22 December, 2009

நேற்று மாட்ச் பாத்திங்களா???நம்ம சச்சு பிச்சுட்டார் :)

ரவீந்தர ஜடேஜாவும் அருமையாக ஆடினார்...
சரி இப்போ டீட்டைல் அனாலிசிஸ் பண்ணலாமா??
1)இலங்கை 17 ஓவர் இருக்கும்போதே 137 ரன் வந்துட்டாங்க..அப்போ ரவி சாஸ்த்திரி இவங்க கண்டிப்பா 400+ அடிக்க வாய்ப்பு இருக்கு.இதே நிலமைல தான் இந்தியா முதல் ஆட்டத்துல இருந்ததுன்னு.ஆனா எப்போ வேணா என்ன வேணா நடக்கலாம்."அப்படின்னு சொன்னார்.அவருடய வாக்குப்படி
21வது ஓவரில்  163/1 அப்டிங்கர நிலமைல இருந்த இலங்கை
25ஆவது ஓவர்ல 174/4 அப்டிங்கர நெலமைக்கு வந்துருச்சு

2)நாலாவது அம்பையர் அப்டின்னு நியோ ஸ்போர்ட்ஸ்ல போடுவாங்களே..அதுல நேத்து  ஜவகள் ஸ்ரீனாத் வந்தாரு.அருமையா பேசினாரு.சனத் ஜயசூரியாவை சேக்கலாமா வேணாமா? அப்டிங்கர கேள்விக்கு பதில் சொல்லும்போது "சனத்,2 வருஷத்துக்கு மின்னாடி நம்ம கங்கூலி எந்த நிலைல இருந்தாரோ அப்டி இருக்காரு.இவ்வளோ பெரிய சீனியர் மோஸ்ட் வீரரை டூருக்கு கூட்டிட்டு வந்து வாய்ப்பு குடுக்காமல் இருப்பதன் பலன் என்னனு ஸ்ரீலனகாவுக்கு சீக்கிரம் புரியும்"அப்டின்னாரு.அதேமாதிரி 7வது இடத்துல புது வீரர் இறங்கி டொப்னு அவுட்டும் ஆகிட்டாரு.
அதனால அவர் வாக்கும் பலிச்சுப்போச்சு.

3)ஒளிபரப்புப்படி பாத்தா நியோ கிரிக்கெட் ரொம்ப பொறுமய சோதிச்சுது. கமெண்டரில 150 க்ராஸ் பண்ணினதுக்கு க்லாப் தட்டராங்க..கீழ ஸ்கோர் 138லயே நிக்குது.ஒரு பக்கம்  4 அடிச்சா இன்னொரு பக்கம் போகுது காமேரா..

4)ஸ்டேடியம் நேத்து முழுதும் நிரம்பி விட்டது.அப்புடி ஒரு கூட்டம்.க்ரிஷ்னர் வேஷம் போட்டுகிட்டு ஒரு குரூப் வந்துருந்தது...நல்ல ரெஸ்பான்ஸ் மக்கள் கிட்டேருந்து.

5)சுரேஷ் ரைனா நெறய காட்ச் மிஸ் பண்ணரமாதிரியே எனக்கு ஃபீலிங்கி...அதுமட்டும் இல்ல ..ஏகப்பட்ட ஃபீல்டிங்க் குளறுபடிகளை நேத்தும் பாக்க முடிஞ்சது...தினேஷ் கார்த்திக் தான் ஸ்டாண்ட் பை  விக்கெட் கீப்பர்னு ஆகி போச்சு.அவரோட கல கலன்னு பேசினா என்னா..யாருமே அவ்வளவா அவர் கூட பேசலை நேத்து..அத்தோட சங்கக்காராவை ஸ்டம்பிங்க் பண்ணினாரே பாக்கணும்...சென்னை 28 கிலைமாக்சில வரமாதிரி பந்தை கீழ விட்டுட்டு கையால அடிச்சுட்டு,நல்லகாலம் மறுபடி வேகமா பந்தை எடுத்து  ஸ்டம்பிங்க் பண்ணிட்டார்...தப்பிச்சுது இந்தியா.

6)கவுதம் காம்பீர் அனியாயத்துக்கு நல்லவரா இருக்காரு.அவுட் ஆனாலும் போகாம  க்ரவுண்டிலேயே நிக்கும் பாட்ஸ்மான்களுக்கு  மத்தியில் அவுட்டே இல்லைனாலும் நேர்மயா வெளில போன காம்பிரை என்னானு சொல்லரது...

7)முன்னுரையில் சொன்ன படி சச்சு பிச்சுட்டார்..என் நண்பர்கள் பலர் தினேஷை மானாவாரியா திட்டினாங்க.சச்சினுக்கு ஆடும் வாய்ப்பே தரலேன்னு.அப்படி 100 அட்ச்சுருந்தா "இவனுக்கு டீமை பத்தி கவலயே இல்ல...தான் 100 அடிக்கணும்னுதான் கவல " அப்படின்னு உலகத்துல பாதி பேரு பொறாமைல ஒப்பாரி வெச்சுருப்பாங்க.நல்ல வேள..அப்படி நடக்கல....

ஜாலி கார்னர்..

கடவுள் கிட்ட என்னவேண்டிக்கணுமோ அதை லெட்டரா எழுதிக்குடுங்கன்னு கேட்டத்துக்கு குட்டி பசங்க சிலர் என்ன ரகள பண்ணிருக்காங்க  பாருங்க..

நான் ஒரு கல்யாணத்துக்கு போனேன்..அங்கே சர்சுலயே உம்மா குடுத்துக்கராங்களே...தப்பு தப்பு...

 
போ சாமி...நீ ரொம்ப மோசம்.எனக்கு தங்கச்சி பாப்பா வேணும்னா கேட்டேன்..பப்பி பாப்பா வேணூம்ம்ம்ம்ம்

 

 இந்த பீட்டர் நம்மள மாதிரி..
சாமி இன்னைகு மிஸ் வரகூடாது..லீடர் ஆப்செண்ட் ஆகிடனும் அப்டினு வேண்டிக்கரமாதிரி..இவன்!!!!

 

ரூம் போட்டு யோசிச்ச புள்ள இதுதான்
உங்கள் பொன்னான  கருத்துக்களையும்,வெள்ளியான வாக்குகளயும் அளிக்க மறவாதீர்...
என்றும் அன்புடன்
உங்கள் தோழி
கிருத்திகா

17 December, 2009

1 சீரியஸ் + 1 ஜாலி

இந்த பதிவை ஆரம்பிப்பதற்கு முன்...முந்தய பதிவான லீகல்லி ப்லண்ட் படத்தின் விமர்சனத்துக்கு பின்னூட்டம் இட்ட அனைத்து மக்களுக்கும் நன்றி...(வந்தது 14....இதுக்கேன் இத்தன பில்டப்பு)
சரி இப்போ சீரியஸ் மாட்டர்
சிலதை பார்க்க பாவமாவும் இருக்கும் அதே சமயம் அதுக்கு காரணமானவங்க மேல கடுப்பாவும் வரும்.நேத்து கோவிலுக்கு போயிருந்தேன் .அங்கே பாத்த காட்சிதான் இது.போட்டோ எடுக்கறதை யாராவது பாத்துருந்தா என் செல்லை அடக்கம் பண்ணிருப்பாங்க.தெரியாம படம் எடுக்கனும்கரதுக்காக நடந்துகிட்டே எடுத்தேன்.கொஞ்சம் அசைஞ்சு தான் இருக்கும்.அட்ஜஸ் பண்ணிக்கவும்.
படத்தை பார்த்தா எதாவது புரியுதா??ரொம்ப கொடூரமா ஷேக் ஆகி இருக்கும்...எடுக்கப்பட்ட நேரம்  காலை 11மணி 30 நிமிடம்..
பள்ளிக்கூடத்துல படிச்சுகிட்டு இருக்க வேண்டிய பையன்
ஒரு 7 அல்லது 8 வயசு தான் இருக்கும்.....தரையை கூட்டி சுத்தம் பண்றான்...

இந்த் பொண்ணுக்கு அதிகபட்சம் 10 வயசுதான்...அவ கைலயும் தொடப்பம்...
அதைவிட இன்னோரு கொடுமை இந்த  படத்துல இருக்கர  பாட்டி தான்..நடக்கவே முடியல..ஆனா அவங்களுக்கும் வேலை..
குழந்தைகளை வேலைக்கி அமர்த்தக்கூடாதுன்னு சட்டம் போட்டுருக்கும் அரசாங்கமே கோவிலில் கூட்டி பெருக்க குழந்தைகளை வேலைக்கு வெச்சுருக்கு.இந்த மாதிரி ஆளுங்களை நியமனம் செய்யரது யாருனு கண்டுபிடிக்க ஆசைதான்..ஆனா என்னால முடியலை...ஜூ.வி /ரிப்போர்டர் நிருபர்கள் யாராவது உங்களுக்கு தெரிஞ்சா இப்படி எல்லா கோவிலுக்கும் போயி யாரு சுத்தம் செய்யராங்கன்னு பாக்க சொல்லுங்க...இது சின்ன விஷயமா தெரியும்.ஆனா இன்னும் பல இடங்களில் சம்பளம் கம்மியா குடுக்கலாம்னு குழந்தைகளை வேலைக்கு வெய்க்கும் கொடுமை நடந்துகிட்டுதான்  இருக்கு.எவ்வளவுதான் தடுக்க நினைத்தாலும் முடியலை..

சீரியஸ் மாட்டர் ஓவர்...இப்போ ஜாலி ஐட்டத்துக்கு வருவோம்...

இலங்கை-இந்தியாவுக்கு நடுவில் நடந்த முதல் ஒரு நாள் போட்டி பத்தி எழுதாமல் இந்த பதிவை முடித்தால் நான் ஒரு கிரிக்கெட் ரசிகையே இல்லை...இந்த போட்டியை இந்திய அணி வென்றாலும் நம்ம மனசை வென்றது இலங்கை தான்(இந்த ஆட்டத்தை பொறுத்த வரை).414 அப்படிங்கர நம்பரை டெஸ்ட் போட்டிகளில் தான் பாக்க முடியும்.ஆனாலும் அதை ஒரு சவாலா எடுத்துண்டு வெறித்தனமா விளாசி 411 வரைக்கும் வந்தாங்களே...சபாஷ் சபாஷ்...பொறி பறந்த  சேவாகின் சதமாகட்டும்,தில்ஷானின் அதிரடி சதமாகட்டும் எல்லாமே இவருக்கு அடுத்தபடிதான்....யாரை சொல்றேன்னு பாக்கரிங்களா???கொஞ்ச நேரமே ஆடினாலும் 45 பந்துகளில் 90 அடித்து  தூள் கிளப்பிவிட்டு,பாவமாக பவிலியனில் ஒவ்வொரு பவுண்டரிக்கும் கை தட்டி உற்சாகப்படுத்தின  சங்ககாராதான் மனசுல சிம்மாசனம் போட்டு உக்கார்ந்துட்டார்......மொத்தத்தில் ரொம்ப நாள் கழிச்சு ஒரு நல்ல மாச் பார்த்த திருப்தி :)

கண்டிப்பாக உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யவும்...
என்றும் அன்புடன்
உங்கள் தோழி கிருத்திகா

14 December, 2009

சினிமா கொட்டாய்-லீகல்லி ப்ளண்ட்


 இதை ஆரம்பிப்பதற்கு முன்....நம் தலைவர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து சொல்லி போட்ட பதிவுக்கு கமெண்ட் சொல்லி வாழ்த்து தெரிவித்த அனைத்து  ரசிகப்பெருமக்களுக்கும் என் மனமார்ந்த நன்றி

லீகல்லி ப்ளண்ட்-
இதுதான் நாம இந்த வாரம் சினிமா கொட்டாய்ல பாக்கப்போர   திரைப்படம்

              இதுக்கு அப்படியே தமிழ்ல எப்படி சொல்லர்துன்னு  தெரியல...இல்லைன்னா எப்பவும் போல ஜாக்கிசான் ஸ்டைல்ல தமிழாக்கம் பண்ணிருக்கலாம்.இப்போ விமர்சனத்துக்கு போலாமா..

கதை-
           அதாகப்பட்டது  நம்ம ஹீரோயினாகப்பட்ட எல்லீ உட்ஸ் பாஷன் டிசைன் ஸ்டூடண்ட். நிறைய நடிகைகளுக்கு விதவிதமா உடைகள் வடிவமைத்துக்கொடுப்பாங்க.அவங்ளுடய பாய் ஃபிரண்டான வார்னர்,"நீ வெளயாட்டு பிள்ளயாவே இருக்க.எங்க வீட்ல என்னை லா அதாவது சட்டக்கல்லூரிக்கு அனுப்பப்போறாங்க.இன்னொரு வக்கீலைத்தான் கல்யாணம் பண்ணிக்க சொல்லுவாங்க.அதனால உனக்கும் எனக்கும் ஒத்து வராதுன்னு "சொல்லி வெட்டி உட்டுடரார்.உடனே இவங்க வீறு கொண்ட சிங்கம் போல அவர் படிக்கர அதே காலேஜிக்கு போயி சட்டம் படிக்க சேந்துக்கராங்க...
அவங்களை ஆரம்பத்தில் "ஐய்யயே!!!!!" அப்படின்னு கேவலமா பாத்தவங்களை எல்லாரையும் ஓரம் கட்டி படிப்பு முடியும்போது "ஆகா இதுவல்லவோ நல்ல பொண்ணுக்கு அழகு" அப்படின்னு சொல்ல வெய்க்கராங்க...எப்படி???இதுதான் கதை.

டுவிஷ்ட்டு--

    ஒரு கேசை துப்பறியும் அசைன்மெண்டை  கியூட்டா செஞ்சுமுடிக்கறாங்க..அந்த கேஸ் இவங்களுக்கு சாதகமா ஜட்ஜ்மெண்ட் வந்துடுது.அத கண்டுபுடிக்கறதுக்கு இவங்க பண்ணுர சேஷ்டைகள் இருக்குதே அடடடடடடா...ஹாட்ஸ் ஆப் சொல்ல வெய்க்கராங்க.எல்லாரும் கேவலப்படுத்தும்போது அவங்க முன்னாடி அழுவாம பியூட்டி பார்லருக்கு போயி ஃபேஷியல் பண்ணற சாக்குல வெப்பாங்களே ஒரு ஒப்பாரி...வாவ்....அவங்க பாய் ஃப்ரெண்டுக்கும் அவனோட பியன்சீக்கும் இவங்க குடுக்கர நோஸ் கட் ஆகடும்,கொடூரமா டீச்சர் கிலாஸ் எடுக்கும்  நேரத்திலும் இவங்க எதயும் கண்டுக்காம மிக்கீ மவுஸ் பேனாவை சரி பண்ணுவதில் ஆகட்டும் ...சூப்பர்...செம்ம காமெடி படம் இது.பார்க்க வாய்ப்பு கெடச்சா விடாதிங்க.

கருத்து--
           
                "நம்ம மேல நம்பிக்கை வெச்சா எந்த காரியத்தையும் செய்யலாம்.யாருக்காகவும் எதுக்காகவும் பயப்படதேவையில்லை".இதுதான் இவங்க சொல்ல வரும் கருத்து.

11 December, 2009

அன்புள்ள ரஜினிகாந்த்-இனிய பிறந்த நாள் வணக்கங்கள்...


பதினாறு வயதினிலே முரட்டுக்காளையாக இருந்தபோதிலும்
அன்புக்கு நான் அடிமை என்று ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த மன்னா...
தில்லுமுல்லு பண்ணாமல் தம்பிக்கு இந்த  ஊருஎன சொல்ல வைத்தவ மாவீரரே.....
 குரு பாலச்சந்தரின் சிஷ்யனே
நான் அடிமை இல்லை என்ற ராணுவ வீரா...
அன்னை ஓர் ஆலயம் என்ற  பாண்டியனே
புதுக்கவிதை படித்து மூன்று முடிச்சு போட்டு  தர்ம யுத்தம் செய்து சூப்பர் ஸ்டார் இடத்தை அடைந்த தளபதியே....
வாழ்க்கையில் பல முள்ளும் மலரும் கண்ட ராஜாதி ராஜா

யார் பாச்சாவும் பாட்ஷாவிடம் செல்லாது...
பூமி ஒன்று..சூரியன் ஒன்று...அதுபோல சூப்பர் ஸ்டாரும் நீங்க ஒருத்தர் தான்...

முத்து...நீ எங்கள் சொத்து...
நீங்கள் ஊர்க்காவலராகும் நேரத்தை எதிர் நோக்கி காத்திருக்கும் படை அப்பா நாங்கள்....


அன்புள்ள  ரஜினிகாந்த் @ ஷிவாஜி (பாஸ் )ராவ் அவர்களே....
வாழ்த்த வயதில்லை..வணங்குகிரோம்
இனிய பிறந்த நாள் வணக்கங்கள்...


இத்துடன் இன்னோரு முக்கியமான அறிவிப்பு...
இந்தியாவின் பவர்ஃபுல் மனிதர்கள் அப்படின்னு ஒரு புத்தகம் படித்தேன்.அதுல நம்ம தலைவர் 28வது இடத்துல  இருந்தாரு.அதனால அந்த புத்தகத்தின் ஈ.காப்பியை என் ப்ளாகில் இணைத்துள்ளேன்.தேவையானவர்கள் அதை டவுன்லோட் செய்து  தரிசித்துக்கொள்ளலாம்..
எப்பவும் போல வோட்டை குத்துங்கள்...கமெண்டயும் கொட்டுங்கள்.
என்றும் அன்புடன் உங்கள் தோழி
கிருத்திகா...

09 December, 2009

அதே நேரம் அதே இடம் +நச் கமெண்டர்
                  ஜெய்க்காக பாக்கலாமேன்னு(வயசுக்கோளாறுதான்) இந்த படத்தை எடுத்தேன்..ஐய்யகோ...இந்த மாதிரி ஒரு படத்தை பாக்க தவமா தவம் கெடக்கணும்.

                      விஜயலக்ஷ்மி காலேஜில் படித்துக்கொண்டிருக்கும் அழகான பொண்ணு...ஜெய் வேலை வெட்டி இல்லாமல் திரியும் அழகான பையன்.இவங்களுக்குள்ள லவ்ஸ்...ஜெய்யோட அப்பா  நிழல்கள் ரவிக்கு இந்த மாட்டர் தெரிஞ்சு,அவர் ஜெய்யை கூப்பிட்டு நீ  வேலைக்கு போகணும் முதல்ல..அப்போதான் உங்களுக்கு என்னால கல்யாணம் செஞ்சு வெக்க முடியும் அப்டிங்கராரு


ஜெய்க்கும் ஆஸ்த்ரேலியாவில வேலை பார்க்க போயிடுராரு.இந்த கேப்ல விஜயலஷ்மிக்கு வீட்ல மாப்பிள்ளை பாக்குராங்க.எதிர்பார்க்காத திருப்பம்..விஜயலக்ஷ்மி கல்யாணத்துக்கு ஒத்துக்கராங்க.ஏன்னா பையன் செம பணக்காரன்.இதுவரைக்கும் செமமமமமமமம பிலேடா போயிண்ட்ருந்துது..இதுக்கப்பரம் சூப்பரா இருக்கும்னு நிமிர்ந்து உக்காந்தோம்.வேஷ்டுங்க...தேவையே இல்லை...அப்புடியே தூங்கி இருக்கலாம்.

                  இப்போ என்ன ஆகுதுன்னா ஜெய் ஆஸ்திரேலியாவிலிருந்து வராரு.அவருக்கு இந்த கல்யாண விஷயமே தெரியாது.ப்ளேன்லே இவரும் இவரோட முன்னாள்  ஆளோட ஹஸ்பெண்டான ஷிவாவும் நண்பர்கள் ஆகிடராங்க.(அதுக்கு ஒரு மொக்க ஃப்லாஷ் பாக் வேற :()
இதுக்கப்பறம் கதை சூடு புடிக்குது(நாமளே கற்பனை பண்ணிக்க வேண்டியதுதான் ...வேற வழி!!!!சரி இதுக்கப்பறம் பல "திடுக்கிடும்" திருப்பங்களுக்குப்பின் கடசியா ஜெய் விஜயலக்ஷ்மியை கொன்னுடராரு..

பி.கு-- இந்த படம் சிம்பு வகையறா....அவர் நடிச்சுருந்தா பின்னு பின்னுனு பின்னிருக்கும்.ஹீரோ ,ஹீரோயின் ரெண்டு பேரும் கொழந்த புள்ளைங்க மாதிரி பேசுதுங்க...ப்ரேம்ஜி மியூசிக்கும் ரொம்பலாம் இம்ப்ரெஸ் பண்ணல...ரெண்டு பாட்டு பரவால்லே.அதனால இந்த படத்தை சன் டி.வியில் இந்திய தொ(ல்)லைக்காட்சிகளில் முதல் முறையாகன்னு போடும்போது பாத்துக்குங்க,....
முக்கியமான அறிவிப்பு-
ஸ்டில்லை பாத்து ஏமாந்துடாதிங்க..ஸ்டில்ஸ் நல்லா இருந்தா படம் நல்லா இருக்கும்னு அர்த்தம் இல்லை
அடுத்த படியாக...


போன பதிவில் வைத்த போட்டிக்கான முடிவுகள்...நச் கமெண்டர் அவார்டுக்கான சிறந்த கமெண்டுகள்...இதை நான் ஒன்று,இரண்டு அப்டின்னு வரிசைப்படுத்தல....இந்த அஞ்சுமே நல்லா இருந்ததால இவங்க 5 பேருக்கும் இந்த அவார்டை குடுக்கரேன்...
பேர் மற்றும் க்மெண்டுடன்--

பித்தனின் வாக்கு:
இதுக்குதான் அப்பவே சொன்னேன், பிளாக்ல வர்ற சமையல் டிஸ் எல்லாம் சமைக்காதன்னு. கேட்டியா இப்ப என்னால எந்துரிக்க கூட முடியவில்லை.  

யோ வொய்ஸ்
    தியானம் செஞ்சா நல்லது என்று சொல்றாங்க அதுதான் நம்மளும் தியானம் செய்றோம்...
ஸ்ரீராம்.

    ஒரே சமயத்துல 'ரெண்டு' வேலை.

தேவியர் இல்லம் ஜோதிஜி
   
    எப்ப பார்த்தாலும் ஹோம் ஒர்க், ஹோம் ஒர்க்ன்னு போட்டு படுத்தி எடுத்தா வேற எங்க தூங்றது?

ரசிக்கும் சீமாட்டி
"எங்கலாம் காமேராவ கொண்டுவராயிங்க... டோன்ட் ஆங்ரி மீ !!! "

இவர்களோடு இந்த விருதை பகிர்ந்து கொள்கிறார்கள் இவர்களும்...
பிரியமுடன்...வசந்த் , கோபி,kggouthaman ,பின்னோக்கி,இளந்தி,மகா,சிவன்,Chitra
அடுத்து உங்கள் எல்லாருக்கும் ஒரு வேண்டுகோள்...நீங்களும் இந்த மாதிரி போட்டி வெச்சு அவார்டை பாஸ் பண்ணுங்களேன்...:)

போற போக்குல வோட்டை குத்துங்க...கமெண்டயும் கொட்டுங்க...(தலைலயும் கொட்டுங்க)
என்றும் அன்புடன்
உங்கள் தோழி
கிருத்திகா

07 December, 2009

சேத்தன் பகத்-புத்தக அறிமுகங்கள்


இதை படிப்பதற்கு முன்னால்
சேத்தன் பகத்-இந்த பேரை முன்னால் கேள்விப்பட்டு இருக்கிங்களா....இல்லை அப்படின்னாலும் தப்பில்லை...இப்போ தெரிஞ்சுக்குங்க...இந்தியாவை சேர்ந்த புகழ் பெற்றுக்கொண்டே இருக்கும் ஒரு எழுத்தாளர்.இவரு ஐ.ஐ.டி அஹமடாபாத்தில எம்.பி.ஏ பட்டம் பெற்று  சிட்டி வங்கியில் பெரிய வேலை பார்தக்கும் மனிதர்...வயதுகூட 30-35க்குள்தான் இருக்கணும்..எழுத்தாளர் பற்றிய முன்னுரை முடிந்தது....எப்படி என்னாத்த எழுதுரார் இவுரு???அப்படின்னு நீங்க நெனைக்கரிங்களா???
 இங்கிலீஷ் நாவல்தான்.ஆனா ரொம்ப சிம்பிளா இருக்கும்..அதனால ஈசியா புரியும்...அத்தோட நம்ம ஸ்டைலுக்கு ஏத்தா மாதிரி கலகலப்பா எழுதுவார்...சிம்பிளா சொல்லணும்னா  கே.எஸ்.ரவிக்குமார் படம் பாக்கர மாதிரி இவர் நாவல் படிக்கரது "அல்வா சாப்படரமாதிரி".இதுவரை 4 நாவல் எழுதிருக்காரு...

5 point someone -இவருடைய முதல் நாவல் இது.ஐ.ஐ.டிக்களையே  ஒரு திருப்பு திருப்பி போட்ட நாவல் இது....ஐ.ஐ.டி அப்டின்னா என்னான்னு எல்லாருக்குமே தெரிஞ்சுருக்கும்(Indian Institute for Technology)...ரொம்ப ஹை -ஃபை  ,அதி புத்திசாலிகளில் கடைந்தெடுத்த  மேதாவிகள் மட்டுமே படிக்கக்கூடிய இடம்.ரொம்ப கொஞ்ச இடங்களுக்கு லட்சகணக்கில் மக்கள் பரிட்சை  எழுதுவார்கள்.இவர் அங்கே படிச்சப்போ சந்திச்சது,சாதிச்சது,எவ்வளவு கஷ்டப்பட்டு ராகிங்கை அனுபவித்து,சில "பல" இடர்களைக்கடந்து இஞ்சினீயர் டிகிரீ வாங்கின கதையை நல்லா எழுதீருப்பார்.இவரு புது எழுத்தாளர்  மாதிரியே தெரியாது.இதை படிங்க நீங்க.இது பிடிச்சுருக்கும் கண்டிப்பா உங்களுக்கு..டீட்டைல் விமர்சனம் தரவும் நான் ரெடி...நீங்க படிக்கரதா  இருந்தா!!!!!இன்னொரு முக்கியமான  விஷயம்...இந்த நாவல் படமா வரப்போகுது...அமீர்கான்,மாதவன்(நம்ம மேடி தாங்க...),ஷர்மான் இவங்களோட கரீனா வேர...கலகலப்புக்கு கேக்கவே வேணாம்.....படம் 100 நாள் ஷ்யூர் :)


One night at call centre-இவருடைய ரெண்டாவது நாவல் இது. கற்பனை கதைதான்.இருந்தாலும் படிக்க படிக்க சுவாரஸ்யமா இருக்கும்.ஒரு கால் செண்டர்ல வேலை பார்த்துக்கொண்டிருக்கும் சாதாரண கனவுகள் நிறைந்த நடுத்தர குடும்பத்து  இளைஞர்  சந்திக்கும் தடைகள் + துன்பங்கள்...அது எப்படி தீருது..இதுதான் அவுட்லைன்...முதல் கதையை விட இது இன்னும் டாப்பு..இது ஹிந்தில படமா வந்துருக்கு..ஆனா புதுமுகங்களா பண்ணினதால அவ்வளவா ஓடலை...

Three mistakes of my life-- "யானைக்கும் அடி சறுக்கும்"...சேத்தன் பகத்கூட சொதப்புவார் அப்படின்னு இந்த நாவலை படிச்சா தெரியும்...3 நண்பர்கள் சேர்ந்து ஒரு கடை  வைக்கராங்க....சம்மந்தமே இல்லாத ஒரு பையனை தத்து எடுத்து,ஆஸ்திரேலியா போயி,இப்படி எக்கச்சக்கமான ரீலோ ரீல்.....படிக்கவும் அவ்வளவு சுவாரஸ்யம் இல்ல...என்னடா பிள்ளை இப்படி சொதப்புதே அப்புடின்னு தலைல துண்ட போட்டாச்சு......

Two states-the story of my marriage---இந்த கதை கண்டிப்பா எல்லாரயும் நிமிர்ந்து உக்கார வைக்கும்...ஒரு தமிழ் பொண்ணு-பஞ்சாபி பையன் ரெண்டு பேருக்கும் லவ்ஸ் ....எத்தனை தடைகளைத்தாண்டி இவங்க கல்யாணம் நடக்குதுங்கரது தான் கதை...விழுந்து  விழுந்து சிரிக்கலாம்...இந்த புத்தக விமர்சனம் அடுத்த பதிவாக வர உள்ளது.....அதுக்குள்ள படிக்கரதுன்னா படிச்சுகிங்க..
என்றும் அன்புடன்
உங்கள் தோழி
கிருத்திகா