Showing posts with label கிரிக்கெட். Show all posts
Showing posts with label கிரிக்கெட். Show all posts

22 December, 2009

நேற்று மாட்ச் பாத்திங்களா???நம்ம சச்சு பிச்சுட்டார் :)

ரவீந்தர ஜடேஜாவும் அருமையாக ஆடினார்...
சரி இப்போ டீட்டைல் அனாலிசிஸ் பண்ணலாமா??
1)இலங்கை 17 ஓவர் இருக்கும்போதே 137 ரன் வந்துட்டாங்க..அப்போ ரவி சாஸ்த்திரி இவங்க கண்டிப்பா 400+ அடிக்க வாய்ப்பு இருக்கு.இதே நிலமைல தான் இந்தியா முதல் ஆட்டத்துல இருந்ததுன்னு.ஆனா எப்போ வேணா என்ன வேணா நடக்கலாம்."அப்படின்னு சொன்னார்.அவருடய வாக்குப்படி
21வது ஓவரில்  163/1 அப்டிங்கர நிலமைல இருந்த இலங்கை
25ஆவது ஓவர்ல 174/4 அப்டிங்கர நெலமைக்கு வந்துருச்சு

2)நாலாவது அம்பையர் அப்டின்னு நியோ ஸ்போர்ட்ஸ்ல போடுவாங்களே..அதுல நேத்து  ஜவகள் ஸ்ரீனாத் வந்தாரு.அருமையா பேசினாரு.சனத் ஜயசூரியாவை சேக்கலாமா வேணாமா? அப்டிங்கர கேள்விக்கு பதில் சொல்லும்போது "சனத்,2 வருஷத்துக்கு மின்னாடி நம்ம கங்கூலி எந்த நிலைல இருந்தாரோ அப்டி இருக்காரு.இவ்வளோ பெரிய சீனியர் மோஸ்ட் வீரரை டூருக்கு கூட்டிட்டு வந்து வாய்ப்பு குடுக்காமல் இருப்பதன் பலன் என்னனு ஸ்ரீலனகாவுக்கு சீக்கிரம் புரியும்"அப்டின்னாரு.அதேமாதிரி 7வது இடத்துல புது வீரர் இறங்கி டொப்னு அவுட்டும் ஆகிட்டாரு.
அதனால அவர் வாக்கும் பலிச்சுப்போச்சு.

3)ஒளிபரப்புப்படி பாத்தா நியோ கிரிக்கெட் ரொம்ப பொறுமய சோதிச்சுது. கமெண்டரில 150 க்ராஸ் பண்ணினதுக்கு க்லாப் தட்டராங்க..கீழ ஸ்கோர் 138லயே நிக்குது.ஒரு பக்கம்  4 அடிச்சா இன்னொரு பக்கம் போகுது காமேரா..

4)ஸ்டேடியம் நேத்து முழுதும் நிரம்பி விட்டது.அப்புடி ஒரு கூட்டம்.க்ரிஷ்னர் வேஷம் போட்டுகிட்டு ஒரு குரூப் வந்துருந்தது...நல்ல ரெஸ்பான்ஸ் மக்கள் கிட்டேருந்து.

5)சுரேஷ் ரைனா நெறய காட்ச் மிஸ் பண்ணரமாதிரியே எனக்கு ஃபீலிங்கி...அதுமட்டும் இல்ல ..ஏகப்பட்ட ஃபீல்டிங்க் குளறுபடிகளை நேத்தும் பாக்க முடிஞ்சது...தினேஷ் கார்த்திக் தான் ஸ்டாண்ட் பை  விக்கெட் கீப்பர்னு ஆகி போச்சு.அவரோட கல கலன்னு பேசினா என்னா..யாருமே அவ்வளவா அவர் கூட பேசலை நேத்து..அத்தோட சங்கக்காராவை ஸ்டம்பிங்க் பண்ணினாரே பாக்கணும்...சென்னை 28 கிலைமாக்சில வரமாதிரி பந்தை கீழ விட்டுட்டு கையால அடிச்சுட்டு,நல்லகாலம் மறுபடி வேகமா பந்தை எடுத்து  ஸ்டம்பிங்க் பண்ணிட்டார்...தப்பிச்சுது இந்தியா.

6)கவுதம் காம்பீர் அனியாயத்துக்கு நல்லவரா இருக்காரு.அவுட் ஆனாலும் போகாம  க்ரவுண்டிலேயே நிக்கும் பாட்ஸ்மான்களுக்கு  மத்தியில் அவுட்டே இல்லைனாலும் நேர்மயா வெளில போன காம்பிரை என்னானு சொல்லரது...

7)முன்னுரையில் சொன்ன படி சச்சு பிச்சுட்டார்..என் நண்பர்கள் பலர் தினேஷை மானாவாரியா திட்டினாங்க.சச்சினுக்கு ஆடும் வாய்ப்பே தரலேன்னு.அப்படி 100 அட்ச்சுருந்தா "இவனுக்கு டீமை பத்தி கவலயே இல்ல...தான் 100 அடிக்கணும்னுதான் கவல " அப்படின்னு உலகத்துல பாதி பேரு பொறாமைல ஒப்பாரி வெச்சுருப்பாங்க.நல்ல வேள..அப்படி நடக்கல....

ஜாலி கார்னர்..

கடவுள் கிட்ட என்னவேண்டிக்கணுமோ அதை லெட்டரா எழுதிக்குடுங்கன்னு கேட்டத்துக்கு குட்டி பசங்க சிலர் என்ன ரகள பண்ணிருக்காங்க  பாருங்க..





நான் ஒரு கல்யாணத்துக்கு போனேன்..அங்கே சர்சுலயே உம்மா குடுத்துக்கராங்களே...தப்பு தப்பு...

 
போ சாமி...நீ ரொம்ப மோசம்.எனக்கு தங்கச்சி பாப்பா வேணும்னா கேட்டேன்..பப்பி பாப்பா வேணூம்ம்ம்ம்ம்

 

 இந்த பீட்டர் நம்மள மாதிரி..
சாமி இன்னைகு மிஸ் வரகூடாது..லீடர் ஆப்செண்ட் ஆகிடனும் அப்டினு வேண்டிக்கரமாதிரி..இவன்!!!!

 

ரூம் போட்டு யோசிச்ச புள்ள இதுதான்
உங்கள் பொன்னான  கருத்துக்களையும்,வெள்ளியான வாக்குகளயும் அளிக்க மறவாதீர்...
என்றும் அன்புடன்
உங்கள் தோழி
கிருத்திகா

15 September, 2009

கிரிக்கெட் மாட்ச்கும் விடுதலைப்புலிகளுக்கும் பாக்கிஸ்தானுக்கும் சம்மந்தம் இருக்கா??




கிரிக்கெட் மாட்ச்கும் விடுதலைப்புலிகளுக்கும் பாக்கிஸ்தானுக்கும் சம்மந்தம் இருக்கா??
இல்லைனு இவ்வளவு நாளா நெனச்சென்...ஆனா நேத்து தான் புரிஞ்சது
இருக்கு இருக்கு இருக்குனு
எப்டி??
இதுதான் அந்த கதை...என்னுடைய கல்லூரி நன்பண் ஒருத்தன் ...வட இந்தியாவை சேர்ந்தவன்...நேத்து(அதாவது காம்பேக் கப் இறுதி போட்டினடந்த நாள் 14.09.2009) பேசிகிட்டே இருந்தப்போ நடுவுல கிரிக்கெட் பத்தியும் பேச்சு வந்துது ...
(நாங்க பெசரது எந்தவிதமான கலவரத்தயும் தூண்டுரதுக்கு இல்லை...தப்பாக இருந்தால் அறிஞர் பெருமக்கள் மன்னிக்கவேண்டும்)
இதுக்கு மேல எங்க உரயாடலை கவனிங்க
அவன்:கிரிக்கெட் பாக்கரயா?
நான்:ஆமா...நம்ம சச்சு 138 அட்சுருக்காரு செம செம....
அ:ஓ நீயும் சச்சின் ஃபான்(ரசிகை) ஆ ??
நா:இந்தியால சச்சின் பிடிக்காதவங்க யாரவது இருக்காங்களா?
அ:ஆமா ஆமா..இப்போ என்ன நெலவரம்?
நா:ரொம்ப பரப்பா இருக்கு..ஸ்ரீலங்காவும் நல்லா வெளயாடுது..என்ன நடக்குமோ தெரில...சச்சின் அடிசதுக்காகவாவது இந்தியா ஜெய்க்கனும்
அ:ஓ!!உனக்கு இந்தியாதான் ஜெய்க்கனுமா
நா:ஹெய் என்ன கிண்டலா?
அ:இல்ல தமிழ் மக்கள் ஸ்ரீலங்கா ஜெய்க்கனும்னு தான நெனப்பிங்க
நா:ரொம்ப பேசர தம்பி நீ
அ:உண்மை தான??தமிழ் மக்கள் இந்தியாவுக்கு ஆப்பொசிட் தானே!..நீங்களாம் ஸ்ரீலங்காவுக்காக தானே குதிப்பிங்க!
நா:அப்டினா முஸ்லிம் மக்கள் எல்லாரும் பாக்கிஸ்தான் சப்பொர்ட்னு நான் சொல்லவா???எத்தன பேர கொன்னு தள்ளுரிங்க????(நாங்க வெவரம் லா.அண்ணன் முஸ்லிம்...)
அ:ஏய் அப்டிலாம் பேசாத...தப்பு..யார் சொன்னது உனக்கு அப்டினு.எல்லாரும்லாம் அப்டி கடயாது தெரிஞ்சிக்க...
நா:நீ சொல்ரது ரைட்டு..நான் சொன்னா தப்பா..
அ:(அசடு வழிஞ்சுண்டே)நான் சும்மா லொல்லலாயிகி சொன்னேன்(வெளயாட்டுக்காம் :( )
நா:நானும் அப்டிதான் சொன்னேன்...ஹி ஹி
-
-
-
-


அதுக்கப்பரம் ஒரு 30 நிமிஷம் மொக்கய தாளிச்சொம் அது வேர கதை...
ஆனா இதுக்கு முன்னாடி இப்டி ஒரு வார்த்தய நான் கேட்டதே இல்ல...
யாருக்காவது சர்யான விளக்கம் தெரிஞ்சா சொல்லுங்களேன்..

12 September, 2009

வேதனை அவமானம் வெட்கம் :)


ஹை கிரிக்கெட் ரசிகபெருமக்களே....
இன்னிக்கு மச் எல்லாருமே பார்த்து இருப்பிங்க...
டாஸ் ஜெய்ச்சது நம்ம சங்ககாரா தான் :)(அப்போவே நமக்கு நெரம் சரி இல்லனு ஒதுங்கி பொயிருக்கலாமோ????)
வந்தாங்க ரெண்டு புயல்.. தில்ஷன்,ஜெயசூர்யா ரெண்டு பெரும் பட்டய கெலப்புங்னாங்க...வெரித்தனமா ஆடினாங்க....இஷந்த்,ஆஷிஷ்,ஆர்.பி.சிங் 3 பேரும் தலகீழ நின்னு பார்த்துட்டாங்க...அசைக்கமுடியல :)
அதுக்கப்பரம் நம்ம கோவக்கார கிளி ஹர்பஜன் ,யுசுஃப் பதான் ரெண்டு பேரும் தான் கொஞ்சம் கட்டுபடுத்தினாங்க ரன் வேகத்த..
சொல்லி சொல்லி கில்லி மாதிரி 98 ரன் அடிச்சாரு நம்ம ஜயசூர்யா.... 40 வயசுனு சொன்னதான் தெரியுது...என்ன ஒரு வெரி:)
(இந்திய ப்லயெர்ஸ் !!!நோட் பண்ணுங்கப்பா இதெல்லாம்)
ஆன சச்சின் ஜுரம் அவருக்கும் வந்துருசு பொலருக்கு..98 ல அவுட் :)
அப்பரம் எல்லாமே புதுமுகங்கள் தானே அடிக்காதுங்கனு நான் கட்டின கோட்டய பொல பொலனு இடுச்சு தள்ளினாரு கண்டம்பி..தம்பி 91 நாட் அவுட் :(
50 ஒவர் முடிவுல பாத்தா 307 ரன்ன அடிசுருக்காங்க... அப்போ தான் என் மனசுல ஒரு பட்சி கூவிச்சு " இந்தியா காலி"
நியுசிலாந்து குட ஆடின மாச்லேர்ந்து வெளில வரல பொல பசங்க..
அதே மாதிரி ஆடினாங்க..
என்னன்ன நான் நெனச்சனோ அவ்வளவும் நடந்துது...
டொப் டொப் நு விகெட் உளுந்துகிட்டே இருந்தது...மாத்யுஸ் 6 விகெட் எடுத்துருக்கரு :)
ஆஷிஷ்,ஆர்.பி.சிங் அடிச்சதுல பாதி குட(கால் வாசி குட :)) மிடில் ஆர்டர் பன்னிங்க அடிக்கல(மன்னிச்சுருங்க)
ஆகமொத்தம் உலகின் நம்பர் 1 அணி(ICC சொல்லிருக்கு பா)
கேவலமா தோத்து பொச்சு என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்து கொள்கிரேன் :(
அடுத்த போட்டிலயாவது ஒழுங்கா ஆடுங்கப்பு...
எங்களுக்கே அசிங்கமா இருக்கு :(

இந்தியா வெற்றி துளிகள்


நேற்றய மாட்சின் முக்கியமான , ஸ்வாரஸ்யமான விஷயங்களை பற்றி சொல்லுகிரேன்...
1)ஆட்ட நாயகன் விருது குடுக்கும்பொது ரெண்டு காப்டன்ஸயும் கூப்ட்டு பேட்டி எடுப்பங்க...
அதுல என்ன காமெடினா வெட்டோரி என்ன பேசினார்னு யாருக்குமே புரியல...தோனி திரு திருனு முழிச்சதயே ஃபோகுஸ் பனினார் காமெரா
அப்புறம் ஆட்ட நாயகன் ஆஷிஷ் நெஹ்ரா பெசினதுக்கு யுவராஜ் அண்ட் ஹர்பஜன் அப்டிங்கர ரெண்டு அழகு பதுமைகள் பலிச்சு காட்டுராங்க...என்ன கொடுமை பாருங்களேன் :)
2) விளயாடிண்டே இருக்கும்பொது ஒரு சிறப்பு விருந்தாளி உள்ள வந்துட்டாரு..யாருனு கேக்கரிங்களா?? நல்லா செக்க செவேல்னு ஒரு அழகான நாய் :)
எப்டி வந்தார்னும் தெர்ல...எப்டி போனார்னும் தெரியல :)ஆனா யேன் வந்தாருனு தெரியும்..அவரு மனசுல இததான் நெனச்சுருப்பாரு :)
கூட்டமா ஆளுங்க நிக்கராய்ங்களே.... வெளயாடமாற்றங்களே....20-20 வெளயாடினாலும் 150 தான் எடுக்கராய்ங்க...50 50 ஆடினாலும் 150 தான் எடுக்கராய்ங்க...என்ன சின்னபில்லதனமா இல்ல???
இத பாக்குரதுக்கு சும்மாவே இருக்கலாமே....

3)சச்சின் ,நான் பார்த்தவரை MRF bat வெச்சுதான் ஆடுவாரு..ஆன இன்னிகு adidas பாட் வெச்சு ஆடினாரு...(ச அதனால தான் 46ல அவுட்...இல்லனா 100 அடிச்சுருப்பாரு)

4)ஆஷிஷ் நேத்து நூறாவது விக்கெட் எடுத்தாரு...ரொம்ப நாள் கழிச்சு டீம்குள்ள வந்தாரு...செம கம் பாக் :)

5) NZ இப்பொலாம் கைப்புள்ள மாதிரி ஆகிடுச்சு...(சொல்ல முடியது அடுத்த மாச் அதிரடியா இருக்கும்) வெட்டொரி தான் முதுகெலும்பு,கை , கால்,மூஞ்சி எல்லாமே...
அவரே batting,bowling,fielding பண்ணிக்கராரு :)

அடுத்து இன்னிக்கு இந்தியா ஸ்ரீ லங்கா ரெண்டு பேரும் வெளயாடராங்க...என்ன நடக்குமோ பார்ப்பொம்...
சச்சின் இனிக்கு 100 அடிக்கனும்
கொரஞ்சது அவரு ஒரு half (50 ரன்னுப்பா...) அடிச்சு ஸ்ரீலங்காவுக்கு ஆப்பு வெய்க்கனும் :)

11 September, 2009

இந்தியா முத்தரப்பு தொடர்


எல்லா பதிவுகளும் லேட் லேட் ஆ போடரேன்..அதான் அவசர அவசரமா சின்னதா ஒரு பதிவு.. எல்லம் இப்போ முடிஞ்ச கிரிக்கெட் மாட்ச் பத்தி தான்
இந்தியா வென்ன்ன்ன்ன்ன்ன்ன்---ரரரரரரர....தூ....எவளோ மெதுவா படிக்க முடியுமோ அவளோ மெதுவா படிங்க...ஒரு கட்டதுல எரிச்சலே வந்துடுசி..ஆமை கூட கொஞ்சம் வேகம ஓடும்.. நம்ம கடவுள் சசின் வந்ததுக்கபுரம் 180 கிமி ல போர வெகம் :) வந்துது
விளக்கமான கட்டுரை அடுத்த பதிவில்..
ஆட்ட நாயகன் விருது--ஆஷிஷ் நெஹ்ரா
அதிக ரன் எடுத்தவருக்கான விருது--சசின்.
ஸ்டைலிஷ் வீரர்(புதுசா அறிமுகபடுத்திருக்காங்க)-நம்ம தெய்வம் தான் :)

ஆகமொத்தம் ஜெய்ச்சுது...அவளதான்...அதிக ஸ்வாரஸ்யம் எதுவும் இல்லை :)(ஜெய்க்கரதே ஜாஸ்தி இதுல ஸ்வாரஸ்யம் வேரயா :) )