20 May, 2010

காணவில்லை!!!!ஆங்கில எழுத்து Z


அதாகப்பட்டது இனிமே சின்ன பிள்ளைங்க கிட்ட இங்கிலீஷ்ல எத்தன எழுத்து இருக்குன்னு கேட்டா அதுக்கு அவங்க 25னு தான் சொல்லப்போறாங்க.ஏன்னா இந்த ஜூன் மாசம் ஒண்ணாம் தேதிலேருந்து Z அப்டின்ங்கர எழுத்தை எடுக்கப்போறாங்களாம்!!!!
யாரு இந்த வேலை எல்லாம் பண்ணறதுன்னு பாத்தா English Language Central Commission (ELCC) அப்டிங்கறவங்க.ஏன்னு கேட்டிங்கன்னா அமெரிக்கா&பிரிட்டிஷ் ஆங்கிலத்தில இந்த எழுத்தோட உச்சரிப்பு மாறுதாம்.இந்த வேறுபாடு கூடாது,எப்டியாவது இதை நீக்கிடணும்னு 2 வருஷமா என்ன பண்ணலாம்னு யோசிச்சு இந்த முடிவுக்கு வந்துட்டாங்க.செம சூப்பர்லா!!!
சரி அப்போ Z ல ஆரமிக்கற  வார்தைகளை எப்படி உச்சரிக்கறது?
zero becomes xero
zoo becomes xoo
zone becomes xone
zodiac becomes xodiac
படிக்கவே கேவலமா இருக்குல்ல........இன்னும் பாருங்க. Z அப்டிங்கர சவுண்ட் அந்த வார்த்தைல இருந்தா அதை இனி s போட்டு நிரப்பிக்கணும்
visualize becomes visualise
analyze becomes analyse
materialize becomes materialise

இன்னும் இதை பத்தி தெரிஞ்சுக்கணுமா???
இந்த லிங்க்கில படிக்கலாம்.
 http://www.dailywritingtips.com/the-letter-z-will-be-removed-from-the-english-alphabet/


இது எந்த அளவுக்கு உண்மைன்னு தெர்ல.எந்த அளவு மக்கள் ஒத்துப்பாங்கன்னு தெர்ல....ஆனா எனக்கு ஒரு டவுட்.இனிமே கம்ப்யூட்டர் கீபோர்டில Z  இருக்கற எடத்துல என்ன இருக்கும்??
zaheer khan ஐ எப்பிடி மாத்துவாங்க?

அடுத்து இன்னொரு விஷயம்.எனக்கு வந்த பார்வார்டு மெயில்..
படிச்சு முடிஞ்சா சிரிங்க....

தமிழ்   ஹீரோக்களும்   இந்திய   கிரிக்கெட்   வீரர்களும்   ஒரு   ஒப்பீடு...

ரஜினி  = சச்சின்  ( ரெண்டு   பேரும்   எப்பவும்   டாப்தான் )
கமல்  = கங்குலி  ( திறமை   இருக்கு   ஆனா   ஹிட்   ஆக   முடியல )
சூர்யா  = யுவராஜ்  ( லக்   மட்டும்   தான் )
விக்ரம்  = தோனி  ( ஹிட்   ஆனா   பயங்கரம்தான்   ஆனா   ஹிட்   மட்டும்   தான் )
மாதவன் = சிரீ   சாந்த்  ( மெகா   பிளாப்   ஆனாலும்   இன்னும்   கவர்ச்சி   இருக்கு )
அஜித்  = சேவாக்  ( அடிச்சா   சிக்ஸ்   இல்லன்னா   அவுட் )
விஜய்  =  அட   இவன்   பால்   பொறுக்கிப்   போடுற   பயங்க...

அத்துடன் இந்த படத்தையும் இணைத்துள்ளேன்.இதுக்கு சிரிக்காதவங்ககூட இதை பாத்தா சிரிப்பிங்க.

19 April, 2010

ஐ ஆம் பாக் -----கேரளா பயணம்

                                எல்லாருக்கும் ஒரு பெரிய்ய்ய்ய்யயயயய வணக்கம் :)எப்படி இருக்கிங்க??நான் எங்க போயிட்டேன்ன்னு அக்கறையோட விசாரிச்ச thenammailakshmanan ...தாங்க்யூ :) ஐ ஆம் பாக் :)(I am back அதைதான் சொன்னேன்)
                         டிசம்பர் கடைசியில் வேலை விஷயமாக கேரளா போயிட்டேன்.முதல் தடவயா கேரளா போனேன். அதை பத்தி நெறய்ய விஷயம் இருக்கு சொல்ரத்துக்கு.அப்பறம் நிறய திரைபடங்கள் விமர்சனம் எழுத விட்டாச்சு.இப்போ மதராசப்பட்டணத்துல இருக்கேன்லா..அதை பத்தி சொல்லவும் எக்கச்சக்க விஷயங்கள் இருக்கு.எதை எழுத முதல்ல?(ஷப்பா இப்பவே கண்ண கட்டுதே).சீட்டு போட்டு பாத்ததுல கேரளா தான் வந்துது.
              ஏற்கனவே கேரளா அனுபவம் இருப்பவர்களே..என் பார்வைக்கு பட்டதை தான் சொல்லி இருக்கேன்.தவறுகளை பொறுத்தருள்க.புதுசா போரிங்களா...கண்டிப்பா இதை படிங்க.உங்களுக்கு ரொம்ப தேவை.
ஃப்லாஷ் பாக் ஸ்டார்ட்ஸ்
டிசம்பர் மாதக்கடைசி--அனந்தபுரி எஃஸ்பிரஸ்-விருத்தாச்சலம் ரயில் நிலயம்--வேகமாக கிளம்புகிறது ரயில்
நான் தங்கின-சுத்திய-ரொம்ப எஞ்சாய் பண்ணின எடம் திருவனந்தபுர்ம்.அந்த பயண அனுபவங்கள்தாம் இவை.
                        கேரளாவுல மழைக்காலம்.கண்டிப்பா சொட்டர்,கம்பளி,குடை இல்லாம போகாதேன்னு நம்ம சொந்தக்கார கூட்டம் சொன்னதை கேட்டு லக்கேஜை ஏத்திண்டதுதான் மிச்சம்.நான் அங்கேருந்து கெளம்பர வரை சொட்டு மழை இல்ல.காலைல 7 மணிக்கே வெயில் பின்னும்.ராத்திரி  7  மணி வரை ரொம்ப அனலாதான் இருக்கும்.ஆனா 10,11 மணிக்கு மேல ஒரு குளிர் அடிக்கும் பாருங்க...அப்பப்பா..ரெண்டுமே ரெண்டு எஃஸ்டிரீம்.எங்களுக்கு காலை 8 டூ  மதியம் 2 மணி வரைதான் வேலை.அதுக்கப்பறம் நாங்க ஃப்ரீ பெர்ட்ஸ்.:)நகர்வலம் போக ஆரமிச்சுடுவோம்.

                       முதல்ல நாங்க போன இடம்->சாக்ஷாத் நம்ம பத்பனாபஸ்வாமி கோவிலுக்குத்தான்.கோவில் இருக்கும் இடம் பேரு ஈஸ்ட் ஃபோர்ட்(கிழக்கு கோட்டை மளையாளத்துல).அந்த ஆர்க்கிடெக்சர் ரொம்ப நன்னா இருக்கும்.ஸ்வாமியை நாம ஒரே தடவயா பாக்க முடியாது.ஆதிசேஷன்,தலை பகுதி,கால்ன்னு மூணு பகுதியா பிரிச்சுருப்பாங்க..அங்க இருக்கர சிற்பங்கள்,விளக்குகள்,அதைவிட முக்கியம் அங்க தர பிரசாதம் எல்லாமே ரொம்ப அழகு.சின்ன வாழை இலைல கொஞ்சம சந்தனமும்,கொஞ்சம் துளசியும்தான் பிரசாதம்.சூப்பர்லா..இங்க உஷார் பாயிண்ட் என்னன்னா->பெண்கள் புடவை/பாவடை சட்டை  & ஆண்கள் வேஷ்டி தான் அணிந்து வர வேண்டும்.இல்லாட்டி அங்க தேவஸ்தாந்த்துலயே பத்து ரூவய்க்கு கன்னங்கரேல்ன்னு வெள்ளை வேஷ்ட்டி தருவார்கள்.அதுதான் நமக்கு கதி.பாயிண்ட் நம்பர் 2->கோவில் வாசல்படில நாம எவ்வளவுதான் வேண்டாம்னாலும் கைலயே கொண்டுவந்து விளக்கை திணிப்பாங்க.வட்டியும் முதலுமா சேத்து வசூல் பண்ணிடுவாங்க.ஜாக்கிரதை!!!!!!!!!!!!!!!

                     அடுத்த படியாக கோவிலுக்கு கொஞ்சம் கிட்டக்கயே இருக்கர  மிருககாட்சிசாலை.ரொம்ப பெரிய zoo இது.ஒரு நாள் இதுக்கு மட்டுமே ஒதுக்கணும்.வேற எங்கயும் நம்மளால போகமுடியாது.நடந்து நடந்து டையர்ட் ஆகிடுவோம்.தி.புரத்துல  பிடிச்ச விஷயம் ஆட்டோக்காரங்கள்ளாம் பயங்கர டீஜ்ண்டு.ஒரு ஆட்டோவில 3 பேருதான் ஏறலாம்.அதுக்கு மேல ஏத்திக்கமாட்டாங்க.கண்டிப்பா ஃபிக்சட் சார்ஜஸ் தான்.நோ தகறாரு.வேணுன்னா மீட்டர் போட சொல்லலாம் நாம்.நைஸ்ல்லா.வழில வர கேரளா சட்டசபை பிள்டிங்க் செம அழகு.நெஷ்ட்டு நாம போகப்போற இடம் தம்பானூர் ஆஞ்சனேயர் கோவில்.அங்க ஒரு அதிசயம் என்னன்னா கரெக்டா அனுமார் சிலைக்கு பின்னாலேருந்து ஆரமிச்சு  வளைஞ்சு வளைஞ்சு போயிண்டே இருக்கும் அந்த மரம்.ரொம்ப ஓல்ட் மரமாம்.கயிறு மாதிரியே வளஞ்சுருக்கும்.இன்னும் எக்கச்சக்க கோவில் இருக்கு அங்க பாக்க.பட்...
              தெய்வ தரிசனம் முடிஞ்சது.நம்ம ஏரியாவுக்கு வரலாம் இப்போ.எவ்வளோ பெரிய்ய ஸ்டார் படமா இருந்தாலும் சரி.எந்த மாதிரி தியேட்டரா இருந்தாலும் சரி.பால்கனி டிக்கட் எவ்வளோ சொல்லுங்க பாப்போம்?45 ரூவாதான் :).(ரஜ்னி படம் ரிலீஸ் இல்லாததால் இதை சொல்லறேன்!!!!!)இதை யூஸ் பண்ணி எத்தன படம் தெரியுமா பாத்தோம் நாங்க!!!அங்க இருந்த ஒண்ணறை மாசத்தில ஆயிரத்தில் ஒருவன்,அசல்,3 இடியட்ஸ்(நீங்கள் விரும்பினால் விமர்சனம் எழுதப்படும்),மை நேம் இஸ் கான்,தீராத விளயாட்டு பிள்ளை.இத்தனையும் முதல் நாள்,முதல் ஷோ.:) அதுவும் பொண்ணுங்களே தனியா போயி டிக்கெட் எடுத்து..நம்பினால் நம்புங்கள்.:)
                  அடுத்து வருவது-->கோவளம்,வர்கலா கடற்கரை,தென்மலை ஹில்ஸ்,வீகா லாண்ட்,மற்றும் பல.
               கட்டுரை பெரிதாகப்போவதால் அடுத்த பாகமாக்கி மத்த விஷயங்களை எழுதுகிறேன்.இதுவரை சொல்லி இருந்தது பயனுள்ளதா இருந்துருக்கும்ன்னு நம்பரேன்.கருத்துக்களை பதிவு செய்யவும்.நன்றி.

உங்கள் தோழி,
கிருத்திகா