17 December, 2009

1 சீரியஸ் + 1 ஜாலி

இந்த பதிவை ஆரம்பிப்பதற்கு முன்...முந்தய பதிவான லீகல்லி ப்லண்ட் படத்தின் விமர்சனத்துக்கு பின்னூட்டம் இட்ட அனைத்து மக்களுக்கும் நன்றி...(வந்தது 14....இதுக்கேன் இத்தன பில்டப்பு)
சரி இப்போ சீரியஸ் மாட்டர்
சிலதை பார்க்க பாவமாவும் இருக்கும் அதே சமயம் அதுக்கு காரணமானவங்க மேல கடுப்பாவும் வரும்.நேத்து கோவிலுக்கு போயிருந்தேன் .அங்கே பாத்த காட்சிதான் இது.போட்டோ எடுக்கறதை யாராவது பாத்துருந்தா என் செல்லை அடக்கம் பண்ணிருப்பாங்க.தெரியாம படம் எடுக்கனும்கரதுக்காக நடந்துகிட்டே எடுத்தேன்.கொஞ்சம் அசைஞ்சு தான் இருக்கும்.அட்ஜஸ் பண்ணிக்கவும்.
படத்தை பார்த்தா எதாவது புரியுதா??ரொம்ப கொடூரமா ஷேக் ஆகி இருக்கும்...எடுக்கப்பட்ட நேரம்  காலை 11மணி 30 நிமிடம்..
பள்ளிக்கூடத்துல படிச்சுகிட்டு இருக்க வேண்டிய பையன்
ஒரு 7 அல்லது 8 வயசு தான் இருக்கும்.....தரையை கூட்டி சுத்தம் பண்றான்...

இந்த் பொண்ணுக்கு அதிகபட்சம் 10 வயசுதான்...அவ கைலயும் தொடப்பம்...
அதைவிட இன்னோரு கொடுமை இந்த  படத்துல இருக்கர  பாட்டி தான்..நடக்கவே முடியல..ஆனா அவங்களுக்கும் வேலை..
குழந்தைகளை வேலைக்கி அமர்த்தக்கூடாதுன்னு சட்டம் போட்டுருக்கும் அரசாங்கமே கோவிலில் கூட்டி பெருக்க குழந்தைகளை வேலைக்கு வெச்சுருக்கு.இந்த மாதிரி ஆளுங்களை நியமனம் செய்யரது யாருனு கண்டுபிடிக்க ஆசைதான்..ஆனா என்னால முடியலை...ஜூ.வி /ரிப்போர்டர் நிருபர்கள் யாராவது உங்களுக்கு தெரிஞ்சா இப்படி எல்லா கோவிலுக்கும் போயி யாரு சுத்தம் செய்யராங்கன்னு பாக்க சொல்லுங்க...இது சின்ன விஷயமா தெரியும்.ஆனா இன்னும் பல இடங்களில் சம்பளம் கம்மியா குடுக்கலாம்னு குழந்தைகளை வேலைக்கு வெய்க்கும் கொடுமை நடந்துகிட்டுதான்  இருக்கு.எவ்வளவுதான் தடுக்க நினைத்தாலும் முடியலை..

சீரியஸ் மாட்டர் ஓவர்...இப்போ ஜாலி ஐட்டத்துக்கு வருவோம்...

இலங்கை-இந்தியாவுக்கு நடுவில் நடந்த முதல் ஒரு நாள் போட்டி பத்தி எழுதாமல் இந்த பதிவை முடித்தால் நான் ஒரு கிரிக்கெட் ரசிகையே இல்லை...இந்த போட்டியை இந்திய அணி வென்றாலும் நம்ம மனசை வென்றது இலங்கை தான்(இந்த ஆட்டத்தை பொறுத்த வரை).414 அப்படிங்கர நம்பரை டெஸ்ட் போட்டிகளில் தான் பாக்க முடியும்.ஆனாலும் அதை ஒரு சவாலா எடுத்துண்டு வெறித்தனமா விளாசி 411 வரைக்கும் வந்தாங்களே...சபாஷ் சபாஷ்...பொறி பறந்த  சேவாகின் சதமாகட்டும்,தில்ஷானின் அதிரடி சதமாகட்டும் எல்லாமே இவருக்கு அடுத்தபடிதான்....யாரை சொல்றேன்னு பாக்கரிங்களா???கொஞ்ச நேரமே ஆடினாலும் 45 பந்துகளில் 90 அடித்து  தூள் கிளப்பிவிட்டு,பாவமாக பவிலியனில் ஒவ்வொரு பவுண்டரிக்கும் கை தட்டி உற்சாகப்படுத்தின  சங்ககாராதான் மனசுல சிம்மாசனம் போட்டு உக்கார்ந்துட்டார்......மொத்தத்தில் ரொம்ப நாள் கழிச்சு ஒரு நல்ல மாச் பார்த்த திருப்தி :)

கண்டிப்பாக உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யவும்...
என்றும் அன்புடன்
உங்கள் தோழி கிருத்திகா

24 comments:

 1. கருத்து நம்பர் 1. அவர்கள் சுய விருப்பத்தின் பேரில் கூட செய்திருக்கலாம். விசாரித்தீர்களா?
  கருத்து நம்பர் 2. உண்மையில் இலங்கை அனியினர்தான் நன்றாக விளையாடினார்கள். ஏனெனில், 414 என்ற இலக்கு எட்ட முடிந்த அளவு போராடினார்கள். அந்த உழைப்பு நம் அனியினரிடம் நிச்சயம் நாம் எதிர்பார்க்க முடியாது..

  ReplyDelete
 2. பதில் நம்பர் 1--
  விசாரித்தேன் மலை சார்....அவங்க அங்க வேலை பாக்கரவங்க தான்....யாரு வெச்சதுன்னு தெர்ல...என்னவா இருந்தாலும் தப்பு தப்பு தானே...நீங்க சிதம்பரமா??
  பதில நம்பர் 2--
  அதைதான் நானே சொல்லிட்டேனே...நம் மனதை வென்ற இலங்கை :) அப்டின்னு

  ReplyDelete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. //ஜூ.வி /ரிப்போர்டர் நிருபர்கள் (?)??

  You definitely have a sense of humor, no doubt.

  ReplyDelete
 5. குட் வியூ ’

  சமூகத்தையும் விளையாட்டையும் நல்லா கவனிச்சுருக்கீங்க...

  ReplyDelete
 6. தோழி அந்த மட்சில் பந்து வீச்சாளர்களது நிலை பற்றி கொஞ்சமாவது யோசியுங்கள்

  அவர்கள் பாவம், இப்படி எல்லா போட்டியும் மாறிவிட்டால் பந்து வீச்சாளர்கள் காணாமல் போய் விடுவார்கள்..

  ReplyDelete
 7. ரெண்டையுமே ஒத்துக்கறேன்..

  ReplyDelete
 8. வணக்கம் கிருத்திகா,
  நம்ம ஊர்ல நானும் காலிங்(அதான் நம்ம) அண்ணாமலையானும்தான் நினைத்தேன் பரவாயில்லை மகளிர் அனியும் இருக்கிறது சந்தோசம்.

  திக்‌ஷிதர்கள் பன்ற கொடுமைய விட இது ஒன்னும் பெருசு இல்ல, உங்க கருத்துக்கே வருகிறேன்.ஒரு சின்ன பையன் கூட்றது தப்புன்னா ஒரு சின்ன திக்‌ஷிதர் பையன் மந்தரம் சொல்லி அர்ச்சன செய்ஞ்சி தட்டுல காசு வாங்கரதும் தப்புதான். சின்ன திக்‌ஷிதர் பையன்க்கு நம்ம ஊர்ல கல்யானம் பன்னும் போது இது எல்லாம் ஜுஜுபி (ரஜினி)ஸ்டைல்ல....

  ReplyDelete
 9. என்னங்க பண்றது? இப்பலாம் கோவில்தான் அனைத்து தவறுகளின் கூடாரமாக திகழ்கிறது.....

  // நடந்துகிட்டே எடுத்தேன்.கொஞ்சம் அசைஞ்சு தான் இருக்கும்.அட்ஜஸ் பண்ணிக்கவும்.//

  எப்படி?நாங்களும் அசைஞ்சு அசைஞ்சு பாத்தா அட்ஜஸ்ட் ஆயிடுமா?? :-)

  ReplyDelete
 10. hmmm super match nu sollaatheenga

  setha pitch la adi adinu adicha bowlers enna agarathu

  ReplyDelete
 11. kiruthika ini photo nirupar aayidunga

  ReplyDelete
 12. உங்கள் தைரியத்திற்கு எனது பாராடுக்கள் .....

  ReplyDelete
 13. குழந்தைகள் பாவம் !! பெத்தவங்க மற்றும் வேளைக்கு வெச்சவுங்கல அடிக்கணும்.. அடுத்த முறை அந்த குழந்தை கிட்ட " உன்ன யாரு வேலை செய்ய சொன்னங்க ?"அப்படின்னு கேட்டு அவன ஒதைக்கணும் !!

  ReplyDelete
 14. hai, neenga chidambaramaa? naanum thaan. visit my blogs. athu namma natarajar koil thaane? panniya atakasathuku kadavul yerkanave govt idam koduthu vitaar koilai. inumma!!!!!!!!!!1

  ReplyDelete
 15. நாட்டு மேல அக்கறை ரொம்பவே அதிகமாயிடுச்சு போலிருக்கே.

  ReplyDelete
 16. பேசாம நீங்களே ஜூ.வியில நிருபரா ஆயிடலாம். புலனாய்வு நல்லாவே பண்றீங்க.

  ReplyDelete
 17. @ அருணாசலம்...
  ஏங்க நான் சீரியசா பேசுரேன்...என்ன வெச்சு காமெடி பண்ரிங்க...:(

  வசந்த்

  அமாங்க..வேற வேல!!!!!!!!!!!!

  யொ வொய்ஸ்
  ஆமாம் கஷ்டம்....அதான் ரெண்டாவது போட்டியில் பின்னிட்டாங்களே

  @மலை

  நம்ம கோவிலேதாங்க...போட்டோவை பாத்துமா கண்டுபுடிக்க முடில??அவ்வளோ கொடுமயாவா இருக்கு??

  சரவணன்.ச

  உங்க கருத்துக்கு எதிர் கருத்து கொண்டவள் நான்...:)

  வெற்றி
  ஆகிடுமே,....வெளில போகும்போது ஆடு மாடு அண்டாம பாத்துக்குங்க...அறிவுக்கொழுந்தை தின்னுட போகுதுங்க :)

  தன்ஸ்
  கஷ்டம்தான்..சண்டைனு வந்தா சட்டை கிழியத்தானே செய்யும் :)

  குளிர் நிலா
  ஆகிட்டா போச்சு...தொல்லை தாங்கமுடியல இல்ல????

  மகா

  நன்றி :)

  கார்த்திக்
  கண்டிப்பா ஒரு நாள் செய்வேன் :)

  மலர்விழி

  ஹா ஹா..நன்றீ சிதம்பரம் மகா .....இப்படிக்கு சிதம்பரம் கிருத்திகா :)எப்புடி???

  சரண்-
  எப்பவுமே உண்டுங்க...இதை பாத்தப்போ ஓவர் ப்ளோ ஆய்ட்சி :)

  நல்லாத்தான் செய்வேன்..வேலை குடுக்கத்தான் ஆளில்லை :)

  ReplyDelete
 18. வணக்கம் கிருத்திகா , என் வீடு மாரியப்பா நகரில் உள்ளது. எங்கள் மருத்துவமனை கீழ வீதியில் - கண்ணன் மருத்துவமனை . என் கணவர் டாக்டர் ரமேஷ் , அறுவை சிகிச்சை நிபுனர்.

  ReplyDelete
 19. //கண்டிப்பாக உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யவும்...//

  இன்னாப்பா !! இது எதுனா சொல்லாம
  இருந்தாக்கா !! நம்பள அப்பீட்டு ஆக்கிடுவாங்க போல கீதே !! ( பதிவு சூப்பர் !! நம்பளுக்கு இன்னாத்துக்கு
  வம்பு ! )

  ReplyDelete
 20. கோவிலில் சுத்தம் செய்யும் சமாச்சாரமும் cricket விளையாட்டு மாதிரி விறுவிறுப்பா போயிருக்கும் போல...... :-)

  ReplyDelete
 21. இந்த மாதிரி சீரியஸ் விசயங்களை பற்றி அடிக்கடி எழுதுங்கள் கிக!

  ReplyDelete
 22. இந்த மாதிரி சீரியஸ் விசயங்களை பற்றி அடிக்கடி எழுதுங்கள் கிகா!

  ReplyDelete