19 October, 2009

சினிமா கொட்டாய்-கண்டிப்பாக,இருக்கலாம் !!!-விமர்சனம்





வனக்கம் வந்தனம் நமஸ்தே நமஷ்கார்
தீபாவளி நல்லா கொண்டாடிருப்பிங்க...:)
இந்த வாரம் நம்ம சினிமா கொட்டாய்ல பாக்கபோர திரைப்படம்  DEFINITELY,MAYBE
இந்த படத்த  ஹாலிவுட்டின் ஆட்டோகிராப்னு சொல்லலாம்.நம்ம ஹீரோ பேரு வில் ஹேய்ஸ்(ரே ரேனால்ட்ஸ்).அவரு வாழ்க்கைல வர்ர 3 பொண்ணுங்களை பத்தி சொல்லுராரு அவருடய பொண்ணுகிட்ட :).
 கதை ரொம்ப பெருசு.ஆன நான் சுருக்கமா சொல்லரேன்.
கதை ப்லாஷ் பாக்.இத அவரு பொண்ணுகிட்ட சொல்லரமாதிரி எடுத்துருக்காங்க.
"என்னோட அம்ம யாருனு" அந்த குட்டி பொண்ணு  வில் கிட்டகேக்குது.இப்போ மார்ட்டீன் காய்லை முசிக் விட்டுக்கொண்டே சுத்தவும்.
10 வருஷத்துக்கு முன்னாடி..........
வில் ஒரு speech writer. அதாவது அரசியல்வாதிகளுக்கு  மேடைப்பேச்சுகள் எழுதிதர்ரவரு.லோக்கல அரசியல்வாதிகளுக்கு எழுதுன ஸ்டைல பாத்துட்டு பிரசிடெண்ட் ஆபிஸ்லே வேலைக்கு சேர  கூப்ட்ராங்க.அப்போ இவரும்  எமிலி@சாரா அப்டிங்கரவங்களும் லிவிங்க்-டு.கெதர்...எமிலி ஒரு டைரியை அவங்க நண்பி சம்மர் அப்டிங்கரவங்ககிட்ட தர சொல்லி குடுத்துவிடராங்க.(மண்ண தானே தன் தலைல அள்ளி போட்டுகரதுன்னா இதுதான்).அவங்களை வீட்டுல விட்டுட்டு இவரு நியுயார்க்  போயிட்ராரு.ஆபிஸ்ல ஏப்ரல்னு ஒரு பொண்ணு வேல பாக்கராங்க.அவங்களும் இவரும் பிரன்ஸ் ஆகிட்ராங்க.அதுக்கப்பரம் சம்மர பாத்து டைரிய குடுக்கராரு.இப்ட்யே கொஞ்ச நாள் போகுது.இவரோட ஆளு ஒரு நாள் இவர பாக்க நியுயார்க் வருது.வந்து கல்யாணம் பண்ணிக்கபோராங்கன்னு பாத்தா அந்த பொண்ணு இவரு பிரண்டோட லிவிங்க்-டு.கெதர்....அப்ட்யே ஷாக் ஆகி இந்த கனெக்ஷன கட் பண்ணிடுராரு வில்.அதுக்கப்பரம் சம்மருக்கு இவருக்கும் ஒரே எடத்துல  வேலை ஆகிடுது.கொஞ்ச நாள்ள அந்த சம்மர் பொண்ணு மேல ஐயா  காதலில் விழுந்தேன் :) ஆகிட்ராரு.சரி இப்பனாச்சும் மனுஷன் கல்யாணம் பன்னுவான்னு பாத்தா அந்த பொண்ணு  ஒரு பெரிய தலைவரை பத்தி தப்பா பேச்சு எழுதி குடுத்துடுது.அதுக்கு இவர பொறுப்பாக்கி ஆபிஸ்லேர்ந்து வெளில தள்ளிட்ராங்க.அந்த சம்மரும் அவங்க ஆளோட போயிடுராங்க.இப்போ நம்ம கதைல மிச்சம் இருக்கரது ஏப்ரல் மட்டும் தான்.அவங்க ஊர விட்டே போயிட்ராங்க அவங்க ஆளோட சண்ட போட்டுட்டு.
அந்த குட்டி பொண்ணு குழம்பி போகுது.விரக்தில என்ன தத்து எடுத்து வளத்திங்களாப்பானு கேக்குது பாவமா.மீண்டும் கதய  கண்டினியூ பண்ணலாம் நீயே கண்டுபிடிப்ப அப்டினு சொல்லிட்டு தொடர்ராரு வில்.
கொஞ்ச நாள் கழிச்சு  எமிலி திரும்ப வராங்க இவர மீட் பண்ண.அந்த "கஸ்மாலம் என்ன உட்டுட்டு பூட்சுனு " ஒப்பரி வெக்காம வெக்கராங்க.
சம்மர் "என் ஆளு புட்டுகிட்டான்." அப்டின்னு இவருகிட்ட வந்து சொல்லுராங்க.ஏப்ரல இவர் போயி பாக்குராரு.அவங்கள லவ் பண்ரதா சொல்லுராரு.அவங்க "நமக்குள்ள நட்பு மட்டும்தான்"நு  இவருக்கு டாடா காட்டிடராங்க.
இப்போ அந்த குட்டி பொண்ணு குழம்புது மறுபடியும்.
கடசில ஹாப்பி எண்டிங்க்....யாரு அவர் லவ் பண்ணினாரு??யாரு அவங்க அம்மானு சொல்லி முடிக்கராரு கதைய.அது சஸ்பென்ஸ்.நீங்களே பாத்துக்குங்க.....
ஆட்டோகிராப் மாதிரிதானே இருக்கு????
செரி எப்பவும் போல படிச்சுட்டு முத்திரயை குத்திட்டு போங்க...
அன்புடன்
உங்கள் தோழி கிருத்திகா

9 comments:

  1. அப்ப ஆட்டோகிராப் படத்தை இங்கிலீஷ்ல காப்பி அடிச்சுட்டாங்களா ? இது சேரனுக்கு தெரியுமா ?

    ReplyDelete
  2. தெரிஞ்சாலும் கண்டுக்கமாட்டாருல்லா...
    நன்றி பின்னோக்கி...இவ்வளவு வேகமா வோட்ட குத்துனதுக்கு :)

    ReplyDelete
  3. //இப்போ மார்ட்டீன் காய்லை முசிக் விட்டுக்கொண்டே சுத்தவும்.//

    ஆஹா... ஆர‌ம்பிச்சுட்டேளா... ந‌ட‌த்துங்கோ...

    //எமிலி ஒரு டைரியை அவங்க நண்பி சம்மர் அப்டிங்கரவங்ககிட்ட தர சொல்லி குடுத்துவிடராங்க.(மண்ண தானே தன் தலைல அள்ளி போட்டுகரதுன்னா இதுதான்).//

    அதே...அதே...

    //வந்து கல்யாணம் பண்ணிக்கபோராங்கன்னு பாத்தா அந்த பொண்ணு இவரு பிரண்டோட லிவிங்க்-டு.கெதர்....அப்ட்யே ஷாக் ஆகி இந்த கனெக்ஷன கட் பண்ணிடுராரு வில்.//

    ஹேய்... நான் அப்ப‌டியே ஷாக் ஆயிட்டேன்....

    //அந்த "கஸ்மாலம் என்ன உட்டுட்டு பூட்சுனு " ஒப்பரி வெக்காம வெக்கராங்க.
    சம்மர் "என் ஆளு புட்டுகிட்டான்." அப்டின்னு இவருகிட்ட வந்து சொல்லுராங்க.//

    ஆஹா... இங்கிலிபீசு ப‌ட‌த்துக்கு இன்னாமா விம‌ர்ச‌ன‌ம்பா... அடி...தூள்...

    //கடசில ஹாப்பி எண்டிங்க்....யாரு அவர் லவ் பண்ணினாரு??யாரு அவங்க அம்மானு சொல்லி முடிக்கராரு கதைய.அது சஸ்பென்ஸ்.நீங்களே பாத்துக்குங்க.....
    ஆட்டோகிராப் மாதிரிதானே இருக்கு????//

    ச‌ரி பாத்துக்க‌றோம்... அப்ப‌டியே சேர‌னோட "ம‌ல‌ரும் நினைவுக‌ள்" போல‌வே கீதுபா...

    //செரி எப்பவும் போல படிச்சுட்டு முத்திரயை குத்திட்டு போங்க...//

    ச‌ர்தாம்மா... ப‌டிச்சாச்சு... முத்திரையை குத்தியாச்சு... நெக்ஸ்ட் மீட் ப‌ண்றேன்...

    (விம‌ர்ச‌ன‌ம் ப‌டா ஷோக்கா கீதுபா... ப‌ட‌மும் அப்ப‌டியேவான்னு தெர்ல‌...)

    ReplyDelete
  4. ur review is really good...but please split it in to paragraphs and write, so that it will be more easy to read...

    ReplyDelete
  5. கலோகியல சொல்லிருகிங்க ரொம்ப நல்ல இருக்கு உங்க விமர்சனம்

    ReplyDelete
  6. அனானி நன்றி பா...அடுத்த பதிவு நீங்க சொன்னபடி எழுதிருக்கேன்...


    மறைந்து நின்று பார்க்கும் மருமம் என்னா????

    ReplyDelete