07 December, 2009

சேத்தன் பகத்-புத்தக அறிமுகங்கள்


இதை படிப்பதற்கு முன்னால்
சேத்தன் பகத்-இந்த பேரை முன்னால் கேள்விப்பட்டு இருக்கிங்களா....இல்லை அப்படின்னாலும் தப்பில்லை...இப்போ தெரிஞ்சுக்குங்க...இந்தியாவை சேர்ந்த புகழ் பெற்றுக்கொண்டே இருக்கும் ஒரு எழுத்தாளர்.இவரு ஐ.ஐ.டி அஹமடாபாத்தில எம்.பி.ஏ பட்டம் பெற்று  சிட்டி வங்கியில் பெரிய வேலை பார்தக்கும் மனிதர்...வயதுகூட 30-35க்குள்தான் இருக்கணும்..எழுத்தாளர் பற்றிய முன்னுரை முடிந்தது....எப்படி என்னாத்த எழுதுரார் இவுரு???அப்படின்னு நீங்க நெனைக்கரிங்களா???
 இங்கிலீஷ் நாவல்தான்.ஆனா ரொம்ப சிம்பிளா இருக்கும்..அதனால ஈசியா புரியும்...அத்தோட நம்ம ஸ்டைலுக்கு ஏத்தா மாதிரி கலகலப்பா எழுதுவார்...சிம்பிளா சொல்லணும்னா  கே.எஸ்.ரவிக்குமார் படம் பாக்கர மாதிரி இவர் நாவல் படிக்கரது "அல்வா சாப்படரமாதிரி".இதுவரை 4 நாவல் எழுதிருக்காரு...

5 point someone -இவருடைய முதல் நாவல் இது.ஐ.ஐ.டிக்களையே  ஒரு திருப்பு திருப்பி போட்ட நாவல் இது....ஐ.ஐ.டி அப்டின்னா என்னான்னு எல்லாருக்குமே தெரிஞ்சுருக்கும்(Indian Institute for Technology)...ரொம்ப ஹை -ஃபை  ,அதி புத்திசாலிகளில் கடைந்தெடுத்த  மேதாவிகள் மட்டுமே படிக்கக்கூடிய இடம்.ரொம்ப கொஞ்ச இடங்களுக்கு லட்சகணக்கில் மக்கள் பரிட்சை  எழுதுவார்கள்.இவர் அங்கே படிச்சப்போ சந்திச்சது,சாதிச்சது,எவ்வளவு கஷ்டப்பட்டு ராகிங்கை அனுபவித்து,சில "பல" இடர்களைக்கடந்து இஞ்சினீயர் டிகிரீ வாங்கின கதையை நல்லா எழுதீருப்பார்.இவரு புது எழுத்தாளர்  மாதிரியே தெரியாது.இதை படிங்க நீங்க.இது பிடிச்சுருக்கும் கண்டிப்பா உங்களுக்கு..டீட்டைல் விமர்சனம் தரவும் நான் ரெடி...நீங்க படிக்கரதா  இருந்தா!!!!!இன்னொரு முக்கியமான  விஷயம்...இந்த நாவல் படமா வரப்போகுது...அமீர்கான்,மாதவன்(நம்ம மேடி தாங்க...),ஷர்மான் இவங்களோட கரீனா வேர...கலகலப்புக்கு கேக்கவே வேணாம்.....படம் 100 நாள் ஷ்யூர் :)


One night at call centre-இவருடைய ரெண்டாவது நாவல் இது. கற்பனை கதைதான்.இருந்தாலும் படிக்க படிக்க சுவாரஸ்யமா இருக்கும்.ஒரு கால் செண்டர்ல வேலை பார்த்துக்கொண்டிருக்கும் சாதாரண கனவுகள் நிறைந்த நடுத்தர குடும்பத்து  இளைஞர்  சந்திக்கும் தடைகள் + துன்பங்கள்...அது எப்படி தீருது..இதுதான் அவுட்லைன்...முதல் கதையை விட இது இன்னும் டாப்பு..இது ஹிந்தில படமா வந்துருக்கு..ஆனா புதுமுகங்களா பண்ணினதால அவ்வளவா ஓடலை...

Three mistakes of my life-- "யானைக்கும் அடி சறுக்கும்"...சேத்தன் பகத்கூட சொதப்புவார் அப்படின்னு இந்த நாவலை படிச்சா தெரியும்...3 நண்பர்கள் சேர்ந்து ஒரு கடை  வைக்கராங்க....சம்மந்தமே இல்லாத ஒரு பையனை தத்து எடுத்து,ஆஸ்திரேலியா போயி,இப்படி எக்கச்சக்கமான ரீலோ ரீல்.....படிக்கவும் அவ்வளவு சுவாரஸ்யம் இல்ல...என்னடா பிள்ளை இப்படி சொதப்புதே அப்புடின்னு தலைல துண்ட போட்டாச்சு......

Two states-the story of my marriage---இந்த கதை கண்டிப்பா எல்லாரயும் நிமிர்ந்து உக்கார வைக்கும்...ஒரு தமிழ் பொண்ணு-பஞ்சாபி பையன் ரெண்டு பேருக்கும் லவ்ஸ் ....எத்தனை தடைகளைத்தாண்டி இவங்க கல்யாணம் நடக்குதுங்கரது தான் கதை...விழுந்து  விழுந்து சிரிக்கலாம்...இந்த புத்தக விமர்சனம் அடுத்த பதிவாக வர உள்ளது.....அதுக்குள்ள படிக்கரதுன்னா படிச்சுகிங்க..
என்றும் அன்புடன்
உங்கள் தோழி
கிருத்திகா

9 comments:

 1. //என்னடா பிள்ளை இப்படி சொதப்புதே அப்புடின்னு தலைல துண்ட போட்டாச்சு......//

  Three mistakes of my life புத்தகம் உன் லைப் ல ஒரு மிஸ்டேக் னு சொல்லவரியா??!!

  ReplyDelete
 2. சென்ற பதிவிற்கு படங்களிற்கு உங்கள் கருத்துகளை சொல்லவில்லையே தோழி...

  ReplyDelete
 3. வயசையும் occupation -யும் பாக்கும் போது நம்ம செட் போல தெரியுதே..., 2009 பேட்சா...,

  ReplyDelete
 4. இங்கிலீஷ் பொத்தகமா... சரிங்க..அப்புறம் வர்றேன்...

  ReplyDelete
 5. யொ வாய்ஸ்
  அடுத்த பதிவுல சேர்க்கரேன்ங்க..இந்த பதிவு ஏற்கனவே நீளமா இருக்கறதால செய்யமுடியலை
  பேனா மூடி
  ஆமாமுங்க...உங்க ப்ரொபைலை பார்க்கும்போது தஞ்சாவூர்ல காலேஜ் படிச்சிங்க போல....

  பின்னோக்கி
  ஐய்யோ இது சூப்பரா இருக்குமுங்க...

  ReplyDelete
 6. சேத்தன் பகத் அறிமுகம் சூப்பர்ங்கோவ்! ஆனா நான் முந்திக்கிட்டேங்க! என்னோட பதிவு "அனன்யாவும் கிரிஷும்" படிச்சு உங்க கருத்து சொல்லுங்க! உங்க பக்கத்துக்கும் இணைப்பு கொடுத்திருக்கேன், அனுமதி இல்லாமல்!!

  ReplyDelete
 7. ஐ.ஐ.டி- அகமதாபாத்ல இல்லைங்க... அவரு ஐ.ஐ.டி தில்லி/ஐ.ஐ.எம்- அகமதாபாத்ல படிச்சார். இவ்வளவு சொல்லியிருக்கீங்க... ஹாட் கேக் #chetanblocks பத்தி சொல்லலயே!

  ReplyDelete
 8. தெரியுமுங்க...ரெண்டயும் சேர்த்து அப்டி சொல்லிட்டேன்.....அவரோட பயங்கரமான விசிறி,ஏ.சி ....நானே....ஹாட் கேக்???என்ன சொல்ரிங்கன்னு தெர்லயே...
  வருகைக்கும் கமெண்டுக்கும் நன்றி...

  ReplyDelete
 9. 2 states புத்தக விமர்சனம் எங்க?

  ReplyDelete