ரொம்ப லேட்டா போடறேன் இருந்தாலும் பரவால்லை!!
படத்தை பத்தி மூணே வார்த்தைல சொல்லிடலாம்!!!
சண்டை சண்டை சண்டை!! அவளவுதானா!!!! இல்லை இல்லை!!மேல படிங்க!!
படத்துல இது நல்லால்ல அது சுமார் அப்டின்னுலாம் சொல்லபோறது இல்லை!!
படத்துல பாராட்டவேண்டியது அப்டின்னா முதல்ல அந்த ஸ்டண்ட் மாஸ்டர் தான்!! கொக்கமக்கா எப்டி எப்டிலாமோ சண்டை காட்சி அமைச்சிருக்காங்க!!!
அடுத்ததா நம்ம செல்லம் :) ஜெயம் ரவியைதான் பாராட்டணும்!! ஆதி ரோல்லயும் சரி பகவான் ரோல்லயும் சரி. சும்மா பின்னி பெடல் எடுத்துருக்கார் மனுஷன்!!
நெக்ஸ்ட் சொல்லணும்னா படத்தோட திரைக்கதை!!! சில இடங்களை கணிக்கும்படியா இருந்தாலும் எனக்கு நல்லா இருந்தமாதிரி தோணிச்சு!!
அப்படி என்னதான்யா கதை???
ஆதிஷண்முகமா தாய்லாந்துல இருக்காரு ஜெயம் ரவி.அவரு அங்க ஒரு டான்!! சீட்டிங்க் , கடத்தல் போன்ற செயல்களில் கிங்!!
பகவான் அப்படிங்கர பேர்ல மும்பைல ரௌடித்தனம் பண்ணிகிட்டு இருக்காரு .நெய்ல்பாலீஷ் , லிஃப்டிக் எல்லாம் போட்டு கலக்குறார்! கொஞ்சம் நீட்டா முடி மட்டும் வெச்சுருக்கலாம்!! அவரை மும்பை போலீஸ் வளச்சுகட்டி தேடுது.
ஆதி ஷண்முகமும் ஆந்திராவுல ஒரு சீட்டிங் பண்ணி அந்த ஏரியா ஹிட்லிஸ்ட்ல வந்துடறார். இந்த சீட்டிக் காட்சிகள் ரொம்ப நல்லா இருக்கும்!!(வேற வழி இல்ல!!!)பகவானுக்கு பதிலா ஆதிஷண்முகம் மும்பை போலீஸ் கிட்ட மாட்டிக்கிட்டு , ஆந்திரா கேங்க் கிட்டயும் மாட்டிகிட்டு எப்படி சேதாரம் ஆகாம வெளில வராரு? நீது சந்த்ரா பகவானை காப்பாத்த ஆதியை எப்படி மும்பை கூட்டிட்டு வராங்க?? ஐயயோ சஸ்பென்சை(!!!!!) சொல்லிட்டனா!! அதான்யா கதை!!
மத்ததை படத்துல பாருங்கப்பா!!!!!.
யுவனுக்கு என்ன ஆச்சு!!! ஓவர் டைம் வேலை செஞ்ச மாதிரி பாட்டு போட்டு இருக்கார்!!
அவளோதான் மா!!
ஜெயம் ரவி ரசிகைகளே!!!
எஞ்சாய் மா!!!
மீண்டும் சந்திப்போம்