Showing posts with label சிவாஜி ராவ் தி பாஸ். Show all posts
Showing posts with label சிவாஜி ராவ் தி பாஸ். Show all posts

18 June, 2011

அன்புள்ள ரசிகனுக்கு...ரஜினிகாந்த் எழுதுவது!!!

நீங்க எல்லாருமே பாத்து/படிச்சுருப்பீங்க...இருந்தாலும் என்னோட திருப்திக்காக இந்த போஸ்ட்!!!!!
தலைவா வருக வருக...தலைவர் இன்னாள்&முன்னாள் முதல்வர்களிடம் பேசினது ஒரு சர்ச்சையா வெடிச்சுருக்கு!!!
நிறைய பேருக்கு தலைவர் மேல கோவம் இருக்குங்கற மாதிரி ஒரு டாக் நிலவுது!!!!!
CONSTRUCTIVE CRITICISM:
நாம சொல்லும் குறையால் அடுத்தவருக்கு நன்மை விளய போகுதுங்கரத்துக்கு தான் இந்த பேரு.
இது இருக்கலாம்.ஆனால் சும்மாச்சுக்கும் ப்ரபலமாகணும்னு குத்தஞ்சொல்லகூடாது!!!
தலைவரும் மனுஷன் தான்!!!! அவருக்குனு சொந்த விருப்பங்கள் இருக்கும்.
அதை நல்ல சென்ஸ்ல எடுத்துக்க முயற்சி பண்ணுங்க!!!
தவறு கண்டுபிடிக்கணும்னு கங்கணம் கட்டிகிட்டு திரியறவங்களுக்கெல்லாம் இன்னொண்ணு சொல்லனும்னு ஆசே பட்றேன்!!!!

"நக்கீரர் குலத்தோன்றலே!!!!உருப்படியான வேலை இருந்தா செய்ங்க ப்லீஷ்"

ஓவர் டூ லெட்டர்!!!




நன்றி
நன்றி நன்றி(முழுசா படிச்சவங்களுக்கு மட்டுந்தான்!!!!)

11 December, 2009

அன்புள்ள ரஜினிகாந்த்-இனிய பிறந்த நாள் வணக்கங்கள்...


பதினாறு வயதினிலே முரட்டுக்காளையாக இருந்தபோதிலும்
அன்புக்கு நான் அடிமை என்று ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த மன்னா...
தில்லுமுல்லு பண்ணாமல் தம்பிக்கு இந்த  ஊருஎன சொல்ல வைத்தவ மாவீரரே.....
 குரு பாலச்சந்தரின் சிஷ்யனே
நான் அடிமை இல்லை என்ற ராணுவ வீரா...
அன்னை ஓர் ஆலயம் என்ற  பாண்டியனே
புதுக்கவிதை படித்து மூன்று முடிச்சு போட்டு  தர்ம யுத்தம் செய்து சூப்பர் ஸ்டார் இடத்தை அடைந்த தளபதியே....
வாழ்க்கையில் பல முள்ளும் மலரும் கண்ட ராஜாதி ராஜா

யார் பாச்சாவும் பாட்ஷாவிடம் செல்லாது...
பூமி ஒன்று..சூரியன் ஒன்று...அதுபோல சூப்பர் ஸ்டாரும் நீங்க ஒருத்தர் தான்...

முத்து...நீ எங்கள் சொத்து...
நீங்கள் ஊர்க்காவலராகும் நேரத்தை எதிர் நோக்கி காத்திருக்கும் படை அப்பா நாங்கள்....


அன்புள்ள  ரஜினிகாந்த் @ ஷிவாஜி (பாஸ் )ராவ் அவர்களே....
வாழ்த்த வயதில்லை..வணங்குகிரோம்
இனிய பிறந்த நாள் வணக்கங்கள்...


இத்துடன் இன்னோரு முக்கியமான அறிவிப்பு...
இந்தியாவின் பவர்ஃபுல் மனிதர்கள் அப்படின்னு ஒரு புத்தகம் படித்தேன்.அதுல நம்ம தலைவர் 28வது இடத்துல  இருந்தாரு.அதனால அந்த புத்தகத்தின் ஈ.காப்பியை என் ப்ளாகில் இணைத்துள்ளேன்.தேவையானவர்கள் அதை டவுன்லோட் செய்து  தரிசித்துக்கொள்ளலாம்..
எப்பவும் போல வோட்டை குத்துங்கள்...கமெண்டயும் கொட்டுங்கள்.
என்றும் அன்புடன் உங்கள் தோழி
கிருத்திகா...

12 September, 2009

இதுவரை பார்க்காத படங்கள்-நினைத்தாலே இனிக்கும்








08 September, 2009

விருது குடுதுட்டாங்கோ :)


இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்ன என்றால்....ஷிவாஜி திரைப்படம் தேசிய விருது பெட்றுள்ளது...சிறந்த தொழில்னுட்பம் அங்க் கிராஃபிக்ஸ் வேலைக்காக குடுதிருக்காங்க.....
சிறந்த நடிகர்-ப்ரகாஷ் ராஜ்
அதோட ஜப் வீ மெட் 2 விருது வாங்கிருக்கு......

மத்ததெல்லாம் உடுங்க....பாஸ் கலக்கிடார் :)

21 August, 2009

தலைவா... எதிர்பார்க்கின்றோம் உங்களை...வெகு விரைவில்...

எந்திரன் படம் ரிலீஸான பிறகு, அரசியலில் வருவது குறித்து ரஜினிகாந்த் இறுதி முடிவு எடுப்பார் என்று அவரது அண்ணன் சத்யநாராயண ராவ் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த ஆண்டியப்பனூரில் உள்ள பாப்பாத்தியம்மன் கோயிலில் நடைபெற்ற ஆடிப் பெருக்கு விழாவில் அன்னதானம் வழங்க வந்ததார், ரஜினியின் சகோதரர் சத்யநாராயண ராவ்.

அப்போது நிருபர்களிடம் அவர் கூறுகையில், "எங்கேயோ பிறந்து, தமிழகம் வந்து அனைவரின் மனத்திலும் தம்பி ரஜினி நீங்காத இடம் பிடித்துவிட்டார். அவருக்கு நல்லது செய்ய மட்டும்தான் தெரியும். எப்போதும் மக்களைப் பற்றி சிந்திக்கும் இதயம் அவருக்கு.

மக்கள் விரும்பினால் அவர் அரசியலுக்கு வருவார். இது குறித்து எந்திரன் படம் வெளிவந்த பிறகு விவாதிக்கப்பட்டு

முடிவெடுக்கப்படும். அவரே இதுபற்றி தெளிவாகக் கூறிவிட்டதால், ரசிகர்களாகிய நீங்கள் எந்த குழப்பத்துக்கும் ஆளாகத் தேவையில்லை. நிச்சயம் தமிழகத்துக்கு நல்லது எதுவோ அதைத்தான் தம்பி செய்வார்.

தம்பி வந்தால், நிச்சயம் இன்றைக்கு உள்ள பண அரசியலுக்கு முடிவு கட்டுவார். அவருக்கு இதுபோன்ற சூழலே பிடிக்காது. ஆண்டவன் என்ன கட்டளை இடப் போகிறாரோ, பொறுத்திருந்து பார்ப்போம்," என்றார் சத்யநாராயண ராவ்

மேலும், "தற்போது கிருஷ்ணகிரி அருகே நாச்சியார்குப்பத்தில் எங்கள் தாய், தந்தை நினைவாக திருமண மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. நூலகம், மக்களுக்கு முழுமையாக பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க திட்டமிட்டுள்ளோம். எந்திரன் படம் வெளிவந்த பிறகு மணி மண்டபம் கட்ட இருக்கிறோம்," என்றார் அவர்.

20 August, 2009

ரஜினி 25


1)சினிமா நகைச்சுவையில் ரஜினிக்கு இஷ்டமானவர் வடிவேலு. அவ்வப்போது அவருடன் பேசிச் சிரிப்பார். 'உங்ககிட்ட பேசினா, எனக்குப் புதுசா ரீ-சார்ஜ் பண்ணின மாதிரி இருக்கு வேலு' என்பார்!
2)'ஏன் இவ்வளவு சிம்பிளாக இருக்கிறீர்கள்?' என்று மகள்கள் கேட்டால், 'கண்ணா... உங்க அப்பா சூப்பர் ஸ்டார். நீங்க எப்படி வேணும்னாலும் இருக்கலாம். எங்க அப்பா சாதாரண போலீஸ்காரர். நான் இப்படித்தான் இருப்பேன்' என்பார்!
3)ரஜினி இதுவரை நடித்ததிலேயே அவருக்கு மிகவும் பிடித்த படம் 'முள்ளும் மலரும்'!
4)ஃபைன், குட்' இவைதான் ரஜினியின் உதடுகள் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தைகள்!
5)யாரிடம் பேசினாலும் யாரையும் குறை சொல்லிப் பேசவே மாட்டார். சமீப காலங்களில் இதை மேலும் தீவிரமாகக் கடைப்பிடிக்கிறார்!
6)பெங்களூர் ஃப்ளாட்டில் ரஜினி தனியாகவே இருப்பார். புத்தகங்கள், டி.வி.டி-க்கள் என ரஜினியின் தனிமை தவம் பெரும்பாலும் இங்கேதான்!
7)பாலசந்தர் மீது ரஜினி வைத்திருக்கும் மரியாதை அளவிட முடியாதது. பாலசந்தர் போன் பண்ணினால்கூட எழுந்து நின்றுதான் பேசுவார் ரஜினி!
8)எந்தக் காரணத்தைக் கொண்டும் கேரவனில் ஓய்வெடுக்க மாட்டார். காலையில் வந்தவர், மாலை சூட்டிங் முடியும் வரைக்கும் செட்டுக்கு உள்ளேதான் இருப்பார். மதிய இடைவேளையில் அங்கேயே துண்டை விரித்துப்போட்டு சற்றுக் கண்ணயர்வார்!
9)ராகவேந்திரா மண்டபத்தில் வெயில் காலத்தில் மக்களுக்கு இலவசமாக மோரும், ஐஸ் வாட்டரும் வழங்குவார்கள். இதைத் தன் அறையில் அமர்ந்து பார்த்துக்கொண்டு இருப்பார் ரஜினி!
10)அடிக்கடி நண்பர்களின் வீடுகளுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடிப்பது ரஜினியின் பழக்கம். வாசலில் தலையில் மப்ளர் கட்டிக்கொண்டு நின்றபடி மலர்ந்து சிரிப்பார்!
11)தன்னுடன் போட்டோ எடுத்துக்கொள்ள வருபவர்களுடன் குழந்தைகள் இருந்தால், குழந்தையைத் தூக்கி வைத்துக்கொண்டு போஸ் கொடுப்பதுதான் ரஜினியின் பழக்கம்!
12)யார் தன்னைப் பார்க்க வந்தாலும், வயது குறைந்தவர்களாக இருந்தால்கூட எழுந்து நின்று வரவேற்பது ரஜினியின் வழக்கம். வந்தவர் அமர்ந்த பின்புதான் இவர் அமர்வார்!
13)ரஜினி ஒரு பாத்ரூம் பாடகர். குஷி மூடில் இருந்தால் அப்போதைய ஹிட் பாடல்களை முணுமுணுக்க ஆரம்பித்துவிடுவார். அப்படி ஒரு பாடல் மனதுக்குப் பிடித்துவிட்டால், சம்பந்தப்பட்ட இசை அமைப்பாளர், பாடகருக்கு சர்ப்ரைஸாகப் போன் போட்டுப் பாராட்டுவது ரஜினி ஸ்டைல்!
14)இமயமலை மட்டும் இல்லாமல், எந்த ஆன்மிக ஸ்பாட்டுக்குச் சென்றாலும் அங்கிருந்து ருத்ராட்சம் வாங்கி வந்து சேர்த்துவைப்பது ரஜினியின் பழக்கம். இப்படிச் சேர்த்த ருத்ராட்சங்கள் வீட்டில் எக்கச்சக்கமாகக் குவிந்துகிடக்கின்றன!
15)ரஜினி வீட்டில் இருக்கும் நேரங்களில் அவரது அறையில் 'ஓம்' என்னும் பிரணவ மந்திரம் ஒலித்துக்கொண்டே இருக்கும்!
16)ராகவேந்திரா கல்யாண மண்டபத்தின் தொலைபேசிக்கு இன்னொரு இணைப்பு உண்டு. ரஜினி மண்டபத்தில் இருக்கும்போது ரசிகர்கள் யாராவது போன் பண்ணினால், அந்த இன்னொரு இணைப்பு வழியாக எல்லாவற்றையும் மௌனமாகக் கேட்டுக்கொண்டு இருப்பார். அந்த ரசிகருடன் பேச வேண்டும் என்று விரும்பினால் அவரே லைனில் வருவார்!
17)ரஜினிக்குப் பழக்கமான வாடகை கார் டிரைவர் இருக்கிறார். இரவு நேரங்களில் திடீரென அவருக்கு போன் செய்து வரச் சொல்லி, எங்காவது கையேந்தி பவனில் சாப்பாடு வாங்கி காருக்குள்ளேயே உட்கார்ந்து சாப்பிடுவார்!
18)ஒரு படத்தின் சூட்டிங் முடியும்போது அந்தப் படத்தில் பணிபுரிந்த உதவி இயக்குநர்களுக்கு ஒரு தொகையைப் பரிசாகத் தருவது ரஜினியின் பழக்கம். குறைந்தது 50 ஆயிரம் ரூபாய்
19)பைரவி' படத்தின்போது ரஜினிக்கு முதன்முதலில் 'சூப்பர் ஸ்டார்' என்ற பட்டத்தைக் கொடுத்து விளம்பரப்படுத்தியவர் கலைப்புலி தாணு!
20)ரஜினி நடித்த ஒரே ஆங்கிலப் படமான Blood stone-ல் ரஜினி பேசும் முதல் டயலாக், 'Your Problem is bloodstone whereas my problem is stomach'
21)ரஜினியின் ஆன்மிகம் பற்றிய விமர்சனங்கள் வந்தபோது அவர் சொன்னது, 'நான் ஆன்மிகவாதிதான். ஆனால், ஒரு கன்னத்தில் அறைந்தால், இன்னொரு கன்னத்தைக் காட்டும் அளவுக்கு ஆன்மிகத்தில் இன்னும் உயரவில்லை. அந்த மாதிரியான ஆன்மிகவாதியாக ஆவதற்கு எனக்கு விருப்பமும் இல்லை!'
22)எந்திரன்' படத்தில் ஒரே பாடலில் 100 விதமான ஸ்டைல்களில் தோன்றுகிறார் ரஜினி. ஒவ்வொரு தோற்றத்துக்கும் ஒவ்வொரு உடை என இந்த ஒரு பாடலில் மட்டும் மொத்தம் 100 விதமான உடைகளில் வருகிறார். ரஜினியின் விருப்பத்தின் பேரில் இந்த ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் அமைத்து இருப்பவர் பிரபுதேவா!
23)மத்திய அரசு இந்திய சினிமாவைப் பற்றி ஓர் ஆவணப் படம் தயாரிக்கிறது. தமிழில் ரஜினி, கமல் இருவரையும் தேர்ந்தெடுத்து அவரவர் பற்றிக் கருத்துக் கேட்டது. கமல் சொல்லிவிட்டார். ரஜினி மறுத்துவிட்டார். 'என்னைப்பற்றி நான் சொல்ல முடியாது. என் ரசிகர்களிடம்தான் கேட்க வேண்டும்' என்று சொன்னதால், ரஜினி ரசிகர்கள் சிலர் அந்த ஆவணப் படத்தில் பேசியிருக்கிறார்கள்!
24)ரஜினி ஃப்ரீயாக இருந்தால், அடையாளத்தை மறைக்கும் அளவுக்குச் சின்னதாக கெட்டப் சேஞ்சுடன் வெளியே கிளம்பிவிடுவார். சமீபத்தில் அப்படிப் போய் வந்த இடம்... திருப்பதி!
and last but not the least
25)இப்போதும் பேருந்தில் ஏற நேர்ந்தால், நின்றுகொண்டே போவதுதான் ரஜினியின் வழக்கம். அதுவும் கம்பியைப் பிடிக்காமல்தான் நிற்பார். கேட்டால், 'கண்டக்டர் காலப் பழக்கம்' என்பது பதிலாக வரும்