04 September, 2011

எனக்கு பிடித்த பாடல்கள்

ஹலோ மக்களே!!!
ரொம்ப நாளா எழுதவே வரதில்ல!!! இன்னைக்காவது ஒரு போஸ்ட் போட்டுரனும்னு முடிவோட வந்துருக்கேன்!!!  எனக்கு பிடித்த பாடல்கள் பத்தி நான் ஆயிரம் பதிவு போடலாம்!! முடிவே அடையாத டாபிக் இது!!! அப்பபோ நியாபகம் வர வர எழுதறேன்!!! பாடகர்/பாடகி ஒருத்தரை எடுத்துகிட்டு அவங்களோட சூப்பர்/ எனக்கு பிடிச்ச பாட்டுகளை பத்தி சொல்லலாம்னு முடிவெடுத்துருக்கேன்!!!

அதுக்கு முன்னாடி சில பதிவர்கள் செய்யர ஆக்ஷன்ஸ் பத்தி சொல்லணும்!! ஆகா ஹன்சிகா,அனுஷ்க்கா இவங்களை வெச்சு எப்டி எப்டிலாம் காமெடி பண்றாங்க!!!! மை டியர் பெண் பதிவர்களே!!! நாமளும் இப்படி ஒரு காமெடி தலவலிய செய்தா எப்டி இருக்கும்!! உதாரணத்துக்கு ஜெயம் ரவியின் ஸ்மார்ட்னெஸ் , சிம்புவின் சார்ம்(கஷ்ட காலம்), ஷாஹித் கபூரின்  க்யூட்னெஸ் இப்டி எதுனா எழுதலாமா!!!(ஏற்கனவே முடியல...இதுல இந்த கண்றாவி வேறயா!!!)

ஒகே ஒகே!!!( படம் பேரு இல்லைங்க...நெஜமாலுமே ok) அடுத்த விஷயத்துக்கு ஜம்ப் பண்ணலாம்!!!

நான் பாட்ட பத்தி எழுதறேன்!!! பாடினவங்கள ஈசியா கண்டு பிடிசுடலாம்!!! அதனால அவங்களை பத்தி கடசியா!!

1) ஒரு தெய்வம் தந்த பூவே பத்தி சொல்லவே வேணாம்!!! அந்த ஹம்மிங்குக்காகவே அதை எத்தன தடவ வேணாலும் கேக்கலாம்!!!!

2) நான் சீனியில் செய்த கடல்!!!!! அப்டின்னு ஆரமிச்சாலே சும்ம சர சரன்னு எகிறும் பல்ஸ்!!

3)வெயில் படத்துல காதல் நெருப்பின் நடனம் பாட்டும் ரொம்ப சூப்பரா இருக்கும்!!!

4) விசில் படத்துல கிறுக்கா கிறுக்கான்னு ஒரு பாட்டு...செம்ம பீட் சாங்க் அது!!!

5)உயிரே உன்னை உன்னை எந்தன்!!!!! இது ஒரு புது டைமென்ஷன் சாங்க்!!!

அவங்க பாடினதிலயே மாஸ்டர் பீஸ் இதெல்லாம்!!!
நம்ம தலைவருக்கும் இவங்களுக்கும் செம ராசி!! இவங்க பாடின பாட்டு சூப்பர் டூப்பர் ஹிட்!!

எ.டு
1)சஹானா சாரல் தூவுதோ!!!
2)கிலிமஞ்சாரோ !!!

அப்பறம் ஹாரிஸ்ஜி மியூசிக்லயும் இவங்க ஜொலிப்பாங்க!!

எ.டு
வாராயோ வாராயோ - ஆதவன்

இன்னும் நெறய இருக்கு!!! சட்டுனு நியாபகம் வந்தததை ரெகார்ட் பண்ணிட்டேன்!!!

போனஸ் ஃபொடோ!!

சூப்பரா!!!!

மீண்டும் சந்திப்போம்!!!
டாடா

20 June, 2011

wwe-capital Punishment!!!!!!

இது ரெஸ்ட்லிங்க் பத்தின பதிவு பிடிக்காதவங்க அப்படியே ஓடிப்போயிடுங்கோ!!!!!!!


WWEல ஒவ்வொரு மாசமும் ஒவ்வொரு பெரிய ஸ்டார் ஈவெண்ட் போட்டுடுவாங்காங்கரது தெரிஞ்ச விஷயமே!!!!
காபிடல் பனிஷ்மெண்ட் அப்படின்னு ஒரு எவெண்ட் தானிந்த மாசத்தின் எவெண்ட்!!!!
அதுல மாட்ச் ரிசல்ட்ஸ் லீக் ஆகிடுச்சு!!! இந்த வாரம் சண்டே தான் இதனுடய டெலெகாஸ்ட்!!!எனக்கு தெரிஞ்ச முடிவுகளை பத்தி நான் சொல்ல போறேன்!!!!
மாட்ச் 1:
C.M.PUNK VS REY MYSTERIO
இது ஒரு ராங்க்-2 கேம் தான்!!! 2 பேருமே நல்லா விளயாடக்கூடியவங்க.நான் எதிர்பாத்ததுக்கு மாறாக C.M.PUNK ஜெய்ச்சுட்டான்!!!

மாட்ச் 2:
ALBERTO DEL RIO VS BIG SHOW
இது ஒரு ராங்க்-3 கேம். பிக் ஷோ நல்ல மாடு கணக்கா இருந்தாலும் சின்ன பயமாதிரி தான்!!! அடி தாங்க மாட்டான்!!! அதனால நேத்து வந்த டெல் ரியோ(இவன் கடைஞ்செடுத்த கேணை!!!) கிட்ட தோத்து போயிட்டார்!!!!

மாட்ச் 3:
WADE BARRET VS EZEKIERL JACKSON
இதுக்கெல்லாம் ராங்க் கடயாது!! ஏப்ப சோப்ப மாட்ச்!!!! எசிகிஎல் ஜாக்சன் ஜெய்ச்சுட்டான்!!!! எதிர்பாத்ததுதான்!!!!

மாட்ச் 4:
KOFI KINGSTON VS DOLPH ZIGGLER
இந்த எச்சூஸ் மீன்னு ஒரு லேடி வருமே தெரியுமா!!!! அதாங்க நம்ம விக்கீ கரீரோ!!!மோஸ்ட் ஹேட்டட் வுமன் அதுதான்!!!! அதோட சேஷ்டைஎல்லாம் ரொம்ப கப்பித்தனமா இருக்கும்!!!! அந்த லேடி கூட திரியரவந்தான் இந்த டால்ப் ஜிக்லர்...காசுக்காக சேர்ந்த கூட்டம்!!!! அந்த சகுனி எச்சூஸ் மீ டால்பை ஜெய்க்க வெச்சுடிச்சி..என்னிக்கிதான் ரெண்டும் ப்ரேக் அப் சொல்ல போகுதுங்கன்னு ஆவலா பாத்துகிட்டு இருக்கேன்!!!

மாட்ச் 4:
RANDY ORTON VS CHRISTIAN
ரொம்ப எதிர்பார்க்கப்பட்ட மாட்ச்களில் இது ஒன்று!!!!! ராண்டி ஓர்டன் ஊதி தள்ளிட்டான் க்ரிஸ்டியன!!! இந்த க்ரிஸ்டியனுக்கு வாயி இருக்கர அளவு திறமை பத்தாது!!!!
மாட்ச் 5:
JOHN CENA VS R-TRUTH
எச்சூஸ் மீக்கு கொஞ்சமும் சளச்சவன் இல்ல இந்த ட்ரூத்!!!!முதல்ல வெத்து பீசா இருந்துச்சு!!!இப்போ டெர்ரர் ஆகரேன் பேர்வழின்னு காமெடி பீசா ஆகிடுச்சு!!!!
ஜான் சீனா வடிவேலு மாதிரி!!!! அடி தாங்கறதுல சொன்னேங்க!!!! பயபுள்ள எவ்வளோ அடிச்சாலும் தாங்குவான்...

தி சாம்ப் இஸ் ஹீயர்!!!!!சொல்லவே வேணாம் யார் ஜெயிச்சாங்கன்னு!!!!
மாட்ச் 6:
ALECS RILEY VS MIZ

இந்த அலெக்ஸ் ரைலீ மிஸ் சோட முன்னாள் அல்லக்கை!!! அவனை அநியாயத்துக்கு சிக்கிட்டான் அடிமைங்கற ரேஞ்சுக்கு வெரட்டுனான் இந்த  மிஸ் கபோதி!!!!! அந்த அலெக்ஸ்க்கு வீரம் வந்து பிச்சு பேத்து எடுக்க ஆரமிச்சுட்டான் இந்த மிஸ் ச!!!!
நான் வேண்டுன மாதிரி அலெக்ஸ் ரைலீ ஜெய்ச்சுட்டான்!!!


அவ்வளோதான் முடிஞ்சு போச்சு!!!!
இந்த சண்டே மிஸ் பண்ணாம பாருங்க!!!

நன்றி நன்றி!!

18 June, 2011

அன்புள்ள ரசிகனுக்கு...ரஜினிகாந்த் எழுதுவது!!!

நீங்க எல்லாருமே பாத்து/படிச்சுருப்பீங்க...இருந்தாலும் என்னோட திருப்திக்காக இந்த போஸ்ட்!!!!!
தலைவா வருக வருக...தலைவர் இன்னாள்&முன்னாள் முதல்வர்களிடம் பேசினது ஒரு சர்ச்சையா வெடிச்சுருக்கு!!!
நிறைய பேருக்கு தலைவர் மேல கோவம் இருக்குங்கற மாதிரி ஒரு டாக் நிலவுது!!!!!
CONSTRUCTIVE CRITICISM:
நாம சொல்லும் குறையால் அடுத்தவருக்கு நன்மை விளய போகுதுங்கரத்துக்கு தான் இந்த பேரு.
இது இருக்கலாம்.ஆனால் சும்மாச்சுக்கும் ப்ரபலமாகணும்னு குத்தஞ்சொல்லகூடாது!!!
தலைவரும் மனுஷன் தான்!!!! அவருக்குனு சொந்த விருப்பங்கள் இருக்கும்.
அதை நல்ல சென்ஸ்ல எடுத்துக்க முயற்சி பண்ணுங்க!!!
தவறு கண்டுபிடிக்கணும்னு கங்கணம் கட்டிகிட்டு திரியறவங்களுக்கெல்லாம் இன்னொண்ணு சொல்லனும்னு ஆசே பட்றேன்!!!!

"நக்கீரர் குலத்தோன்றலே!!!!உருப்படியான வேலை இருந்தா செய்ங்க ப்லீஷ்"

ஓவர் டூ லெட்டர்!!!




நன்றி
நன்றி நன்றி(முழுசா படிச்சவங்களுக்கு மட்டுந்தான்!!!!)

13 June, 2011

ஜோக் கடி!!

ஹல்லோ மக்களே!!!

இந்த பதிவுல நோ டெக்ஸ்ட்.....ஒனலி படங்கள் தான்!!!!
பாத்த உடனே பயங்கரமான சிரிப்பு!!!!
நீங்களும் பாத்துட்டு சொல்லுங்க!!!!




 சூப்பரா!!!!


தலைவர் சீக்கிரமாக நலம் பெற்று ராணாவுல கலக்க என் ப்ரார்த்தனைகள்!!!

நன்றி வணக்கம்!!!


01 May, 2011

ஆன்லைன்ல யாராவது புத்தகம் வாங்கி இருக்கீங்களா!!!ப்லீஸ் ஹெல்ப்

3 சந்தேகங்கள்

 1) ஜெயா டீவில மந்திரம் ஒரு தந்திரம்னு ஒரு மேஜிக் நிகழ்ச்சி வருது.அதுல அவர் பண்ற மேஜிக்லாம் ரொம்ப ஆச்சர்யமூட்டும் விதத்துல இருக்கு.பொதுவா எனக்கு மேஜிக் மேல அவ்வளோ நல்ல அபிப்பிராயம் கடயாது.இருந்தாலும் இந்த நிகழ்ச்சி ரொம்ப பிரம்மிக்க வைக்குது!!!!இப்போ கேள்வி-- அவர் பண்ற மேஜிக் எல்லாம் நிஜமாவே பண்றாரா இல்ல காமரா ட்ரிக்கா!!!!! பார்த்தவங்க,விஷயம் தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்!!!!

***********************************

2)டாடா மீதும் அவர்களுடய கம்பெனி பொருட்கள் மீதும் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பவள் நான்!!!! அவருடய வாழ்க்கை வரலாறு நிறய பேருக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை!!!! ரொம்ப இன்ஸ்பைரிங்கா இருக்கும்!!!நான் பதிவா போடறேன் சமயம் கிடைக்கும்போது!!!! அவர்களுடய குழுமத்துல இருந்து டாடா ஃபோட்டான் ப்லஸ் அப்படிங்கற ப்ராடக்ட் பெஸ்ட் ப்ராடக்ட் ஆப் த இயர் விருது வாங்கிருக்கு.டாடா ஃபோட்டான் ப்லஸ் மட்டும் இல்ல அந்த வகைல வர்ர யூ.எஸ்.பீ மோடம் எதுவுமே நல்ல சர்வீஸ் குடுக்கல!!!! நான் உபயோகித்தபோது 3ஜி வரவில்லை!!! இனிமேலும் அது மற்ற நாடுகள்ள வந்த அளவு இங்க ரீச் ஆகுமான்னு தெரியல!!!!  எந்த அடிப்படைல இந்த பொருளுக்கு பெஸ்ட் ப்ராடக்ட் விருது குடுத்தாங்க!!!!!! இப்போ என்னோட சந்தேகம் எங்கிட்ட தண்டமா ஒரு டாடா ஃபோட்டான் யூ.எஸ்.பி மோடம் கெடக்கு.அதை எப்படி டிஸ்போஸ் பண்றதுன்னு கொஞ்சம் சொல்லுங்களேன்!!!

**************************************

3)லாஷ்ட்டா ஒண்ணு!!! ஆன்லைன்ல யாராவது புத்தகம் வாங்கி இருக்கீங்களா!!! எந்த தளத்தில்!!! எப்போ...அதை பத்தி கொஞ்சம் விவரம் சொன்னீங்கன்னா எனக்கு ரொம்பவும் உபயோகமா இருக்கும்!!!! எதாவது ஹிட்டன் காஸ்ட் இருக்கா ஏமாத்திபுடுவாய்ங்கேளா!!!! அவசரமாக 1 புத்தகம் தேவைப்படுகிறது!!!!அதனால ப்லீஸ் ஹெல்ப்

விஷஸ் !!!!

நம்ம கே.பாலச்சந்தருக்கு தாதா சாகேப் பால்கே(டைப் அடிக்கரத்துக்குள்ள மூச்சு முட்டுது!!! யப்பா)  விருது குடுத்துருக்காங்க!!!யூ ஆர் ரியல்லி க்ரேட் சார்!!!! ஹாட்ஸ் ஆப்!!!
மே 1 இந்த பதிவ போடுவதால்

1)இனிய மே தின வாழ்த்துக்கள்!!!
2)ஹாப்பி பர்த்டே தல!!! இந்த வேஉஷமாவது ஒரு ஹிட்டு குடுங்க...ரொம்ப நாளாச்சு உங்க ஹிட்ட பாத்து!!!!

24 April, 2011

கோ படம் பாத்துட்டீங்களா!!!!



கோ படம் பத்தின டீப்பான விமர்சனமெல்லாம் கிடயாது இது...ஆனா சபாஷ் சொல்லப்போகும் பதிவு இது.
ஜீவா-பியா-கார்த்திகா-அஜ்மல்...
படம் இவங்களை சுத்திதான்.செம்ம விறுவிறுப்பாக கொண்டு போய் இருக்கிரார் நம்ம கே.வி...
ப்ரகாஷ்ராஜ்-கோட்டா சீனிவாசராவ் வில்லனா வந்து போயிருக்காங்க.
ரெட் ஜெயிண்ட் மூவீஸ்லேருந்து எடுத்ததால மட்டுந்தான் இந்த படம் ரிலீஸ் ஆகி இருக்கு.இல்லைன்னா கண்டிப்பா பிரச்சன பண்ணி இருப்பாங்க.

சபாஷ் சொன்ன காட்சிகள் பல..அதில சிலதை இங்கே எழுதறேன்.

ஜாலி சபாஷ்:
எல்லா பாட்டுமே சூப்பர் லொக்கேஷன்ல எடுத்துருக்காரு....
அதுல குறிப்பிட்டு சொல்லனும்னா ரெண்டு மலை-நடுல ஒரு பாறை தான் லிங்க்.
அதுல ஜீவ-கார்த்திகா நிப்பாங்க...127 ஹவர்ஸ் படம் போஸ்டர் லைட்டா நியாபகம் வந்தது.


விறுவிறு சபாஷ்:
பியா பேகை எடுக்க வீட்டுக்குள்ள திருடன் வந்த காட்சிதாங்க பீக் த்ரில்.
ஹாரிஸ் ஜெயராஜ் ரீ ரெக்கார்டிங்க் இந்த எடத்துல சூப்பர்.

அதுக்கப்பரம் அஜ்மல் ஜீவா லிங்கை கண்டுபிடிப்பாங்களே கார்த்திகா.அந்த சீன் செம்ம சூப்பர்

கடைசில யாரு பியாவை கொன்னதுன்னு தெரிய வரும்போது வரும் பாருங்க ஒரு ஷாக்!!!
அடடடா..செம ட்விஸ்ட்.

பல சபாஷ்கள் சொல்லிகிட்டே போகலாம்.

தப்பு கண்டுபுடிக்கனுமேன்னு கஷ்டப்பட்டு தப்பு கண்டுபுடுச்சுருக்கேன்.

2வது பாதில வர்ர பாடல்கள் எல்லாமே வேகத்தடை மாதிரி இருக்குங்க.
நெறய பேரு தம் அடிக்க வெளில போனத பாக்க முடிஞ்சது. :)

எல்லா ஸ்டார்சும் வந்து ஆடற பாட்டுன்னு சொல்லி ரொம்ப எதிர்பார்த்தேன்.
ஓம் ஷாந்தி ஓம் படத்து பாட்டு மாதிரி இருக்கும்ன்னு பாத்தா சப்பயா போச்சு.!!!

மத்தபடி எல்லாமே சூப்பர்.ரொம்ப நாளக்கி அப்பறம் படமும் சூப்பர் க்லைமாக்சும் சூப்பர்...
நிச்சயமா  போய் பாருங்க.

பை தெ பை இன்னிக்கு நம்ம சச்சுகுட்டிக்கு பிறந்தநாள்!!!!
ஹாப்பி சச்சின் பர்த்டே டு ஆல்!!!!!

16 April, 2011

அசிம் ப்ரேம்ஜி விப்ரோ...வாழ்க



அசிம் ப்ரேம்ஜி சொன்ன  கருத்து பெரிய வாவ் சொல்ல வைத்து விட்டது.
மொழிமாற்றம் செய்தால் அந்த எச்சன்ஸ் போய் விடும்.அதனால அப்படியே சாப்பிடுங்க!!!!

Wipro chairman Mr. Azim prem ji's comment on reservation:
 I think we should have job reservations in all the fields. I completely support the PM and all the politicians for promoting this. Let's start the reservation with our cricket team. We should have 10 percent reservation for Muslims. 30 percent for OBC, SC /ST like that. Cricket rules should be modified accordingly. The boundary circle should be reduced for an SC/ST player. The four hit by an SC/ST/OBC player should be considered as a six and a six hit by a SC/ST/OBC player should be counted as 8 runs. An SC/ST/OBC player scoring 60 runs should be declared as a century. We should influence ICC and make rules so that the pace bowlers like Shoaib Akhtar should not bowl fast balls to our SC/ST/OBC player. Bowlers should bowl maximum speed of 80 kilometer per hour to an SC/ST/OBC player. Any delivery above this speed should be made illegal.   Also we should have reservation in Olympics. In the 100 meters race, an SC/ST/OBC player should be given a gold medal if he runs 80 meters.   There can be reservation in Government jobs also. Let's recruit SC/ST and OBC pilots for aircrafts which are carrying the ministers and politicians (that can really help the country.. )   Ensure that only SC/ST and OBC doctors do the operations for the ministers and other politicians. (Another way of saving the country..)   Let's be creative and think of ways and means to guide INDIA forward...   Let's show the world that INDIA is a GREAT country. Let's be proud of being an INDIAN..   May the good breed of politicians long live.. *


மனுஷன் பின்னீட்டாருல்ல!!!!

நீங்க என்ன நெனைக்கரீங்க இத பத்தி!!!!

பி.கு..
நான் விப்ரோ ஊழியை அல்ல...

11 April, 2011

தண்ணியடித்த வாத்தியார் பாத்துர்கீங்களா&&&கட்சி பாத்து ஓட்டு போடாதிங்க

நமஸ்தே ப்ளாகர்ஸ் !!!!!

தண்ணியடித்த வாத்தியார் அப்டின்னு ஒரு படம் பாத்துர்கீங்களா!! சரி சரி இங்கிலீஷ்லயே சொல்றேன்!!ட்ரங்கன் மாஸ்டர்...அதாங்க நம்ம ஜாக்கி சான் படம்...நான் நெறய தடவ பாத்துட்டேன்.இருந்தாலும் புதுசா பாக்கறா போலவே இருக்கும். தலைவர் ஒரு குறும்புக்கார இளைஞர்!!அவரோட அப்பா குங்க்.ஃபூ வாத்தியார்.ஜாக்கியோட அட்டகாசம் தாங்காம அவரை கொண்டு போயி அவங்க அப்ப சோ ஹாய்(இது ஒரு பேருங்க) அப்படிங்கற மாஸ்டர்கிட்ட விட்டுடுவார்.அவர்கிட்ட நம்ம ஜாக்கி படும் பாடு இருக்கே...அப்பா சூப்பர்.ஒவ்வொரு சீன்லயும் பின்னி இருப்பார் பர்பாமன்சில!!!நீங்க கண்டிப்பா பாருங்க!!!
*************************************************
சில விஷயங்கள் வாழ்க்கைல பிடிச்சு நடக்குது...சிலது பிடிக்காம நடக்குது.பல விஷயங்களுக்காக நாம கவலைப்படறோம்.நாம கவலைப்படும் எந்த ஒரு விஷயமா இருந்தாலும் சரி..முதல்ல நாம ஒண்ணு யோசிச்சு பாக்கணும்.கொஞ்ச வருஷங்கள் கழிச்சு இந்த விஷயம் நமக்கு நியாபகம் இருக்குமா!!! இருக்காதா??இருக்கும்னா ஓ.கே.
இருக்காதுன்னா அப்பறம்  ஏன் கவலப்படணும்....எப்படியும் அது மறையதான் போகுது...ஏன் தேவை இல்லாம கவலைப்பட்டு டயத்த வேஸ்ட் பண்ணிண்டு!!!சொல்யூஷனை கண்டுபிடிச்சு ஊதி தள்ளிடவேண்டியதுதானே!!!
சரி...தத்துவம் போதும்.காதுலேர்ந்து புகை வர ஆரமிச்சுடுச்சு!! நாம அடுத்த விஷயத்துக்கு போகலாம்..
***********************************
புதன் கிழமை வாக்குப்பதிவு நடக்குது. மக்களே தயவு செஞ்சு ஓட்டு போட போங்க.நாட்டுல அநியாயம் நடக்குது..அவ்வளோ ஊழல் இவ்வளோ ஊழல் பண்ணிட்டான் அப்டின்னு புலம்பி தள்ளறோமே..அவங்கள தேர்ந்து எடுக்கரது,ஆட்சில உக்கார வெக்கறது எல்லாமே படிச்ச மக்கள் தான்.படிக்காதவங்க எல்லாரும் முனைஞ்சு போய் வோட்டு போட்டுட்டு வந்துடுவாங்க.
       படிச்சவங்க தான் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம(மன்னிச்சுகுங்கய்யா) வீட்டில டீ.வி பார்த்துண்டு பொழுது ஓட்டிட்டு, அப்பறம் அவன் ஆட்சி சரி இல்ல இவன் ஆட்சி சரி இல்லன்னு ராகம் பாட வேண்டியது.படிச்சவங்கல்லாம்  ஒழுங்கா ஓட்டு போட்டா யார் ஆட்சிக்கு வருவாங்க இந்த தடவன்னு உங்களுகே தெரியும்!!!அதனால வோட் கண்டிப்பாக நிச்சயமாக சத்தியமாக போடுங்க.49 ஓ அப்படின்னு ஒரு விஷ்யம் இருக்கரதா மக்கள் பேசிக்கறாங்க.அது ஒரு ஃபார்ம்/ரிஜிஸ்தர் மதிரி,அதுல கை எழுத்து போடணும் நமக்கு ஓட்டு போட இஷ்டம் இல்லைன்னா!!! ஆனா இப்படி செஞ்சு எதிர்ப்பை காட்டறது எனக்கு என்னமோ பிடிக்கல.அதுக்கு இன்னோரு ஐடீயா இருக்குதுங்க..கேள்வியே படாத சின்னத்துல சில வேட்பாளருங்க நிப்பாங்க..உதாரணத்துக்கு எங்க ஊருல யானை,சிலிண்டர் மற்றும் பல சின்னங்களில் வேட்பாளர்கள் நிக்கறாங்க.அதுல யாரவது ஒருத்தருக்கு குத்த வேண்டியதுதான்!!! வாவ்...வாட் ஆன் ஐடீயா சர்ஜீ!!!!
முதல் முதலாக ஓட்டு போடப்போறேன் நான்!!! ரொம்ப எக்சைட்டிங்கா இருக்கு!!!!ஹீ ஹீ!!!
 கட்சி பாத்து ஓட்டு போடாதிங்க.அவர் ஜெய்ச்சா நம்ம தொகுதிக்கு நல்லது செய்வாரான்னு பாத்து போடுங்க.இதுவரைக்கும் சிதம்பரம் தொகுதில ஜெய்ச்ச வேட்பாளர்கள் யாரும் தொகுதி பக்கம் எட்டிக்கூட பாத்ததில்ல..அதிலயும் பீக் யாருன்னா நம்ம வீ.சி கட்சி தலைவர் தான்.என்ன செல்வாக்கு இருந்து என்ன..இதுவரைகும் சிதம்பரம் எங்க இருக்குன்னு கூட தெரியாது அவருக்கு..இந்த சண்டே பிரச்சாரத்துக்காக நம்ம கலைஞரும் பீரங்கி வடிவேலுவும் வந்தாங்க..அதனால மக்கள் பட்ட பாடு இருக்கே ஐயோயோயோ..இது பெரிய ஊரெல்லாம் கடயாது.சின்னதுதான்.இருக்கர ஒரு மெயின் ரோடயும் அடச்சுபுட்டாங்க.கனெக்ஷன் மொத்தத்தயும் கட் பண்ணி உயிர எடுத்துட்டாங்க....நல்ல வேளை...வேற எந்த தலைவ(வி)ரும் வரல...

ஒரு ரகசியம் சொல்றேன்...எங்க ஊரு ஓட்டு ரொம்ப சீப்புங்க...200 ரூவாதான் பட்டுவாடா பண்றாங்களாம்!!! உஷ்...யாருகிட்டயும் சொல்லப்படாது...
ஓகே. இத்துடன் நான் வடை பெற்று கொள்கிறேன்!!!
நன்றி வணக்கம்.

20 March, 2011

ஹோலி கொண்டாடும் காரணம் தெரியுமா

அனைவருக்கும் ஹோலி திருநாள் நல்வாழ்த்துக்கள் மக்களே!!!
ஹோலி கொண்டாடும் காரணம் தெரியுமா!!!!2 காரணங்கள் பரவலா சொல்லப்படுது.
1)நரசிம்ம அவதாரம் எடுத்து ஹிரண்ய காஸ்யப ராஜாவை வதம் பண்ணினதை கொண்டாடுவதுதான் ஹோலின்னு சில மக்கள் சொல்றாங்க
2)பரமசிவன் பண்ணின தவத்தின் உக்கிரம் தாங்க முடியாம அதை கலைக்க எல்லரும் மன்மதனை அனுப்பினார்கள்.
அவரும் அம்பா விட்டாரு.சிவன் படக்குனு கண்ண திறந்தார்.அந்த பார்வை பட்டு  மிஷ்டர்.மதன் சாம்பலோபதி ஆகிட்டாரு.
மிசஸ்.மதன் அதாங்க நம்ம ரதி ரொம்ப கவலையாகி சிவங்கிட்ட முறையிட்டதும் அவர்  சிஸ்டம்  ரீஸ்டோர் பண்ணிகுடுத்தார்(விர்ச்சுவலா தான்) புரியாதவர்கள் விக்கிபீடியா பார்க்கவும்.நீங்க ஹோலி கொண்டாடி இருக்கிங்களா!!!
ஹோலி எதுக்காக கொண்டாடுறாங்கன்னே எனக்கு தெரியாம நாலு வருஷம் எங்க காலேஜில நாங்க கொண்டாடுனோம்.
நாங்க என்றால் தமிழ் நாட்டு மாணவிகள்!!!
ஏன் இத பத்தி எழுதனும்னு ஆசப்பட்றேன்னா கொஞ்ச நேரம் முன்னாடி மார்க்கெட் போயிட்டு வந்தேன்.நம்ம அண்ணாமலை பல்கலைகழகத்தின் வட இந்திய மாணவக்கண்மணிகள் நடு ரோட்டில் சந்தோஷமாக ஹோலி விளையாடிக்கொண்டிருந்தனர்..அவங்க மேல இருக்கர கலர் போதாதுன்னு ரோட்டில் போகும் மக்களுக்கும்  கொஞ்சம் கலர் தூவினார்கள்...சோ எனக்கும் மலரும் நினைவுகள்!!
ஓக்கே..நாம கதைக்கு போகலாம்.கேர்ள்ஸ் ஹாஸ்டலில் ஹோலி எப்டி கொண்டாடுவாங்கன்னு தெரியுமா!!!
4 வருஷமும் என்ன நடந்ததுன்னு சொல்றேன்.
1st வருஷம்  அவ்வளவா எதுவும் நடக்கல.போன புதுசு இல்லயா...அதனால ரொம்பவே அடக்கி வாசிச்சோம்.எங்க க்ளாசில படிச்சது 5 நார்த்தீஸ் தான்(வட இந்திய மாணவர்களின் ஷார்ட் ஃபார்ம் :)).அதுங்களுக்குளயே கொண்டாடிக்கிச்சிங்க.நாங்களும் அவ்வளவா கண்டுக்கல.நாங்க வெறும் பாக்க மட்டுந்தான் செஞ்சோம்.ரெண்டாவது வருஷத்துக்கு போவோம்.காலைலல்லாம் ரொம்ப அமைதியா இருந்தது மொத்த காலேஜுமே.என்னட இம்புட்டு சைலெண்டா இருக்கேன்னு நெனச்சிகிட்டே சாயங்காலம் ஹாஸ்டல் போனா ஒரே ரணகளமா இருந்தது.ஒரு சின்ன குறிப்பு:எங்க ஹாஸ்டலை ரெண்டா பிரிச்சி இருப்பாங்க.சீனியர்ஸ் ஹாஸ்டல் அண்ட் ஜீனியர்ஸ் ஹாஸ்டல்.

   ஜூனியர்ஸ் ஹாஸ்டல்ல முதல்,ரெண்டாம் வருஷ மாணவிகள் மட்டும் தான் இருப்போம்.ராகிங் ஒழிக்கரதுக்காக அப்படி ஒரு ஏற்பாடாம்!!!!ஆனா சீனியர்ஸ் ஹாஸ்டல் தாண்டித்தான் போக முடியும்(வச்சாய்ங்கல்ல ஆப்பு).எங்க சீனியர்ஸ் எங்கள பாசம கூப்ட்டு மூஞ்சி ஃபுல்லா கலர் அடிச்சு விட்டாங்க.ஆகா இதான் ஹோலியா...புத்தருக்கு கிடைத்த ஞனோதயம் மாதிரி எங்களுக்கும் கெடச்சிடிச்சி.
இப்போ நாமளும் ஹோலி வெளயாண்டே ஆகணுமே..ஆனா கலர் இல்லயே எங்ககிட்ட..என்ன பண்றது!!!அப்போ கை குடுத்தது உற்ற நண்பன் ப்ரில் இங்க்!!!!எடுத்து தண்ணில கலந்தோம்.நீலம் + கருப்பு..அடி பின்னி பெடல் எடுத்தோம்!!!

மூணாவது நாலவது வருஷமெல்லாம் அட்வான்ஸ்டா ஊருலேர்ந்தே கலர் வாங்கிட்டு வந்துட்டோம்.செம ஆட்டம்.அப்படிடே வாட்டர் கூலரை ஸ்க்ரூ ட்ரைவரை போட்டு ஓப்பன் பண்ணி அதுக்குளேருந்து நேரடியா தண்ணியை எல்லர் மேலயும் கொட்டுவோம்.
அப்போ நல்ல ஆட்டத்த போட்ட பலன் அடுத்த 4 நாள் இருக்கும்
பின்விளைவு 1:
மூஞ்சி கன்னங்கரேல்ன்னு இருந்தது(ஏற்கனவே கொஞ்சம் கலரு கம்மி!!!இதுல இன்னும் கம்மியா).நாங்க அதை எடுக்க என்னனமோ போட்டு பாத்தோம்.
1)விம் பார்
2)சர்ஃப் பவுடர்
3)ரின் பார்
4)மீரா ஷியக்காய்

இவ்வளவு போட்டதுக்கப்பறம் தான் லேசான மாற்றம் தெரிந்தது,
பின்விளைவு 2:
 அதிகபட்ச பாதிப்பு எங்க தலமுடிக்கி தான்.4 பாக்கெட் ஷாம்பூ போட்டத்துக்கப்பறமும்  அசரவே அசராது!!!! இந்த அயர்லாந்து காப்டன் போர்ட்டர்ஃபீல்டு மண்ட இருக்கும் பாருங்க ஒரு பக்கம் மஞ்சளாவும் ஒரு பக்கம் வயலட்டாவும்.அப்படி இருக்கும்.இருந்தாலும் அசராம ஒவ்வொரு வருஷமும் அட்டகாசம் பண்ணுவோம் தான்.
பின்விளைவு 3:
கண்டிப்பா 10-16 பேரு கால்ல ஸ்ப்ரெயினாகி க்ரெப் பாண்டேஜ் போட்டிருப்பாங்க..
அந்த சந்தோஷத்துக்கு ஈடு இணை வேற  எதுவுமே கடயாது!!!

ஹ்ம்ம்ம்ம்ம்ம்.அது ஒரு நிலாக்காலம்.ஓக்கே...பதிவின் இறுதிக்கு வந்தாச்சு.
நீங்களும் ஹோலி கொண்டாடுங்க...
HAVE FUN GUYS!!!HAPPY HOLI...

எனக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகணும்!!!!
யாராவது சொல்லுங்களேன்...இந்த தமிழ் மணம் பட்டயை எப்படி இணைப்பது...அந்த தளத்தில் சொன்ன விதிமுறைப்படி செய்தேன்.ஆனால்
என் கண்ணுக்கு தெரியவே மாட்டேங்குது.
நன்றி.வணக்கஹம்.
என்றும் அன்புடன்,
கிருத்திகா.

15 March, 2011

ஏமாற்றாதே ஏமாறாதே

                                       வணக்கம் நண்பர்களே!!!மிக மிக மிக நீண்ண்ண்ண்ண்ட இடைவெளிக்கு பிறகு...மீண்டும் வந்துவிட்டேன்.என்னோட ப்ளாக் அட்ரஸ்கூட மறந்து போச்சுங்க..நான் போஸ்ட் எழுதி ஒரு வருஷத்துக்கு மேலயே ஆச்சு...இந்த ஒரு வருஷத்துல எத்தனையோ தடவ போஸ்ட் எழுதணும்னு நெனச்சுருகேன்.அட நெசந்தானுங்கோவ்..நம்ம தலைவர் பட ரிலீசுக்கு கூட ஒரு போஸ்ட் போட முடியாத பாவி ஆகிட்டேன்..சரி...விடுங்க.இப்போ விஷ்யத்த ஆரமிப்போமா.
விஷ்யம் நம்பர் ஒண்ணு--
ஜப்பானுக்கு இன்னும் எத்தன அதிர்ச்சிதான் காத்திருக்கு!!!!
ரொம்ப காலத்துக்கு மின்னாடி அமெரிக்கா போட்ட ஆட்டம் பாம்.
இப்போ ஆண்டவன் போட்டாங்கர பேர்ல சுனாமி + நில நடுக்கம்.போதாக்குறைக்கு அணு உலை வேற வெடிச்சு போச்சாம்.எனக்கு  தசாவதாரம் படம் பாக்கற மாதிரியே ஒரு பீலிங்கி. பாக்கவே ரொம்ப கோரமா இருந்தது அந்த விடியோஸ்.
கடவுளே...எந்த நாட்டுக்கும் இந்த நெலம இனிமே வரக்கூடாது!!!!!
விஷ்யம் நம்பர் ரெண்டு :
ஜப்பான் முழுகுது ஒரு பக்கம்..ஆனாலும் நமக்கு அதெல்லாம் பெருசா தெரியாது.சவுத் ஆப்பிரிகாகிட்ட தோத்துப்போச்சு இந்தியா..அந்த சோகத்துல தான் நாம முழுகி இருக்கோம்.(நான் ரொம்பவே முழுகிட்டேன்)
நான் செம்ம டென்ஷன் ஆகிட்டேன்.நம்ம சச்சு 111(அதுவே ராசி இல்லாத நம்பர்னு யாரும் நெனக்காதீங்க) அடிச்சும் ஜெய்க்கல.என்ன கொடும சார் இது!!!!!
என்னோட ப்ரெண்ட்ஸ் சொல்ராங்க சச்சு சதம் அடிச்சதாலதான் நாம மாச் ஜெய்க்கல...Its unlucky if he gets 100.
ஐயகோ என்ன ஒரு அவமானம் நம்ம தலைவருக்குன்னு களத்துல எறங்கி பின்னி எடுத்துட்டேன் அவங்கள...இருடந்தாலும் மனசு கேக்காம இங்கயும் பொலம்பிட்டேன்.
ஆரம்பத்துல நம்ம டீமுக்கு எல்லாரும் உட்ட பில்டப்ப பாக்கும்போது நெசமாவே ஜெய்ச்சுருவோம் உலககோப்பையன்னு தப்பு கணக்கு போட்டுட்டேன்.
நடுவர் நாட்டாமை வாய்ஸ்:அயர்லாந்துக்கு தான் நியாயமா கப்பு போயி சேரணும்ங்கிரது இந்த நாட்டாமயோட தீர்ப்புலே!!!!!

விஷ்யம் நம்பர் மூணு-- இன்னைக்கு ஒரு பிச்சக்காரனுக்கு 60 ரூபாய் தர்மம் பண்ணினதா நெனைக்க வெச்சுட்டான் இந்த ஏர்டெல்காரன்.நேத்துதான் 202 ரீசார்ஜ் பண்ணினேன்.அது புடிக்கல இந்த கட்டதொறைக்கு.இன்னைக்கு ஒரு போன் வந்துது.எடுத்தா ஏர்டெல் ரெப்ரெசெண்டேடிவ் பேசினான்.
ஏ.ரெ: வணக்கம் மேடம்.உங்க கூட ஒரு 2 நிமிஷம் பேசலாமா..
நான்:யெஸ் பேசலாமே.
ஏ.ரெ: நீங்க ஹலோ ட்யூனா வெச்சுருக்கற பாடலுக்கு  மாசம் 30 ரூபாய் சார்ஜ் பண்றோம்.ஆனா  ஒரு ஸ்பெஷல் ஆபர் ஒண்ணு வந்துருக்கு.அதுல நீங்க 3 மாசத்துக்கு 60 ரூபாய் கட்டினா போதும்.
நான்(மைண்ட் வாய்ஸ்): நாம இதை இந்த மாசம் எடுத்து உட்டுடலாம்னு நெனச்சோமே...இவன் என்ன இப்டி சொல்றான்!!!!60/3=20 ரூவா. இப்போ மாசம் 30 ரூவா கட்டுறோம்.மாசத்துக்கு 10 ரூபாய் மிச்சமா... ஆகா ஆகா..ஓ.கே சொல்லிட வேண்டிதுதான்
ஏ.ரெ:அதுல நீங்க சேர விரும்பரிங்களா..
நான்: கண்டிப்பா சேரலாமே!!!!
ஏ.ரெ:இப்போவே உங்க அக்கவுண்ட்லேந்து 60 ரூபாய எடுத்துடுவோம்.
சம்மதமா?
நான்:ஓக்கேங்க சேத்து விடுங்கங்க
ஏ.ரெ:ஓகேங்க ரொம்ப நன்றி.
--முற்றும்--
இதுல என்னா  அநியாயம் இருக்கு? அதுதானே உங்க கேள்வி!!!
நான் 2 நாள் முன்னாடிதாங்க இந்த மாசத்துகான 30 ருபாய கட்டினேன்.:(:(:(
60+30 -- 90...3 மாசத்துக்கு 90 ரூபாய வாங்கிட்டான் அவன்.
ஆகமொத்தம் அவனுக்கு போய் சேர வேண்டிய காசு போயிடிச்சு.
ஆகவே மக்களே மக்களே மக்களுக்கு மக்களே...தயவு செஞ்சுஇலவசங்களை நம்பி ஏமாறாதீர்கள்..
நான் கருத்து சொல்ற அளவு இந்த உலகம் ஆய்டுச்சா...ச்ச...
பின் குறிப்பூ:
ஆமா அவந்தான் கேட்டான்னா உனக்கு எங்கடீ போச்சு அறிவு...வேணாம்னு சொல்ல வேண்டியதுதானே??இத நீங்க உங்க மனசுல நெனச்சுருப்பீங்க கண்டிப்பா..அதுலயும் ஒரு மேட்டர் இருக்கு.
என் ஹலோ ட்யூன் என்ன தெர்யுமா!!!
கஷ்டபடாமே எதும் கெடிக்காது
கஷ்டபடாமே கெடிக்கர்து என்னிகுமே நெலக்காது.
அதிகமா ஆசேபட்ற ஆம்ப்ளேயும்
அதிகமா கோவப்பட்ற பொம்ப்ளேயும்
நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல!!!!
பை
மிஷ்டர்.ஆறுபடையப்பா..

பதிவின் இறுதிக்கு வந்தாயிற்று.
எழுத எக்கச்சக்க விஷயங்கள்.கொஞ்சங்கொஞ்சமா எழுதுகிறேன்.வாசக மற்றும் வாக்காளப்பெருமக்களே...எப்போதும் போல தங்கள் ஆதரவை எனக்கு தந்தருள்க.
நன்றி.வணக்கஹம்..ஹீ ஹீ
என்றும் அன்புடன்,
கிருத்திகா.