28 October, 2009

நான் ரசித்த கவிதை




இது நான் ரசித்தது மட்டும் தாங்க.. பக்கம் பக்கமா எழுதிக்கூட தள்ளீடுவேன்.ஆனா ஒரு குட்டி கவிதை கூட எழுத வராது எனக்கு....
(யாராவது கத்து குடுங்களேன்...)
சரி கவிதை இதுதான்...

ஏன்மா நீ இப்படி இருக்க??
உன்னால் எப்பவுமே உபத்ரவம்தான்
காச் மூச் என கத்திவிட்டு
ஆபீஸ் சென்றேன்.
அங்கே சென்றால்...
ஈமெய்ல் ஐ.டி முதல்
ஏ.டி.எம் வரை
உன் பெயரை அடித்தால் தான் வேலையே...
கடவுசொல்லாக இருந்து என்னை பார்த்து
சிரித்துகொண்டிருக்கிராயே அம்மா :)


எப்புடி இருக்கு????
நல்லாருக்கா??:)
இல்லயா??? :(
சரி எப்புடி இருந்தாலும் கமெண்டயும்,வோட்டயும் குத்த மறக்காதிங்க....
அன்புடன் உங்கள் தோழி
கிருத்திகா

17 comments:

  1. நல்லா இருக்கு....சூப்பர்ப்..

    ReplyDelete
  2. நான் கவிதையை விட அந்த படத்தை ரசித்தேன்...

    அந்த குட்டி கிருஷ்ணர் கொள்ளை அழகு....

    ReplyDelete
  3. //கடவுசொல்லாக இருந்து என்னை பார்த்து
    சிரித்துகொண்டிருக்கிராயே அம்மா :)//

    கவிதை நன்றாகத்தான் இருக்கிறது எங்கே சுட்டீங்க...அத சொல்லலையே...

    ஒரு விசயத்தை லட்டு மாதிரி சொன்னா கவிதை...அதையே பூந்தி மாதிரி சொன்னா கட்டுறை. (எப்ப்ப்பூடி.....)

    கவிதாயினி கிருத்திகா வாழ்க...வாழ்க....

    ReplyDelete
  4. கவிதை நல்லா இருக்கு.

    ரேகா ராகவன்

    ReplyDelete
  5. ம்ம்..

    பாஸ்...

    நல்லா இருக்கு

    ReplyDelete
  6. உன் பெயரை அடித்தால் தான் வேலையே...
    இது நல்லாயிருக்கு.

    ReplyDelete
  7. ஹலோ

    எல்லாம் நல்லா பாத்துக்கோங்க... நானும் கவிதை எழுதிட்டேன்... கவிதை எழுதிட்டேன்...

    ReplyDelete
  8. உண்மையான விஷயம் தாங்க. நல்லா இருக்கு கவிதை

    ReplyDelete
  9. கவிதையல்ல நிஜம்
    என்னைப் பொறுத்த வரை

    ReplyDelete
  10. jaisankar jaganathan
    நன்றி :)
    நாளும் நலமே விளையட்டும்
    அக்கவுண்ட் ஓப்பன் பண்ணின உடனே சொல்லிடரேங்க :)

    R.Gopi
    நன்றி :) நானும் கூட:)

    க.பாலாசி
    செம டீச்சிங்க்..:)
    இதுக்காகவே உங்களபத்தி ஒரு லட்டு எழுதி தரேன் :)

    KALYANARAMAN RAGHAVAN
    உங்களுக்கும் நன்றி

    velji
    அடித்தால்னு நான் சொல்ல வரது டைப்பு....நீங்க என்ன நெனச்சிங்க??

    பின்னோக்கி
    தாங்க் யூ :)

    அகல் விளக்கு
    போன தடவை டெர்ரர் ஆக சொல்லிகுடுத்த மாதிரி இதயும் சொல்லி குடுப்பிங்கனு பாத்தேன் :(

    PARTHIPAN
    என்னை பொறுத்த மட்டிலும் கூட....அதான் நான் ரொம்ப ரசித்தேன் :)

    ReplyDelete
  11. நல்ல கவிதை படைத்த அந்த கவிஞர் யாரென்று தெரியாவிட்டாலும்,

    நல்ல ரசனையுடன் அதை இங்கே பதிப்பித்த உங்களுக்கு வாழ்த்துகள், மற்றும் நன்றி.

    ReplyDelete
  12. கடவுச் சொல் மட்டுமல்ல... "கடவுள்" சொல்லும் அம்மாத்தான்,.கவிதைமிக அழகு .

    ReplyDelete
  13. கடவுச் சொல் மட்டுமல்ல... "கடவுள்" சொல்லும் அம்மாத்தான்,
    intha variyakooda sethurukkalaame!!!!!!!!!!!!!!
    nanri karunaa :)

    ReplyDelete