ஜெய்க்காக பாக்கலாமேன்னு(வயசுக்கோளாறுதான்) இந்த படத்தை எடுத்தேன்..ஐய்யகோ...இந்த மாதிரி ஒரு படத்தை பாக்க தவமா தவம் கெடக்கணும்.
விஜயலக்ஷ்மி காலேஜில் படித்துக்கொண்டிருக்கும் அழகான பொண்ணு...ஜெய் வேலை வெட்டி இல்லாமல் திரியும் அழகான பையன்.இவங்களுக்குள்ள லவ்ஸ்...ஜெய்யோட அப்பா நிழல்கள் ரவிக்கு இந்த மாட்டர் தெரிஞ்சு,அவர் ஜெய்யை கூப்பிட்டு நீ வேலைக்கு போகணும் முதல்ல..அப்போதான் உங்களுக்கு என்னால கல்யாணம் செஞ்சு வெக்க முடியும் அப்டிங்கராரு
ஜெய்க்கும் ஆஸ்த்ரேலியாவில வேலை பார்க்க போயிடுராரு.இந்த கேப்ல விஜயலஷ்மிக்கு வீட்ல மாப்பிள்ளை பாக்குராங்க.எதிர்பார்க்காத திருப்பம்..விஜயலக்ஷ்மி கல்யாணத்துக்கு ஒத்துக்கராங்க.ஏன்னா பையன் செம பணக்காரன்.இதுவரைக்கும் செமமமமமமமம பிலேடா போயிண்ட்ருந்துது..இதுக்கப்பரம் சூப்பரா இருக்கும்னு நிமிர்ந்து உக்காந்தோம்.வேஷ்டுங்க...தேவையே இல்லை...அப்புடியே தூங்கி இருக்கலாம்.
இப்போ என்ன ஆகுதுன்னா ஜெய் ஆஸ்திரேலியாவிலிருந்து வராரு.அவருக்கு இந்த கல்யாண விஷயமே தெரியாது.ப்ளேன்லே இவரும் இவரோட முன்னாள் ஆளோட ஹஸ்பெண்டான ஷிவாவும் நண்பர்கள் ஆகிடராங்க.(அதுக்கு ஒரு மொக்க ஃப்லாஷ் பாக் வேற :()
இதுக்கப்பறம் கதை சூடு புடிக்குது(நாமளே கற்பனை பண்ணிக்க வேண்டியதுதான் ...வேற வழி!!!!சரி இதுக்கப்பறம் பல "திடுக்கிடும்" திருப்பங்களுக்குப்பின் கடசியா ஜெய் விஜயலக்ஷ்மியை கொன்னுடராரு..
பி.கு-- இந்த படம் சிம்பு வகையறா....அவர் நடிச்சுருந்தா பின்னு பின்னுனு பின்னிருக்கும்.ஹீரோ ,ஹீரோயின் ரெண்டு பேரும் கொழந்த புள்ளைங்க மாதிரி பேசுதுங்க...ப்ரேம்ஜி மியூசிக்கும் ரொம்பலாம் இம்ப்ரெஸ் பண்ணல...ரெண்டு பாட்டு பரவால்லே.அதனால இந்த படத்தை சன் டி.வியில் இந்திய தொ(ல்)லைக்காட்சிகளில் முதல் முறையாகன்னு போடும்போது பாத்துக்குங்க,....
முக்கியமான அறிவிப்பு-
ஸ்டில்லை பாத்து ஏமாந்துடாதிங்க..ஸ்டில்ஸ் நல்லா இருந்தா படம் நல்லா இருக்கும்னு அர்த்தம் இல்லை
அடுத்த படியாக...
போன பதிவில் வைத்த போட்டிக்கான முடிவுகள்...நச் கமெண்டர் அவார்டுக்கான சிறந்த கமெண்டுகள்...இதை நான் ஒன்று,இரண்டு அப்டின்னு வரிசைப்படுத்தல....இந்த அஞ்சுமே நல்லா இருந்ததால இவங்க 5 பேருக்கும் இந்த அவார்டை குடுக்கரேன்...
பேர் மற்றும் க்மெண்டுடன்--
பித்தனின் வாக்கு:
இதுக்குதான் அப்பவே சொன்னேன், பிளாக்ல வர்ற சமையல் டிஸ் எல்லாம் சமைக்காதன்னு. கேட்டியா இப்ப என்னால எந்துரிக்க கூட முடியவில்லை.
யோ வொய்ஸ்
தியானம் செஞ்சா நல்லது என்று சொல்றாங்க அதுதான் நம்மளும் தியானம் செய்றோம்...
ஸ்ரீராம்.
ஒரே சமயத்துல 'ரெண்டு' வேலை.
தேவியர் இல்லம் ஜோதிஜி
எப்ப பார்த்தாலும் ஹோம் ஒர்க், ஹோம் ஒர்க்ன்னு போட்டு படுத்தி எடுத்தா வேற எங்க தூங்றது?
ரசிக்கும் சீமாட்டி
"எங்கலாம் காமேராவ கொண்டுவராயிங்க... டோன்ட் ஆங்ரி மீ !!! "
இவர்களோடு இந்த விருதை பகிர்ந்து கொள்கிறார்கள் இவர்களும்...
பிரியமுடன்...வசந்த் , கோபி,kggouthaman ,பின்னோக்கி,இளந்தி,மகா,சிவன்,Chitra
அடுத்து உங்கள் எல்லாருக்கும் ஒரு வேண்டுகோள்...நீங்களும் இந்த மாதிரி போட்டி வெச்சு அவார்டை பாஸ் பண்ணுங்களேன்...:)
போற போக்குல வோட்டை குத்துங்க...கமெண்டயும் கொட்டுங்க...(தலைலயும் கொட்டுங்க)
என்றும் அன்புடன்
உங்கள் தோழி
கிருத்திகா
//ஜெய்க்காக பாக்கலாமேன்னு(வயசுக்கோளாறுதான்) இந்த படத்தை எடுத்தேன்..ஐய்யகோ...இந்த மாதிரி ஒரு படத்தை பாக்க தவமா தவம் கெடக்கணும்.//
ReplyDeleteவயசுக்கோளாறு மாதிரி தெரியல, ரொம்ப வெட்டியா இருக்கீங்கன்னு மட்டும் தெளிவா தெரியுது,
//இந்த படத்தை சன் டி.வியில் இந்திய தொ(ல்)லைக்காட்சிகளில் முதல் முறையாகன்னு போடும்போது பாத்துக்குங்க//
ReplyDelete"யான் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்"
அப்படித்தானே?
ethukku intha kolai veri ungalukku... sari paarthutteengalla..appuram ethukku vimarsanam intha padathukku ?
ReplyDeleteஇந்தப்படம் பாத்தேன். மகா மொக்கை. நிச்சயம் ஆங்கிலப்புத்தாண்டுக்கு டீவீல போட்டுருவாங்க.
ReplyDeleteithanai per solliyum ketkaama padathai paartha athuku mannipu kidaiyaathu.
ReplyDelete//ஸ்டில்லை பாத்து ஏமாந்துடாதிங்க..ஸ்டில்ஸ் நல்லா இருந்தா படம் நல்லா இருக்கும்னு அர்த்தம் இல்லை//
ReplyDeleteசரியாத்தேன் சொல்லறேங்க....
விருதுக்கு மிக்க நன்றி .... தோழி கிருத்திகா
ReplyDeleteஅதே நேரம் அதே இடம் படத்தை பார்க்கிற அளவுக்கு உங்களுக்கு ரொம்ப தைரியமாங்க?
ReplyDeleteசொல்லவே இல்ல :)
அவ்வளவு மோசமாவா இருக்கு அந்த படம்?
ReplyDelete//ஜெய் வேலை வெட்டி இல்லாமல் திரியும் அழகான பையன்//
ReplyDeleteஇந்த பிட் தேவையா???!!!
//ஜெய்க்காக பாக்கலாமேன்னு(வயசுக்கோளாறுதான்) இந்த படத்தை எடுத்தேன்..ஐய்யகோ...இந்த மாதிரி ஒரு படத்தை பாக்க தவமா தவம் கெடக்கணும்.//
ReplyDeleteவயசுக்கோளாறு மாதிரி தெரியல, ரொம்ப வெட்டியா இருக்கீங்கன்னு மட்டும் தெளிவா தெரியுது, சங்கர் said...”
”ஜெய் வேலை வெட்டி இல்லாமல் திரியும் அழகான பையன்.”
இந்த ரெண்டு விஷயத்துக்கும் (ரெண்டு பேரும் வேலை வெட்டி இல்லாம இருக்கற) ஏதாவது சம்மந்தம் இருக்கா?
சங்கர்:
ReplyDeleteஏங்க இப்புடி மானத்த வாங்கிருக்கிங்க?இருந்ததே கொஞ்சனஞ்சம் தான் :(
முன் ஜாக்கிரதையா நீங்க பாக்காதிங்க அப்டிங்கர நல்ல எண்ணத்துலயும்,ஜெய் அழக இருப்பாரே என்ன தான் பண்ணிருக்காரு பாப்போம்ங்கர மிக நல்ல எண்ணத்துலயும்தாங்க இந்த படத்தை எடுத்து பாத்தேன்..சரி பரவால்ல....நம்ம சங்கர் தானே சொல்லுரிங்க... :) அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா
பின்னோக்கி
ஒரு பொதுனலம்தாங்க..தப்பி தவறி இந்த படத்து டி.வி.டியை கூட பாத்துராதிங்க...
சின்ன அம்மிணி...
ஆகா...நாமல்லாம் எதயும் தாங்கும் இதயமுங்க :)
தன்ஸ் ---
தப்புத்தாங்க...என்னா பண்ணுரது....
மகா-
அனுபவம் பேசுகிரது :)...வாழ்த்துக்கள் மகா விருதுக்கு..:)
பூங்குன்ரன்.வே
நான் எப்பவுமே கொஞ்சம் தைரியமான பொண்ணுதான் :)
ரசிக்கும் சீமாட்டி-
இது ரொம்ப தேவை...இந்த ஜெய்க்காகதான் படத்தை பாக்கலாம்னே நெனச்சேன்...
அண்ணாமலையான்
ஏங்க இப்புடி சி.ஐ.டி ஷங்கர் மாதிரி துப்பறிய கெளம்பிட்டிங்க...அதெல்லாம் ஒண்ணுமில்லைங்க...
I think வீட்டுல A / C ரிப்பேரா இருந்திருக்கும். அதனால தியேட்டர்ல போய் தூங்கலாம்னு நினைச்சிருப்பீங்க...சரியா சொல்லிட்டேனா?
ReplyDeleteஇல்லையா?...
அப்ப படத்தோட புரொடியூசர் உங்களை அம்பாசடராக்கிட்டாருன்னு நினைக்கிறேன்.
அதுவும் இல்லையா?
அப்ப கேபிள் சங்கர் சொன்ன மாதிரி வெட்டியா இருக்குற நேரம் அதிகமா?
i
தமிழ் தொலைக்காட்சியில தொகுப்பாளரா இருக்கத்தாங்க தமிழே தெரியக்கூடாது. உங்க வலைப்பக்கத்துல தலைப்புக்கு கீழ விவரத்துல உள்ள பிழைகளை சரி செய்யக் கூடாதா? ஏற்கனவே தமிழ் தள்ளாடிகிட்டுதான்இருக்கு. நாம அதை இன்னும் போட்டு துவைக்கணுமா?
ReplyDeleteசரி...சரி...யாருய்யா அது தமிழ் வாத்தியாரை எல்லாம் உள்ள விட்டதுன்னு நீங்க திட்டுறது கேட்குது.
ஹா ஹா ஹா .... நல்ல விமர்சனம்!
ReplyDelete