Showing posts with label பாடல்கள். Show all posts
Showing posts with label பாடல்கள். Show all posts

04 September, 2011

எனக்கு பிடித்த பாடல்கள்

ஹலோ மக்களே!!!
ரொம்ப நாளா எழுதவே வரதில்ல!!! இன்னைக்காவது ஒரு போஸ்ட் போட்டுரனும்னு முடிவோட வந்துருக்கேன்!!!  எனக்கு பிடித்த பாடல்கள் பத்தி நான் ஆயிரம் பதிவு போடலாம்!! முடிவே அடையாத டாபிக் இது!!! அப்பபோ நியாபகம் வர வர எழுதறேன்!!! பாடகர்/பாடகி ஒருத்தரை எடுத்துகிட்டு அவங்களோட சூப்பர்/ எனக்கு பிடிச்ச பாட்டுகளை பத்தி சொல்லலாம்னு முடிவெடுத்துருக்கேன்!!!

அதுக்கு முன்னாடி சில பதிவர்கள் செய்யர ஆக்ஷன்ஸ் பத்தி சொல்லணும்!! ஆகா ஹன்சிகா,அனுஷ்க்கா இவங்களை வெச்சு எப்டி எப்டிலாம் காமெடி பண்றாங்க!!!! மை டியர் பெண் பதிவர்களே!!! நாமளும் இப்படி ஒரு காமெடி தலவலிய செய்தா எப்டி இருக்கும்!! உதாரணத்துக்கு ஜெயம் ரவியின் ஸ்மார்ட்னெஸ் , சிம்புவின் சார்ம்(கஷ்ட காலம்), ஷாஹித் கபூரின்  க்யூட்னெஸ் இப்டி எதுனா எழுதலாமா!!!(ஏற்கனவே முடியல...இதுல இந்த கண்றாவி வேறயா!!!)

ஒகே ஒகே!!!( படம் பேரு இல்லைங்க...நெஜமாலுமே ok) அடுத்த விஷயத்துக்கு ஜம்ப் பண்ணலாம்!!!

நான் பாட்ட பத்தி எழுதறேன்!!! பாடினவங்கள ஈசியா கண்டு பிடிசுடலாம்!!! அதனால அவங்களை பத்தி கடசியா!!

1) ஒரு தெய்வம் தந்த பூவே பத்தி சொல்லவே வேணாம்!!! அந்த ஹம்மிங்குக்காகவே அதை எத்தன தடவ வேணாலும் கேக்கலாம்!!!!

2) நான் சீனியில் செய்த கடல்!!!!! அப்டின்னு ஆரமிச்சாலே சும்ம சர சரன்னு எகிறும் பல்ஸ்!!

3)வெயில் படத்துல காதல் நெருப்பின் நடனம் பாட்டும் ரொம்ப சூப்பரா இருக்கும்!!!

4) விசில் படத்துல கிறுக்கா கிறுக்கான்னு ஒரு பாட்டு...செம்ம பீட் சாங்க் அது!!!

5)உயிரே உன்னை உன்னை எந்தன்!!!!! இது ஒரு புது டைமென்ஷன் சாங்க்!!!

அவங்க பாடினதிலயே மாஸ்டர் பீஸ் இதெல்லாம்!!!
நம்ம தலைவருக்கும் இவங்களுக்கும் செம ராசி!! இவங்க பாடின பாட்டு சூப்பர் டூப்பர் ஹிட்!!

எ.டு
1)சஹானா சாரல் தூவுதோ!!!
2)கிலிமஞ்சாரோ !!!

அப்பறம் ஹாரிஸ்ஜி மியூசிக்லயும் இவங்க ஜொலிப்பாங்க!!

எ.டு
வாராயோ வாராயோ - ஆதவன்

இன்னும் நெறய இருக்கு!!! சட்டுனு நியாபகம் வந்தததை ரெகார்ட் பண்ணிட்டேன்!!!

போனஸ் ஃபொடோ!!

சூப்பரா!!!!

மீண்டும் சந்திப்போம்!!!
டாடா