14 December, 2009

சினிமா கொட்டாய்-லீகல்லி ப்ளண்ட்


 இதை ஆரம்பிப்பதற்கு முன்....நம் தலைவர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து சொல்லி போட்ட பதிவுக்கு கமெண்ட் சொல்லி வாழ்த்து தெரிவித்த அனைத்து  ரசிகப்பெருமக்களுக்கும் என் மனமார்ந்த நன்றி

லீகல்லி ப்ளண்ட்-
இதுதான் நாம இந்த வாரம் சினிமா கொட்டாய்ல பாக்கப்போர   திரைப்படம்

              இதுக்கு அப்படியே தமிழ்ல எப்படி சொல்லர்துன்னு  தெரியல...இல்லைன்னா எப்பவும் போல ஜாக்கிசான் ஸ்டைல்ல தமிழாக்கம் பண்ணிருக்கலாம்.இப்போ விமர்சனத்துக்கு போலாமா..

கதை-
           அதாகப்பட்டது  நம்ம ஹீரோயினாகப்பட்ட எல்லீ உட்ஸ் பாஷன் டிசைன் ஸ்டூடண்ட். நிறைய நடிகைகளுக்கு விதவிதமா உடைகள் வடிவமைத்துக்கொடுப்பாங்க.அவங்ளுடய பாய் ஃபிரண்டான வார்னர்,"நீ வெளயாட்டு பிள்ளயாவே இருக்க.எங்க வீட்ல என்னை லா அதாவது சட்டக்கல்லூரிக்கு அனுப்பப்போறாங்க.இன்னொரு வக்கீலைத்தான் கல்யாணம் பண்ணிக்க சொல்லுவாங்க.அதனால உனக்கும் எனக்கும் ஒத்து வராதுன்னு "சொல்லி வெட்டி உட்டுடரார்.உடனே இவங்க வீறு கொண்ட சிங்கம் போல அவர் படிக்கர அதே காலேஜிக்கு போயி சட்டம் படிக்க சேந்துக்கராங்க...
அவங்களை ஆரம்பத்தில் "ஐய்யயே!!!!!" அப்படின்னு கேவலமா பாத்தவங்களை எல்லாரையும் ஓரம் கட்டி படிப்பு முடியும்போது "ஆகா இதுவல்லவோ நல்ல பொண்ணுக்கு அழகு" அப்படின்னு சொல்ல வெய்க்கராங்க...எப்படி???இதுதான் கதை.

டுவிஷ்ட்டு--

    ஒரு கேசை துப்பறியும் அசைன்மெண்டை  கியூட்டா செஞ்சுமுடிக்கறாங்க..அந்த கேஸ் இவங்களுக்கு சாதகமா ஜட்ஜ்மெண்ட் வந்துடுது.அத கண்டுபுடிக்கறதுக்கு இவங்க பண்ணுர சேஷ்டைகள் இருக்குதே அடடடடடடா...ஹாட்ஸ் ஆப் சொல்ல வெய்க்கராங்க.எல்லாரும் கேவலப்படுத்தும்போது அவங்க முன்னாடி அழுவாம பியூட்டி பார்லருக்கு போயி ஃபேஷியல் பண்ணற சாக்குல வெப்பாங்களே ஒரு ஒப்பாரி...வாவ்....அவங்க பாய் ஃப்ரெண்டுக்கும் அவனோட பியன்சீக்கும் இவங்க குடுக்கர நோஸ் கட் ஆகடும்,கொடூரமா டீச்சர் கிலாஸ் எடுக்கும்  நேரத்திலும் இவங்க எதயும் கண்டுக்காம மிக்கீ மவுஸ் பேனாவை சரி பண்ணுவதில் ஆகட்டும் ...சூப்பர்...செம்ம காமெடி படம் இது.பார்க்க வாய்ப்பு கெடச்சா விடாதிங்க.

கருத்து--
           
                "நம்ம மேல நம்பிக்கை வெச்சா எந்த காரியத்தையும் செய்யலாம்.யாருக்காகவும் எதுக்காகவும் பயப்படதேவையில்லை".இதுதான் இவங்க சொல்ல வரும் கருத்து.

20 comments:

 1. நல்ல கருத்து நல்ல விமர்ச்சனம்...

  Try to see my blog
  http://sangkavi.blogspot.com/

  ReplyDelete
 2. //லீகல்லி ப்ளண்ட்- இதுக்கு அப்படியே தமிழ்ல எப்படி சொல்லர்துன்னு தெரியல//

  Legally Planned ன்னு நினைச்சு, 'சட்டப்படி ஒரு திட்டம்' என்று மொழி பெயர்க்கலாம்னு சொல்ல நினைச்சேன், அப்புறம் கூகுள்கிட்ட கேட்டபோ தான் Legally Blonde ன்னு தெரிஞ்சுக்கிட்டேன், யோசிச்சுசொல்றேன்

  ReplyDelete
 3. ஹீரோயின் சட்ட வரம்புக்குட்பட்ட குறைந்தபட்ச வயத அடைஞ்சுட்டாங்க.. ப்ளாண்டெ அப்படின்னா தல முடிநிறத்த குறிக்கும். இப்ப தலைப்ப சொல்லுங்க..

  ReplyDelete
 4. //நம்ம மேல நம்பிக்கை வெச்சா எந்த காரியத்தையும் செய்யலாம்.யாருக்காகவும் எதுக்காகவும் பயப்படதேவையில்லை//

  நல்லாருக்கே

  ReplyDelete
 5. Voted.
  புதுப் படமா பழைய படமா?

  ReplyDelete
 6. "நம்ம மேல நம்பிக்கை வெச்சா எந்த காரியத்தையும் செய்யலாம்.யாருக்காகவும் எதுக்காகவும் பயப்படதேவையில்லை".இதுதான் இவங்க சொல்ல வரும் கருத்து

  intha nambikaila than naan blogeh elutha arambikren.

  ReplyDelete
 7. சுட்டி பெண்
  நம்ம ஊர்ல இப்டி தான் பேர் வைப்பாங்க

  ReplyDelete
 8. நல்ல படத்துக்கு நல்ல கருத்துரைங்க.

  ReplyDelete
 9. ப்ளாக் பக்கம் வர்றது?

  ReplyDelete
 10. நல்லாருக்குங்க விமர்சனம். நானும் பார்க்க முயற்சிக்கிறேன்.

  ReplyDelete
 11. This comment has been removed by the author.

  ReplyDelete
 12. This comment has been removed by the author.

  ReplyDelete
 13. Sangkavi
  கண்டிப்பா...இப்பொவே வரேன்...

  சங்கர்
  யோசிங்க யோசிங்க....தெரிஞ்ச கண்டிப்பா சொல்லுங்க

  அண்ணாமலையான்
  தனித்தனியா சொலாமுங்க...சேத்து நல்ல அர்த்ததோட அதே சமயம் ஜாக்கிசான் தமிழ் பேசர ஸ்டைல்ல இருக்கணும்...அப்புடி சொல்லுங்க மலை....
  மகா..
  ஆமாம் ...ரொம்ப
  ஸ்ரீராம்.
  பழசுதாங்க...பார்ட்-1
  angel

  கண்டிப்பா...14 வயதில் ஒரு எழுத்தாளர்....நன் பாத்ததுலயே நீங்கதான் ரொம்ப சின்னவங்க... :)

  பேநா மூடி

  வாங்க இதைப்போல தான் ஒரு தலைப்பை எதிர்பாத்தேன்...
  ஒரு சொல்லா இல்லாம ரெண்டு சொல்லா அதாவது சுட்டிப்பெண் சக்கரக்கட்டி/சமத்து இப்புடி சேத்து வெச்சுக்கலாம்

  சி. கருணாகரசு
  நன்றி :)
  மணிப்பக்கம்
  ஏன் "ஙே...!"???

  அண்ணாமலையான்
  பிரசண்ட் சார்
  விக்னேஷ்வரி
  கண்டிப்பா பாருங்க

  ReplyDelete
 14. ரசிக்கும் சீமாட்டி சொன்னாங்க நீங்க பாத்துட்டீங்கன்னு. லீகலீ ப்ளாண்ட் ரெண்டு பார்ட்டும் சூப்பர். எஞ்சாய் பண்ணி பாத்திருக்கேன்.

  ReplyDelete
 15. விமர்சனம் ரசிக்கும்படியாக இருக்கிறது..! நன்றி..!

  ReplyDelete
 16. சட்டபடி இளம் பொன்னிற கூந்தலாழ்

  ReplyDelete