Showing posts with label movie Reviews. Show all posts
Showing posts with label movie Reviews. Show all posts

11 April, 2011

தண்ணியடித்த வாத்தியார் பாத்துர்கீங்களா&&&கட்சி பாத்து ஓட்டு போடாதிங்க

நமஸ்தே ப்ளாகர்ஸ் !!!!!

தண்ணியடித்த வாத்தியார் அப்டின்னு ஒரு படம் பாத்துர்கீங்களா!! சரி சரி இங்கிலீஷ்லயே சொல்றேன்!!ட்ரங்கன் மாஸ்டர்...அதாங்க நம்ம ஜாக்கி சான் படம்...நான் நெறய தடவ பாத்துட்டேன்.இருந்தாலும் புதுசா பாக்கறா போலவே இருக்கும். தலைவர் ஒரு குறும்புக்கார இளைஞர்!!அவரோட அப்பா குங்க்.ஃபூ வாத்தியார்.ஜாக்கியோட அட்டகாசம் தாங்காம அவரை கொண்டு போயி அவங்க அப்ப சோ ஹாய்(இது ஒரு பேருங்க) அப்படிங்கற மாஸ்டர்கிட்ட விட்டுடுவார்.அவர்கிட்ட நம்ம ஜாக்கி படும் பாடு இருக்கே...அப்பா சூப்பர்.ஒவ்வொரு சீன்லயும் பின்னி இருப்பார் பர்பாமன்சில!!!நீங்க கண்டிப்பா பாருங்க!!!
*************************************************
சில விஷயங்கள் வாழ்க்கைல பிடிச்சு நடக்குது...சிலது பிடிக்காம நடக்குது.பல விஷயங்களுக்காக நாம கவலைப்படறோம்.நாம கவலைப்படும் எந்த ஒரு விஷயமா இருந்தாலும் சரி..முதல்ல நாம ஒண்ணு யோசிச்சு பாக்கணும்.கொஞ்ச வருஷங்கள் கழிச்சு இந்த விஷயம் நமக்கு நியாபகம் இருக்குமா!!! இருக்காதா??இருக்கும்னா ஓ.கே.
இருக்காதுன்னா அப்பறம்  ஏன் கவலப்படணும்....எப்படியும் அது மறையதான் போகுது...ஏன் தேவை இல்லாம கவலைப்பட்டு டயத்த வேஸ்ட் பண்ணிண்டு!!!சொல்யூஷனை கண்டுபிடிச்சு ஊதி தள்ளிடவேண்டியதுதானே!!!
சரி...தத்துவம் போதும்.காதுலேர்ந்து புகை வர ஆரமிச்சுடுச்சு!! நாம அடுத்த விஷயத்துக்கு போகலாம்..
***********************************
புதன் கிழமை வாக்குப்பதிவு நடக்குது. மக்களே தயவு செஞ்சு ஓட்டு போட போங்க.நாட்டுல அநியாயம் நடக்குது..அவ்வளோ ஊழல் இவ்வளோ ஊழல் பண்ணிட்டான் அப்டின்னு புலம்பி தள்ளறோமே..அவங்கள தேர்ந்து எடுக்கரது,ஆட்சில உக்கார வெக்கறது எல்லாமே படிச்ச மக்கள் தான்.படிக்காதவங்க எல்லாரும் முனைஞ்சு போய் வோட்டு போட்டுட்டு வந்துடுவாங்க.
       படிச்சவங்க தான் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம(மன்னிச்சுகுங்கய்யா) வீட்டில டீ.வி பார்த்துண்டு பொழுது ஓட்டிட்டு, அப்பறம் அவன் ஆட்சி சரி இல்ல இவன் ஆட்சி சரி இல்லன்னு ராகம் பாட வேண்டியது.படிச்சவங்கல்லாம்  ஒழுங்கா ஓட்டு போட்டா யார் ஆட்சிக்கு வருவாங்க இந்த தடவன்னு உங்களுகே தெரியும்!!!அதனால வோட் கண்டிப்பாக நிச்சயமாக சத்தியமாக போடுங்க.49 ஓ அப்படின்னு ஒரு விஷ்யம் இருக்கரதா மக்கள் பேசிக்கறாங்க.அது ஒரு ஃபார்ம்/ரிஜிஸ்தர் மதிரி,அதுல கை எழுத்து போடணும் நமக்கு ஓட்டு போட இஷ்டம் இல்லைன்னா!!! ஆனா இப்படி செஞ்சு எதிர்ப்பை காட்டறது எனக்கு என்னமோ பிடிக்கல.அதுக்கு இன்னோரு ஐடீயா இருக்குதுங்க..கேள்வியே படாத சின்னத்துல சில வேட்பாளருங்க நிப்பாங்க..உதாரணத்துக்கு எங்க ஊருல யானை,சிலிண்டர் மற்றும் பல சின்னங்களில் வேட்பாளர்கள் நிக்கறாங்க.அதுல யாரவது ஒருத்தருக்கு குத்த வேண்டியதுதான்!!! வாவ்...வாட் ஆன் ஐடீயா சர்ஜீ!!!!
முதல் முதலாக ஓட்டு போடப்போறேன் நான்!!! ரொம்ப எக்சைட்டிங்கா இருக்கு!!!!ஹீ ஹீ!!!
 கட்சி பாத்து ஓட்டு போடாதிங்க.அவர் ஜெய்ச்சா நம்ம தொகுதிக்கு நல்லது செய்வாரான்னு பாத்து போடுங்க.இதுவரைக்கும் சிதம்பரம் தொகுதில ஜெய்ச்ச வேட்பாளர்கள் யாரும் தொகுதி பக்கம் எட்டிக்கூட பாத்ததில்ல..அதிலயும் பீக் யாருன்னா நம்ம வீ.சி கட்சி தலைவர் தான்.என்ன செல்வாக்கு இருந்து என்ன..இதுவரைகும் சிதம்பரம் எங்க இருக்குன்னு கூட தெரியாது அவருக்கு..இந்த சண்டே பிரச்சாரத்துக்காக நம்ம கலைஞரும் பீரங்கி வடிவேலுவும் வந்தாங்க..அதனால மக்கள் பட்ட பாடு இருக்கே ஐயோயோயோ..இது பெரிய ஊரெல்லாம் கடயாது.சின்னதுதான்.இருக்கர ஒரு மெயின் ரோடயும் அடச்சுபுட்டாங்க.கனெக்ஷன் மொத்தத்தயும் கட் பண்ணி உயிர எடுத்துட்டாங்க....நல்ல வேளை...வேற எந்த தலைவ(வி)ரும் வரல...

ஒரு ரகசியம் சொல்றேன்...எங்க ஊரு ஓட்டு ரொம்ப சீப்புங்க...200 ரூவாதான் பட்டுவாடா பண்றாங்களாம்!!! உஷ்...யாருகிட்டயும் சொல்லப்படாது...
ஓகே. இத்துடன் நான் வடை பெற்று கொள்கிறேன்!!!
நன்றி வணக்கம்.

14 December, 2009

சினிமா கொட்டாய்-லீகல்லி ப்ளண்ட்


 இதை ஆரம்பிப்பதற்கு முன்....நம் தலைவர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து சொல்லி போட்ட பதிவுக்கு கமெண்ட் சொல்லி வாழ்த்து தெரிவித்த அனைத்து  ரசிகப்பெருமக்களுக்கும் என் மனமார்ந்த நன்றி

லீகல்லி ப்ளண்ட்-
இதுதான் நாம இந்த வாரம் சினிமா கொட்டாய்ல பாக்கப்போர   திரைப்படம்

              இதுக்கு அப்படியே தமிழ்ல எப்படி சொல்லர்துன்னு  தெரியல...இல்லைன்னா எப்பவும் போல ஜாக்கிசான் ஸ்டைல்ல தமிழாக்கம் பண்ணிருக்கலாம்.இப்போ விமர்சனத்துக்கு போலாமா..

கதை-
           அதாகப்பட்டது  நம்ம ஹீரோயினாகப்பட்ட எல்லீ உட்ஸ் பாஷன் டிசைன் ஸ்டூடண்ட். நிறைய நடிகைகளுக்கு விதவிதமா உடைகள் வடிவமைத்துக்கொடுப்பாங்க.அவங்ளுடய பாய் ஃபிரண்டான வார்னர்,"நீ வெளயாட்டு பிள்ளயாவே இருக்க.எங்க வீட்ல என்னை லா அதாவது சட்டக்கல்லூரிக்கு அனுப்பப்போறாங்க.இன்னொரு வக்கீலைத்தான் கல்யாணம் பண்ணிக்க சொல்லுவாங்க.அதனால உனக்கும் எனக்கும் ஒத்து வராதுன்னு "சொல்லி வெட்டி உட்டுடரார்.உடனே இவங்க வீறு கொண்ட சிங்கம் போல அவர் படிக்கர அதே காலேஜிக்கு போயி சட்டம் படிக்க சேந்துக்கராங்க...
அவங்களை ஆரம்பத்தில் "ஐய்யயே!!!!!" அப்படின்னு கேவலமா பாத்தவங்களை எல்லாரையும் ஓரம் கட்டி படிப்பு முடியும்போது "ஆகா இதுவல்லவோ நல்ல பொண்ணுக்கு அழகு" அப்படின்னு சொல்ல வெய்க்கராங்க...எப்படி???இதுதான் கதை.

டுவிஷ்ட்டு--

    ஒரு கேசை துப்பறியும் அசைன்மெண்டை  கியூட்டா செஞ்சுமுடிக்கறாங்க..அந்த கேஸ் இவங்களுக்கு சாதகமா ஜட்ஜ்மெண்ட் வந்துடுது.அத கண்டுபுடிக்கறதுக்கு இவங்க பண்ணுர சேஷ்டைகள் இருக்குதே அடடடடடடா...ஹாட்ஸ் ஆப் சொல்ல வெய்க்கராங்க.எல்லாரும் கேவலப்படுத்தும்போது அவங்க முன்னாடி அழுவாம பியூட்டி பார்லருக்கு போயி ஃபேஷியல் பண்ணற சாக்குல வெப்பாங்களே ஒரு ஒப்பாரி...வாவ்....அவங்க பாய் ஃப்ரெண்டுக்கும் அவனோட பியன்சீக்கும் இவங்க குடுக்கர நோஸ் கட் ஆகடும்,கொடூரமா டீச்சர் கிலாஸ் எடுக்கும்  நேரத்திலும் இவங்க எதயும் கண்டுக்காம மிக்கீ மவுஸ் பேனாவை சரி பண்ணுவதில் ஆகட்டும் ...சூப்பர்...செம்ம காமெடி படம் இது.பார்க்க வாய்ப்பு கெடச்சா விடாதிங்க.

கருத்து--
           
                "நம்ம மேல நம்பிக்கை வெச்சா எந்த காரியத்தையும் செய்யலாம்.யாருக்காகவும் எதுக்காகவும் பயப்படதேவையில்லை".இதுதான் இவங்க சொல்ல வரும் கருத்து.

09 December, 2009

அதே நேரம் அதே இடம் +நச் கமெண்டர்




                  ஜெய்க்காக பாக்கலாமேன்னு(வயசுக்கோளாறுதான்) இந்த படத்தை எடுத்தேன்..ஐய்யகோ...இந்த மாதிரி ஒரு படத்தை பாக்க தவமா தவம் கெடக்கணும்.

                      விஜயலக்ஷ்மி காலேஜில் படித்துக்கொண்டிருக்கும் அழகான பொண்ணு...ஜெய் வேலை வெட்டி இல்லாமல் திரியும் அழகான பையன்.இவங்களுக்குள்ள லவ்ஸ்...ஜெய்யோட அப்பா  நிழல்கள் ரவிக்கு இந்த மாட்டர் தெரிஞ்சு,அவர் ஜெய்யை கூப்பிட்டு நீ  வேலைக்கு போகணும் முதல்ல..அப்போதான் உங்களுக்கு என்னால கல்யாணம் செஞ்சு வெக்க முடியும் அப்டிங்கராரு


ஜெய்க்கும் ஆஸ்த்ரேலியாவில வேலை பார்க்க போயிடுராரு.இந்த கேப்ல விஜயலஷ்மிக்கு வீட்ல மாப்பிள்ளை பாக்குராங்க.எதிர்பார்க்காத திருப்பம்..விஜயலக்ஷ்மி கல்யாணத்துக்கு ஒத்துக்கராங்க.ஏன்னா பையன் செம பணக்காரன்.இதுவரைக்கும் செமமமமமமமம பிலேடா போயிண்ட்ருந்துது..இதுக்கப்பரம் சூப்பரா இருக்கும்னு நிமிர்ந்து உக்காந்தோம்.வேஷ்டுங்க...தேவையே இல்லை...அப்புடியே தூங்கி இருக்கலாம்.

                  இப்போ என்ன ஆகுதுன்னா ஜெய் ஆஸ்திரேலியாவிலிருந்து வராரு.அவருக்கு இந்த கல்யாண விஷயமே தெரியாது.ப்ளேன்லே இவரும் இவரோட முன்னாள்  ஆளோட ஹஸ்பெண்டான ஷிவாவும் நண்பர்கள் ஆகிடராங்க.(அதுக்கு ஒரு மொக்க ஃப்லாஷ் பாக் வேற :()
இதுக்கப்பறம் கதை சூடு புடிக்குது(நாமளே கற்பனை பண்ணிக்க வேண்டியதுதான் ...வேற வழி!!!!சரி இதுக்கப்பறம் பல "திடுக்கிடும்" திருப்பங்களுக்குப்பின் கடசியா ஜெய் விஜயலக்ஷ்மியை கொன்னுடராரு..

பி.கு-- இந்த படம் சிம்பு வகையறா....அவர் நடிச்சுருந்தா பின்னு பின்னுனு பின்னிருக்கும்.ஹீரோ ,ஹீரோயின் ரெண்டு பேரும் கொழந்த புள்ளைங்க மாதிரி பேசுதுங்க...ப்ரேம்ஜி மியூசிக்கும் ரொம்பலாம் இம்ப்ரெஸ் பண்ணல...ரெண்டு பாட்டு பரவால்லே.அதனால இந்த படத்தை சன் டி.வியில் இந்திய தொ(ல்)லைக்காட்சிகளில் முதல் முறையாகன்னு போடும்போது பாத்துக்குங்க,....
முக்கியமான அறிவிப்பு-
ஸ்டில்லை பாத்து ஏமாந்துடாதிங்க..ஸ்டில்ஸ் நல்லா இருந்தா படம் நல்லா இருக்கும்னு அர்த்தம் இல்லை
அடுத்த படியாக...


போன பதிவில் வைத்த போட்டிக்கான முடிவுகள்...நச் கமெண்டர் அவார்டுக்கான சிறந்த கமெண்டுகள்...இதை நான் ஒன்று,இரண்டு அப்டின்னு வரிசைப்படுத்தல....இந்த அஞ்சுமே நல்லா இருந்ததால இவங்க 5 பேருக்கும் இந்த அவார்டை குடுக்கரேன்...
பேர் மற்றும் க்மெண்டுடன்--

பித்தனின் வாக்கு:
இதுக்குதான் அப்பவே சொன்னேன், பிளாக்ல வர்ற சமையல் டிஸ் எல்லாம் சமைக்காதன்னு. கேட்டியா இப்ப என்னால எந்துரிக்க கூட முடியவில்லை.  

யோ வொய்ஸ்
    தியானம் செஞ்சா நல்லது என்று சொல்றாங்க அதுதான் நம்மளும் தியானம் செய்றோம்...
ஸ்ரீராம்.

    ஒரே சமயத்துல 'ரெண்டு' வேலை.

தேவியர் இல்லம் ஜோதிஜி
   
    எப்ப பார்த்தாலும் ஹோம் ஒர்க், ஹோம் ஒர்க்ன்னு போட்டு படுத்தி எடுத்தா வேற எங்க தூங்றது?

ரசிக்கும் சீமாட்டி
"எங்கலாம் காமேராவ கொண்டுவராயிங்க... டோன்ட் ஆங்ரி மீ !!! "

இவர்களோடு இந்த விருதை பகிர்ந்து கொள்கிறார்கள் இவர்களும்...
பிரியமுடன்...வசந்த் , கோபி,kggouthaman ,பின்னோக்கி,இளந்தி,மகா,சிவன்,Chitra
அடுத்து உங்கள் எல்லாருக்கும் ஒரு வேண்டுகோள்...நீங்களும் இந்த மாதிரி போட்டி வெச்சு அவார்டை பாஸ் பண்ணுங்களேன்...:)

போற போக்குல வோட்டை குத்துங்க...கமெண்டயும் கொட்டுங்க...(தலைலயும் கொட்டுங்க)
என்றும் அன்புடன்
உங்கள் தோழி
கிருத்திகா

17 November, 2009

சினிமா கொட்டாய்-டாக்டர் டூலிட்டில்,இவ்வளவுதான் இவள்



டாக்டர் டூலிட்டில்-எம்.பி.பி.எஸ்-DOCTOR DOLITTLE
இதுதான் நாம இந்த வாரம் சினிமா கொட்டாய்ல பாக்கப்போர  முதல் திரைப்படம்

கதை-
     டாக்டர் டூலிட்டிலுக்கு(எடி மர்பி)  அனிமல்ஸ் அதாவது மிருகங்கள்  பேசுரதெல்லாம் சின்ன வயசுலேருந்தே  புரியும்.அவங்க அப்பாவின் கண்டிப்பினால இதை அவரு  வெளிப்படுத்திக்காம இருக்காரு.ஆனாலும் ஒரு கட்டத்துல கண்ட்ரோல்  பண்ணவே முடியல....அதனால விளையும் நன்மை என்ன(மிருகங்களுக்கு) ??? தீமை என்ன(அவருக்கு)???
இதுதான் கதை...
டுவிஸ்ட்-


                              இது திகில் கதையெல்லாம் இல்ல.அதனால ஜாலியா உக்கார்ந்து சிரிச்சுக்கிட்டே பாக்கலாம்.படம் முழுக்க அனிமல்ஸ் அட்டகாசம் பண்ணுங்க...இவரு டாக்டர் அப்டிங்கரதால தன்னோட நோய்களை சொல்லி குணப்படுத்திக்குதுங்க.ஒரு கட்டத்துல இவரு இப்டி எலி,பூனை,நாய்கிட்டலாம் பேசுரதை பாக்குர இவங்க குடும்பத்தினர் இவரை  பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கே அனுப்பிடுவாங்க.எப்படி அங்கேருந்து மீண்டு வரார்ங்கர்து  இன்னொரு காமெடி காட்சி.......கடசியா ஒரு புலிக்கி  அதாங்க டைகர்க்கு ஒரு ஆப்பரேஷன் பண்ணி காப்பாத்துவாரு.அதோட பார்ட் 1 ஓவர்...பார்ட்-2 பாத்துட்டு எப்புடி இருக்குனு சொல்லுரேன்....

கருத்து-
   விசில் படத்துல விவேக் பண்ணின காமெடி இதுலேருந்து உருவப்பட்டது என்பதை நேர்மையுடன் தெரிவித்துக்கொள்கிரது

இவ்வளவுதான் இவள்...(She is all that)


இதுதான் நாம இந்த வாரம் சினிமா கொட்டாய்ல பாக்கப்போர ரெண்டாவது திரைப்படம்
 கதை-
               தன்னோட ஆளு தன்னை விட்டுட்டு போற சோகத்துலயும்,தன்னோட நண்பர்கள் தன்னை கிண்டல் பண்ணிட்ரதால வரும்  வெறியாலயும்,சாக்(நம்ம ஹீரோ..கொஞ்சம் அழகாவே இருப்பாரு) ஒரு பெட் வெக்கரார்..காலேஜ் ஐகானா காலேஜ் மொத்தமும் கண்டு பயப்படுற லேனி அப்படிங்கர பொண்ணை ஆக்குரேன் அப்படிங்கரதுதான் சபதம்.செஞ்சாரா???(கண்டிப்பா செஞ்சாரு..ஆனா எப்புடி...அதான் கதை)

டுவிஷ்ட்-
                                  நடுவுல இவரு அந்த பொண்ண இம்ப்ரெஸ் பண்ரேன் பேர்வழின்னு ஒரு காமெடி பண்ணுவார்..பாக்க நல்லா இருக்கும்.அப்புறம் இவரோட முன்னாள் ஆளு மறுபடியும் ரீ-ஜாயின் ஆகிடலாமானு கேக்கும்போது ஒரு பல்ப் அடிப்பாரே...செம...
அந்த பொண்ணு தன்னோட அம்மா சின்ன வயசுலயே செத்துட்டாங்கன்னு சொல்லி ஃபீல் பண்ணும்போது செமயா ஆக்ட் பண்ணிருக்காங்க.இது ஒரு காமெடி படம் மாதிரி....பாக்கலாம் ஒரு தடவை..

கருத்து-
             சென்னை 28 டீமை வெச்சு வெங்கட் ப்ரபு எடுக்கவேண்டிய கதை இது...
மறக்காம வோட்ட குத்துங்க.
அன்புடன்
உங்கள் தோழி
கிருத்திகா

03 November, 2009

சினிமா கொட்டாய்-டான்ஸ் ஆடலாமா


இதுதான் நாம இன்னிக்கு சினிமா கொட்டாய்ல பாக்கப்போர  திரைப்படம்
டான்ஸ் ஆடலாமா?? SHALL WE DANCE....
                           நான் பார்த்ததில இந்த படம்தான் செம்மமமமம டீசண்டான படம்...ஜெனிபர் லோபஸ் நடிச்ச படம்....ஜான் பாங்க்ஸ்(ரிச்சர் கெரே) அப்படிங்கர ஒரு லாயர்,தன் வாழ்க்கை என்ற சாகரத்தில் சிக்கி,தன் வாழ்க்கை ஒரே மாதிரி போரா(bore) போகுதுன்னு நெனைக்குரார் அவருடய 20த் திருமண நாள் அன்னிக்கு...எவ்வளோ சீக்கரமா நெனைக்குரார் பாத்திங்களா.....அவரு  ஆபிஸ் போயிட்டு வரும்பொழுது தினமும் வழியில இருக்கர ஒரு டான்ஸ் ஸ்கூலை பார்த்துக்கிட்டே போவார்...அங்க தினமும் ஒரு பொண்ணு(ஜெ.லோ) ஜன்னல் வழியா சோகமான முகத்தோடு பார்த்துக்கிட்டு இருப்பாங்க.....ஏன் அவங்க முகத்துல அவ்வளோ சோகம்னு தெரிஞ்சுக்க ஆவலா ஒரு நாள் அந்த ஸ்டாப்புல இறங்கி ஜெ.லோவ பாத்து என்ன ஏதுன்னு கேட்டுடரதுனு அந்த ஸ்கூல்ல நுழஞ்சிடுவாரு.இப்போதான் திருப்பமே!!!!!!!
          
                           அவரை உள்ள இருக்குர டீச்சர் ஏன் இங்க வந்த?அப்டின்னு கேக்க உடனே இவரு திரு திருனு முழிச்சிக்கிட்டே நின்னாரு...அப்போ பக்கத்துல இருந்த ஒரு லேடி டான்ஸ் கத்துக்கதானே வந்துருக்கிங்க...அப்பறம் ஏன் வெக்கப்படுறிங்க??..வயசு ஒரு தடயே இல்ல இந்த ஸ்கூலோட கரஸ்பாண்டண்ட்க்கு வயசு 65...அவங்கதான் உங்களுக்கு டான்ஸ் சொல்லிக்குடுக்கப்போறாங்க அப்படின்னு சொல்லி இவர் மனசுல கட்டி வெச்சுருக்கர கோட்டயை உடைச்சுடராங்க......அதுக்கப்பரம் இவரும் ஜெ.லோகிட்ட பேச வாய்ப்பை எதிபார்த்துக்காத்திருக்கிரார்...ஒரு நாள் வாய்ப்பும் கிடைக்குது...அப்போ இவருனீங்க ஏன் சோகமாவே இருக்கிங்க??அப்புடின்னு கேக்க இவருடய நோக்கத்தை தப்பா புரிஞ்சுகிட்டு இவர திட்டி அனுப்பிடராங்க ஜெ.லோ.
                          

                   அடுத்த நாள் மனம் தளராம மறுபடியும் அதே சிரிச்ச முகத்தோட வராரு ஜான்..அவங்க உடனே "நாம தான் தப்பா புரிஞ்சுக்கிட்டோம்" அப்படின்னு உணர்ந்து சினேகமா பழக ஆரமிச்சு தன்னோட கதைய சொல்லுவாங்க ஜெ.லோ.அதுக்குள்ள ஒரு பெரிய போட்டில இவரையும் இன்னொரு அம்மாவையும் சேர்த்து அந்த டான்ஸ்க்கு அனுப்பி விட்டுடுவாங்க......இப்போ ஒரு புது பிரச்சனை வந்துடும்...ஜானோட பொண்டாட்டி இவரு அங்கங்க நின்னு நின்னு டான்ஸ் ஆடுரத பாத்துட்டு "பார்டி சரி இல்லையே என்ன விஷயம்னு" யோசிச்சு  இவர துப்பறிஞ்சு இவரு டான்ஸ் கத்துக்கரத கண்டுபுடிச்சுடராங்க...நேர அந்த காம்பெடிஷனுக்கே போயி நின்னுடராங்க......

               அதுவரை நல்லா ஆடிட்டு இருக்கர ஜான்  இவங்களை பார்த்த உடனே ஷாக் ஆகி  அப்பிடியே நின்னுடராரு...அங்க ஒரு கலவரமே நடக்குது...பொண்டாட்டி கோச்சுக்கிட்டு போயிடுராங்க...டாண்ஸ்க்கு இதுக்கு மேல போனா அவமானமா இருக்கும்!!!இப்போ என்ன பண்ணுராரு??ப்ரச்சனயை எப்படி சால்வ் பண்ணுரார்?? அதுதான் கதை...படம் ரொம்ப சூப்பர்...கண்டிப்பா பாருங்க...
மறக்காம வோட்ட குத்துங்க.
அன்புடன்
உங்கள் தோழி
கிருத்திகா

02 November, 2009

சினிமா கொட்டாய்-பணத்துக்காக இருவர்

 இதுதான் நாம இந்த வாரம் சினிமா கொட்டாய்ல பாக்கப்போர  திரைப்படம்


பணத்துக்காக இருவர்-TWO FOR THE MONEY
இந்த படம்  ரொம்ப சீரியசான படம்.முழுக்க முழுக்க  பெட்டிங்க்,சூதாட்டம் பத்தின படம்.படத்தோட ஹீரோ ப்ராண்டன் லாங்க் ஒரு ரக்பி வீரர் 20வயது வரை.......ஒரு மாச் ஆடும்போது அவர் கால் உடைஞ்சு போய்டும்.அதுக்கப்பறம் டாக்டர்ஸ் அவரை  இதுக்கு மேல ரக்பி  விளயாடக்கூடாதுனு சொல்லிடுவாங்க.இவரும் அரை மனசோட வருஷா வருஷம் செலெக்ஷன் டீம்க்கு போவார் ப்ராக்டிஸ் பண்ணிட்டு.எல்லா தடவையும் ஒரே பதில் தான்...ரிஜெக்டெட்..இதுல பெட்டிங் எங்க வருதுனு யோசிக்கிறிங்க தானே???

               வரும் வரும் இப்போ.6 வருடங்களுக்கு பின்......வாழ்கயை ஓட்ட ப்ராண்டன்  ஒரு கால் செண்டர்ல கம்பியூட்டர் ஆப்பரேட்டரா வேலை பாக்குராரு.ஒரு நாள் அவரோட நண்பர் எந்த டீம் ஜெயிக்கும்னு கேக்க,இவருக்கு ரக்பி பத்தி ஏற்கனவே தெரிஞ்சதால அதுக்கு அவர் ஒரு மினி வகுப்பே எடுக்கராரு.அவரு சொன்னாமாதிரியே அந்த டீம்தான் ஜெய்க்குது.அப்பொலேருந்து  அவர டெலீ காலர் எக்சிக்யூட்டிவா ஆக்கிடுராங்க.அந்த கால் செண்டர்க்கு ஒரு நாள் ஒருத்தர் போன் பண்ணி "எந்த டீம் மேல பெட் கட்டுரது " அப்படினு கேக்க எல்லாரும்  கால டைவெர்ட் பண்ணிவிட்டுடராங்க.ப்ராண்டன்  அவருக்கு ஆன்சர் பண்ணுராரு.அப்போலேருந்து  இவருக்கு பெட்டிங்க் பத்தின கால் நெறய்ய வர ஆரமிச்சுடும்.
        இவரோட புகழ் பரவி,நியூயார்க்கில இருக்கரஒரு பெரிய கால் செண்டர் இவருக்கு அழைப்பு விடுது.அங்கே வால்டர்னு ஒரு பெரிய தல இவருக்கு இன்னும் நிறய விஷயங்களை கத்துகுடுத்து அந்த துறைல (அதாங்க எந்த டீம் மேல பெட் கட்டுனா ஜெய்க்கலாம்னு அட்வைஸ் பண்ணர வேலைல) பெரிய ஆள் ஆக்குராரு....அவரை கோடிக்கணக்குல பெட் பண்ணுர ஆள் கிட்ட அறிமுகம் செஞ்சு  வைக்கராரு.இப்போ தான் ஆரமிக்குது வினை.ப்ராண்டனால 5 மில்லியன் லாபம் கிடைக்குது.அதுல 10% வேணும்னு கேக்குராரு ப்ராண்டன்.இவரோ முடியாதுனு சொல்லிடராரு.அப்போலேருந்து வில்லத்தனம் பண்ணுரதுதான் ப்ரானடன் வேலை.காலர்ஸ்க்கு தப்பு தப்பா அட்வைஸ் பண்ணி கம்பெனி நஷ்டம் ஆகிடுது.
                 "பச்ச குழந்தயின்னு பாலூட்டிவளர்த்தேன் பால குடிச்சுப்புட்டு பாம்பாக கொத்துதடி கண்மணி" அப்படின்னு பாடாத குறயா வால்டர் கடன உடன வாங்கி மறுபடியும் இதே தொழில்ல முதலீடு பண்ணுராரு...ப்ராண்டன் "இன்னுமா இவன் நம்மள நம்பரான்?"அப்ப்டின்னு நெனச்சு தப்ப உணர்ந்து ரொம்ப வேதனைபடுராரு....அடுத்த மாச் எப்டியாவது இவருக்கு நாம லாபத்த சம்பாதிச்சு குடுக்கணும்னு முடிவு பண்ணி நெறய ஹோம் வர்க் பண்ணீ எந்த டீம் ஜெய்க்குதுனு சொல்லுராரு.ஆனா பாருங்க இவரோட நேரம் இவர் சொன்ன ரெண்டுமே புட்டுக்குது.
                 
                 கடசி வாய்ப்பு...ஒரே மாட்ச்...ஒரே பேரு...வாழ்வா சாவா??? இந்த நெலமைல அவரு ஜெய்க்கராரா???வழக்கம் போல ஹாப்பி எண்டிங்க் தான்...ஆனா முடிவுல ஒரு திருப்பம் இருக்கு...என்னனு பாத்து தெரிஞ்சுக்குங்க.......
இவளோ நாளா படங்கள் பத்தி எழுதரேன்..எத்தன பேரு பாக்குரிங்கனு தெரியல...இருந்தாலும் நானும் விடாம  எழுதரேன்...

மறக்காம வோட்ட குத்துங்க.
அன்புடன்
உங்கள் தோழி
கிருத்திகா

27 October, 2009

சினிமா கொட்டாய்-கல்யாண பாட்டுக்காரன்,புது பையன்



கல்யாண பாட்டுக்காரன்(THE WEDDING SINGER)
இதுதான் நாம இந்த வாரம் சினிமா கொட்டாய்ல பாக்கப்போர  முதல் திரைப்படம்.இந்த படத்துல ஆடம் சாண்ட்லர்(ராபி),ட்ரூ பாரிமோர்(ஜூலியா) மற்றும் பலர் நடிச்சுஇருக்காங்க.  
               கதை-ராபி  கல்யாணத்துல பாடுற பாடகர்.ஜூலியா ஒரு waitressஆ வேலை பாப்பாங்க.ரெண்டு பேரும் ஒரு கல்யாணத்துல மீட் பண்ணிப்பாங்க.ராபிய கல்யாணம் பண்ணிக்கரேன்னு சொல்லி கல்யாணமேடை வரை வந்துட்டு எனக்கு உன்ன பிடிக்கலனு சொல்லிட்டு போயிடுவாங்க  ராபியோட ஆளு லிண்டா.இந்த கட்டத்துல தான் ஜூலியா இவருக்கு ஆறுதலா இருப்பாங்க.அப்போ ஜூலியாவுக்கு க்லென் அப்டிங்கரவனோட கல்யாண ஏற்பாடு நடந்துகிட்டு இருக்கும்.அந்த பய ஒரு தறுதல.அது தெரியாம இந்த பொண்ணு கல்யாணத்துக்கு ஒத்துக்கும்.ராபீக்கு இந்த விஷயம் தெரிஞ்சதும் கரொம்ப வருத்த படுவாரு.அப்பறம் கொஞ்ச நாள்ல ராபிக்கு ஜூலியாவை புடிச்சுடும்.ஆனா அண்ணிதான் ஏற்கனவே லாக் ஆகிட்டாங்களே...அப்பறம் அண்ணன் எப்டி அண்ணீகுட சேர்ந்தாருனு ஒரு பாதி படத்த ஓட்டுவாங்க...
படம் கொஞ்சம் சுமார் தான்..36/100 தான் குடுக்கலாம்..ரொமாண்டிக் படம் புடிச்சவங்க இந்த படத்தை தாராளமா பார்க்கலாம்.

புது பையன்-THE NEW GUY


முதல் படம் மொக்கயா இருந்ததால அடுத்த படத்தயும் இப்பவே ஓட்டிரலாம்.இந்த படத்துக்கு பேரு THE NEW GUY.இது ஒரு காமெடி+ஜாலி படம்.
 படத்தோட ஹீரோவ பாத்தா கொமட்டும்.அவ்வளோ கொடூரமா இருப்பான்.ஆனா கொஞ்ச நேரத்துலயே அவன் அழகா ஆகிடுவான்.அவன்  பாத்த ஒடனே பிடிக்கர ஜாதி இல்ல ...பாக்க பாக்க புடிக்கர ஜாதி...இந்த படத்துக்கு கதை இதுதான்.கில்லெஸ்பி(ஹீரோ பேரு) ஒரு காமெடி பீசு வனோட ஸ்கூல்ல.அவன எல்லாரும் கிண்டல் பண்ணவும் ஒரு நாள் குடிச்சுட்டு ஸ்கூல்க்கு வந்துடுவான்.அதனால அவனுக்கு தண்டனயா ஒரு நாள் ஜெய்ல்க்கு அனுப்பிடுவாங்க.ஜெய்ல்ல ஒரு சூப்பர் கைதி இருப்பான்.அவன கண்டா எல்லாரும் அலறுவாங்க.அவங்கிட்ட பொயி தன்னோட பிரச்சனய சொல்லி அழுவான்.உடனே அவனும் மனசு எளகி "1 நாளில் டெர்ரர் ஆவது எப்படி"அப்டினு சொல்லி குடுப்பான்.

டெரரை உருவாக்கும் இன்னொரு டெர்ரர்

            ஸ்டெப்-1
முதல்ல நீ படிக்கர ஸ்கூல விட்டு  வெளில வந்துடனும்.அவங்களே கழுத்த புடிச்சு தள்ளர மாதிரி ஒரு காரியத்த செய்யனும்
           ஸ்டெப்-2
நீ போர புது ஸ்கூல்ல இருக்கர தாதாபசங்களை முதல் நாளே அடி தூள் பண்ணனும்
           ஸ்டெப்-3
அங்க இருக்கரதுலயே வித்தியாசமான சேட்டை எல்லாம் பண்ணனும்
       இந்த கீதோபதேசத்தை பாலோ பண்ணி அவனும் டெர்ரர் ஆகிடுவான்.அப்போதான் வரும் பிரச்சனை.இவன் இப்போ படிக்கர ஸ்கூல்க்கும் பழய ஸ்கூல்க்கும் ஃபூட்பால் மாச் நடக்கும்.அங்க இவன் இருந்தே ஆகணும்.எப்படி அதை  இவன் சமாளிக்கரான்?
இதுதான் கதை...
ப்டம் ரொம்ப நல்லாருக்கு.ஹீரோவா நடிச்ச பைய்யன் தூள் கெளப்பிருப்பான்...முதல்ல படம் ஆரமிக்கும்போது நல்லருக்காதுனு ஒரு பீலிங்கி.போக போக நல்லாருந்துச்சு...
படம் பிடிச்சா பாருங்க.
மறக்காம வோட்ட குத்துங்க.
அன்புடன்
உங்கள் தோழி
கிருத்திகா

19 October, 2009

சினிமா கொட்டாய்-கண்டிப்பாக,இருக்கலாம் !!!-விமர்சனம்





வனக்கம் வந்தனம் நமஸ்தே நமஷ்கார்
தீபாவளி நல்லா கொண்டாடிருப்பிங்க...:)
இந்த வாரம் நம்ம சினிமா கொட்டாய்ல பாக்கபோர திரைப்படம்  DEFINITELY,MAYBE
இந்த படத்த  ஹாலிவுட்டின் ஆட்டோகிராப்னு சொல்லலாம்.நம்ம ஹீரோ பேரு வில் ஹேய்ஸ்(ரே ரேனால்ட்ஸ்).அவரு வாழ்க்கைல வர்ர 3 பொண்ணுங்களை பத்தி சொல்லுராரு அவருடய பொண்ணுகிட்ட :).
 கதை ரொம்ப பெருசு.ஆன நான் சுருக்கமா சொல்லரேன்.
கதை ப்லாஷ் பாக்.இத அவரு பொண்ணுகிட்ட சொல்லரமாதிரி எடுத்துருக்காங்க.
"என்னோட அம்ம யாருனு" அந்த குட்டி பொண்ணு  வில் கிட்டகேக்குது.இப்போ மார்ட்டீன் காய்லை முசிக் விட்டுக்கொண்டே சுத்தவும்.
10 வருஷத்துக்கு முன்னாடி..........
வில் ஒரு speech writer. அதாவது அரசியல்வாதிகளுக்கு  மேடைப்பேச்சுகள் எழுதிதர்ரவரு.லோக்கல அரசியல்வாதிகளுக்கு எழுதுன ஸ்டைல பாத்துட்டு பிரசிடெண்ட் ஆபிஸ்லே வேலைக்கு சேர  கூப்ட்ராங்க.அப்போ இவரும்  எமிலி@சாரா அப்டிங்கரவங்களும் லிவிங்க்-டு.கெதர்...எமிலி ஒரு டைரியை அவங்க நண்பி சம்மர் அப்டிங்கரவங்ககிட்ட தர சொல்லி குடுத்துவிடராங்க.(மண்ண தானே தன் தலைல அள்ளி போட்டுகரதுன்னா இதுதான்).அவங்களை வீட்டுல விட்டுட்டு இவரு நியுயார்க்  போயிட்ராரு.ஆபிஸ்ல ஏப்ரல்னு ஒரு பொண்ணு வேல பாக்கராங்க.அவங்களும் இவரும் பிரன்ஸ் ஆகிட்ராங்க.அதுக்கப்பரம் சம்மர பாத்து டைரிய குடுக்கராரு.இப்ட்யே கொஞ்ச நாள் போகுது.இவரோட ஆளு ஒரு நாள் இவர பாக்க நியுயார்க் வருது.வந்து கல்யாணம் பண்ணிக்கபோராங்கன்னு பாத்தா அந்த பொண்ணு இவரு பிரண்டோட லிவிங்க்-டு.கெதர்....அப்ட்யே ஷாக் ஆகி இந்த கனெக்ஷன கட் பண்ணிடுராரு வில்.அதுக்கப்பரம் சம்மருக்கு இவருக்கும் ஒரே எடத்துல  வேலை ஆகிடுது.கொஞ்ச நாள்ள அந்த சம்மர் பொண்ணு மேல ஐயா  காதலில் விழுந்தேன் :) ஆகிட்ராரு.சரி இப்பனாச்சும் மனுஷன் கல்யாணம் பன்னுவான்னு பாத்தா அந்த பொண்ணு  ஒரு பெரிய தலைவரை பத்தி தப்பா பேச்சு எழுதி குடுத்துடுது.அதுக்கு இவர பொறுப்பாக்கி ஆபிஸ்லேர்ந்து வெளில தள்ளிட்ராங்க.அந்த சம்மரும் அவங்க ஆளோட போயிடுராங்க.இப்போ நம்ம கதைல மிச்சம் இருக்கரது ஏப்ரல் மட்டும் தான்.அவங்க ஊர விட்டே போயிட்ராங்க அவங்க ஆளோட சண்ட போட்டுட்டு.
அந்த குட்டி பொண்ணு குழம்பி போகுது.விரக்தில என்ன தத்து எடுத்து வளத்திங்களாப்பானு கேக்குது பாவமா.மீண்டும் கதய  கண்டினியூ பண்ணலாம் நீயே கண்டுபிடிப்ப அப்டினு சொல்லிட்டு தொடர்ராரு வில்.
கொஞ்ச நாள் கழிச்சு  எமிலி திரும்ப வராங்க இவர மீட் பண்ண.அந்த "கஸ்மாலம் என்ன உட்டுட்டு பூட்சுனு " ஒப்பரி வெக்காம வெக்கராங்க.
சம்மர் "என் ஆளு புட்டுகிட்டான்." அப்டின்னு இவருகிட்ட வந்து சொல்லுராங்க.ஏப்ரல இவர் போயி பாக்குராரு.அவங்கள லவ் பண்ரதா சொல்லுராரு.அவங்க "நமக்குள்ள நட்பு மட்டும்தான்"நு  இவருக்கு டாடா காட்டிடராங்க.
இப்போ அந்த குட்டி பொண்ணு குழம்புது மறுபடியும்.
கடசில ஹாப்பி எண்டிங்க்....யாரு அவர் லவ் பண்ணினாரு??யாரு அவங்க அம்மானு சொல்லி முடிக்கராரு கதைய.அது சஸ்பென்ஸ்.நீங்களே பாத்துக்குங்க.....
ஆட்டோகிராப் மாதிரிதானே இருக்கு????
செரி எப்பவும் போல படிச்சுட்டு முத்திரயை குத்திட்டு போங்க...
அன்புடன்
உங்கள் தோழி கிருத்திகா

07 October, 2009

கோடு போட்ட சட்டை போட்ட பையன்-திரை விமர்சனம்





THE BOY IN STRIPED PYJAMAS...இது உலகப்போர்-2 காலத்து படம்.
ஜூக்களை எப்படி கொடுமைப்படுத்தினார்கள் ஜெர்மானியர்கள் அப்டிங்கரத ஒரு சின்ன பைய்யன வெச்சு ரொம்ப அழகா சொல்லிருக்காரு இயக்குனர்.ஒடனே டாக்குமெண்டரினு நெனக்காதிங்க.ஷங்கர் படம் மாதிரி ,இந்த படத்த பார்த்த ரொம்ப நேரத்துக்கு அப்பறம் கூட அதன் தாக்கம் குறையல

 
(ப்ருனோவொட அப்பா,அம்மா)

     
                        ப்ருனோங்கர 8 வயசு பையன் தான்  கதாநாயகன்.அவனுடைய அப்ப(ரால்ப்)  ஜெர்மனியின் போர் கம்மாண்டெண்ட்.புருனோக்கு ஒரு அக்காவும் கூட.கதையின் ஆரம்பத்துல பெர்லின்லேருந்து அவங்க குடும்பம் வேற ஒரு கிராமத்துக்கு அதாவது யூதர்களை கொல்லும் காம்ப் இருக்கர எடத்துக்கு மாறிடுது.அழுதுகிட்டே நண்பர்களுக்கு டாடா சொல்லுராரு ப்ருனோ.புது வீடு  சுத்தமாபிடிக்கல அவனுக்கு.அந்த வீட்டை சுத்தி காவல் இருக்கும்.அதோட விளயாடவும் யாரும் சின்ன பசங்க அங்க இருக்கமாட்டாங்க.பாவெல் அப்டினு ஒரு வயசானவரு(ஜூ இனத்தை சேர்ந்தவர்) அங்க எடுபிடியா இருப்பாரு.ப்ருனோ பாவெலோட பேசுனாலே அவங்க அப்பாவுக்கு சுத்தமா பிடிக்காது. இப்டி தனிமையிலே வாடிப்போரான் ப்ருனோ.
                அப்போதான் அவன் வீட்டுக்கு  பின்னாடி ஒரு கதவு இருக்கரத கண்டுபிடிக்கரான்.அதுவழியா கொஞ்ச தூரம் போனா யூதர்களை அடைத்துவைத்திருக்கும்  காம்ப் வருது.அங்கே ஷ்முயேல் அப்டினு ஒரு சின்ன பையனை சந்திக்கரான் ப்ருனோ.அவன தினமும் பாக்க வர்ரான்.எதாவது விளயாட்டு பொருளும்,அதோட அவனுக்கு சாப்பிடவும் எதாவது கொண்டு வருவான்.அம்மா ,அப்பாக்கு நைசா டேக்கா குடுக்கரான்.தினமும் இது தொடருது.ஆனா அவங்க அப்பாவோ தினமும் நூத்துக்கணக்குல யூதர்களை கொன்னுட்டு வராரு.(இது ப்ருனோக்கும் அவன் அம்மாவுக்கும் தெரியாது). ப்ருனோக்கு ஒரு நாள் அடிபட்டுடவும் பாவெல்   வந்து மருந்து  போட்டு விடுராரு.அப்போதான் அவர் சொல்லுராரு தான் ஒரு டாக்டர்னு.அப்டியே ஷாக் ஆகிடரான் ப்ருனோ.அவன் மனசுல அவங்க அப்பா செய்ரது தப்புனு மைல்டா தோண ஆரமிச்சுடுது.அவன் அம்மாவும் கண்டுபிடிச்சுடராங்க இவர் செய்ரத.அவங்களுக்கு தன் கணவர் ஜூக்களை கொல்லுரது சுத்தமா பிடிக்காது.அதனால சண்ட போட்டுட்டு வேற எடத்துக்கு குழந்தைகளை அனுப்பனும்னு சொல்லிடராங்க.
                அன்னிக்கு ப்ருனோ,ஷ்முயேல் கிட்ட தான் வீடு மாறி போகபோறதாக சொல்லுரான்.உடனே ஷ்முயேல் தன்னோட அப்பாவ காணும்,நேத்திக்கி இந்த சோல்ஜர்ஸ் வந்து கூட்டிட்டு போனாங்க.அதுக்கப்பரம் திரும்ப வரவே இல்லனு சொல்லுரான்.அப்போதான் விபரீதமா ஒரு யோசனை தோணுது ரெண்டு பேருக்கும்.ப்ருனோ அந்த காம்ப்க்குள்ள வந்து அவன் அப்பாவ தேடிக்குடுக்கரதாக சொல்லுரான்.அவனுக்கும் ஒரு கோடு போட்ட சட்டை தர சொல்லுரான்.ஷ்முயேலும் போய் கொண்டுவந்து தரான்.ப்ருனோவும் காம்ப்குள்ள போய்ட்ரான்.ரெண்டு பேரும் தேடிக்கிடே இருக்கும்போதே அந்த எடத்துல இருக்கர யூதர்களை எல்லாம் கொல்ல  நாஜிவீரர்கள் இழுத்துட்டு போராங்க.அதுல ரெண்டு பேரும் மாட்டிக்கராங்க.அந்த பக்கம் அவங்க அம்மா,அப்பா,அக்கா எல்லாரும் அவன தேடிக்கிட்டு இந்த காம்ப் வரை வந்துடராங்க.கடசில யூதர்களை கொல்லர காட்சி ரொம்ப கொடுமயா இருக்கும்.ஒரு சின்ன ரூம்ல எல்லாரயும் நிக்கவெச்சு விஷவாயுவை அனுப்பராங்க உள்ள.கதவையும் சாத்திடராங்க.அப்டியே அந்த சாத்தின கதவுகளோட படம் முடியுது.
                 கண்டிப்பா இந்த படத்த பாருங்க எல்லாரும்.கண்டிப்பா ஒரு எடத்துலயாவது கண்ணுல குளம் தேங்கி நிக்கும்.அட்லீஸ்ட்  கொஞ்சம் வருத்தமாவது படுவிங்க.நிறைய்ய டுவிஸ்டு வரும் படத்தின் நடுவில.அந்த பாவெல்ல தண்ணிய கீழ கொட்டிட்டாருன்னு  அடிச்சே கொன்னுடுவாங்க.அதுமட்டும் இல்ல இன்னும் ஏகப்பட்ட விஷயங்கள்.
படத்த பார்த்துட்டு எப்டி இருக்குதுனு கண்டிப்பா சொல்லுங்க.அதோட வோட்டு பிலீஸ் :) ஹி ஹி

23 September, 2009

த ப்ரபோசல்-விமர்சனம்


                                                               மார்கரெட்,ஆண்டுரூ

போன பதிவிலே நான் சொல்லிருந்தது போல (படிக்காதவங்களுக்கு இதோ ) இந்த பதிவுல த ப்ரபோசல் அப்டிங்கர படம் பத்தி தான் நான் எழுதப்போரென்..
அதுக்கு முன்னாடி ,,மின்னலே,நள தமயந்தி போல ரொம்ப சாஃப்டாக வந்த படங்கள் உங்களுக்கு பிடிக்கும்னா நீங்க கண்டிப்பா பார்க்கவேண்டிய படம்.அதோட யூத்(நாங்கதானுங்கோ!!!!) மக்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.
கதை இதுதான்..
மார்கரெட் டாடியா ஒரு புத்தக பப்லிஷெர் கம்பெனிலே எடிட்டரா இருப்பாங்க.ரொம்ப  கண்டிப்பானவங்க.ஆண்டுரூ பாக்ஸ்டன் அங்கே  சப்-எடிடர் மற்றும் மார்கரெட்டின் எடுபிடி(மத்தவங்க மார்கரெட் கிட்டயே வரமாட்டாங்க)..மார்கரெட்ட கண்டா அந்த ஆபிசே நடுங்கும்.எதவது வெலை செய்யலனா சீட்டகிழிச்சு அனுப்பிகிட்டே இருப்பாங்க.ஆண்டுரூவுக்கு அந்த பப்லிஷர்ஸ்ல எடிட்டர் ஆகனும்ங்கரதுதான் கனவு.அதனாலே மார்கரெட் ஏவர வேலை எல்லாம் பொறுமையா செய்வாரு.மார்கரெட் அங்கே  வேலை பாக்கர இன்னொரு எடிட்டரான பாப் அப்டிங்கரவர ஒரு சின்ன  வேலய தப்பா செஞ்சதுனால  வேலய விட்டு தூக்கிட்ராங்க..அடுத்த நாளே அவங்க  citizenshiptime  expire ஆகிடுது..அதனாலே அவங்கள கெளம்ப சொல்ராங்க பப்லிகேஷன் ஓனர்.
                          அடுத்த எடிட்டரா பாப் தான் வருவாருனு  சொன்னதும் இவங்களுக்கு ஈகோ தடுக்குது.அதனால நம்ம ஆண்டுரூவ கூப்பிட்டு நான் இவரைத்தான் கல்யாணம் பண்ணிக்க போரென்.இவரு அமெரிக்கர்தான்.அதனால எனக்கு இங்கே citizenship குடுத்துடுவாங்கனு  ஒரு பாறாங்கல்ல தூக்கி ஆண்டுரூ தலைலே  "பொட்"னு ஒடச்சுட்ராங்க.ஆபிசே "ஆண்டுரூ எங்க்ளுக்கு உன்னை பாத்தா பாவமா இருக்ககுனு"கைப்புள்ள ரேஞ்சுக்கு சொல்லுராங்க.இமிகிரேஷன்ல போய் நாங்க கல்யாணம் பண்ணிக்கரோம்னு அப்ளை பண்ராங்க.அப்போ அந்த ஆபிசர்  நீங்க ஏமாத்துரீங்கனு தெரிஞ்சா மார்கரெட்ட  ஊர விட்டு வெரட்டிடுவோம்,ஆண்டுரூ 5 வருஷம் ஜெய்ல்,25ஆயிரம்டாலர்  அபராதம் கட்டணும்னு சொல்லிடுராரு.அதோட உங்களை கண்காணிப்போம்.நீங்க உண்மை சொல்ரிங்கனு எப்போ நாங்க நம்புரோமோ அப்போ  approve செஞ்சுடுவொம்னு சொல்லிடுராரு.
          ஆண்டுரூ கிட்டத்தட்ட  ஒரு வாரமா அவரோட பாட்டியோட 90த் பிறந்த நாளுக்கு ஊருக்கு போகனும்னு  லீவு கேட்டு கெஞ்சுராரு.அப்போலாம்  நோ நோ சொல்லிட்டு அந்த ஆபிசர் முன்னாடி இவங்க பாட்டி பிறந்த நாளுக்கு நாங்க "சிட்கா" போரொம்,அங்கே வந்து எங்கள கண்காணிச்சுக்குங்க அப்டினு சொல்லிடுராங்க.வெளில வந்து ஆண்டுரூ "என்ன வெச்சு காமெடி கீமெடி பண்ணலயேங்கர" ரேஞ்சுக்கு இவங்ககிட்ட பேசுராரு.அப்பொவும் நீ இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டா  நீயும் எடிட்டர் ஆகிடலாம்,கொஞ்ச நாள்ல நான் உன்னை டைவர்ஸ் பண்ணிடுவேன்.நீ ஒத்துக்கிட்டுதான் ஆகணும்னு மிரட்டுராங்க.ஏற்கனவே நொந்து போயி உக்கார்ந்து இருந்த நம்ம ஆண்டுரூ செத்து சுண்ணாம்பா ஆயிட்ராரு இதை கேட்டுட்டு.
                            கதையே இப்போதான் சூடு பிடிக்குது..இப்போ ஒவர் டு சிட்கா.அதுதான்  ஆண்டுரூ தங்கி இருக்கர கிராமம் (மாதிரி).அங்கே  ஏகப்பட்ட காமெடி நடக்குது.பாட்டி திடுதிப்னு என் பிறந்த நாள் அன்னைக்கே நீங்க கல்யாணம் பண்ணிக்கனும்னு சொல்லிட்ராங்க.
அந்த குடும்பமே விழுந்து  விழுந்து கவனிக்குது.அதுல பாருங்க கொஞ்ச கொஞ்சமா மார்கரெட் ஆண்டுரூவே  லவ் பண்ண ஆரமிச்சுடுராங்க.கடைசிலே இவங்கள  சேர்த்து வெய்க்கரது பாட்டி தான்..ஆன அதுக்குள்ள மார்கரெட்  ஊர விட்டு போய்டுவாங்க..அதுக்கப்பறம் என்ன ஆகுதுங்கரத நீங்களே பார்த்து தெரிஞ்சுக்குங்க...
படம் ரொம்ப நல்லா இருக்கு...
வோட்டு போடுங்க  ஐயா :)

15 September, 2009

குயிக் கன் முருகனுக்கு "கோவிந்தா கோவிந்தா "

நம்ம லாகெட் லவ்வரொட

கு.க.மு,ரைஸ் ப்லேட் ரெட்டி

இது ச்சும்மா :)


(முன் குறிப்பு)
குயிக் கன் முருகன் (கு.க.மு) படத்த பார்த்தவர்கள் இதை படிக்க வேண்டாம்..பர்க்காதவர்கள் படத்தை பார்க்க வேண்டாம்(தனியாக பார்ப்பது பிபியை வரவழைக்கும்)இத படிங்க ...படிச்சுட்டு என்ன பன்ரதுனு முடிவு பன்னிக்குங்க..
கு.க.மு டிரைலர் பார்த்துட்டு அசந்து பொய்ட்டென்...ரொம்ப நாள் கழிச்சு ஒரு நல்ல நகைச்சுவை படம் பார்க்கலாம் நு நெனச்சென்...
அதுவும் ஓம் ஷாந்தி ஓம் Mind it டயலாக் கேட்ட ஒடனெயே படம் நல்லாருக்கும்னு ஒரு கற்பனை பன்னிட்டேன்(யானைக்கும் அடி சறுக்கும்:( )..நான் ரொம்ப எதிர்பார்த்ததாலயோ என்னவோ படம் அவளவா என்னை கவரவில்லை...
அதுல வர்ர காரெக்டெர்ஸ் பேரு தான் காமெடியா இருக்கு
ரைஸ் ப்லேட் ரெட்டி--நாசர்
மாங்கோ டாலி--ரம்பா
லாகெட் லவர்--அனு மேனன்(கொஞ்ச நேரம் தான் வருவாங்க)
ரௌடி எம்.பி.ஏ--ராஜு சுந்தரம்
கன் பௌடெர்--ஷன்முகராஜன்
கதை(ரொம்ப யொசிக்கனும்) அப்டினு பார்த்தால் இதுத்தான்...
நம்ம கு.க.மு பெரிய துப்பாக்கி சுட்ரவர்...ஒலிம்பிக்ல தங்கத்த குமிக்கர அளவு செமயா குறி பாத்து சுடுவாரு..அவரு cow boy வேஷம் கட்டிருக்காரு...அசைவம் அதாவது மாடுகறி சாப்ட்ரவங்கள பிடிக்காது இவருக்கு...அதனால இவர் அதை எதிர்த்து சைவ சங்கத்த ஆரமிச்சு அதுக்கு தலைவர் ஆகிடுவாரு...ஏன் ஆகராரு???அதான் கதை(புரியலல்ல????? படத்த பார்தா ஒன்னுமே புரியாது :) )
கதைல(அப்டினு ஒன்னே இல்ல) ஹீரொனு இருந்தா வில்லன் ,ஹீரொயின் ரெண்டு பேரும் வந்துதானே ஆகனும்...இந்த படத்துல ரெண்டு ஹீரொய்ன்...ரம்பா கு.க.மு
நாசர் சைவ ஓட்டள்களை எல்லம் அசைவமா மாத்துராரு..அத எதிர்க்கராரு நம்ம கு.க.மு...
நாசர் மெக்.தோசா(mc.donalads மாதிரி பொம்மய நிக்கவெக்கரேன்னு சொல்லி ஒரு டம்மி ரௌடிய நிக்க வெச்சது சூப்பர்) அப்டினு ஒரு கடை ஆரமிச்சு அதுல தோசை சுட நெரய குடும்ப தலைவிகள புடிசிகிட்டு வராரு நாசரின் உதவியாளரான ராஜு சுந்தரம்...ஹீரொவொட அண்ணன கொல பண்ணிஅண்ணீய கடதிடிராரு ராஜு..அவங்கள கண்டுபிடிச்சு ,(அதுக்கு ரம்பா வெர உதவி பன்ராங்க) அனியாயத்த அழிக்கரார்..படத்துல பெருசா கொமெடி இருக்க மாதிரி எனக்கு தெரில...கன் பவுடர் வர்ர எடங்கள் தான் பரவாய்ல்ல...சில வசனங்கள் குபீர்னு சிரிப்ப வரவெச்சுது...அதுல முதல் இடம் நம்ம கு.க.மு ஆங்கிலம் பேசர இடம்தான்
அவரொட சில வசனங்கள்---
==>leave the ladies i say
==>sorry for the thontharavu
==>remove the guns i say(அதாவது டுப்பாக்கிய கீழ ழ ழ ழ போடுனு அர்த்தம்)
அதொட அவரும் கன் பௌடெரும் பேசிக்கர ஒரு வசனம் தான் படத்துலயே சூப்பரருருருருருரு

கு.க.மு--i will teach u hw to behave

க.ப--nee dont worry pannikatha machan
nan corres la paathukaren

அதுக்கப்ரம் ஒரு சமயல்காரரா வர்ரவர் சொன்னது இன்னும் செம...
தமிழ்னாடுனா அவனுக்கு தெரிஞ்சது இதெல்லாம் தானாம்
ஃபில்டர் காபி,மசாலா தோசை,(கவனிக்க) விஜயகான்த் படம் :)!!!!!!!!!!!!!!!
ரொம்ப கவனிச்சு பார்க்கனும் படத்த ...அப்பொதான் லேசா அங்கங்க சிரிப்பு வரும்...
அதோட படத்துல இன்னொரு கொலை என்னனா டப்பிங்க்..
ஜாக்கிசான்க்கு பேசரவங்களை பேச வெசுருந்தா இனும் நல்லா இருந்துருக்கலாம்னு அடியேனுடய எண்ணம்..

மொத்ததுல கு.க.மு==>காமெடி ப்டம்னு சொல்லிட முடியாது..
நம்ம லொள்ளு சபா குழு + சந்தானம் செஞ்சுருந்தா படம் எங்கயோ பொய்ருக்கும்..
இபோ குட எங்கயோ தான் பொயிருக்கு...(எங்கேனு தான் தெரியல)
க.க.கொ.போ(கருத்துக்களை கண்டிப்பாக கொட்டிவிட்டு போகனும்)

26 August, 2009

Father of the bride part -1

Bride and father


Nadula irukara onan than wedding planner


Father of the bride part -1

ஒரு அருமையான திரைப்படம்.....
அபியும் நானும் படம் எல்லாரும் பாத்துருபிங்க ... எரகொறைய இந்த படத்தோட கதைய ஒட்டி தான் எடுதுருகாங்க .....
ஜார்ஜ் பாங்க்ஸ்- நீனா பாங்க்ஸ் இவங்களோட பொண்ணுக்கு கல்யாணம் பண்ணலாம்னு அவங்க முடிவு எடுகரதுகு முன்னாடி அவளே ஒரு பையன செலக்ட் பண்ணிடற(ஜான் மெக்கன்சி ) ஜார்ஜ் மனசில பெரிய குழப்பம்.
1)நம்ம பொண்ணுக்கு கல்யாணம் பண்றதுக்கு என்ன அவசரம்...அவ ரொம்ப சின்ன பொண்ணு
2)நாமளோ மிடில் கிளாஸ்..அவங்களோ அப்பர் கிளாஸ் ...எப்டி ஒத்து போகும்..
அதோட பொன்னை பிரியபோறோம் அப்டிங்கற சோகத்துல அவர் தடுமாறுகிறது சூப்பர்...நீனா பாங்க்ஸ் எல்லாத்தையும் எடுத்து
சொல்லி அவர நார்மல் ஆகி கல்யாணமும் முடியுது.... கத இவலவுதான்....
ஆனா நடுவுல பல பல காமெடி நடக்குது...
அந்த ஊருல வெட்டிங் ப்லன்னேர் அப்டின்னு ஒருத்தன் வரான்.... தெணறி போகிறார் நம்ம ஜார்ஜ் ...என்ன மொழி பேசறார் அப்டினே புரியல... அனா காச செமையா பிடுங்குவான்
ஜார்ஜ் மாப்ள வீட்டுக்கு டெஸ்ட் பண்றேன் பேர்வழினு போயி அங்க நாய் கிட்ட மாட்டி படாத பாடு படறார்....
அதுக்கப்றம் கடைசி சீன ல பொண்ணு கைய புடிச்சிகிட்டு நடந்துபோரறு பாருங்க... சூப்பர்......எல்லா எடத்திலும் பின்றாங்க... ஜார்ஜ் கு பையனா நடிகுற குட்டி பயன் கூட செம....
family centiment,comedy படங்கள் பாகுரவங்களுக்கு இந்த படம் கண்டிப்பா பிடிக்கும்
பாத்துட்டு எப்டி இருந்தது அப்டின்னு கண்டிப்பா சொலுங்க
part 2 pathium elutharen.....

21 August, 2009

Love Aaj Kal

ஒரு நேர்மையான காதல்கதையைப் படமாகப் படைத்தமைக்கு இயக்குனர் இம்தியாஸ் அலிக்கு ராயல் சல்யூட்!

ஜெய்(சைஃப் அலி கான்)யும், மீரா(தீபிகா படுகோனே)வும் லண்டனில் சந்தித்து நண்பர்களாகிறார்கள். Again, நண்பர்கள்தான். வேறு காதலோ - கத்திரிக்காயோ எதுவும் அவர்களுக்கு துளிர்க்கவில்லை. அவ்வப்போது காண்பிக்கும் காட்சிகளின் மூலம் மீராவுக்கு காதல் உணர்வு துளிர்ப்பதைச் சொல்கிறார்கள். ஆனால் ஜெய் ஒரு மாடர்ன் இளைஞனாகத் திரிகிறான். ஆர்க்கியாலஜியில் சாதிக்க இந்தியா புறப்படுகிறாள் மீரா. அவ்வளவு தொலைவிலிருந்தெல்லாம் நாம் நண்பர்களாக இருகக்வோ (Boy Friend -Girl Friend) நம் உறவைத் தொடரவோ முடியாதென முடிவு செய்து BREAKING PARTY கொடுத்துக்கொண்டு பிரிகிறார்கள். இந்த BREAKING PARTY சமபந்தப்ப்ட்ட பேச்சு வரும்போதே தீபிகாவின் முக மாற்றத்தை வைத்து இது காதலா வெறும் நட்புதானா என அவள் குழம்பியிருப்பதை பார்வையாள்ர்களுக்கு உணர்த்துகிறார் இயக்குனர்.

மீரா கிளம்பும்போது வழியனுப்பிவிட்டு அமர்ந்திருக்கும் ஜெய்யிடம் ரிஷி கபூர் தனது காதலைப் பற்றி சொல்ல ஆரம்பிக்கிறார். இங்கே படம் சூடுபிடிக்க ஆரம்பிக்கிறது. இளமைக் கால ரிஷிகபூராக சைஃப் அலிகானையே காட்டியிருக்கிறார்கள். அவரது காதலியாக வருபவர் அவ்வளவு அழகு.

இங்கே ஜெய்க்கு இன்னொரு கேர்ள் ஃப்ரெண்ட் கிடைக்கிறாள். அங்கே மீராவுக்கு விக்ரம் என்றொரு பாய் ஃப்ரெண்ட் கிடைக்கிறான். நடுநடுவே ஜெய்யும், மீராவும் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்கிறார்கள். மீராவுக்கு அந்த பாய் ஃப்ரெண்டுடன் திருமணம் நிச்சயமாகிறது. திருமணத்திற்கு முதல் நாளிரவு ஜெய்யிடம் உனக்கேதும் காதல் உணர்வே வரவில்லையா என்பது போல மீரா கேட்க, ஜெய்க்கு கோவம் வருகிறது. ஒன்றுமேயில்லை.. நீ திருமணம் செய்து கொண்டு நன்றாக இரு.. எனக்கப்படியேதும் கவலையில்லை என்கிறான்.

திருமணம் முடிந்து விக்ரமுடன் கட்டிலில் இருக்கும்வேளையில் ஜெய் இல்லாமல் தன்னால் இருக்க முடியாது என்றுணர்ந்து மீரா கணவனிடம் சொல்லிக் கொண்டு ஜெய்யைப் பார்க்கப் போகிறாள். பாதி வழியில் ஜெய்க்கு அலைபேச அவனோ தனது கனவு ப்ராஜெக்ட் ஒன்றிற்காக சான்ஃப்ரான்ஸிஸ்கோ கிளம்புவதைத் துள்ளலோடு சொல்ல, அவனுக்கு தன்மீது எந்த வித ஈர்ப்பும்மிலை என்று புரிந்து கொண்ட மீரா திரும்புகிறாள். (எங்கே திரும்பிச் சென்றாள் என்று அப்போது சொல்லாமல் விட்டு - பிறகு சொன்ன இடத்தில் இயக்குனர் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார்!)

ஜெய்க்கோ, வேலையில் சேர்ந்தபிறகு எல்லாம் ROUTINE ஆன வெறுப்பில் இருக்கும்போது மீரா பற்றிய நினைவு வருகிறது. பிறகு.... என்ன நடந்தது என்பதை திரையில் காண்க!


இயக்குனருக்கு பல இடங்களில் கைதட்டத் தோன்றுகிறது. தற்போதைய காதலையும், ரிஷிகபூரின் இளமைக்காதலையும் மாறி மாறி காண்பிக்கும் யோசனை, BLACK COFFEE-ஐயும் ஒரு கேரக்டராக உலவ விட்டது, ஜெய்யின் கனவு வேலை கிடைத்ததும் அவன் வழக்கமான வேலைச் சூழலில் உற்சாகமிழந்து காணப்படுவதைக் காண்பித்த விதம்... அனைத்தும் சபாஷ்!

வசனங்கள் - அற்புதம்!

உணர்வின்றி அழகுக்காக காதலை ஓகே செய்வதோ, பணத்துக்காக ஓகே செய்வதோ வேண்டாம். உள்ளுக்குள் அந்த ஃபீலிங் இல்லாமல் காதலிக்கவே காதலிக்காதீர்கள் என்று சொன்னமைக்காக இந்தப் படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்!