சரி இப்போ டீட்டைல் அனாலிசிஸ் பண்ணலாமா??
1)இலங்கை 17 ஓவர் இருக்கும்போதே 137 ரன் வந்துட்டாங்க..அப்போ ரவி சாஸ்த்திரி இவங்க கண்டிப்பா 400+ அடிக்க வாய்ப்பு இருக்கு.இதே நிலமைல தான் இந்தியா முதல் ஆட்டத்துல இருந்ததுன்னு.ஆனா எப்போ வேணா என்ன வேணா நடக்கலாம்."அப்படின்னு சொன்னார்.அவருடய வாக்குப்படி
21வது ஓவரில் 163/1 அப்டிங்கர நிலமைல இருந்த இலங்கை
25ஆவது ஓவர்ல 174/4 அப்டிங்கர நெலமைக்கு வந்துருச்சு
2)நாலாவது அம்பையர் அப்டின்னு நியோ ஸ்போர்ட்ஸ்ல போடுவாங்களே..அதுல நேத்து ஜவகள் ஸ்ரீனாத் வந்தாரு.அருமையா பேசினாரு.சனத் ஜயசூரியாவை சேக்கலாமா வேணாமா? அப்டிங்கர கேள்விக்கு பதில் சொல்லும்போது "சனத்,2 வருஷத்துக்கு மின்னாடி நம்ம கங்கூலி எந்த நிலைல இருந்தாரோ அப்டி இருக்காரு.இவ்வளோ பெரிய சீனியர் மோஸ்ட் வீரரை டூருக்கு கூட்டிட்டு வந்து வாய்ப்பு குடுக்காமல் இருப்பதன் பலன் என்னனு ஸ்ரீலனகாவுக்கு சீக்கிரம் புரியும்"அப்டின்னாரு.அதேமாதிரி 7வது இடத்துல புது வீரர் இறங்கி டொப்னு அவுட்டும் ஆகிட்டாரு.
அதனால அவர் வாக்கும் பலிச்சுப்போச்சு.
3)ஒளிபரப்புப்படி பாத்தா நியோ கிரிக்கெட் ரொம்ப பொறுமய சோதிச்சுது. கமெண்டரில 150 க்ராஸ் பண்ணினதுக்கு க்லாப் தட்டராங்க..கீழ ஸ்கோர் 138லயே நிக்குது.ஒரு பக்கம் 4 அடிச்சா இன்னொரு பக்கம் போகுது காமேரா..
4)ஸ்டேடியம் நேத்து முழுதும் நிரம்பி விட்டது.அப்புடி ஒரு கூட்டம்.க்ரிஷ்னர் வேஷம் போட்டுகிட்டு ஒரு குரூப் வந்துருந்தது...நல்ல ரெஸ்பான்ஸ் மக்கள் கிட்டேருந்து.
5)சுரேஷ் ரைனா நெறய காட்ச் மிஸ் பண்ணரமாதிரியே எனக்கு ஃபீலிங்கி...அதுமட்டும் இல்ல ..ஏகப்பட்ட ஃபீல்டிங்க் குளறுபடிகளை நேத்தும் பாக்க முடிஞ்சது...தினேஷ் கார்த்திக் தான் ஸ்டாண்ட் பை விக்கெட் கீப்பர்னு ஆகி போச்சு.அவரோட கல கலன்னு பேசினா என்னா..யாருமே அவ்வளவா அவர் கூட பேசலை நேத்து..அத்தோட சங்கக்காராவை ஸ்டம்பிங்க் பண்ணினாரே பாக்கணும்...சென்னை 28 கிலைமாக்சில வரமாதிரி பந்தை கீழ விட்டுட்டு கையால அடிச்சுட்டு,நல்லகாலம் மறுபடி வேகமா பந்தை எடுத்து ஸ்டம்பிங்க் பண்ணிட்டார்...தப்பிச்சுது இந்தியா.
6)கவுதம் காம்பீர் அனியாயத்துக்கு நல்லவரா இருக்காரு.அவுட் ஆனாலும் போகாம க்ரவுண்டிலேயே நிக்கும் பாட்ஸ்மான்களுக்கு மத்தியில் அவுட்டே இல்லைனாலும் நேர்மயா வெளில போன காம்பிரை என்னானு சொல்லரது...
7)முன்னுரையில் சொன்ன படி சச்சு பிச்சுட்டார்..என் நண்பர்கள் பலர் தினேஷை மானாவாரியா திட்டினாங்க.சச்சினுக்கு ஆடும் வாய்ப்பே தரலேன்னு.அப்படி 100 அட்ச்சுருந்தா "இவனுக்கு டீமை பத்தி கவலயே இல்ல...தான் 100 அடிக்கணும்னுதான் கவல " அப்படின்னு உலகத்துல பாதி பேரு பொறாமைல ஒப்பாரி வெச்சுருப்பாங்க.நல்ல வேள..அப்படி நடக்கல....
ஜாலி கார்னர்..
கடவுள் கிட்ட என்னவேண்டிக்கணுமோ அதை லெட்டரா எழுதிக்குடுங்கன்னு கேட்டத்துக்கு குட்டி பசங்க சிலர் என்ன ரகள பண்ணிருக்காங்க பாருங்க..
நான் ஒரு கல்யாணத்துக்கு போனேன்..அங்கே சர்சுலயே உம்மா குடுத்துக்கராங்களே...தப்பு தப்பு...
போ சாமி...நீ ரொம்ப மோசம்.எனக்கு தங்கச்சி பாப்பா வேணும்னா கேட்டேன்..பப்பி பாப்பா வேணூம்ம்ம்ம்ம்
இந்த பீட்டர் நம்மள மாதிரி..
சாமி இன்னைகு மிஸ் வரகூடாது..லீடர் ஆப்செண்ட் ஆகிடனும் அப்டினு வேண்டிக்கரமாதிரி..இவன்!!!!
சாமி இன்னைகு மிஸ் வரகூடாது..லீடர் ஆப்செண்ட் ஆகிடனும் அப்டினு வேண்டிக்கரமாதிரி..இவன்!!!!
உங்கள் பொன்னான கருத்துக்களையும்,வெள்ளியான வாக்குகளயும் அளிக்க மறவாதீர்...
என்றும் அன்புடன்
உங்கள் தோழி
கிருத்திகா