21 August, 2009

தலைவா... எதிர்பார்க்கின்றோம் உங்களை...வெகு விரைவில்...

எந்திரன் படம் ரிலீஸான பிறகு, அரசியலில் வருவது குறித்து ரஜினிகாந்த் இறுதி முடிவு எடுப்பார் என்று அவரது அண்ணன் சத்யநாராயண ராவ் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த ஆண்டியப்பனூரில் உள்ள பாப்பாத்தியம்மன் கோயிலில் நடைபெற்ற ஆடிப் பெருக்கு விழாவில் அன்னதானம் வழங்க வந்ததார், ரஜினியின் சகோதரர் சத்யநாராயண ராவ்.

அப்போது நிருபர்களிடம் அவர் கூறுகையில், "எங்கேயோ பிறந்து, தமிழகம் வந்து அனைவரின் மனத்திலும் தம்பி ரஜினி நீங்காத இடம் பிடித்துவிட்டார். அவருக்கு நல்லது செய்ய மட்டும்தான் தெரியும். எப்போதும் மக்களைப் பற்றி சிந்திக்கும் இதயம் அவருக்கு.

மக்கள் விரும்பினால் அவர் அரசியலுக்கு வருவார். இது குறித்து எந்திரன் படம் வெளிவந்த பிறகு விவாதிக்கப்பட்டு

முடிவெடுக்கப்படும். அவரே இதுபற்றி தெளிவாகக் கூறிவிட்டதால், ரசிகர்களாகிய நீங்கள் எந்த குழப்பத்துக்கும் ஆளாகத் தேவையில்லை. நிச்சயம் தமிழகத்துக்கு நல்லது எதுவோ அதைத்தான் தம்பி செய்வார்.

தம்பி வந்தால், நிச்சயம் இன்றைக்கு உள்ள பண அரசியலுக்கு முடிவு கட்டுவார். அவருக்கு இதுபோன்ற சூழலே பிடிக்காது. ஆண்டவன் என்ன கட்டளை இடப் போகிறாரோ, பொறுத்திருந்து பார்ப்போம்," என்றார் சத்யநாராயண ராவ்

மேலும், "தற்போது கிருஷ்ணகிரி அருகே நாச்சியார்குப்பத்தில் எங்கள் தாய், தந்தை நினைவாக திருமண மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. நூலகம், மக்களுக்கு முழுமையாக பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க திட்டமிட்டுள்ளோம். எந்திரன் படம் வெளிவந்த பிறகு மணி மண்டபம் கட்ட இருக்கிறோம்," என்றார் அவர்.

1 comment:

  1. கிருத்திகா...

    வ‌ரும் செய்திக‌ளை விடுங்க‌ள்...

    உங்க‌ளின் ஆழ்ம‌ன‌திலிருந்து சொல்லுங்க‌ள்... ர‌ஜினி அர‌சிய‌லுக்கு வ‌ர‌ வேண்டுமா, வேண்டாமா??

    வ‌ர‌ வேண்டும் என்றால் ஏன்??
    வ‌ர‌ வேண்டாம் என்றால் ஏன்?

    என‌க்காக‌ ஒரு ப‌திவாக‌ எழுதினாலும் ச‌ரி... எழுதுவீர்க‌ளா கிருத்திகா??

    ReplyDelete