28 October, 2009

நான் ரசித்த கவிதை




இது நான் ரசித்தது மட்டும் தாங்க.. பக்கம் பக்கமா எழுதிக்கூட தள்ளீடுவேன்.ஆனா ஒரு குட்டி கவிதை கூட எழுத வராது எனக்கு....
(யாராவது கத்து குடுங்களேன்...)
சரி கவிதை இதுதான்...

ஏன்மா நீ இப்படி இருக்க??
உன்னால் எப்பவுமே உபத்ரவம்தான்
காச் மூச் என கத்திவிட்டு
ஆபீஸ் சென்றேன்.
அங்கே சென்றால்...
ஈமெய்ல் ஐ.டி முதல்
ஏ.டி.எம் வரை
உன் பெயரை அடித்தால் தான் வேலையே...
கடவுசொல்லாக இருந்து என்னை பார்த்து
சிரித்துகொண்டிருக்கிராயே அம்மா :)


எப்புடி இருக்கு????
நல்லாருக்கா??:)
இல்லயா??? :(
சரி எப்புடி இருந்தாலும் கமெண்டயும்,வோட்டயும் குத்த மறக்காதிங்க....
அன்புடன் உங்கள் தோழி
கிருத்திகா

27 October, 2009

சினிமா கொட்டாய்-கல்யாண பாட்டுக்காரன்,புது பையன்



கல்யாண பாட்டுக்காரன்(THE WEDDING SINGER)
இதுதான் நாம இந்த வாரம் சினிமா கொட்டாய்ல பாக்கப்போர  முதல் திரைப்படம்.இந்த படத்துல ஆடம் சாண்ட்லர்(ராபி),ட்ரூ பாரிமோர்(ஜூலியா) மற்றும் பலர் நடிச்சுஇருக்காங்க.  
               கதை-ராபி  கல்யாணத்துல பாடுற பாடகர்.ஜூலியா ஒரு waitressஆ வேலை பாப்பாங்க.ரெண்டு பேரும் ஒரு கல்யாணத்துல மீட் பண்ணிப்பாங்க.ராபிய கல்யாணம் பண்ணிக்கரேன்னு சொல்லி கல்யாணமேடை வரை வந்துட்டு எனக்கு உன்ன பிடிக்கலனு சொல்லிட்டு போயிடுவாங்க  ராபியோட ஆளு லிண்டா.இந்த கட்டத்துல தான் ஜூலியா இவருக்கு ஆறுதலா இருப்பாங்க.அப்போ ஜூலியாவுக்கு க்லென் அப்டிங்கரவனோட கல்யாண ஏற்பாடு நடந்துகிட்டு இருக்கும்.அந்த பய ஒரு தறுதல.அது தெரியாம இந்த பொண்ணு கல்யாணத்துக்கு ஒத்துக்கும்.ராபீக்கு இந்த விஷயம் தெரிஞ்சதும் கரொம்ப வருத்த படுவாரு.அப்பறம் கொஞ்ச நாள்ல ராபிக்கு ஜூலியாவை புடிச்சுடும்.ஆனா அண்ணிதான் ஏற்கனவே லாக் ஆகிட்டாங்களே...அப்பறம் அண்ணன் எப்டி அண்ணீகுட சேர்ந்தாருனு ஒரு பாதி படத்த ஓட்டுவாங்க...
படம் கொஞ்சம் சுமார் தான்..36/100 தான் குடுக்கலாம்..ரொமாண்டிக் படம் புடிச்சவங்க இந்த படத்தை தாராளமா பார்க்கலாம்.

புது பையன்-THE NEW GUY


முதல் படம் மொக்கயா இருந்ததால அடுத்த படத்தயும் இப்பவே ஓட்டிரலாம்.இந்த படத்துக்கு பேரு THE NEW GUY.இது ஒரு காமெடி+ஜாலி படம்.
 படத்தோட ஹீரோவ பாத்தா கொமட்டும்.அவ்வளோ கொடூரமா இருப்பான்.ஆனா கொஞ்ச நேரத்துலயே அவன் அழகா ஆகிடுவான்.அவன்  பாத்த ஒடனே பிடிக்கர ஜாதி இல்ல ...பாக்க பாக்க புடிக்கர ஜாதி...இந்த படத்துக்கு கதை இதுதான்.கில்லெஸ்பி(ஹீரோ பேரு) ஒரு காமெடி பீசு வனோட ஸ்கூல்ல.அவன எல்லாரும் கிண்டல் பண்ணவும் ஒரு நாள் குடிச்சுட்டு ஸ்கூல்க்கு வந்துடுவான்.அதனால அவனுக்கு தண்டனயா ஒரு நாள் ஜெய்ல்க்கு அனுப்பிடுவாங்க.ஜெய்ல்ல ஒரு சூப்பர் கைதி இருப்பான்.அவன கண்டா எல்லாரும் அலறுவாங்க.அவங்கிட்ட பொயி தன்னோட பிரச்சனய சொல்லி அழுவான்.உடனே அவனும் மனசு எளகி "1 நாளில் டெர்ரர் ஆவது எப்படி"அப்டினு சொல்லி குடுப்பான்.

டெரரை உருவாக்கும் இன்னொரு டெர்ரர்

            ஸ்டெப்-1
முதல்ல நீ படிக்கர ஸ்கூல விட்டு  வெளில வந்துடனும்.அவங்களே கழுத்த புடிச்சு தள்ளர மாதிரி ஒரு காரியத்த செய்யனும்
           ஸ்டெப்-2
நீ போர புது ஸ்கூல்ல இருக்கர தாதாபசங்களை முதல் நாளே அடி தூள் பண்ணனும்
           ஸ்டெப்-3
அங்க இருக்கரதுலயே வித்தியாசமான சேட்டை எல்லாம் பண்ணனும்
       இந்த கீதோபதேசத்தை பாலோ பண்ணி அவனும் டெர்ரர் ஆகிடுவான்.அப்போதான் வரும் பிரச்சனை.இவன் இப்போ படிக்கர ஸ்கூல்க்கும் பழய ஸ்கூல்க்கும் ஃபூட்பால் மாச் நடக்கும்.அங்க இவன் இருந்தே ஆகணும்.எப்படி அதை  இவன் சமாளிக்கரான்?
இதுதான் கதை...
ப்டம் ரொம்ப நல்லாருக்கு.ஹீரோவா நடிச்ச பைய்யன் தூள் கெளப்பிருப்பான்...முதல்ல படம் ஆரமிக்கும்போது நல்லருக்காதுனு ஒரு பீலிங்கி.போக போக நல்லாருந்துச்சு...
படம் பிடிச்சா பாருங்க.
மறக்காம வோட்ட குத்துங்க.
அன்புடன்
உங்கள் தோழி
கிருத்திகா

26 October, 2009

ஆதவன்-விமர்சனம் இல்லை...சும்மா படிக்க




காட்சி-1,சனிக்கிழமை,24/10/2009,4.35PM
                                                  2 நாள் பயணமாக புதுவைக்கு சென்றிருந்தேன்.அங்கே தான் ஆதவன் தரிசனம் கிடைத்தது.படம் பார்ப்பதற்கு முன்னால் சில நண்பர்கள் சொன்னதையும்  பதிவர்கள் இட்ட விமர்சனங்களையும் பார்த்து வெறுத்து போய் "படம் மட்டமாதான் இருக்கும்"நு ஒரு முடிவுக்கு வந்துட்டேன். ஆனாலும் எங்கள் குடும்பம் மொத்தமும் கிளம்பி போகலாம்னு முடிவெடுத்தோம். முருகா தியேட்டரிலும்,ஆட்லாப்சிலும் படம் ஓடுகிறது.நாங்கள் முருகா தியேட்டரையே தேர்ந்தெடுத்தோம்.ஏன்னு கேட்டா ஆட்லாப்ஸ்ல ஸ்னாக்ஸ் எதுவும் எடுத்திட்டு போககூடாதாம்....அது நமக்கு கஷ்டமாச்சே :)
காட்சி 2,6.30PM
                                  தியேட்டர்க்குள்ள போகும்போதே 6.30 ஆகிட்ச்சு.. title முடிஞ்சுருக்கும்னு நெனச்சு போனா படமின்னும் ஆரமிக்கவே இல்ல....கூட்டம் கடல் மாதிரி இருக்கு.ரொம்ப நாள் கழிச்சு(ஷிவாஜி படத்துக்கு அப்புறம்) ஹவுஸ்புல் போர்டை இந்த படத்துக்கு  தான் பார்த்தேன்.வண்டிய பார்க் பண்ணறத்துக்கு ஒரு கூட்டம்,தியேட்டர் உள்ள நுழய ஒரு கூட்டம் யப்பபபா ....எல்லாத்தயும் தாண்டி  c-13 - c-20  சீட்டை கண்டுபுடிச்சு  போயி ஒரு வழியா செட்டில் ஆனோம்.பிரீத்தி மிக்சி விளம்பரமும் ஏர்செல் விளம்பரமும் முடிஞ்சதுக்கப்பறம் கோவா டிரைலர் போட்டாங்கோ.படம் ரொம்ப குளுகுளுனு இருக்கு..அதயும் பாத்துரனும்னு மனசுல நெனச்சிகிட்டு இருக்கும்போதே ஒரு பாப்பா போட்டோ கறுப்பு வெள்ளைல....அப்போ ஆரமிச்ச விசில் சத்தம்  சூரியானு பேரு போட்டத்துக்கு அப்பறமும் ஓயல
காட்சி 3,6.45 PM
                                 ஆதவன் கதயை எழுத போறது இல்லை இப்போ.அத செய்யறத்துக்குனே சில பாப்புலர்  பதிவர்கள் இருக்குராங்க.நாம ஒதுங்கிக்கலாம்.நம்ம லிமிட் இங்கிலீசு படத்தோட முடிச்சுக்குவம்.அந்த கோட்ட தாண்டி நானும் வரமாட்டேன்*.இருந்தாலும் படத்துல எல்லாரும் ரசிச்ச காட்சிகளை பத்தி கொஞ்சம் சொல்லலாம்னு நெனைக்குரேன்.
                                படத்த தூக்கி  நிறுத்தறது 4 பேருதான்.
1)வடிவேலு
2)கே.எஸ்.ரவிக்குமார்
3)ஹாரிஸ் ஜெயராஜ்
4)சூரியா.
                 வடிவேலு ஸ்கிரீன்ல வரும்போது கண்டிப்பா  நமக்கு சிரிப்பு வந்துடும்.100% கியாரண்டீ...ரொம்ப நாள் கழிச்சு இவர இந்த படத்துலதான் அடி வாங்காதமாதிரி(ஏறக்கொறய) காட்டிறுக்காரு ரவி.அதோட பானர்ஜீயோட பெயர்க்காரணம்,பொறம்போக்கு -புது விளக்கம்,ஜிகர்தண்டா தூத் குடிச்சுட்டு உளறும் காட்சி, பாம் வெச்ச பஸ்ல ஏறிட்டு படாத பாடு
படு(த்)றது இப்படி படம் பூரா மின்னிருக்காரு.வின்னர் கைப்புள்ளை,தலை நகரம் நாய் சேகர்,சந்திரமுகி முருகேசன் வரிசையில் கண்டிப்பா இந்த பானஜீக்கும் இடம் உண்டு.
                   
                அடுத்து ரவிக்குமாரின் டைரக்ஷன் பத்தி சொல்லவே வாணாம். சரத்த நாட்டாமை ஆக்கி,ரஜினியை படயப்பாவாக்கி,கமலை 10 அவதாரம் எடுக்க வெச்சவருக்கு சூரியாவை ஆதவன் ஆக்கரதா கஷ்டம்?????அதோட 10 வயசு பைய்யனா சூர்யாவைக்காட்டி ஒரு புது ட்ரெண்ட் செட் பண்ணிட்டாரு.அடுத்து இனிமேல 2 மாச குழந்தை,4 வயசு பையன் இப்டிலாம் பிற்காலத்துல வரலாம்...

                     ஹசிலி ஃபிசிலியை ரசிக்காதவங்களே இல்ல.அதை விட என்னை பொறுத்த மட்டில் வாராயோ மோனாலிசா பாட்டு இன்னும் சூப்பர்.பிண்ணனி இசையிலும் ஹாரிஸ் கொடி நல்லாவே பறக்குது.

                    கடசியா சூர்யாவை சொல்லிருந்தாலும் தன்னோட வேலயை மிக சரியாகவும்,சிறப்பாகவும் செஞ்சு கலக்கோ கலக்குனு கலக்கி இருக்காரு சூர்யா.படத்துக்கு படம் அவருக்கு அழகு கூடிக்கிட்டே போகுது...அவரும் வடிவேலுவும் சேர்ந்து பின்னி பெடல் எடுத்துருக்காங்க.ஆக்ஷன் ரோல்,கொஞ்சம் காமெடி,அப்பப்போ நயன் தாராகுட சாங்க்கு டான்ஸ்.இவ்வளவேதான்.அதயும் நல்லா செஞ்சு கைதட்டல் வாங்குராரு.
                  கிலைமாக்சில் லேசாக ஒரு செயற்கைத்தனம் தெரிந்தாலும் கமர்ஷியல் படத்தில் யாராவது லாஜிக் பாக்கலாமா????
அதனால ஆதவன் நல்லா இல்லைனு யாரும் சொல்லாதிங்க நண்பர்களே....

படத்தை பார்த்துட்டு நீங்கள் வெளில வரும்போது  இதில் எதாவது ஒன்றை சொல்லுவிங்க
சூர்யா  ரசிகராக பார்த்தால்-சூப்பர்,செம படம்...வாய்ப்பே இல்லை

நடுனிலயாளராக- பரவாயில்லை ஒரு முறை பார்க்கலாம்...நல்லாருக்கு

சூர்யா பிடிக்காதவர்களும்,கமர்ஷியல் படம் பிடிக்காதவர்களும்---எப்பிடியும் குறை தான் சொல்ல போறிங்க.அத நீங்களே சொல்லிகுங்க
                                                                                              (நீங்கள் இந்த படத்தை பார்க்காமல் இருப்பதே உங்களுக்கும்,என்னைப்போல K.S,R  பிரியர்களுக்கும் நலம்...)

காட்சி 4-9.45 PM

       படம் முடிஞ்சு போச்சு...  அவளதான்...
நீங்க இந்த பதிவுக்கு வோட்ட குத்திட்டு போங்க...
கருத்துக்களயும் கொட்டிட்டு போங்க...

அன்புடன்
உங்கள் தோழி கிருத்திகா

19 October, 2009

சினிமா கொட்டாய்-கண்டிப்பாக,இருக்கலாம் !!!-விமர்சனம்





வனக்கம் வந்தனம் நமஸ்தே நமஷ்கார்
தீபாவளி நல்லா கொண்டாடிருப்பிங்க...:)
இந்த வாரம் நம்ம சினிமா கொட்டாய்ல பாக்கபோர திரைப்படம்  DEFINITELY,MAYBE
இந்த படத்த  ஹாலிவுட்டின் ஆட்டோகிராப்னு சொல்லலாம்.நம்ம ஹீரோ பேரு வில் ஹேய்ஸ்(ரே ரேனால்ட்ஸ்).அவரு வாழ்க்கைல வர்ர 3 பொண்ணுங்களை பத்தி சொல்லுராரு அவருடய பொண்ணுகிட்ட :).
 கதை ரொம்ப பெருசு.ஆன நான் சுருக்கமா சொல்லரேன்.
கதை ப்லாஷ் பாக்.இத அவரு பொண்ணுகிட்ட சொல்லரமாதிரி எடுத்துருக்காங்க.
"என்னோட அம்ம யாருனு" அந்த குட்டி பொண்ணு  வில் கிட்டகேக்குது.இப்போ மார்ட்டீன் காய்லை முசிக் விட்டுக்கொண்டே சுத்தவும்.
10 வருஷத்துக்கு முன்னாடி..........
வில் ஒரு speech writer. அதாவது அரசியல்வாதிகளுக்கு  மேடைப்பேச்சுகள் எழுதிதர்ரவரு.லோக்கல அரசியல்வாதிகளுக்கு எழுதுன ஸ்டைல பாத்துட்டு பிரசிடெண்ட் ஆபிஸ்லே வேலைக்கு சேர  கூப்ட்ராங்க.அப்போ இவரும்  எமிலி@சாரா அப்டிங்கரவங்களும் லிவிங்க்-டு.கெதர்...எமிலி ஒரு டைரியை அவங்க நண்பி சம்மர் அப்டிங்கரவங்ககிட்ட தர சொல்லி குடுத்துவிடராங்க.(மண்ண தானே தன் தலைல அள்ளி போட்டுகரதுன்னா இதுதான்).அவங்களை வீட்டுல விட்டுட்டு இவரு நியுயார்க்  போயிட்ராரு.ஆபிஸ்ல ஏப்ரல்னு ஒரு பொண்ணு வேல பாக்கராங்க.அவங்களும் இவரும் பிரன்ஸ் ஆகிட்ராங்க.அதுக்கப்பரம் சம்மர பாத்து டைரிய குடுக்கராரு.இப்ட்யே கொஞ்ச நாள் போகுது.இவரோட ஆளு ஒரு நாள் இவர பாக்க நியுயார்க் வருது.வந்து கல்யாணம் பண்ணிக்கபோராங்கன்னு பாத்தா அந்த பொண்ணு இவரு பிரண்டோட லிவிங்க்-டு.கெதர்....அப்ட்யே ஷாக் ஆகி இந்த கனெக்ஷன கட் பண்ணிடுராரு வில்.அதுக்கப்பரம் சம்மருக்கு இவருக்கும் ஒரே எடத்துல  வேலை ஆகிடுது.கொஞ்ச நாள்ள அந்த சம்மர் பொண்ணு மேல ஐயா  காதலில் விழுந்தேன் :) ஆகிட்ராரு.சரி இப்பனாச்சும் மனுஷன் கல்யாணம் பன்னுவான்னு பாத்தா அந்த பொண்ணு  ஒரு பெரிய தலைவரை பத்தி தப்பா பேச்சு எழுதி குடுத்துடுது.அதுக்கு இவர பொறுப்பாக்கி ஆபிஸ்லேர்ந்து வெளில தள்ளிட்ராங்க.அந்த சம்மரும் அவங்க ஆளோட போயிடுராங்க.இப்போ நம்ம கதைல மிச்சம் இருக்கரது ஏப்ரல் மட்டும் தான்.அவங்க ஊர விட்டே போயிட்ராங்க அவங்க ஆளோட சண்ட போட்டுட்டு.
அந்த குட்டி பொண்ணு குழம்பி போகுது.விரக்தில என்ன தத்து எடுத்து வளத்திங்களாப்பானு கேக்குது பாவமா.மீண்டும் கதய  கண்டினியூ பண்ணலாம் நீயே கண்டுபிடிப்ப அப்டினு சொல்லிட்டு தொடர்ராரு வில்.
கொஞ்ச நாள் கழிச்சு  எமிலி திரும்ப வராங்க இவர மீட் பண்ண.அந்த "கஸ்மாலம் என்ன உட்டுட்டு பூட்சுனு " ஒப்பரி வெக்காம வெக்கராங்க.
சம்மர் "என் ஆளு புட்டுகிட்டான்." அப்டின்னு இவருகிட்ட வந்து சொல்லுராங்க.ஏப்ரல இவர் போயி பாக்குராரு.அவங்கள லவ் பண்ரதா சொல்லுராரு.அவங்க "நமக்குள்ள நட்பு மட்டும்தான்"நு  இவருக்கு டாடா காட்டிடராங்க.
இப்போ அந்த குட்டி பொண்ணு குழம்புது மறுபடியும்.
கடசில ஹாப்பி எண்டிங்க்....யாரு அவர் லவ் பண்ணினாரு??யாரு அவங்க அம்மானு சொல்லி முடிக்கராரு கதைய.அது சஸ்பென்ஸ்.நீங்களே பாத்துக்குங்க.....
ஆட்டோகிராப் மாதிரிதானே இருக்கு????
செரி எப்பவும் போல படிச்சுட்டு முத்திரயை குத்திட்டு போங்க...
அன்புடன்
உங்கள் தோழி கிருத்திகா

15 October, 2009

ஹாப்பி தீபாவளி நண்பர்களே மற்றும் நண்பிகளே...:)




அல்லாருக்கும் வணக்கமுங்கோவ்.....இது இன்னோரு சமூக அக்கரை கொண்ட பதிவு அப்டினும் வெச்சுக்கலாம்...சிலருக்கு உளர்ரேன் அப்டின்னு கூட தோணலாம்.நான் சொல்றது சரியோ இல்ல தப்போ(என்னை பொறுத்தவரை சரி)தெரியல...
விஷயத்துக்கு வரேன்.நாட்டுல நெறய மதங்கள் இருந்தாலும்  முக்கியமான 3 மதங்கள்(எனக்கு தெரிஞ்சவரை) இந்து,முஸ்லிம்,கிரிஸ்தவம்.இந்துவை தவிர மத்த மதங்களை எல்லாம் ஆராய்ஞ்சு பாத்திங்கன்னா இவங்க அடுத்த மதத்துகாரங்க கூட  சண்ட போட்டுப்பாங்களே தவிர தங்கள் மதத்துக்குள்ள சண்டை போட்டுக்கரது கம்மிதான்.சரி இது ஒரு பக்கம் இருக்கட்டும்.நம்ம  இந்துக்கள்ள கடவுள் இல்லைனு சொல்லுர கூட்டம் ஒண்ணு இருக்கு.அவங்களுக்கு ஆத்திகர்கள் வெச்சுருக்கர பேரு "நாத்திகர்கள்".அவங்களே வெச்சுக்கிட்ட பேரு "பகுத்தறிவாளர்கள்".இதை மனசுல வெச்சுக்குங்க.மேல படிங்க.
                 இப்போ ஒரு குட்டி கதை(தலைவர் ஸ்டைல்).ஒரு ஸ்கூல்ல படிக்கர ரெண்டு பேர எடுத்துக்கலாம்.(நெறய பேரு இருப்பாங்க.நம்ம கதைக்காக 2 பேரு மட்டும் :) ).அவங்கள்ள ஒரு பையன் நல்லா படிக்கரான்.இன்னொருத்தன் ப்டிக்கலை அப்டினு வெச்சுக்கலாம்.ஒரு நல்ல டீச்சர்(மிஸ்-1) என்ன பண்ணனும்??படிக்காத பையனை கூப்பிட்டு "தம்பி தம்பி!!! நீ ஏம்பா நீ படிக்க மாட்டேங்கர??நீ படிக்கரதுக்கு என்ன பண்ணலாம்?பாடத்துல எதாவது புரியலயா??எதவது கஷ்டமா இருந்துச்சுனா என்னை வந்து கேளு .இல்லனா படிக்கர பையன் கிட்ட உதவி கேட்டு படி.அப்படியும் இல்லனா டூஷன் சேர்ந்துக்க." அப்படினு சொல்லனும்.
இதே அந்த மிஸ்-2 "நீ கவலப்படாத தம்பி.அவனோட மார்க்க கொறச்சு விட்டுர்ரேன்.இல்லனா அவன பரீட்சை எழுத விடாமல் செஞ்சுரலாம்.நீ அவனை விட நல்லா மார்க் எடுத்துருப்ப"அப்படினு சொன்னா அவங்களை எந்த ரகத்துல சேர்க்குரது???இதை நான் ஏன் சொல்லுரேன்னு அனேகமா எல்லாருக்கும் புரிஞ்சுருக்கும்.
           என் ஊரு சிதம்பரம்.இங்கே நடந்துட்டு வர்ர பிரச்சனைய  தொடர் பதிவா எழுதலாம்.ஆனா நமக்கு தான் அரசியல்(!!!!!!!!) பிடிக்காதே( :) ஹி ஹி) .நடராஜர் கோவிலை அரசாங்கம் எடுத்துகிச்சு.அது கூடாதுனு கோவிலை பரம்பரை பரம்பரையா நடத்திட்டு வர்ர தீட்சிதர்கள் சொல்லுராங்க.இப்ப சீனுக்குள்ல நுழயராங்க நம்ம நாத்திகர்கள் @ "பகுத்தறிவாளர்கள்".இரண்டு நாட்கள் முன்னால் இங்கே  ஒரு மீட்டிங் போட்டுருந்தாங்க.அவ்வளவா கூட்டம் இல்லை.இருந்தாலும் ஒரு 50 பேருக்கு மேல இருந்தாங்க.என்னதான் பேசுராங்கனு பாப்போம்னு அடியேனும் அங்க ஐக்கியம் ஆனேன்.ஒரு அதிபுத்திசாலி பேசுராரு "ராத்திரி நம்மகூட டாஸ்மாக்ல உக்காந்து தண்ணி அடிக்கர பயலுங்க கிட்ட நாம அடுத்த நாளு காலைல கோவில்ல விபூதி வாங்க வேண்டிருக்கு.மதியானம் நம்ம கூட முணியாண்டி விலாஸ்ல சாப்டுர சல்லி பசங்க(நோட் த பாய்ண்ட்) கிட்ட சாயங்காலம் குங்குமம் வாங்க வேண்டி இருக்கு."அப்படிங்கர சில அருமையான(அபத்தமான) கருத்துக்களோட இதயும் சொன்னாரு"மாமி சின்ன மாமி மடிசார் அழகில் வாடி சிவகாமி"அப்படின்னு பாடுனார் இளையராஜா.அதுல குட பாருங்க மாமிக்களைதான் முன்னிலை படுத்திருக்காரு"அப்டின்னு ஒரே போடா போட்டாரே பாக்கணும்.அதோட எடுத்தேன் ஸ்கூட்டிய.ஜூட்டு தான்.இத ஏன் இங்க சொல்ரேன்னு யோசிக்கிரிங்களா???அங்க தான் விஷயமே இருக்கு.
                      அவங்க என்ன் சொல்லி மீட்டிங்க ஆரமிச்சாங்கன்னா "கோவிலை ஆக்கிரமித்திருக்கும் தீட்சிதர்களை விரட்டுவதே எங்கள் குறிக்கோள்.காலம் காலமாக அவர்களே ஆண்டுகொண்டிருக்கிரார்கள்.ஆன்மீகத்தை வளர்க்காமல் தீண்டாமை வளர்க்கின்ரார்கள்" அப்டின்னாங்க.எனக்கு ஒண்ணுதான் புரியல.எந்த காலத்துல இருக்கராங்க இவங்க....கிராமங்கள்ள போயி இத மாதிரி சொன்னாலும் அர்த்தம் இருக்கு.ஆனா இங்க வந்து இப்படி சொல்லுராங்களே..தீண்டாமை இன்னும் ஒரு சில இடங்களில் இருந்துக்கிட்டு தான் இருக்கு.அதை நான் இல்லைனு சொல்லல.தீண்டாமையை ஒழிக்கட்டும்.அதயும் வேணாம்னு சொல்லல.அதுக்கு அவங்க தாழ்ந்தவர்கள் அப்படினு அவங்களே ஒரு பிரிவை நினைக்கராங்க இல்லயா...அவங்க மிஸ்1 மாதிரி வளர உதவி செய்ய்யனும்.அதை விட்டுட்டு மிஸ்-2 மாதிரி அடுத்தவங்களை கால வாரி விட்டுட்டு ஒருத்தரை முன்னேத்தரது தப்பு....அதோடு இன்னொரு விஷயமும்...எதாவது வாகன்சி இருக்குனு போட்டு இருந்தாங்கன்னா அதை பாருங்க.சமீபத்துல ஒரு நிறுவனத்துல 50 இடங்கள் காலினு  ஒரு அறிவிப்பு.அதுல  பாத்திங்கன்னா எல்லாருக்கும் ஒதுக்கீடு போக ஜென்ரலுக்குனு 25 இடங்கள் தான்...இதை நான் புகாரா சொல்ல வரலை.இப்படி இருக்கும்போது ஏன் இன்னும் இன்னும் கீழ தள்ளராங்க??? இப்போ பாவப்பட்ட நிலையில இருக்கரது யாருனு நீங்களே சொல்லுங்க.....
                      

                               
           இதன் மூலமாக நாம் சொல்ல வரும் கருத்து என்னவென்றால் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.இவங்க புத்தியில இருக்கர அறியாமயும்,தீண்டாமையும் பொசுங்கட்டும்.....நல்ல இனிப்பு காரம் எல்லாத்தயும் சாப்புடுங்க.அதோட பட்டாசு வெடிக்குரப்போ பாத்து வெடிங்க...அக்கம் பக்கம் பாத்துகிட்டும் வெடிங்க.யாராவது போகும்போது லெஷ்மி வெடிய கொளுத்தி பயமுறுத்தரது,ராக்கெட்ட உட்டு ரகள பன்ரது...இதெல்லாம் வேணாம்...(சும்மா காமெடிக்கி :) )
ஹாப்பி தீபாவளி நண்பர்களே மற்றும் நண்பிகளே...:)

07 October, 2009

கோடு போட்ட சட்டை போட்ட பையன்-திரை விமர்சனம்





THE BOY IN STRIPED PYJAMAS...இது உலகப்போர்-2 காலத்து படம்.
ஜூக்களை எப்படி கொடுமைப்படுத்தினார்கள் ஜெர்மானியர்கள் அப்டிங்கரத ஒரு சின்ன பைய்யன வெச்சு ரொம்ப அழகா சொல்லிருக்காரு இயக்குனர்.ஒடனே டாக்குமெண்டரினு நெனக்காதிங்க.ஷங்கர் படம் மாதிரி ,இந்த படத்த பார்த்த ரொம்ப நேரத்துக்கு அப்பறம் கூட அதன் தாக்கம் குறையல

 
(ப்ருனோவொட அப்பா,அம்மா)

     
                        ப்ருனோங்கர 8 வயசு பையன் தான்  கதாநாயகன்.அவனுடைய அப்ப(ரால்ப்)  ஜெர்மனியின் போர் கம்மாண்டெண்ட்.புருனோக்கு ஒரு அக்காவும் கூட.கதையின் ஆரம்பத்துல பெர்லின்லேருந்து அவங்க குடும்பம் வேற ஒரு கிராமத்துக்கு அதாவது யூதர்களை கொல்லும் காம்ப் இருக்கர எடத்துக்கு மாறிடுது.அழுதுகிட்டே நண்பர்களுக்கு டாடா சொல்லுராரு ப்ருனோ.புது வீடு  சுத்தமாபிடிக்கல அவனுக்கு.அந்த வீட்டை சுத்தி காவல் இருக்கும்.அதோட விளயாடவும் யாரும் சின்ன பசங்க அங்க இருக்கமாட்டாங்க.பாவெல் அப்டினு ஒரு வயசானவரு(ஜூ இனத்தை சேர்ந்தவர்) அங்க எடுபிடியா இருப்பாரு.ப்ருனோ பாவெலோட பேசுனாலே அவங்க அப்பாவுக்கு சுத்தமா பிடிக்காது. இப்டி தனிமையிலே வாடிப்போரான் ப்ருனோ.
                அப்போதான் அவன் வீட்டுக்கு  பின்னாடி ஒரு கதவு இருக்கரத கண்டுபிடிக்கரான்.அதுவழியா கொஞ்ச தூரம் போனா யூதர்களை அடைத்துவைத்திருக்கும்  காம்ப் வருது.அங்கே ஷ்முயேல் அப்டினு ஒரு சின்ன பையனை சந்திக்கரான் ப்ருனோ.அவன தினமும் பாக்க வர்ரான்.எதாவது விளயாட்டு பொருளும்,அதோட அவனுக்கு சாப்பிடவும் எதாவது கொண்டு வருவான்.அம்மா ,அப்பாக்கு நைசா டேக்கா குடுக்கரான்.தினமும் இது தொடருது.ஆனா அவங்க அப்பாவோ தினமும் நூத்துக்கணக்குல யூதர்களை கொன்னுட்டு வராரு.(இது ப்ருனோக்கும் அவன் அம்மாவுக்கும் தெரியாது). ப்ருனோக்கு ஒரு நாள் அடிபட்டுடவும் பாவெல்   வந்து மருந்து  போட்டு விடுராரு.அப்போதான் அவர் சொல்லுராரு தான் ஒரு டாக்டர்னு.அப்டியே ஷாக் ஆகிடரான் ப்ருனோ.அவன் மனசுல அவங்க அப்பா செய்ரது தப்புனு மைல்டா தோண ஆரமிச்சுடுது.அவன் அம்மாவும் கண்டுபிடிச்சுடராங்க இவர் செய்ரத.அவங்களுக்கு தன் கணவர் ஜூக்களை கொல்லுரது சுத்தமா பிடிக்காது.அதனால சண்ட போட்டுட்டு வேற எடத்துக்கு குழந்தைகளை அனுப்பனும்னு சொல்லிடராங்க.
                அன்னிக்கு ப்ருனோ,ஷ்முயேல் கிட்ட தான் வீடு மாறி போகபோறதாக சொல்லுரான்.உடனே ஷ்முயேல் தன்னோட அப்பாவ காணும்,நேத்திக்கி இந்த சோல்ஜர்ஸ் வந்து கூட்டிட்டு போனாங்க.அதுக்கப்பரம் திரும்ப வரவே இல்லனு சொல்லுரான்.அப்போதான் விபரீதமா ஒரு யோசனை தோணுது ரெண்டு பேருக்கும்.ப்ருனோ அந்த காம்ப்க்குள்ள வந்து அவன் அப்பாவ தேடிக்குடுக்கரதாக சொல்லுரான்.அவனுக்கும் ஒரு கோடு போட்ட சட்டை தர சொல்லுரான்.ஷ்முயேலும் போய் கொண்டுவந்து தரான்.ப்ருனோவும் காம்ப்குள்ள போய்ட்ரான்.ரெண்டு பேரும் தேடிக்கிடே இருக்கும்போதே அந்த எடத்துல இருக்கர யூதர்களை எல்லாம் கொல்ல  நாஜிவீரர்கள் இழுத்துட்டு போராங்க.அதுல ரெண்டு பேரும் மாட்டிக்கராங்க.அந்த பக்கம் அவங்க அம்மா,அப்பா,அக்கா எல்லாரும் அவன தேடிக்கிட்டு இந்த காம்ப் வரை வந்துடராங்க.கடசில யூதர்களை கொல்லர காட்சி ரொம்ப கொடுமயா இருக்கும்.ஒரு சின்ன ரூம்ல எல்லாரயும் நிக்கவெச்சு விஷவாயுவை அனுப்பராங்க உள்ள.கதவையும் சாத்திடராங்க.அப்டியே அந்த சாத்தின கதவுகளோட படம் முடியுது.
                 கண்டிப்பா இந்த படத்த பாருங்க எல்லாரும்.கண்டிப்பா ஒரு எடத்துலயாவது கண்ணுல குளம் தேங்கி நிக்கும்.அட்லீஸ்ட்  கொஞ்சம் வருத்தமாவது படுவிங்க.நிறைய்ய டுவிஸ்டு வரும் படத்தின் நடுவில.அந்த பாவெல்ல தண்ணிய கீழ கொட்டிட்டாருன்னு  அடிச்சே கொன்னுடுவாங்க.அதுமட்டும் இல்ல இன்னும் ஏகப்பட்ட விஷயங்கள்.
படத்த பார்த்துட்டு எப்டி இருக்குதுனு கண்டிப்பா சொல்லுங்க.அதோட வோட்டு பிலீஸ் :) ஹி ஹி

05 October, 2009

மைக்ரோசாப்ட்-வேகம்


சமீபத்தில்  Microsoft  நிறுவனம் வெளியிட்ட Windos Speed Secrets அப்டின்னு ஒரு புத்தகத்தை படித்தேன்..அதுல சொல்லிருந்தத இங்கே பகிர்ந்துக்கரேன்....
முதலில் விண்டௌஸ் xp (நான் அததான்  உபயொகிக்கரேன் :) )
(விஸ்டா வேணும்னா உங்க மின் அஞ்சல் முகவரியை குடுக்கவும்..அதற்கு அனுப்பபடும்)
வழி ஒன்னு:
1)Disable Extra Startup Programs
அதாவது நீங்கள்  உங்கள் கம்ப்யுட்டரை ஆன் செய்யும்பொது சில வகை ப்ரொக்ராம்கள் ப்ரொசெச்சரை தொல்லை பண்ணும்...அதனால Startup ல அதிகமா ப்ரொக்ரம்ஸ் இருக்க கூடாது...இதை எப்படி குறைப்பது??
இதை ஃபால்லோ பன்னுங்கோ..
       1)start -->Run அப்டினு டைப் பண்ணுங்க..
       2)அதுல வரும் பாக்ஸ்ல msconfig  அப்டினு டைப் பண்ணுங்க..
       3)அப்றம் ok குடுங்க
       4)இப்போ உங்களுக்கு System configuration utility அப்டினு ஒரு விண்டோ திறக்கும்
       5)startup ல போய் எதெல்லாம் தேவ இல்லயோ எல்லத்தயும் unchek  பண்ணுங்க..நிற்க...எல்லாத்தயும்  கட கடனு unchek செஞ்சுடாதிங்க....தேவ இல்லாததுனு எத நெனக்கிரிங்களோ...உதாரனமா  AOL, RealPlayer, instant messengers,download  and video managers, dictionaries etc etc எல்லாதயும்  எடுத்துடலாம் ஆனா Antivirus மடடும் அப்டியே இருக்கட்டும்..எடுத்துடாதிங்க
       6)இப்போ ok அழுத்துங்க...உடனே புதுசா ஒரு விண்டோ உங்களை restart பண்ண சொல்லும்..
       7)ஒகே குடுத்துட்டு  restart ஆனத்துக்கு அப்புரமா  ஒரு விண்டோ  வரும்..இதை இனிமேல் காட்ட வேண்டாம்  அப்டினு டிக்  பண்ணி விடுங்க...
இது உங்கள் கணிணியின் வேகத்தை  250% அதிகரிக்கும் அப்டினு சொல்ராங்க
வழி 2:
2)அடுத்ததா என்ன சொல்ராங்கன்னா இந்த உலகத்துல ஆறுல ஒரு கணிணி Spyware,Adware and Malware இவைகளால பாதிக்கப்பட்டுருக்காம்.அதனால உங்க கணிணியை அடிக்கடி scan  செஞ்சுக்கனும்.ஒரு நல்ல ஆண்டிவைரஸ் உபயொகப்படுத்துங்க..

என் அனுபவத்ததுல சொல்ரேன்  தயவு செய்து  AVG,NORTON,AVAST இவைகளை உபயோகிக்க வேண்டாம்..
kaspersky,MCAFEe ரெண்டும்தான் பெஸ்ட்...ஆனா எதுவுமே இல்லாமல் இருப்பதர்க்கு AVG பரவால்லை

வழி 3:
3)ஸ்க்ரீன் செட்டிங்க்ஸ்
அடுத்ததாக நீங்க உங்க ஸ்க்ரீன்ல என்ன மாதிரி செட்டிங்க்சை மாத்தனும்னு சொல்ராங்க
a)முதலில் எப்பவும் போல start -->control panelகு போங்க
b)அதுல system அப்டிங்கரத க்ளிக் பன்னுங்க ரெண்டு தடவ(double clik)
c)அதுல advanced அப்டிங்கரத தேர்ந்தெடுங்க
d)இப்போ performance settingsல போயி நீங்க என்ன செய்யனும்னு கீழே குடுதுருக்காங்க
இந்த 5 டப்பால மட்டும் டிக் பண்ணுங்க.மத்தத எடுத்துடுங்க.
         a.  Show shadows under menus
          b. Show shadows under mouse pointer
          c.  Show translucent selection rectangle
          d. Use drop shadows for icons labels on the desk
             e.  Use visual styles on windows and buttons
f)செஞ்சுட்டு Apply குடுத்துட்டு  ok குடுங்க..
இப்போ இன்னும்கொஞ்சம் வேகமா இயங்கும்..

வழி 4
4)கணிணி வேகத்த அதிகரிக்க இருக்கறதுலயே சுலபமான ம்ற்றும் முக்கியமான வழி ரெஜிஸ்ட்ரி மாற்றம்.
அதுல என்னன்ன செய்ய்யலாம்னு அடுத்த பதிவில சொல்ரென்...(கை வலி தாங்கமுடியல....:(....)