27 October, 2009

சினிமா கொட்டாய்-கல்யாண பாட்டுக்காரன்,புது பையன்



கல்யாண பாட்டுக்காரன்(THE WEDDING SINGER)
இதுதான் நாம இந்த வாரம் சினிமா கொட்டாய்ல பாக்கப்போர  முதல் திரைப்படம்.இந்த படத்துல ஆடம் சாண்ட்லர்(ராபி),ட்ரூ பாரிமோர்(ஜூலியா) மற்றும் பலர் நடிச்சுஇருக்காங்க.  
               கதை-ராபி  கல்யாணத்துல பாடுற பாடகர்.ஜூலியா ஒரு waitressஆ வேலை பாப்பாங்க.ரெண்டு பேரும் ஒரு கல்யாணத்துல மீட் பண்ணிப்பாங்க.ராபிய கல்யாணம் பண்ணிக்கரேன்னு சொல்லி கல்யாணமேடை வரை வந்துட்டு எனக்கு உன்ன பிடிக்கலனு சொல்லிட்டு போயிடுவாங்க  ராபியோட ஆளு லிண்டா.இந்த கட்டத்துல தான் ஜூலியா இவருக்கு ஆறுதலா இருப்பாங்க.அப்போ ஜூலியாவுக்கு க்லென் அப்டிங்கரவனோட கல்யாண ஏற்பாடு நடந்துகிட்டு இருக்கும்.அந்த பய ஒரு தறுதல.அது தெரியாம இந்த பொண்ணு கல்யாணத்துக்கு ஒத்துக்கும்.ராபீக்கு இந்த விஷயம் தெரிஞ்சதும் கரொம்ப வருத்த படுவாரு.அப்பறம் கொஞ்ச நாள்ல ராபிக்கு ஜூலியாவை புடிச்சுடும்.ஆனா அண்ணிதான் ஏற்கனவே லாக் ஆகிட்டாங்களே...அப்பறம் அண்ணன் எப்டி அண்ணீகுட சேர்ந்தாருனு ஒரு பாதி படத்த ஓட்டுவாங்க...
படம் கொஞ்சம் சுமார் தான்..36/100 தான் குடுக்கலாம்..ரொமாண்டிக் படம் புடிச்சவங்க இந்த படத்தை தாராளமா பார்க்கலாம்.

புது பையன்-THE NEW GUY


முதல் படம் மொக்கயா இருந்ததால அடுத்த படத்தயும் இப்பவே ஓட்டிரலாம்.இந்த படத்துக்கு பேரு THE NEW GUY.இது ஒரு காமெடி+ஜாலி படம்.
 படத்தோட ஹீரோவ பாத்தா கொமட்டும்.அவ்வளோ கொடூரமா இருப்பான்.ஆனா கொஞ்ச நேரத்துலயே அவன் அழகா ஆகிடுவான்.அவன்  பாத்த ஒடனே பிடிக்கர ஜாதி இல்ல ...பாக்க பாக்க புடிக்கர ஜாதி...இந்த படத்துக்கு கதை இதுதான்.கில்லெஸ்பி(ஹீரோ பேரு) ஒரு காமெடி பீசு வனோட ஸ்கூல்ல.அவன எல்லாரும் கிண்டல் பண்ணவும் ஒரு நாள் குடிச்சுட்டு ஸ்கூல்க்கு வந்துடுவான்.அதனால அவனுக்கு தண்டனயா ஒரு நாள் ஜெய்ல்க்கு அனுப்பிடுவாங்க.ஜெய்ல்ல ஒரு சூப்பர் கைதி இருப்பான்.அவன கண்டா எல்லாரும் அலறுவாங்க.அவங்கிட்ட பொயி தன்னோட பிரச்சனய சொல்லி அழுவான்.உடனே அவனும் மனசு எளகி "1 நாளில் டெர்ரர் ஆவது எப்படி"அப்டினு சொல்லி குடுப்பான்.

டெரரை உருவாக்கும் இன்னொரு டெர்ரர்

            ஸ்டெப்-1
முதல்ல நீ படிக்கர ஸ்கூல விட்டு  வெளில வந்துடனும்.அவங்களே கழுத்த புடிச்சு தள்ளர மாதிரி ஒரு காரியத்த செய்யனும்
           ஸ்டெப்-2
நீ போர புது ஸ்கூல்ல இருக்கர தாதாபசங்களை முதல் நாளே அடி தூள் பண்ணனும்
           ஸ்டெப்-3
அங்க இருக்கரதுலயே வித்தியாசமான சேட்டை எல்லாம் பண்ணனும்
       இந்த கீதோபதேசத்தை பாலோ பண்ணி அவனும் டெர்ரர் ஆகிடுவான்.அப்போதான் வரும் பிரச்சனை.இவன் இப்போ படிக்கர ஸ்கூல்க்கும் பழய ஸ்கூல்க்கும் ஃபூட்பால் மாச் நடக்கும்.அங்க இவன் இருந்தே ஆகணும்.எப்படி அதை  இவன் சமாளிக்கரான்?
இதுதான் கதை...
ப்டம் ரொம்ப நல்லாருக்கு.ஹீரோவா நடிச்ச பைய்யன் தூள் கெளப்பிருப்பான்...முதல்ல படம் ஆரமிக்கும்போது நல்லருக்காதுனு ஒரு பீலிங்கி.போக போக நல்லாருந்துச்சு...
படம் பிடிச்சா பாருங்க.
மறக்காம வோட்ட குத்துங்க.
அன்புடன்
உங்கள் தோழி
கிருத்திகா

3 comments:

  1. //அவனும் டெர்ரர் ஆகிடுவான்.அப்போதான் வரும் பிரச்சனை.இவன் இப்போ படிக்கர ஸ்கூல்க்கும் பழய ஸ்கூல்க்கும் ஃபூட்பால் மாச் நடக்கும்.அங்க இவன் இருந்தே ஆகணும்.எப்படி அதை இவன் சமாளிக்கரான்?//

    என்னவோ நினைச்சேன்

    செம கதைக்களமா இருக்கே...

    ReplyDelete
  2. //உடனே அவனும் மனசு எளகி "1 நாளில் டெர்ரர் ஆவது எப்படி"அப்டினு சொல்லி குடுப்பான்.//

    இத நான் கூட சொல்லிக் குடுப்பன்ல.
    சொல்லப்போன புரபசர் நானு.

    கோர்ஸ் பீஸ பத்தி அப்புறம் சொல்றேன்.

    ReplyDelete
  3. நமக்கும் இந்த இங்கிலிபிஸ்க்கும் ஆகாதுங்கக்கா. அதனால வேற எதுமே என் காதுல விழல. கடைசியா சொன்னீங்களே அதத்தவிர...

    //மறக்காம வோட்ட குத்துங்க.//

    போட்டாச்சு...போட்டாச்சு...(என்னா வில்லத்தனம்)

    ReplyDelete