் செய்யலாம்.. 500 ரூபாய்க்கு மேல் ஆர்டர் செய்தால் பார்சல் செலவு இலவசம். மேலும், குறிப்பிட்ட புத்தகங்களுக்கு தள்ளுபடியும் உள்ளது. 10%, முதல் 25% வரை. தொலைபேசி எண்;- 04286 223233

    ReplyDelete
  5. oasiyila books thedura aalunga naan... mannichchukkunga...
    oasiyila ethaavathu book venumnaa sollunga iruntha thedi tharen...

    ReplyDelete
  6. கிருத்திகா :

    நான் இங்கிருந்து நிறைய புத்தகங்கள் வாங்கியுள்ளேன்... ட்ரை பண்ணலாமே!!

    http://www.udumalai.com/

    ReplyDelete
  7. பாரிசில் இருந்து உடுமலை.கொம்மில் வாங்கினேன். மிகச் சிறந்த சேவை.

    ReplyDelete
  8. மெஜிக்கைக் கண்கட்டு வித்தை என்பார்கள்; வீடியோ, தொலைக்காட்சிக் காலத்துக்கு முன்பே இவை இருக்கின்றன. சிறந்த பயிற்சியுடன் , துரிதமாக எதையும் செய்வது, குறைந்த ஒளி ,கறுப்புப் பின்னணி, கறுப்பு உடுப்பு, பெரிய மேசை, அதை மூடிய துணி, கட்டாயம் கோட் சூட்; அல்லது உடலை மூடிய உடைகள் என எம் கண்ணுக்கு இலகுவில் தெரியாமல் மறைக்கக் கூடிய வகையில் யாவும் தயாரிக்கப்பட்டிருப்பதால், அவை தெரிவதில்லை.
    அத்துடன் பலர் ஏதையாவது பேசிக்கொண்டே கவனத்தைக் கலைப்பதில் குறியாக இருந்து வெல்வார்கள்.

    ReplyDelete
  9. நண்பர் யோகன் சொன்னது போல்தான். மேஜிக் என்பது கடும் பயிற்சியின்காரணமாக பார்ப்பவர்களை மகிழ்விக்க நடத்தப் படும் நிகழ்ச்சி. மேஜிக் கலைஞர்களின் உழைப்பைப் பாராட்ட வேண்டும், அவர்கள் மந்திரக் காரர்களாக நினைத்து கேவலப் படுத்த வேண்டாம்

    ReplyDelete
  10. Udumalai's service is very crappy.

    ReplyDelete
  11. http://www.noolulagam.com/ people delivered to Calcutta in a very short period. The package was well packed. My vote is for them

    ReplyDelete