09 November, 2009

பெண்கள் ஸ்பெஷல்...கண்டிப்பாக ஆண்கள் படிக்கவும்



என்னை இந்த பதிவை எழுதுமாறு தூண்டிய நிகழ்ச்சி--((யார் மனதையும் புண்படுத்த அல்ல..இருந்தால் மன்னிக்கவும்)
                                           நல்ல ஜோனு மழை......எவ்வளோ நாள் தான் வீட்டுலயே உக்காந்து இருக்குரது...சரி எங்கயாவது வெளில போவோம் அப்டின்னு தில்லா கிளம்பியாச்சு....நமக்கு என்ன வேலை வெளில...
1)ப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு போறது
2)ப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு போறது
                     ஜாலியா நானும் என் நண்பியும் கடைக்கு கெளம்பிட்டோம்....இப்போதான் டுவிஷ்டு....சட சடனு அடிக்க ஆரமிச்சுது மழை...நாங்க  அங்க இருந்த ஒரு கடைல  ஒதுங்கிக்கிட்டோம்(தண்ணி நம்ம மேல பட்டாலே ஜலுப்பு புடிச்சுக்கும் ஆமாம் ).நம்ம நல்ல நேரம் அது ஒரு காஃபி கடை :)...
                                       குஷியா கடைக்குள்ள போனா  இந்த பக்கம் ரெண்டு  பசங்க டூஷன் முடிஞ்சு வந்து காஃபி + சமோசா ,இந்த பக்கம்  4  ஆண்கள் காஃபி,இப்பிடி எந்த பக்கம் பார்த்தாலும் ஆண்கள் மட்டும்தான் உக்காந்துண்டு,நின்னுண்டு  இப்படி பல போஸ்களில் மழயை எஞ்சாய் செய்துகொண்டு இருந்தார்கள்..சரி இதெல்லாம்  அந்த பக்கம்.நாங்க உள்ள போன ஒடனே  அங்கடோக்கன் குடுக்கரவரு விட்டாரு பாருங்க ஒரு லுக்கு......இது எங்க ஏரியா..உள்ள வராதே அப்டின்னு சொல்லாம சொன்னாரு....அப்படியும் விடுவோமா...முடியவே முடியாதுனு தடாலடியா 2 சமோசா வாங்கிட்டு காபி கௌண்டருக்கு (counter) போனா அங்க பேப்பர் கப் இல்லைஅப்டின்னுட்டாங்க...வேணும்னா க்ளாஸ் டம்ளர்ல குடிங்க அப்டின்னு  சொன்னாங்க...முன்னாடியே அந்த பெரியவரு சிக்னல் விட்டாரு.அலர்ட் ஆகாம போயிட்டோம்.வேணாம் அண்ணே அப்டின்னு சொல்லி பொதுவா ஒரு சிரிப்பு சிரிச்சு வெச்சிட்டு மறுபடியும் வெளியில வந்து நின்னோம்.
                                                         பக்கத்துல இருக்கர சி.டி கடைல  உச்ச ஸ்தாயில ஆறறை கோடி பேர்களில் ஒருவன் அப்டின்னு ரஹ்மான் பாடிகிட்டு இருந்தாரு.உள்ளார எட்டி பாத்தா ஏகப்பட்ட கய்ஸ் இது எங்க ஏரியா..உள்ள வராதே அப்படின்னாங்க......கொஞ்ச நேரத்துல மழை நின்னது.எப்புடியும இன்னைக்கு  காபி குடிக்காம போரதில்லைனு முடிவு எடுத்து,அடுத்த காபி கடைல  ஸ்டாப் பண்ணிணோம்.நல்ல வேளை...அங்க சுட சுட 2 காஃபிய மடக் மடக்குனு குடிச்சுட்டு(ஆஹா ஆஹா என்ன சுகம்...அடிக்கர குளிர்ல ஆவி பறக்கும்  காபி ) அங்க இருக்கரவங்களை வெற்றி பார்வை பார்த்துட்டு கெளம்புனோம்.


                        இப்போ நாம நோட் பண்ண வேண்டிய  விஷயம் என்னன்னா அந்த கடைலயும்  புல்லா ஆண்கள் தான்...
                       
                         வேற  ஒரு நாள் பானி பூரி கடைக்கு போனா அங்கயும்  ஷேம் டயலாக்.இது எங்க ஏரியா..உள்ள வராதே....
                        
                       தியேட்டர்ல  படம் பாக்க டிக்கெட்கு வரிசைல நிக்கமுடியல..அங்கயும் இது எங்க ஏரியா..உள்ள வராதே.....

                      உள்ளார தலைவர் எண்ட்ரி ....என்னமா  விசில் பறக்குது...பசங்க செம குத்து  ....நமக்கும் கால் நமனமங்கும்...ஆனா அங்கயும் இது எங்க ஏரியா..உள்ள வராதே....(என்னதான் இருந்தாலும்  அதை பார்ப்பதே தனி  சுகம்...தலிவர என்னமா  ரகளயா வெல்கம் பண்ணுவாங்க)

                     சனி,ஞாயிறு சாயங்காலம்  வெளில எட்டி பாத்தா   5,6 பேரு சேர்ந்து கிரிக்கெட் ஆடுவாய்ங்க...நமக்கு வெளயாடனும்போல குறு குறுனு ஆசயா இருக்கும்..அங்கயும்  இது எங்க ஏரியா..உள்ள வராதே....

                      இந்த ஆட்டோகாரங்களுக்கு என்னதான் அப்படி எளக்காரமோ...ரெண்டு லேடீஸ்  வண்டியில போனா என்ன வேலை காட்டுவாய்ங்க.....வழிய உடாத,ஹாரன அடிச்சு ஷப்பபபபபா.....
                  
                    இந்த அரட்டை அரங்கம்னு ஒண்ணு  வருது தெரியும்லா....அதுல பேசுர மக்கள்ள கொறஞ்சது  ஒருத்தராவது கொடுமைக்கார பொண்டாட்டி-பாவமான வீட்டுக்காரர்,வேலைக்காரி-சந்தேக பொண்டாட்டி ஜோக்கை சொல்லாம  இருக்கவே மாட்டார்....அவங்க பேசுரது நகைச்சுவையா இருக்கணும்னு எக்கச்ச்ச்ச்ச்ச்க்க்க பிட்டு.....இதுக்கு இன்னும் சிறந்த உதாரணம் நம்ம ராஜாதான்,....


                      நான் சொன்னது கொஞ்சம் தான்..இன்னும் எத்தனயோ இடங்கள்ள இதே நெலமைதான்....சில இடங்களில் வாண்டடா கூட பெண்கள் வராம இருப்பாங்க....நான் சொன்னது இந்த மாதிரி எங்க ஏரியா போன்ற மக்களை...

இது எப்போ மாறும்...33% வேண்டாம்.....அட்லீஸ்ட்  கேவலப்படுத்தாமலாவது இருங்களேன்.......
இது எல்லாருக்கும் பொறுத்தமல்ல...சில  நல்ல மனசு கொண்ட ஆண்களும் நாட்டுல  இருக்கத்தான் செய்கிறார்கள்....அவங்களுக்கு ஒரு  பெரிய சபாஷ்...அப்புறம் கீழ  சில படங்கள் இருக்கு...நானே கிறுக்குனது தான்...பாத்துட்டு அது யார்னு  சொல்லுங்க... 






 

எப்படி...யார்னு தெரியுதா ???

சொன்னது புடிச்சுருந்தா கமெண்டயும் வோட்டயும் போடுங்க...இல்லன்னா திட்டி தீட்துடுங்க....மனசுல மட்டும் வெச்சுக்காதிங்க :)

அன்புடன்
உங்கள் தோழி
கிருத்திகா


 



                            

49 comments:

  1. ஏங்க பொண்ணுங்க கடைக்கு வரக்கூட்டாதுன்னு யாரும் சொல்றதில்லைங்க. இங்க சென்னையில நிறைய இடத்துல பொண்ணுங்க கூட்டம் தான் அதிகம். சில நேரம் கூட்டமா வந்து அவங்க அடிக்குற லூட்டிய பார்க்கணும்.
    நல்லா வரைஞ்சு இருக்கீங்க. முதல் படத்துல பாலகங்காதர திலகர், ரெண்டாவது சார்லி சாப்ளின். சரியாங்க..சரி..சரி..சரி..ரெண்டாவது படம் ஹிட்லர் சரியா ??

    ReplyDelete
  2. அருமையான இடுகை. சென்னை போன்ற சில நகரங்களில் வேண்டுமானால் ஆண்களோடு சமமாக பெண்கள் காஃபி ஷாப்களில் சகஜமாக அரட்டை அடிக்கலாம் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால் சிறு நகரங்களில் ரோட்டோர டீ கடைகளில் நின்று ஒரு பெண் டீ சாப்பிட்டுக்கொண்டிருந்தால் வேற்று கிரகவாசியைப் பார்ப்பதுபோல பார்ப்பார்கள். இதில் யாரையும் குறை சொல்ல முடியாது. இதெல்லாம் தவறு என்று நினைக்கும் பெண்கள்தான் அதிகம்.

    ReplyDelete
  3. ஹலோ.. உங்க கிட்ட அப்பவே கேக்கணும்னு நெனச்சேன்.. தலைவர் ரசிகையா நீங்கள்???

    ReplyDelete
  4. ம்ம்ம்.

    சரிதான்

    இருந்தாலும்..

    ReplyDelete
  5. @ Suvaiyaana Suvai

    நன்றீ நன்றீ....வருகைக்கும் ,கமெண்டுக்கும்

    @ பின்னோக்கி
    அப்பாடா கரெக்டா சொல்லிடிங்க...ரெண்டாவது படம் சார்லி சாப்ளினை நெனச்சுதான் வரைஞ்சென்.....ஆனா அதுல ஹிட்லர் டச் வந்துருச்சு :)

    @ செ.சரவணக்குமார்

    அப்பா எங்களை புரிந்து கொள்ள ஒரு ஜீவன்....சந்தோஷமாக இருக்கு......என் அதிர்ஷ்டமா என்னானு தெரில..நாம ஒரு ஆச்சாரமான சிறு டவுன்ல மாட்டிக்கிட்டேன்...


    @ அன்புடன்-மணிகண்டன்

    ஆமாங்க.....என்னோட ப்லாக்ல டாப்புல ஒரு வாசகமிருக்கும்.அதை படிச்சிங்கன்னாலே புரிஞ்சுடும்."சக்தி கொடு"க்கு கீழ எழுதிருப்பேன்

    @ பிரியமுடன்...வசந்த்

    நன்றி,நன்றி,நன்றி
    இருந்தாலும் என்னா...உண்மை தானே அது....

    ReplyDelete
  6. படிக்கறப்போ தமாஷா இருந்தாலும், அதன் பின்னிருக்கும் உண்மை சுடுகிறது...

    கிருத்திகா ... நண்பர் சரவணகுமார் சொல்வது போல், சென்னை போன்ற சிட்டியில் அவரவர்கள் அவரவர்களின் வேலையை பார்ப்பதற்கே நேரமிருக்காது...

    ஆட்டோ ட்ரைவர்கள் எந்த ஊரில் இருந்தாலும், அவர்கள் ஒரே மாதிரி தான்... அவர்கள் திருந்த போவதில்லை... அவர்களை பற்றி பேசி எந்த பிரயோஜனமில்லை...

    //33% வேண்டாம்.....அட்லீஸ்ட் கேவலப்படுத்தாமலாவது இருங்களேன்.......//

    நீங்க‌ள் எழுதிய‌ இதை ப‌டிக்கும் போது ம‌ன‌து வேத‌னை கொண்ட‌து தோழி கிருத்திகா அவ‌ர்க‌ளே... இந்த‌ நிலைமை கூடிய‌ சீக்கிர‌ம் மாறும்...

    //கீழ சில படங்கள் இருக்கு...நானே கிறுக்குனது தான்...பாத்துட்டு அது யார்னு சொல்லுங்க... //

    முத‌ல் ப‌ட‌த்தில் இருப்ப‌வ‌ர் மீசை முருகேஷ்
    இர‌ண்டாம் ப‌ட‌த்தில் இருப்ப‌வ‌ர் ஹிட்ல‌ர் உமாநாத்

    எப்பூடி... நீங்க டெர்ரரா வரைஞ்சா, நாங்க‌ளும் டெர்ர‌ரா ப‌தில் சொல்வோம்ல‌....

    வாழ்த்துக்க‌ள் தோழி கிருத்திகா....

    (//அன்புடன்-மணிகண்டன் said...
    ஹலோ.. உங்க கிட்ட அப்பவே கேக்கணும்னு நெனச்சேன்.. தலைவர் ரசிகையா நீங்கள்???//

    ம‌ணிக‌ண்ட‌ன்... இவ‌ங்க‌ த‌லைவ‌ரின் பெரிய‌ விசிறி....)

    ReplyDelete
  7. @கிருத்திகா,
    என்னங்க இப்படி இரு பதிவு??? என்ன சொல்லுறீங்க? இதுல என்ன 33%? காசு இருந்துச்சுன்னா யார் வேண்டும் என்றாலும் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம், யாரு தடை செய்ய போறாங்க? ஆண் பெண் வித்தியாசம் இங்க எப்படி வந்துச்சு? டி-நகர் ரங்கனாதன் தெருவில் எல்லா கடையிலும் பொண்னுங்களா இருப்பாங்க, அதுக்காக பசங்களுக்கு இடமே இல்லைனு சொல்லலாமா???

    ReplyDelete
  8. EDHU ACCEPT PANNA VENDIYA ONNUTHAN
    BUT NEEGA ROATULA POGUM PODHU ENN MATHAVUNGA PATHU NATAKUREEGA COFFEE SHOPLA TOKEN PARUNGA
    COUNTER KODUKURAVARU PATHA NEEGA NOTE PANNA THAPU ELLA MATHAVUNGA NOTE PANNA THAPA
    HOW CAN WE BELIEVE THIS

    ReplyDelete
  9. நல்ல இடுகை...! டீ கடை பிரச்சினைக்கு காரணம் பெண்கள் தான். அவர்களாக வந்து டீ குடித்தால் யாரும் ஏதும் சொல்லப் போவதுமில்லை....மேலும் தென் தமிழகத்தில் கிராமத்து டீ கடையில் ஆண்களுக்கு நிகராக பெண்களையும் நீங்கள் காணலாம்......அப்புறம் ஆட்டோ ஓட்டிகள்.....அவங்க எங்க இருந்தாலும் இதே குனனலங்கலோடுதான் காணப் படுவார்கள்...! ஆனால் திரையரங்கில் கல்லூரி பெண்கள் மாஸ் கட் அடித்து விட்டு படம் பார்க்க வரும்போது திரையரங்கே அல்லோலகப்படுத்தியத்தை நான் நேரிலே பார்த்திருக்கிறேன்...!

    ReplyDelete
  10. அவ்வ்வ்வ் கண்ணாடி க்ளாஸ்ல தான் அந்தாளு டீ கொடுக்குறேன்னு சொன்னாப்பல்ல.... நீங்க பேப்பர் க்ளாஸ் கேட்டதால டீ கிடைக்கல.

    இருந்தாலும் ஒரு சில ஊர்ல இந்த மாதிரி வித்தியாசமா பார்க்கிறது நடக்கலாம். எனக்கு தெரிஞ்சு சென்னையில இல்லை.

    ReplyDelete
  11. அக்கா., பதிவு நன்றாகத்தான் உள்ளது..

    ஆனால் நீங்கள் சொல்கிற மாதிரி பெண்கள் இப்போது இல்லை என்பதே என் எண்ணம்....

    ReplyDelete
  12. Interesting to study but hard to believe...
    Anyhow the way u write is so good..

    ReplyDelete
  13. நல்ல விசயம் எழுதி இருக்கீங்க.. படிக்கப் போன இடத்துல ,வேலையா ஒரு இடம் போயிருக்கொம்ன்னா.. அங்க நம்மளை யாருக்கும் தெரியாது டீகடையில் குடிக்கலாம்..சின்ன ஊருகளில் அவங்கவங்க வீட்டு தெருமுக்கு டீக்கடைகள் அந்தந்த தெருப்பசங்களுக்கு சொந்தம்ங்கறமாதிரி தான் லுக் விடுவாங்க..

    மார்கழி பூவே பாட்டில் வர நடைபாதை ஓரடீக்கடையில் டீக்குடிக்கன்னும்ன்னு எனக்கு கூட சின்ன வயசுல ஆசை இருந்தது..

    ReplyDelete
  14. பொதுவாய் இது போல எங்க எரியா உள்ள வராத என்று நீங்கள் குறிப்பிட்ட இடங்களுக்கு என் மனைவியை அழைத்து போயிருக்கின்றேன்...4 விிடியற்காலை 4 மணிக்கு மெரினா போய் இருவரும் உட்கார்ந்து கொண்டு.. பொழுது புலர்வதும்.. ஒரு நகரம் மெல்ல துயில் கலைந்து சுறு சுறுப்பாவதை ரசித்து பார்த்து இருக்கின்றோம்.. யாரை பற்றியும் கவலைபடாமல் நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள்..

    அருமையான பதிவு..
    மனதின் எண்ணங்களை வெளிப்படையாய்...

    ReplyDelete
  15. பொதுவாக எல்லாப் பெண்களுக்கும் இதுபோன்ற அனுபவங்கள் இருக்கத் தான் செய்யும். அதை அழகாக வெளிப்படுத்தி இருப்பதே உங்களின் வெற்றி. பெருசுகள் நீங்கள் நினைத்த அர்த்தத்தில் பார்த்திருப்பார்கள் என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் இப்போதைய இளைஞர்கள் அப்படியில்லை.
    அது சரி. பெண்கள் அதிகமுள்ள இடங்களுக்கு சென்று உங்களைப் போன்ற அனுபவங்களைப் பெற்ற எங்கள் மீது பரிதாபப்படுவீர்களா?

    ReplyDelete
  16. வணக்கம் கிருத்திகா

    ம்ம்ம் வேளிகளை உடக்கும்போதுதான் உலகம் வசப்படும்
    \\இது எங்க ஏரியா..உள்ள வராதே அப்டின்னு சொல்லாம சொன்னாரு....அப்படியும் விடுவோமா...முடியவே முடியாதுனு தடாலடியா 2 சமோசா வாங்கிட்டு\\

    உடையுங்கள் வாழுங்கள்.

    நீங்க குறிப்பிட்ட விடயங்கள் பெண்களாகவே தவிர்பவை என்பதே என் எண்ணம்.

    இராஜராஜன்

    ReplyDelete
  17. @ கோபி

    //////ஆட்டோ ட்ரைவர்கள் எந்த ஊரில் இருந்தாலும், அவர்கள் ஒரே மாதிரி தான்... அவர்கள் திருந்த போவதில்லை... அவர்களை பற்றி பேசி எந்த பிரயோஜனமில்லை...////////
    ஆமாம் கோபி :)அதுக்குத்தான் இவ்வளவு பெரிய புலம்பல்

    முத‌ல் ப‌ட‌த்தில் இருப்ப‌வ‌ர் மீசை முருகேஷ்
    இர‌ண்டாம் ப‌ட‌த்தில் இருப்ப‌வ‌ர் ஹிட்ல‌ர் உமாநாத்
    //////////////////
    என்னடா காலைலேர்ந்து ஒண்ணும் நடக்கலயேனு பாத்தேன்...நடந்துருச்சு :)


    @ ..:: Mãstän ::..


    டி-நகர் ரங்கனாதன் தெருவில் எல்லா கடையிலும் பொண்னுங்களா இருப்பாங்க, அதுக்காக பசங்களுக்கு இடமே இல்லைனு சொல்லலாமா???
    ////////////
    சென்னையில இருப்பதால என்னைப்போல நடுத்தரமான வளர்ந்தும் வளராத நகரங்களில் இருப்பவர்கள் கஷ்டம் தெரியவில்லை...ஆன யோசிச்சு பாத்தா நீங்க சொல்லுரது சரிதான்..அதுக்கு கூட்டுங்கப்பா ஒரு பஞ்சாயத்த...

    @ ராம்

    நன்றி நன்றி

    @ harry @ Anbu
    மறுபடியும் அதே கதை...வளர்ந்த ஊர்களில் ப்ரச்சனை இல்லை...நடுவாந்தரமான இடங்களில் தான் இந்த பிரச்சனை
    வருகைக்கும்,கமெண்டுக்கும் நன்றி


    @ ☀நான் ஆதவன்☀

    வாங்க சார் வணக்கம்
    சென்னையில் இல்லை...ஆனா நான் சென்னை இல்லயே...
    :)
    வருகைக்கும்,கமெண்டுக்கும் நன்றி

    @யோ வாய்ஸ்

    வருகைக்கும்,கமெண்டுக்கும் நன்றி


    @ மகா

    நன்றிங்க...நம்பமுடியலைன்ன வாங்க எங்க ஊருக்கு...நான் மறுபடிஉம் அதே கடைகளுக்கு கூட்டிட்டு போரேன் .....
    வருகைக்கும்,கமெண்டுக்கும் நன்றி

    @ முத்துலெட்சுமி

    மார்கழி பூவே பாட்டில் வர நடைபாதை ஓரடீக்கடையில் டீக்குடிக்கன்னும்ன்னு எனக்கு கூட சின்ன வயசுல ஆசை இருந்தது..///////////////
    அது நிறைவேறிச்சா?? எனக்கு இன்னும் நடக்கலை...
    அதுக்குத்தான் இந்த குமுறு :)
    வருகைக்கும்,கமெண்டுக்கும் நன்றி

    @ஜாக்கி சேகர்

    வாழ்த்துக்கள்...உங்களுக்கும் ,அண்ணிக்கும் சபாஷ் :)

    வருகைக்கும்,கமெண்டுக்கும் நன்றி

    @ மகேஷ்.கி.க

    பெண்கள் அதிகமுள்ள இடங்களுக்கு சென்று உங்களைப் போன்ற அனுபவங்களைப் பெற்ற எங்கள் மீது பரிதாபப்படுவீர்களா?//////
    கண்டிப்பா...எங்கேல்லாம் அனியாயம் நடக்குதோ அதல்லாம் நாமதான் தட்டி(கீ-போர்டை தட்டி டைப் அடிச்சு) கேக்கனும்...

    சொல்லுங்க...நம்ம அடுத்த ரெய்ட் அங்கதான்

    @ வனம்

    நீங்க குறிப்பிட்ட விடயங்கள் பெண்களாகவே தவிர்பவை என்பதே என் எண்ணம்.//////////////

    ஆம்..அது சிலரை பொறுத்த மட்டில் உண்மை..ஆனா என்னை மாதிரி சிலரும்(பலர்)இருக்கிரார்களே....

    ReplyDelete
  18. தோழி கிர்த்திகாவுக்கு,

    நீங்கள் கூறியது போல் எல்லா இடத்திலும் அப்படி இருப்பதில்லை
    இப்பொழுது எல்லா பெண்களும் ஆணுக்கு சமமே.

    அருமையான பதிவுக்கு நன்றி தங்கள் கார்டூன் படங்களுக்கு ஒரு சபாஷ்

    தலைவர் ரசிகையாக இருப்பதால் இன்னும் உரிமையோடு பழகுவேன்


    அன்புடன்

    சு மகாராஜன்
    துபாய்

    ReplyDelete
  19. //கண்டிப்பா...எங்கேல்லாம் அனியாயம் நடக்குதோ அதல்லாம் நாமதான் தட்டி(கீ-போர்டை தட்டி டைப் அடிச்சு) கேக்கனும்...

    சொல்லுங்க...நம்ம அடுத்த ரெய்ட் அங்கதான்//

    ஹா...ஹா...ஹா... இதுதான் க‌ல‌க்கல் கிருத்திகா....

    ReplyDelete
  20. பெண்கள்தான் முழுமுதற் காரணம், பயம் & வெட்கம் போய் டீ கேட்டால் யாராவது ஏதாவது சொல்லுவாங்களா என்று. இது சி கிளாஸ் ஏரியா பக்கம் மிக‌அதிகம்

    ஆட்டோக்காரன் எங்கே இருந்தாலும் அது அவர்கள் புத்தி

    ReplyDelete
  21. நல்லாயிருக்கு கிருத்திகா!!

    ReplyDelete
  22. உலகத்தில இந்தியாவுல தமிழ்நாட்டுல திருப்பூர்ன்னு ஒரு ஊரு இருக்குங்க. உள்ளே வந்து பாருங்க. படிச்சவுங்க, படிக்காதவுங்க, அடிச்சு ஓடி வந்தவுங்க, மத்தவங்களை இங்கு வந்து அழ வச்சவுங்க, இருந்து ஈஈஈஈஈஈன்னு இளிச்சுக்கிட்டு வாழறவுங்க, விரட்டினால் இஇஇஇஇஇஇஇனிமேல் போக்கிடம் இல்லைங்றவுங்க............ இந்தப்பட்டியல் தொடற்ற்றற்ற்ற் ற மாதிரி இது முக்கால் பெண்கள் உலகமுங்ககககககககககககககககக

    ReplyDelete
  23. ரொம்ப நொந்து போய் இருக்கிங்க போல.. எல்லா இடத்திலும் அபப்டி இல்லை. இப்போது இந்திய தொழில் கூட்டமைப்பில் நடைபெறும் மாநாட்டு செய்திகளை பாருங்க.. பெண்களுக்கு எவ்ளோ மரியாதைன்னு தெரியும்.

    படங்கள் நல்லா இருக்கு. பார்த்தவுடன் அடையாளம் தெரிகிறது. தொடருங்கள்.

    ReplyDelete
  24. kalakura machi....!!! coll canteen la poi sapitappa onnum theriala.. inga pakkathula hotel ku thaniya poi sapitta lookae maaruthu!!!

    valthukal..

    sorry tamil la english la typinathukku!!!!

    ReplyDelete
  25. tamil manam vottu ennodathu!!!

    nalla padam varayura maami..!!
    rendavathu padathula "ART by Kiruthiga" nu eluthalayaa kannu??!!!

    ReplyDelete
  26. அட என்னங்க.. சென்னை போன்ற நகரங்கள்ல.. பெரிய பெரிய ஷாப்ப்பிங் காம்ளக்ஸ்ல பசங்களலே கலாய்க்குற அளவுக்கு பொண்ணுங்க இருக்கு..

    இது ஒரு கரை..

    நீங்க படம் பிடிச்சு காட்டுறது மறு கரை...

    என் கருத்து ரெண்டுமே தப்புதான்...

    இது ரெண்டுக்கும் நடுவில்.. பெண்ணை சக மனுஷியாக பார்க்கும் சமூகம் வேண்டும் :-)

    ReplyDelete
  27. .இல்லன்னா திட்டி தீட்துடுங்க....மனசுல மட்டும் வெச்சுக்காதிங்க//

    உங்க டீலிங்க் எனக்கு புடிச்சிருக்கு :-)

    ReplyDelete
  28. நீங்க தலிவர் ரசிகைன்னு புரியுது...

    //a normal person in this normal world..//

    நீங்க சூர்யா ரசிகையா??
    (WE R NORMAL PP.. M A NORMAL PERSON)காக்க காக்க டயலாக்..

    ச்சும்மா ஒரு டவுட்டுதான்.. இல்ல நீங்க சும்ம போட்டதா??

    ReplyDelete
  29. நான் முதல் முதல் இப்பதான் உங்க கட பக்கம் வர்றேன்..

    மனதில் தோன்றியவை..

    * டெம்ப்ளேட் கலர் நல்லா இருக்கு
    ** ப்ளாக் பேரு வேற எதுனா வெச்சு இருக்கலாம்.. (spiritual indian na???)

    * என் பின்னூட்டம் போல் நீண்டு கொண்டே இருக்காமல் சுருக்கமாக எழுதலாமே??? இன்னும் நல்லா இருக்கும்.. :-)


    அடிக்கடி வர்றேன் உங்க கட பக்கம்.. பின்னூட்ட மழை அப்பப்போ இப்பெடி பெய்யும்.. :-)

    ReplyDelete
  30. முதலில் உங்கள் வரைகலை திறனுக்கு என் பாராட்டுக்கள் . ஒருவர் திலகர் இன்னொருவர் ஹிட்லர்.

    உங்கள் இந்த பதிவில் அடிநாதமாக ஒலிப்பது pen சுதந்திரம் இட ஒதிக்கீடு போன்றவை . இவை எல்லாம் சுத்த பேத்தல் யார் உங்களுக்கு இடம் தரனும் ?... என்னத்துக்கு அவன் தரனும் இவன் தரணும்னு அடுத்தவன் கைய எதிர்பார்க்கரிங்க ?.. ஆண் பெண் பெரிய வித்திசாம் ஏதும் இல்லை . ஆண் செய்யற எல்லா வேலையும் பென்னளையும் செய்ய முடியும் வென ஆம்பளைங்க ஒரு மூணு அடி தள்ளி நின்னு செவுத்துல கோலம் போட முடியும் பெண்களல்ல இது மட்டும் தான் முடியாது . சும்மா நீ கொடேன் இல்ல நீ கொடேன்னு கேட்டுட்டு இருகதிங்க யாரும் தரவேண்டியது இல்லை எல்லாம் இருகர இருக்குதுங்க இந்த பெண்களுக்கு ஆண்களை எதாவது சொல்லலைனா முடியாது போல இருக்கு

    நீங்க இன்னும் வளரனும் கண்ணு

    பிடித்த புத்தகம் னு குமுதம் ஆனந்த விகடன் nu நீங்க சொல்லை இருக்கறப்பவே புரியுது நீங்க இன்னும் பெண்ணடிமை னு இல்லாத மாயையை எப்படி பிடிச்சுட்டு இருகிங்கன்னு .

    ReplyDelete
  31. வாங்க சார்..உங்களுக்காகதான் காத்துக்கிட்டு இருந்தேன்...அதெப்டிங்க செய்யரதெல்லாம் செஞ்சுட்டு எனக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லைங்கர ரேஞ்சுக்கு பேச்சு...
    பாய்ண்ட் நம்பர்1-
    இதுல பெண் சுதந்திரம் பத்தி நான் பேச ஆரமிக்கவே இல்லயே...லேசா ஒரு ஹிண்ட் அவளதான்...அதுக்கே இப்படி குதிக்கறிங்க....நான் எழுதி இருக்கரதுல தப்பு சொற்சுவையில் இருக்கலாம் ஆனால் பொருட்சுவையில் இல்லவே இல்லை
    பாய்ண்ட் நம்பர் 2-
    இட ஒதுககீடு வேணாம்னு தான் நான் சொன்னேன்...நீங்க அதை சரியா படிக்கலை

    பாய்ண்ட் நம்பர் 3-
    இந்த பெண்களுக்கு ஆண்களை எதாவது சொல்லலைனா முடியாது போல இருக்கு /////////////////

    இப்போ நீங்க மட்டும் அமைதியாவா இருக்கிங்க!!!!! எதிர் பேச்சு பேசலை....நாங்க பேசினா தப்பா(இதுதான் பெண் சுதந்திரம்)

    பாயிண்ட் நம்பர் 4-
    பிடித்த புத்தகம் னு குமுதம் ஆனந்த விகடன் nu நீங்க சொல்லை இருக்கறப்பவே புரியுது//////////////////////
    பின்ன சுஜாதா,பாலகுமார் அப்டின்னு பொய் சொல்ல எனக்கு அவசியம் இல்லை......
    சொல்ரததான் செய்யணும் செய்யரத தான் சொல்லனும்....

    பாயிண்ட் நம்பர் 5
    நீங்க இன்னும் வளரனும் கண்ணு ///////////
    தேவையான அளவு வளர்ந்தாச்சு கண்ணு.......நீங்கதான் கண்ணு டெவலப் ஆகனும்....

    பாயிண்ட் நம்பர் 6
    பெண்ணடிமை னு இல்லாத மாயையை எப்படி பிடிச்சுட்டு இருகிங்கன்னு//////////////////
    இதைதான் பெரியவங்க சொல்லுவாங்க பச்ச பொய் :)


    பாயிண்ட் நம்பர் 7-

    கரெக்டா கண்டுபுடிச்சிங்க ...அதுக்காக நன்றி..அதோட இப்படி வெளிப்படயா கமெண்ட் பண்ணினதை பார்க்க ரொம்ப சந்தோஷம்...வாழ்த்துக்கள்...மீண்டும் வருக :)

    ReplyDelete
  32. கடைக்குட்டி
    உங்களுக்கு 1000----------------- தாங்க் யூஸ் :)
    கலரை பாரட்டியதற்கு.....ப்லாக்குக்கு யேன் அந்த பேர வெச்சேன்னு தெரியல..ஆனா எனக்கு புடிச்சுருந்தது..அதான்..இந்தியா மேல கொஞ்சம் பற்று ஜாஸ்தி....எங்க பரம்பரை அப்படி :)
    பின்னூட்டப்புயலே அடிக்கலாம் சரியா...
    சூர்யா ரசிகைலாமில்லைங்க.....பிடிக்கும் ஆனா......மனசுல தோனிச்சு ...அதான் அப்படியே எழுதிட்டேன்......

    என் கருத்து ரெண்டுமே தப்புதான்...////////// ஆமாம் ஆமாம் :)

    ரசிக்கும் சிமாட்டி @ மை நண்பி ராம்

    நன்றீ
    நீ ப்லாக்ல எழுதேண்டி...பிளீஸ்

    ReplyDelete
  33. ஏற்கனவே வாசித்து பிரசண்ட் போட்டுட்டு போனாலும் நிதானமா பின்னூட்டம் போட புக்மார்க் போட்டுட்டு போன பதிவு இது.

    எனக்கு எத்தனை ஆண் நண்பர்கள் இருக்காங்களோ, அதே அளவுக்கு உயிர்த்தோழிகள் இருக்கிறார்கள். நாங்க என்றைக்குமே ஆண் பெண் பாகுபாடு பார்த்தது இல்லை. நாங்கள் ஒன்றாக கிரிக்கட் விளையாடியிருக்கோம், படம் பார்த்திருக்கோம், ஏரிக்கரையில் நடந்திருக்கோம்.

    ஆனால் இதில் கவலையான விடயம், பெண்களே அவர்களை இப்படி எல்லாம் செய்ய வேண்டாம் என திட்டுவார்கள், இது எங்க ஏரியா உள்ள வராத இல்ல அவங்க ஏரியா உள்ள போகாத என்பதாகிறது. ஆனாலும் பெண்களுக்கு ஒரு நீதி ஆண்களுக்கு ஒரு நீதி என்பதை நான் விரும்பவில்லை. ஆணும் பெண்ணும் சமமே. இதை ஏற்கும் நிலைக்கு எமது சமூகத்தை நாமே கொண்டு வரவேண்டும்.

    உங்களது பதிவை எனது தோழிக்கு மெயில் பண்ணியிருக்கேன்.

    ReplyDelete
  34. போட்டு தாக்கீட்டீங்களே

    ReplyDelete
  35. உண்மையில் நீங்கள் விளையாட்டாக எழுதியிருந்தாலும் கூட இந்திய தமிழக / சமூகத்தில் இது ஒரு சாபக்கேடுதான்.

    பெண்ணுக்கு இந்தச் சமூகம் பல அநீதிகளைச் செய்திருக்கிறது....அதில் இவைகள் ஒருசில.

    குறிப்பாக ரோட்டில் பெண்கள் நின்றிருந்தால் ஆட்டோக்கள் மட்டுமல்ல , டூவீலர் , கார் வாலாக்கள் கூட ஹார்ன் அடிப்பது.... கிண்டல் செய்வது இவைகளெல்லாம் ஒரு மனவியாதி...

    ஆனால் அந்த மனவியாதிக்கு காரணம் அவர்களல்ல...சமூகம் தான்...முழுக்க முழுக்க பொத்தி வைக்கப்பட்ட இச்சமூக சூழல் , ஆண் - பெண் இருபாலரும் ஒன்று சேர்ந்து கொஞ்ச நேரம் பேசுவதைக் கூட அங்கீகரிப்பதில்லை. சந்தேக நோக்குடன் பார்க்கிறது.

    இன்னும் எழுத வேண்டுமானால் நிறைய எழுதலாம்.

    ஆனாலும் , இத்தகைய சமூகப்பார்வைகளை வெளியிருந்து நாம் பார்ப்பதை விட ஒரு பெண்ணாக உங்கள் பார்வையில் கேட்பதும் , படிப்பதும் இந்தச் சமூகம் நிச்சயமாக மாறிட உதவும்.

    ஆனால் நமது துரதிஷ்டம் , இது போன்ற சமூக அவலங்களை காட்டவேண்டிய பத்திரிக்கைகள் , நடுப்பக்கத்தில் நமீதா போட்டோவை போட்டு வயிறு வளர்க்கின்றன...

    உலகத்தில் சிறந்த கலாச்சாரம் என்று நமக்கு நாமே போர்டு மாட்டிக்கொண்டு கேவலமான சமூகச்சூழலில் , அருவருக்கத்த சமூகச் சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்....!

    ReplyDelete
  36. ஆணுக்கும், பெண்ணுக்கும் சம உரிமை இருக்கின்றது. ஆனால் பெண்கள் தமது உரிமையினை விட்டுக்கொடுப்பதனாலேதான் இன்று பெண்கள் பின்தள்ளப்படுகின்றனர்.

    ReplyDelete
  37. கண்டிப்பா அடிகடி கடிக்க வருவேங்க ஏன் அப்படின உங்க கிட்ட விசியம் எதோ இருக்கு ஆனா என்னனு உங்களும் தெரியல எனக்கும் தெரியல அத கண்டிப்பா நான் தெரிஞ்சுக்குவேன் . நான் கொஞ்சம் வித்தியாசமானவன். நிற்க ( இதுக்குமேல் சுயபுராணம் ஒரு ஆண் பேசினால் பெண்ணுக்கு பிடிக்காது - உண்மையான சைகாலஜி )

    இதுல பெண் சுதந்திரம் பத்தி நான் பேச ஆரமிக்கவே இல்லயே...லேசா ஒரு ஹிண்ட் அவளதான்...அதுக்கே இப்படி குதிக்கறிங்க...

    //

    நான் சொன்னது உங்கள் பதிவில் அடி நாதமாக ஒலிப்பது என்று தான் . குதிக்கவே இல்லை மகாராணி கிருத்திகா அவர்களே . நீங்க ஏன் அவன் தரனும் இவன் தரனும் நு நினைகரிங்க அது எல்லாம் இருகர இடத்துல இருக்கு நீங்க அங்க போய் உக்கதுகாம இருகிங்கனு தான் நான் சொல்லவரேன் .எவனும் தர தேவை இல்லை .உங்க சுதந்திரம் உங்க கிட்ட இருக்கு

    நீங்க பேசுங்க ஆனா நாங்க உண்மைலயே பாவங்க எங்கள விட்டுடுங்க அம்மா அக்க தங்கச்சி உடன் வேலை செய்யும் பெண்கள்னு எங்களை தட்டி தட்டி உக்கரவைகரதுல பெண்களை விட சிறப்ப யாரும் செய்ய முடியாது . ஆனா அதுகூட நல்லதுதான் இல்லேன்னா நாங்க எல்லாம் வேற மாறி போயருப்போம்னு நினைக்கிறேன் .

    பின்ன சுஜாதா,பாலகுமார் அப்டின்னு பொய் சொல்ல எனக்கு அவசியம் இல்லை......
    சொல்ரததான் செய்யணும் செய்யரத தான் சொல்லனும்....

    ///

    குமுதமும் விகடனும் அல்லது இன்ன பிற வார மாத இதழ்கள் எதுவும் புத்தகங்கள் ஆகி விடாது தோழி
    அவைகளை வார மாத இதழ்கள் என்று தான் கூற வேண்டும். அவைகள் என்றுமே புத்தகங்கள் ஆகிவிடாது தோழி என் கருத்து உங்களை காயப்படுத்தி இருந்தால் மன்னியுங்கள் ஆனால் அவைகள் புத்தகங்கள் அல்ல திருத்திக்கொள்ளுங்கள் .


    தேவையான அளவு வளர்ந்தாச்சு கண்ணு.......நீங்கதான் கண்ணு டெவலப் ஆகனும்

    //

    உங்களை தனிப்பட்ட முறைல வளரணும்னு சொல்லலை தோழி பெண்களை பொதுவாக குறித்தேன் .
    நானும் வளரறேன் நீங்களும் வளருங்க அறிவள ரெண்டு பேரும் கருத்துகளை பரிமாறி கொண்டு வளர்வோம் வாருங்கள் .

    உங்களை தனிப்பட்ட முறைல வளரணும்னு சொல்லலை தோழி பெண்களை பொதுவாக குறித்தேன் .
    நானும் வளரறேன் நீங்களும் வளருங்க அறிவள ரெண்டு பேரும் கருத்துகளை பரிமாறி கொண்டு வளர்ந்து விடலாம்




    இதைதான் பெரியவங்க சொல்லுவாங்க பச்ச பொ

    //

    இல்லைங்க நீங்க ரெடியா நான் இதபத்தி உங்களுக்கு விளக்க தயாராக உள்ளேன் பெண் அடிமை புத்தியை பெண் எப்படி வளர்த்துகொண்டால் என்பதை பற்றி

    ReplyDelete
  38. அடடே...நல்லா வரையறீங்களே

    ReplyDelete
  39. கிருத்திகா - உங்க எழுத்துல நான் படித்த 'தைரியத்தை', பாராட்ட வார்த்தைகளே இல்லை.
    Simply Superb.
    வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்.
    உங்களைப் போன்ற கண்ணோட்டம், மனோதைரியம் கொண்டவர்கள்,
    சமுதாயத்திற்கு நிறைய தேவை.

    ReplyDelete
  40. பெண்ணடிமை இன்னும் உள்ளது என்பது நிஜம்!
    அதேவேளையில் சுதந்திரம்,உரிமை என்பது கொடுக்கப்படுவதல்ல... எடுக்கப்படுவது.
    மனதளவில் ஆண்களுக்கு அடிமையாக இருக்கும் பெண்டிர்தான் அதிகம்.. நானும் ஒரு கவிதை எழுதியுள்ளேன். வந்து பாத்துட்டு போங்க

    ReplyDelete
  41. 43 pinootama . engioooooooooo poiteeeeeeeeenga

    ReplyDelete
  42. செ.சரவணக்குமார் ஐயா,

    சொன்னதை வழிமொழிகிறேன்.........

    ReplyDelete
  43. எங்க ஏரியா உள்ள வராதே சூபர்ப் கிருக்திகா

    ஆமா அது திலகரும் ஹிட்லரும் தானே

    ரொம்ப நல்லா வந்து இருக்கு கிருத்திகா

    ReplyDelete
  44. வருத்தமான விஷயம் தான். ஆனால் வேறு வழியில்லை. பெண்களின் ஏரியாவுக்குள் ஆண்கள் வருவதில்லையே.

    ReplyDelete
  45. /*இது எப்போ மாறும்...33% வேண்டாம்.....அட்லீஸ்ட் கேவலப்படுத்தாமலாவது இருங்களேன்.......*/
    அதேதான்

    பல வருஷங்களுக்கு முன்னாடி எங்க காலேஜ் பக்கத்தில் ஒரு டீக்கடையில் எப்பவும் ஆண்கள் தான். நாங்க ஒரு மூணு பேரு உள்ளே போனோம்... அதே லுக் தான்.. ஆனாலும் நாங்க பன்னும் டீயும் சாப்பிட்டுட்டு தான் வந்தோம். அதற்கப்புறம் அங்க போனால் ஓகே தான்...அது நினைவுக்கு வந்தது இந்த பதிவைப் படிச்ச உடனே

    ReplyDelete
  46. அருமையான பதிவு, வாழ்த்துக்கள்!
    ;;)

    ReplyDelete
  47. நகைக்கடைப்பக்கமும் புடவைக்கடைபக்கமும் போய்பாருங்க..அதையேன்..ஒரு டிவி பார்க்க முடியுதா?அங்கையும் உங்க ராஜ்யியம் தான்..கடைசில காபிகடையைக்கூட எங்களுக்காக விட்டுவைக்கமாட்டிங்கபோல இருக்கே..

    ReplyDelete