17 March, 2012

மூன்று நிகழ்ச்சிகள்!!!

இந்த வாரத்தில் நடந்த இந்த சம்பவங்களே என்னை இந்த பதிவை எழுத வைத்தன


முதல் நிகழ்ச்சி

இரண்டு வெளினாட்டு சுற்றுலா பயணிகள் கடைத்தெருவில் பராக்கு பார்த்துக்கொண்டே சென்று கொண்டிருந்தனர்.
பழவண்டிக்காரிடம் ஒரு சீப்பு வாழைப்பழம் எவ்வளவு என இங்கிலீஷில் கேட்டனர்.அதற்கு அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா??
இதுவா.. இந்த பழமா(ஒரு சீப்பை எடுத்து காட்டினார்)...(5 நொடிகள் கழித்து)
அப்பிடியே பிப்டீ ருபீஸ் !!!!
1 சீப்பு பழம் 50 ரூபாயா!!!

சுற்றுலா வரும் பயணிகளிடம் பெருந்தன்மையாக நடந்து கொள்ளவேண்டும்...அனால் இப்படியா??
அவர் செய்தது சரியா தவறா??

இரண்டாவது நிகழ்ச்சி

இரண்டு ஹிந்திவாலாக்கள் மொபைல் டாப் அப் செய்ய நின்று கொண்டிருந்தனர்.அந்த கடை பெண்மணி பார்க்க கொஞ்சம் பாவமாக இருக்கும் எனக்கு.அதனாலேயே மெனக்கிட்டு என் வீட்டுக்கு அருகில் உள்ள கடைகளை விடுத்து பொதுவாக அங்குதான் ரீசார்ஜ் செய்வேன். எனக்கு அவங்களை பாத்த உடனே ஆர்வம்.எப்படி பேச போகிறார் அந்த அம்மா அவர்களிடம் என ஆர்வம் பொத்து கொண்டு வந்தது. அந்த பசங்க : அக்கா டொகொமோ ரீசார்ஜ்
அந்த அக்கா : இல்ல இல்ல
அந்த பசங்க : ?????
அந்த அக்கா : நோ நோ

அவர்கள் போன பிறகு அந்த அக்கா என்னிடம் போன வாரம் வந்து இதுங்க 30 ரூபாய்க்கி ரீசார்ஜ் பண்ணிட்டு பணமே குடுக்கல.எவ்வளோ நேரம் நின்னு சண்ட போடுதுங்களே ஒழிஞ்சி கடசீ வரைக்கும் ஒத்துக்கவே இல்ல!!! இந்த வாரமும் என்னால சண்ட போட முடியாதுடா சாமி!!!

இதில் அந்த ஹிந்திகாரங்க பண்ணினதை எதில சேக்கரது???


மூன்றாவது நிகழ்ச்சி :

இது என் சொந்த அனுபவம்.பார்த்தது கேட்டது அல்ல.

வங்கியில் பணிபுரிவதால் பல தரப்பட்ட மக்களையும் தினமும் சந்திக்க நேரிடும்.
மதியம் 1.30 மணி போல ஒரு ஆள் பணம் கட்ட வந்தார்.வந்தவர் என்னிடம் சலானை கொடுத்து விட்டு தன் கையில் இருந்த போனை வைத்து பேச ஆரமித்து விட்டார்.அந்த பணத்தை எண்ணி அவருடய வேலைய முடித்து கொடுக்கும் வரை போனை வைக்கவே இல்லை!!!
இந்த டயலாக்கை எப்படி நீங்க படிக்கணும்னா அந்த ஆள் பேசுவதை பொன்னம்பலம் போல அல்லது ஏதாவது வில்லன் கொடூரமாக முகத்தை வைத்துக்கொண்டு பேசுவது போல நினைச்சுக்கோங்க!!!!நான் எப்பவும் போல calm and composed(அதாவது சாத்வீகமுங்க)
நான்: பணம் கட்டும்போது போன் பேசக்கூடாதுங்க
அவர் : நான் யாருன்னு தெரிஞ்சிகிட்டு அப்பறம் பேசுங்க.தினதந்தி ரிப்போர்டர் நானு
நான் :எல்லாருக்கும் ஒரே ரூல்ஸ் தான்.பேசகூடாதுன்னா கூடாதுதாங்க
அவர்: அர்ஜெண்டுன்னா பேசதான் செய்வென் அத சொல்ல நீங்க யாரு
நான்:இங்க பேசர்தால என் கவனம் சிதறும்.பணத்தை தப்பா எண்ணிட்ட நாந்தாங்க பொறுப்பு
அவர் : உங்க கவனம் சிதறினா நானா பொறுப்பு!!!!

இதற்கு பிறகு அவரோடு வாதம் செய்ய விரும்பாததால நான் பேசவில்லை.அவர் ஏக வசனம் பேசிவிட்டு சென்றுவிட்டார்

அவர் கிட்ட நான் கேக்க நினத்த கொஷ்ட்டின்!!!
ரிப்போர்டர்னா என்ன கொம்பா!!!
மக்கள் மனதில் உள்ள எண்ணமெல்லாம்..என்னது  பாங்கா... அதுல இருக்கறவங்கல்லாம் வேலையே செய்யமாட்டாங்க!!! என்ற நினைப்புதான்!!! அதனால் எவ்வளவுதான் வேலை செஞ்சாலும் இந்த எண்ணம் போகறதே இல்லை!!!.
மக்களே மக்களே...எல்லாரும் அப்படி கிடையாது!!!!
பாங்கில இருக்கறவங்களும் மனுஷங்கதான்!! புரிஞ்சிகுங்க!!!


இதில் யார் செய்தது தவறு!!

சரி ரொம்ப சொரிஞ்சிட்டேனா!!!!
டாடா
மீண்டும் சந்திப்போம்
கிருத்திகா