a normal person in this normal world... கெடைக்கரது கெடைக்காம இருகாது. கெடைக்காம இருக்கரது கெடைக்காது ஸ்வாமி-ரஜினிகாந்தானந்தா
26 October, 2009
ஆதவன்-விமர்சனம் இல்லை...சும்மா படிக்க
காட்சி-1,சனிக்கிழமை,24/10/2009,4.35PM
2 நாள் பயணமாக புதுவைக்கு சென்றிருந்தேன்.அங்கே தான் ஆதவன் தரிசனம் கிடைத்தது.படம் பார்ப்பதற்கு முன்னால் சில நண்பர்கள் சொன்னதையும் பதிவர்கள் இட்ட விமர்சனங்களையும் பார்த்து வெறுத்து போய் "படம் மட்டமாதான் இருக்கும்"நு ஒரு முடிவுக்கு வந்துட்டேன். ஆனாலும் எங்கள் குடும்பம் மொத்தமும் கிளம்பி போகலாம்னு முடிவெடுத்தோம். முருகா தியேட்டரிலும்,ஆட்லாப்சிலும் படம் ஓடுகிறது.நாங்கள் முருகா தியேட்டரையே தேர்ந்தெடுத்தோம்.ஏன்னு கேட்டா ஆட்லாப்ஸ்ல ஸ்னாக்ஸ் எதுவும் எடுத்திட்டு போககூடாதாம்....அது நமக்கு கஷ்டமாச்சே :)
காட்சி 2,6.30PM
தியேட்டர்க்குள்ள போகும்போதே 6.30 ஆகிட்ச்சு.. title முடிஞ்சுருக்கும்னு நெனச்சு போனா படமின்னும் ஆரமிக்கவே இல்ல....கூட்டம் கடல் மாதிரி இருக்கு.ரொம்ப நாள் கழிச்சு(ஷிவாஜி படத்துக்கு அப்புறம்) ஹவுஸ்புல் போர்டை இந்த படத்துக்கு தான் பார்த்தேன்.வண்டிய பார்க் பண்ணறத்துக்கு ஒரு கூட்டம்,தியேட்டர் உள்ள நுழய ஒரு கூட்டம் யப்பபபா ....எல்லாத்தயும் தாண்டி c-13 - c-20 சீட்டை கண்டுபுடிச்சு போயி ஒரு வழியா செட்டில் ஆனோம்.பிரீத்தி மிக்சி விளம்பரமும் ஏர்செல் விளம்பரமும் முடிஞ்சதுக்கப்பறம் கோவா டிரைலர் போட்டாங்கோ.படம் ரொம்ப குளுகுளுனு இருக்கு..அதயும் பாத்துரனும்னு மனசுல நெனச்சிகிட்டு இருக்கும்போதே ஒரு பாப்பா போட்டோ கறுப்பு வெள்ளைல....அப்போ ஆரமிச்ச விசில் சத்தம் சூரியானு பேரு போட்டத்துக்கு அப்பறமும் ஓயல
காட்சி 3,6.45 PM
ஆதவன் கதயை எழுத போறது இல்லை இப்போ.அத செய்யறத்துக்குனே சில பாப்புலர் பதிவர்கள் இருக்குராங்க.நாம ஒதுங்கிக்கலாம்.நம்ம லிமிட் இங்கிலீசு படத்தோட முடிச்சுக்குவம்.அந்த கோட்ட தாண்டி நானும் வரமாட்டேன்*.இருந்தாலும் படத்துல எல்லாரும் ரசிச்ச காட்சிகளை பத்தி கொஞ்சம் சொல்லலாம்னு நெனைக்குரேன்.
படத்த தூக்கி நிறுத்தறது 4 பேருதான்.
1)வடிவேலு
2)கே.எஸ்.ரவிக்குமார்
3)ஹாரிஸ் ஜெயராஜ்
4)சூரியா.
வடிவேலு ஸ்கிரீன்ல வரும்போது கண்டிப்பா நமக்கு சிரிப்பு வந்துடும்.100% கியாரண்டீ...ரொம்ப நாள் கழிச்சு இவர இந்த படத்துலதான் அடி வாங்காதமாதிரி(ஏறக்கொறய) காட்டிறுக்காரு ரவி.அதோட பானர்ஜீயோட பெயர்க்காரணம்,பொறம்போக்கு -புது விளக்கம்,ஜிகர்தண்டா தூத் குடிச்சுட்டு உளறும் காட்சி, பாம் வெச்ச பஸ்ல ஏறிட்டு படாத பாடு
படு(த்)றது இப்படி படம் பூரா மின்னிருக்காரு.வின்னர் கைப்புள்ளை,தலை நகரம் நாய் சேகர்,சந்திரமுகி முருகேசன் வரிசையில் கண்டிப்பா இந்த பானஜீக்கும் இடம் உண்டு.
அடுத்து ரவிக்குமாரின் டைரக்ஷன் பத்தி சொல்லவே வாணாம். சரத்த நாட்டாமை ஆக்கி,ரஜினியை படயப்பாவாக்கி,கமலை 10 அவதாரம் எடுக்க வெச்சவருக்கு சூரியாவை ஆதவன் ஆக்கரதா கஷ்டம்?????அதோட 10 வயசு பைய்யனா சூர்யாவைக்காட்டி ஒரு புது ட்ரெண்ட் செட் பண்ணிட்டாரு.அடுத்து இனிமேல 2 மாச குழந்தை,4 வயசு பையன் இப்டிலாம் பிற்காலத்துல வரலாம்...
ஹசிலி ஃபிசிலியை ரசிக்காதவங்களே இல்ல.அதை விட என்னை பொறுத்த மட்டில் வாராயோ மோனாலிசா பாட்டு இன்னும் சூப்பர்.பிண்ணனி இசையிலும் ஹாரிஸ் கொடி நல்லாவே பறக்குது.
கடசியா சூர்யாவை சொல்லிருந்தாலும் தன்னோட வேலயை மிக சரியாகவும்,சிறப்பாகவும் செஞ்சு கலக்கோ கலக்குனு கலக்கி இருக்காரு சூர்யா.படத்துக்கு படம் அவருக்கு அழகு கூடிக்கிட்டே போகுது...அவரும் வடிவேலுவும் சேர்ந்து பின்னி பெடல் எடுத்துருக்காங்க.ஆக்ஷன் ரோல்,கொஞ்சம் காமெடி,அப்பப்போ நயன் தாராகுட சாங்க்கு டான்ஸ்.இவ்வளவேதான்.அதயும் நல்லா செஞ்சு கைதட்டல் வாங்குராரு.
கிலைமாக்சில் லேசாக ஒரு செயற்கைத்தனம் தெரிந்தாலும் கமர்ஷியல் படத்தில் யாராவது லாஜிக் பாக்கலாமா????
அதனால ஆதவன் நல்லா இல்லைனு யாரும் சொல்லாதிங்க நண்பர்களே....
படத்தை பார்த்துட்டு நீங்கள் வெளில வரும்போது இதில் எதாவது ஒன்றை சொல்லுவிங்க
சூர்யா ரசிகராக பார்த்தால்-சூப்பர்,செம படம்...வாய்ப்பே இல்லை
நடுனிலயாளராக- பரவாயில்லை ஒரு முறை பார்க்கலாம்...நல்லாருக்கு
சூர்யா பிடிக்காதவர்களும்,கமர்ஷியல் படம் பிடிக்காதவர்களும்---எப்பிடியும் குறை தான் சொல்ல போறிங்க.அத நீங்களே சொல்லிகுங்க
(நீங்கள் இந்த படத்தை பார்க்காமல் இருப்பதே உங்களுக்கும்,என்னைப்போல K.S,R பிரியர்களுக்கும் நலம்...)
காட்சி 4-9.45 PM
படம் முடிஞ்சு போச்சு... அவளதான்...
நீங்க இந்த பதிவுக்கு வோட்ட குத்திட்டு போங்க...
கருத்துக்களயும் கொட்டிட்டு போங்க...
அன்புடன்
உங்கள் தோழி கிருத்திகா
Subscribe to:
Post Comments (Atom)
//கிலைமாக்சில் லேசாக ஒரு செயற்கைத்தனம் தெரிந்தாலும் கமர்ஷியல் படத்தில் யாராவது லாஜிக் பாக்கலாமா????//
ReplyDeleteஅதானே....
உங்களின் பார்வையில் ஒரு வித்யாசமான விமர்சனம். நல்லாருக்குங்க...படமல்ல...உங்களின் விமர்சனமும் அனுபவமும...
//10 வயசு பைய்யனா சூர்யாவைக்காட்டி ஒரு புது ட்ரெண்ட் செட் பண்ணிட்டாரு.அடுத்து இனிமேல 2 மாச குழந்தை,4 வயசு பையன் இப்டிலாம் பிற்காலத்துல வரலாம்...//
ReplyDeleteம்ம்ம்ம்ம்
அப்படியும் நடக்கலாம் தோழி...
வித்தியாசமான விமர்சனம்.
கலக்குங்க...........
அட இது வடிவேல் பட்முங்க.......
ReplyDeleteநன்றி அகல் ...வந்ததுக்கும் ,கம்மெண்ட் அடிச்சதுக்கும் :)
ReplyDeleteஆமாம் புலவரே....ரெண்டாவது பாதி ஆக்கிரமித்துள்ளார்கள் ரவிகுமார்+சூர்யா...
ReplyDeleteஉங்களுக்கும் தாங்க்ஸ் புலி
இது வெறும் சூர்யாவின் அழகையும் திறமையையும் வெளிகாட்டும் ‘ஷோகேஸ்’ டைப் படம்தான். நல்ல படம் அல்லது சராசரியான படம் பார்க்க விரும்பும் எவர்க்கும் இது சரியான சாய்ஸ் அல்ல என்பதே என் கருத்து. சூர்யா படத்தேர்வுகளில் கவனம் தேவை.
ReplyDeleteதாங்கள் எனது வலைப்பூவில் இறுதியாக இட்ட பின்னூட்டத்தினை சில சர்ச்சைகளின் காரணமாக நீக்கியுள்ளேன். தவறிருந்தால் மன்னிக்கவும். உங்களின் மின்னஞ்சல் முகவரி இல்லாததால் பின்னூட்டமிடுகிறேன்.
ReplyDelete//2 நாள் பயணமாக புதுவைக்கு சென்றிருந்தேன்.அங்கே தான் ஆதவன் தரிசனம் கிடைத்தது.//
ReplyDeleteஆஹா... பூர்வ ஜென்ம புண்ணியம்....
//முருகா தியேட்டரையே தேர்ந்தெடுத்தோம்.ஏன்னு கேட்டா ஆட்லாப்ஸ்ல ஸ்னாக்ஸ் எதுவும் எடுத்திட்டு போககூடாதாம்....அது நமக்கு கஷ்டமாச்சே :)//
அட...ஆமாம்... நீயி "தின்னி மன்னி" இல்ல.... பார்ரா... வைக்கணும்னு முடிவு பண்ணினா... பேரு கூட தடாலடியால்ல வருது...
//ரொம்ப நாள் கழிச்சு(ஷிவாஜி படத்துக்கு அப்புறம்) ஹவுஸ்புல் போர்டை இந்த படத்துக்கு தான் பார்த்தேன்.//
அப்படியா... சிவாஜி 2007...இப்போ ஆதவன் 2009... நடுவுல "தஸ்" படம் எல்லாம் வந்ததே??!!
வேணாம்பா... இது நுண்ணரசியல்... அப்புறம் அவிய்ங்க எல்லாம் வந்து ஏதாவது சொல்லுவாய்ங்க...
//ஆதவன் கதயை எழுத போறது இல்லை இப்போ.அத செய்யறத்துக்குனே சில பாப்புலர் பதிவர்கள் இருக்குராங்க.நாம ஒதுங்கிக்கலாம்.நம்ம லிமிட் இங்கிலீசு படத்தோட முடிச்சுக்குவம்.//
அதானே கிருத்திகா... நமக்கு எல்லாம் "ஹாலிவுட்" போதும்... எதுக்கு இந்த கோலிவுட் எல்லாம்...
//வின்னர் கைப்புள்ளை,தலை நகரம் நாய் சேகர்,சந்திரமுகி முருகேசன் வரிசையில் கண்டிப்பா இந்த பானஜீக்கும் இடம் உண்டு.//
அப்போ, வடிவேலு பட்டைய கெளப்பியிருக்காருன்னு சொல்லுங்க...
//சரத்த நாட்டாமை ஆக்கி,ரஜினியை படயப்பாவாக்கி,கமலை 10 அவதாரம் எடுக்க வெச்சவருக்கு சூரியாவை ஆதவன் ஆக்கரதா கஷ்டம்?????//
அடடடடடாடாடாடாடா.... எம்புட்டு??? எப்பூடி இப்பூடி எல்லாம்??? ஆனாலும், கே.எஸ்.ரவிக்குமார் "இளைய தொளபதி"யை வச்சு "மின்சார கண்ணா"ன்னு ஒரு சொத்த படம் குடுத்தாரேன்னு இப்போ ஞாபகம் வருதுங்கோ...
//கலக்கோ கலக்குனு கலக்கி இருக்காரு சூர்யா.படத்துக்கு படம் அவருக்கு அழகு கூடிக்கிட்டே போகுது//
சரி...சரி... விடுங்க... ஜோ கோச்சுக்க போறாங்க....
//படம் முடிஞ்சு போச்சு... அவளதான்...
நீங்க இந்த பதிவுக்கு வோட்ட குத்திட்டு போங்க...
கருத்துக்களயும் கொட்டிட்டு போங்க...//
அட... முடிஞ்சுடுச்சா... இன்டெர்வல் விடவே இல்லையே... ஹீ....ஹீ....ஹீ...
சுர்யாவை போல் ஒன்றரை மடங்கு வயதானவராக தெரியும் நயன்தாரா!
ReplyDelete