22 December, 2009

நேற்று மாட்ச் பாத்திங்களா???நம்ம சச்சு பிச்சுட்டார் :)

ரவீந்தர ஜடேஜாவும் அருமையாக ஆடினார்...
சரி இப்போ டீட்டைல் அனாலிசிஸ் பண்ணலாமா??
1)இலங்கை 17 ஓவர் இருக்கும்போதே 137 ரன் வந்துட்டாங்க..அப்போ ரவி சாஸ்த்திரி இவங்க கண்டிப்பா 400+ அடிக்க வாய்ப்பு இருக்கு.இதே நிலமைல தான் இந்தியா முதல் ஆட்டத்துல இருந்ததுன்னு.ஆனா எப்போ வேணா என்ன வேணா நடக்கலாம்."அப்படின்னு சொன்னார்.அவருடய வாக்குப்படி
21வது ஓவரில்  163/1 அப்டிங்கர நிலமைல இருந்த இலங்கை
25ஆவது ஓவர்ல 174/4 அப்டிங்கர நெலமைக்கு வந்துருச்சு

2)நாலாவது அம்பையர் அப்டின்னு நியோ ஸ்போர்ட்ஸ்ல போடுவாங்களே..அதுல நேத்து  ஜவகள் ஸ்ரீனாத் வந்தாரு.அருமையா பேசினாரு.சனத் ஜயசூரியாவை சேக்கலாமா வேணாமா? அப்டிங்கர கேள்விக்கு பதில் சொல்லும்போது "சனத்,2 வருஷத்துக்கு மின்னாடி நம்ம கங்கூலி எந்த நிலைல இருந்தாரோ அப்டி இருக்காரு.இவ்வளோ பெரிய சீனியர் மோஸ்ட் வீரரை டூருக்கு கூட்டிட்டு வந்து வாய்ப்பு குடுக்காமல் இருப்பதன் பலன் என்னனு ஸ்ரீலனகாவுக்கு சீக்கிரம் புரியும்"அப்டின்னாரு.அதேமாதிரி 7வது இடத்துல புது வீரர் இறங்கி டொப்னு அவுட்டும் ஆகிட்டாரு.
அதனால அவர் வாக்கும் பலிச்சுப்போச்சு.

3)ஒளிபரப்புப்படி பாத்தா நியோ கிரிக்கெட் ரொம்ப பொறுமய சோதிச்சுது. கமெண்டரில 150 க்ராஸ் பண்ணினதுக்கு க்லாப் தட்டராங்க..கீழ ஸ்கோர் 138லயே நிக்குது.ஒரு பக்கம்  4 அடிச்சா இன்னொரு பக்கம் போகுது காமேரா..

4)ஸ்டேடியம் நேத்து முழுதும் நிரம்பி விட்டது.அப்புடி ஒரு கூட்டம்.க்ரிஷ்னர் வேஷம் போட்டுகிட்டு ஒரு குரூப் வந்துருந்தது...நல்ல ரெஸ்பான்ஸ் மக்கள் கிட்டேருந்து.

5)சுரேஷ் ரைனா நெறய காட்ச் மிஸ் பண்ணரமாதிரியே எனக்கு ஃபீலிங்கி...அதுமட்டும் இல்ல ..ஏகப்பட்ட ஃபீல்டிங்க் குளறுபடிகளை நேத்தும் பாக்க முடிஞ்சது...தினேஷ் கார்த்திக் தான் ஸ்டாண்ட் பை  விக்கெட் கீப்பர்னு ஆகி போச்சு.அவரோட கல கலன்னு பேசினா என்னா..யாருமே அவ்வளவா அவர் கூட பேசலை நேத்து..அத்தோட சங்கக்காராவை ஸ்டம்பிங்க் பண்ணினாரே பாக்கணும்...சென்னை 28 கிலைமாக்சில வரமாதிரி பந்தை கீழ விட்டுட்டு கையால அடிச்சுட்டு,நல்லகாலம் மறுபடி வேகமா பந்தை எடுத்து  ஸ்டம்பிங்க் பண்ணிட்டார்...தப்பிச்சுது இந்தியா.

6)கவுதம் காம்பீர் அனியாயத்துக்கு நல்லவரா இருக்காரு.அவுட் ஆனாலும் போகாம  க்ரவுண்டிலேயே நிக்கும் பாட்ஸ்மான்களுக்கு  மத்தியில் அவுட்டே இல்லைனாலும் நேர்மயா வெளில போன காம்பிரை என்னானு சொல்லரது...

7)முன்னுரையில் சொன்ன படி சச்சு பிச்சுட்டார்..என் நண்பர்கள் பலர் தினேஷை மானாவாரியா திட்டினாங்க.சச்சினுக்கு ஆடும் வாய்ப்பே தரலேன்னு.அப்படி 100 அட்ச்சுருந்தா "இவனுக்கு டீமை பத்தி கவலயே இல்ல...தான் 100 அடிக்கணும்னுதான் கவல " அப்படின்னு உலகத்துல பாதி பேரு பொறாமைல ஒப்பாரி வெச்சுருப்பாங்க.நல்ல வேள..அப்படி நடக்கல....

ஜாலி கார்னர்..

கடவுள் கிட்ட என்னவேண்டிக்கணுமோ அதை லெட்டரா எழுதிக்குடுங்கன்னு கேட்டத்துக்கு குட்டி பசங்க சிலர் என்ன ரகள பண்ணிருக்காங்க  பாருங்க..





நான் ஒரு கல்யாணத்துக்கு போனேன்..அங்கே சர்சுலயே உம்மா குடுத்துக்கராங்களே...தப்பு தப்பு...

 
போ சாமி...நீ ரொம்ப மோசம்.எனக்கு தங்கச்சி பாப்பா வேணும்னா கேட்டேன்..பப்பி பாப்பா வேணூம்ம்ம்ம்ம்

 

 இந்த பீட்டர் நம்மள மாதிரி..
சாமி இன்னைகு மிஸ் வரகூடாது..லீடர் ஆப்செண்ட் ஆகிடனும் அப்டினு வேண்டிக்கரமாதிரி..இவன்!!!!

 

ரூம் போட்டு யோசிச்ச புள்ள இதுதான்
உங்கள் பொன்னான  கருத்துக்களையும்,வெள்ளியான வாக்குகளயும் அளிக்க மறவாதீர்...
என்றும் அன்புடன்
உங்கள் தோழி
கிருத்திகா

22 comments:

  1. 100 அடிக்கறது முக்கியம் தான். அதுக்காக கட்டைய போட்டுட்டு, அவரு 100 அடிக்குறத்துக்கு முன்னாடி அவுட் ஆகி, பின்னாடி வர்றவங்க 10 ரன் எடுக்குறத்துக்குள்ள அவுட் ஆனா (முன்னாடி இதெல்லாம் நாம பார்த்துருக்கோம்) என்னா ஆகும். கார்த்திக் பண்ணுனது சரி. டீம் வின் பண்ணனும். அதுதான் முக்கியம். கடைசி 4 அடிச்ச வுடனே கார்த்திக் பயந்துட்டாரு. நல்ல வேளை சச்சின் அவர பார்த்து சிரிச்சு, கூல் பண்ணிட்டாரு

    ReplyDelete
  2. நேற்று நானும் மேட்ச் பார்த்தேன்......

    சச்சின் சூப்பர்.........

    குழந்தைங்க மேட்டர் நல்லாயிருக்குங்க........

    ReplyDelete
  3. சில வாரங்களுக்கு முன்னாடி ரஞ்சி மேட்ச் பார்த்தேன், நம்ம தினேஷ் கார்த்திக் என்னமா திட்டறார் பசங்கள

    " டேய் ரெண்டு ரன் விட்ட மண்டைய பொலந்துடுவேன்" "அங்க நிக்காதடா இங்க வாடா" நம்ம பக்கத்து தெரு மேட்ச் பாக்கற மாதிரி ஒரு பீலிங்.

    சச்சின் நூறு அடிக்கணும் என்றால் எப்பயோ அடிசுருப்பார் ஆனா அவர் கடைசி வரை இருந்து மேட்ச் முடிச்சுட்டு வரணும் என்று நினைத்திருக்கலாம். அப்படியோ மறுபடியும் தலைவர் தனக்கு செஞ்சுரி முக்கியம் இல்லை என நிருபித்துவிட்டார்.

    ஆமா WWE TLC மேட்ச் பாதீங்களா? அத பத்தி எழுதுங்க

    ReplyDelete
  4. //முன்னுரையில் சொன்ன படி சச்சு பிச்சுட்டார்..என் நண்பர்கள் பலர் தினேஷை மானாவாரியா திட்டினாங்க.சச்சினுக்கு ஆடும் வாய்ப்பே தரலேன்னு.அப்படி 100 அட்ச்சுருந்தா "இவனுக்கு டீமை பத்தி கவலயே இல்ல...தான் 100 அடிக்கணும்னுதான் கவல " அப்படின்னு உலகத்துல பாதி பேரு பொறாமைல ஒப்பாரி வெச்சுருப்பாங்க.நல்ல வேள..அப்படி நடக்கல....//

    அவுங்கள எல்லாம் விட்டுத்தள்ளுங்க, நம்ம 'செல்லம்' எப்பவுமே நம்பர் ஒன் தான்

    ReplyDelete
  5. ஓபனிங்க் லன்கா வீரர்கள் அதிரடி கண்டு பயந்துவிட்டேன்.

    ReplyDelete
  6. சச்சின் நேற்றைய ஆட்டத்தின் மூலம் அவர் தனக்காக விளையாடுவதில்லை என நிரூபித்துவிட்டார். அவர் நினைத்திருந்தால் நேற்று power play மூலம் சதம் அடித்திருக்கலாம். ஆனால் power play எடுப்பதைஅவர் நிராகரித்து விட்டார்.

    ReplyDelete
  7. நான் கிச்சா வாங்கிக்கறேன்...

    ReplyDelete
  8. //ஒளிபரப்புப்படி பாத்தா நியோ கிரிக்கெட் ரொம்ப பொறுமய சோதிச்சுது. கமெண்டரில 150 க்ராஸ் பண்ணினதுக்கு க்லாப் தட்டராங்க..கீழ ஸ்கோர் 138லயே நிக்குது.ஒரு பக்கம் 4 அடிச்சா இன்னொரு பக்கம் போகுது காமேரா..//

    இதுக்குதான் தூர்தர்ஷன் பாக்கணும்ங்கறது...

    ReplyDelete
  9. //வெற்றி said...
    இதுக்குதான் தூர்தர்ஷன் பாக்கணும்ங்கறது...//

    உனக்கு ரொம்ப குசும்புப்பா,

    தூதனோட அதே நிம்பஸ் டீம் தான் இங்கேயும் படம் பிடிக்குது, இங்க பாரு

    ReplyDelete
  10. நேத்திக்கு மாட்சுல

    சச்சின் புள்ளாண்டான் வந்தான்
    மட்டையை சொழட்டினான்
    ப்ரமாதமா வெளாண்டான்
    பட்டையை கெளப்பினான்
    ஜெயிச்சு குடுத்துட்டு தேமேன்னு போயிட்டன்.....

    ஆயிரம் சொல்லுங்க... தல தல தான்.... (கிரிக்கெட்டுக்கு ஒரு தல சச்சின்....)

    அந்த குட்டீஸ் மேட்டர் படு சூப்பர்....

    எங்கே இருந்து பிடிச்சீங்க!!

    ReplyDelete
  11. @ பின்னோக்கி
    அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்...10 தடவை 90ஸ் ல அவுட் ஆனவரு..இதெல்லாம் கணக்குலயே எடுத்துக்க மாட்டாருங்க...
    அப்பறம் பின்னோக்கி...காலை நல்லா நோக்கி...பாத்துக்குங்கன்னு சொன்னேன்

    Sangkavi
    தாங்க் யூ :)

    DHANS
    ஆகா நல்ல கருத்து..
    அப்படியா சொன்னாரு தினேஷ்...ஆகா பாக்கலயே நான்...
    wwe tlc பாக்கலைங்க...ரீ-டெலிகாஸ்ட் பண்ணினா உண்டு..
    நீங்க எழுதுங்களேன்..நான் படிக்கரேன்

    சங்கர்

    அதே அதே

    தேவன் மாயம்
    நானும் கூட

    என் நடை பாதையில்(ராம்)
    ஆமாம் ரைட்

    அண்ணாமலையான்
    கிச்சா கியா ஹை???

    ஸ்ரீராம்.
    ஆமாம்

    வெற்றி

    தூர்தஷன் ராஷ்டிர பாஷா பேசுமே..நமக்கு லோக்கல் பாஷாவே புரியாது

    கோபி

    மெய்ல்ல வந்துதுங்க

    ReplyDelete
  12. யெ நஹி ஹை.. கிச்சா மீன்ஸ்... யெ போஸ்ட் நா மேரா இண்ட்ரஸ்ட் நஹி..ஹை..மைம் ஜூட்னா ஹை.. சமஜ்னா..?

    ReplyDelete
  13. //இந்த பீட்டர் நம்மள மாதிரி..
    சாமி இன்னைகு மிஸ் வரகூடாது..லீடர் ஆப்செண்ட் ஆகிடனும் அப்டினு வேண்டிக்கரமாதிரி..இவன்!!!!
    //

    சேம்பிளட் பசங்க

    :)))

    ReplyDelete
  14. //சங்கர் said...
    உனக்கு ரொம்ப குசும்புப்பா,//

    :) :)

    //வெற்றி

    தூர்தஷன் ராஷ்டிர பாஷா பேசுமே..நமக்கு லோக்கல் பாஷாவே புரியாது//

    நியோ கிரிக்கெட்ல என்ன புரிஞ்சா பாக்குறீங்க? :)

    ReplyDelete
  15. இங்கே அமெரிக்காவில் மேட்ச் பார்க்க முடிவதில்லை. கடவுளுக்கு எழுதிய லெட்டர்ஸ் எல்லாம் சூப்பர். ரசித்தேன்.

    ReplyDelete
  16. ரன் அடிப்பதை விட இந்த மாதிரி சமயங்களில் அடிக்காமல் இருப்பது கடினம்.

    ReplyDelete
  17. its tamilnadu ranji match, it was really nice to see. they played well and it was nice to see with those dialogues :)

    regarding TLC i will write some time.

    ReplyDelete
  18. hmm.. sachin dan dinesh'a(nan illa) avar 100 pathi kavala padama adichi ada sonnar.. tats y porumaiya viladittu eruntha dinesh hit the six in last previous over.. great sachin..great dinesh...

    ReplyDelete
  19. என்ன நம்ம பக்கம் ஆளே கானோம்? உங்க ஓட்டும், கமேண்டும் காலியாவே இருக்கு. சீக்கிரமா வாங்க... வந்தா சந்தோஷம்ம்....

    ReplyDelete
  20. hai Krithiga
    where r u ..?

    Plz come and write something in ur blog pa..

    ReplyDelete
  21. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete