20 March, 2011

ஹோலி கொண்டாடும் காரணம் தெரியுமா

அனைவருக்கும் ஹோலி திருநாள் நல்வாழ்த்துக்கள் மக்களே!!!
ஹோலி கொண்டாடும் காரணம் தெரியுமா!!!!2 காரணங்கள் பரவலா சொல்லப்படுது.
1)நரசிம்ம அவதாரம் எடுத்து ஹிரண்ய காஸ்யப ராஜாவை வதம் பண்ணினதை கொண்டாடுவதுதான் ஹோலின்னு சில மக்கள் சொல்றாங்க
2)பரமசிவன் பண்ணின தவத்தின் உக்கிரம் தாங்க முடியாம அதை கலைக்க எல்லரும் மன்மதனை அனுப்பினார்கள்.
அவரும் அம்பா விட்டாரு.சிவன் படக்குனு கண்ண திறந்தார்.அந்த பார்வை பட்டு  மிஷ்டர்.மதன் சாம்பலோபதி ஆகிட்டாரு.
மிசஸ்.மதன் அதாங்க நம்ம ரதி ரொம்ப கவலையாகி சிவங்கிட்ட முறையிட்டதும் அவர்  சிஸ்டம்  ரீஸ்டோர் பண்ணிகுடுத்தார்(விர்ச்சுவலா தான்) புரியாதவர்கள் விக்கிபீடியா பார்க்கவும்.நீங்க ஹோலி கொண்டாடி இருக்கிங்களா!!!
ஹோலி எதுக்காக கொண்டாடுறாங்கன்னே எனக்கு தெரியாம நாலு வருஷம் எங்க காலேஜில நாங்க கொண்டாடுனோம்.
நாங்க என்றால் தமிழ் நாட்டு மாணவிகள்!!!
ஏன் இத பத்தி எழுதனும்னு ஆசப்பட்றேன்னா கொஞ்ச நேரம் முன்னாடி மார்க்கெட் போயிட்டு வந்தேன்.நம்ம அண்ணாமலை பல்கலைகழகத்தின் வட இந்திய மாணவக்கண்மணிகள் நடு ரோட்டில் சந்தோஷமாக ஹோலி விளையாடிக்கொண்டிருந்தனர்..அவங்க மேல இருக்கர கலர் போதாதுன்னு ரோட்டில் போகும் மக்களுக்கும்  கொஞ்சம் கலர் தூவினார்கள்...சோ எனக்கும் மலரும் நினைவுகள்!!
ஓக்கே..நாம கதைக்கு போகலாம்.கேர்ள்ஸ் ஹாஸ்டலில் ஹோலி எப்டி கொண்டாடுவாங்கன்னு தெரியுமா!!!
4 வருஷமும் என்ன நடந்ததுன்னு சொல்றேன்.
1st வருஷம்  அவ்வளவா எதுவும் நடக்கல.போன புதுசு இல்லயா...அதனால ரொம்பவே அடக்கி வாசிச்சோம்.எங்க க்ளாசில படிச்சது 5 நார்த்தீஸ் தான்(வட இந்திய மாணவர்களின் ஷார்ட் ஃபார்ம் :)).அதுங்களுக்குளயே கொண்டாடிக்கிச்சிங்க.நாங்களும் அவ்வளவா கண்டுக்கல.நாங்க வெறும் பாக்க மட்டுந்தான் செஞ்சோம்.ரெண்டாவது வருஷத்துக்கு போவோம்.காலைலல்லாம் ரொம்ப அமைதியா இருந்தது மொத்த காலேஜுமே.என்னட இம்புட்டு சைலெண்டா இருக்கேன்னு நெனச்சிகிட்டே சாயங்காலம் ஹாஸ்டல் போனா ஒரே ரணகளமா இருந்தது.ஒரு சின்ன குறிப்பு:எங்க ஹாஸ்டலை ரெண்டா பிரிச்சி இருப்பாங்க.சீனியர்ஸ் ஹாஸ்டல் அண்ட் ஜீனியர்ஸ் ஹாஸ்டல்.

   ஜூனியர்ஸ் ஹாஸ்டல்ல முதல்,ரெண்டாம் வருஷ மாணவிகள் மட்டும் தான் இருப்போம்.ராகிங் ஒழிக்கரதுக்காக அப்படி ஒரு ஏற்பாடாம்!!!!ஆனா சீனியர்ஸ் ஹாஸ்டல் தாண்டித்தான் போக முடியும்(வச்சாய்ங்கல்ல ஆப்பு).எங்க சீனியர்ஸ் எங்கள பாசம கூப்ட்டு மூஞ்சி ஃபுல்லா கலர் அடிச்சு விட்டாங்க.ஆகா இதான் ஹோலியா...புத்தருக்கு கிடைத்த ஞனோதயம் மாதிரி எங்களுக்கும் கெடச்சிடிச்சி.
இப்போ நாமளும் ஹோலி வெளயாண்டே ஆகணுமே..ஆனா கலர் இல்லயே எங்ககிட்ட..என்ன பண்றது!!!அப்போ கை குடுத்தது உற்ற நண்பன் ப்ரில் இங்க்!!!!எடுத்து தண்ணில கலந்தோம்.நீலம் + கருப்பு..அடி பின்னி பெடல் எடுத்தோம்!!!

மூணாவது நாலவது வருஷமெல்லாம் அட்வான்ஸ்டா ஊருலேர்ந்தே கலர் வாங்கிட்டு வந்துட்டோம்.செம ஆட்டம்.அப்படிடே வாட்டர் கூலரை ஸ்க்ரூ ட்ரைவரை போட்டு ஓப்பன் பண்ணி அதுக்குளேருந்து நேரடியா தண்ணியை எல்லர் மேலயும் கொட்டுவோம்.
அப்போ நல்ல ஆட்டத்த போட்ட பலன் அடுத்த 4 நாள் இருக்கும்
பின்விளைவு 1:
மூஞ்சி கன்னங்கரேல்ன்னு இருந்தது(ஏற்கனவே கொஞ்சம் கலரு கம்மி!!!இதுல இன்னும் கம்மியா).நாங்க அதை எடுக்க என்னனமோ போட்டு பாத்தோம்.
1)விம் பார்
2)சர்ஃப் பவுடர்
3)ரின் பார்
4)மீரா ஷியக்காய்

இவ்வளவு போட்டதுக்கப்பறம் தான் லேசான மாற்றம் தெரிந்தது,
பின்விளைவு 2:
 அதிகபட்ச பாதிப்பு எங்க தலமுடிக்கி தான்.4 பாக்கெட் ஷாம்பூ போட்டத்துக்கப்பறமும்  அசரவே அசராது!!!! இந்த அயர்லாந்து காப்டன் போர்ட்டர்ஃபீல்டு மண்ட இருக்கும் பாருங்க ஒரு பக்கம் மஞ்சளாவும் ஒரு பக்கம் வயலட்டாவும்.அப்படி இருக்கும்.இருந்தாலும் அசராம ஒவ்வொரு வருஷமும் அட்டகாசம் பண்ணுவோம் தான்.
பின்விளைவு 3:
கண்டிப்பா 10-16 பேரு கால்ல ஸ்ப்ரெயினாகி க்ரெப் பாண்டேஜ் போட்டிருப்பாங்க..
அந்த சந்தோஷத்துக்கு ஈடு இணை வேற  எதுவுமே கடயாது!!!

ஹ்ம்ம்ம்ம்ம்ம்.அது ஒரு நிலாக்காலம்.ஓக்கே...பதிவின் இறுதிக்கு வந்தாச்சு.
நீங்களும் ஹோலி கொண்டாடுங்க...
HAVE FUN GUYS!!!HAPPY HOLI...

எனக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகணும்!!!!
யாராவது சொல்லுங்களேன்...இந்த தமிழ் மணம் பட்டயை எப்படி இணைப்பது...அந்த தளத்தில் சொன்ன விதிமுறைப்படி செய்தேன்.ஆனால்
என் கண்ணுக்கு தெரியவே மாட்டேங்குது.
நன்றி.வணக்கஹம்.
என்றும் அன்புடன்,
கிருத்திகா.

2 comments:

 1. ரெண்டாவதா ஒரு கதை விட்ருக்கியே, மிஸ்டர் & மிஸ்ஸஸ் மதன்னு, அது என்னா சங்கதி....எங்கப் புடிச்ச..??

  நான் படிக்கும்போது ஒரு நார்தீயும் இல்ல நம்ம காலேஜில...ஆனா இப்பப் பாத்தா எங்கபாத்தாலும் பான் பராக் வாயனுங்கதான் தெரியிறானுங்க....!
  உன்னோட 3/4 ம் வருஷ அனுபவம் நல்ல நல்லா காமிடியா இருந்துச்சு..கிருத்திகா...!

  ஆமா தமிழ் மணம் பட்டியில என்ன பிரச்சன....!! I think you got it fixed...!

  ReplyDelete
 2. காரணம் என்னவோ...

  ஹோலிய உற்சாகம் குறையாம கொண்டாடிடுவோம்..

  எனக்கு ஹோலின்னாவே தலைவர் படம் (துடிக்கும் கரங்கள்)ல வர்ற இந்த பாட்டு தான் ஞாபகம் வருது...

  “மேகம் முந்தானை ஆடுது முன்னாலே
  ஆசை மச்சானை தேடுது கண்ணாலே”

  ReplyDelete