20 September, 2009

திரை விமர்சனம் ஆங்கிலம்-2


அலாங்க் கேம் பாலி..(2004) (Along came polly)..அப்டிங்கர ஒரு படத்த சமீபத்தில் பார்த்தேன்..எல்லாரும் ஆங்கில பட விமர்சனம் எழுதரிங்களே...நாமளும் எழுதுவொம்னு நெனச்சு தான் 1(engilisu) படத்துக்கு எழுதினேன்..எத்தன பேரு படிச்சிங்கனுகூட பாக்காத அடுத்த கடமைய செய்ய களத்துல இறங்கிட்டென்...சரி இப்போ நிகழ்ச்சிக்கு போகலாமா??
ரொமாண்டிக்+காமெடி படங்கள் பிடிக்கரவங்களுக்கு கண்டிப்பா இதயும் பிடிக்கும்
ரூபென் ஃபெஃபர்,பாலி ப்ரின்ஸ்,லிசா க்ராமர் இவங்க 3 பேருக்குள்ள நடக்கர கதைதான் இந்த படம்..
ரூபென் ரொம்ப சாஃப்டான ஆளு.ரொம்ப சுத்தமா இருக்கனும்,எல்லா அமேரிக்கர்கள் மாதிரி இல்லாம ஒரு கல்யாணம் (ஒண்ணே ஒண்ணூ) தான் பண்ணனும் அப்டினு நெனைக்கரவரு.ஒரு மிகப்பெரிய்ய இன்சூரன்ஸ் நிறுவனத்துனல Risk analyser வேலை பாக்குராரு. நம்ம அமேரிக்கஅம்பி மாதிரினு வெச்சுகுங்களேன்..அவரு லிசாங்கர பொண்ண லவ் பண்ணி கல்யாணம் பன்னிக்கராரு.லிசா ஒரு house booking agent.இவரு வீடு வாங்க அவங்ககிட்ட பொகும்பொது ரெண்டு பேருக்கும் பிக் அப் ஆகிடுது.
ஹவாய்க்கு ஹனிமூன் போராங்க ரெண்டு பேரும்.ஆன அந்த பாதகத்தி லிசா அங்கே வேர ஒரு பைய்யன பிக் அப் பண்ணிட்டு ஓடிபோகுது...இவரு தேவதாஸ் மாதிரி தாடி வெச்சுக்காம ஆனா சோகத்துல ஒடிஞ்சு போய் வீட்டுக்கு வராரு.அப்பதான் இவரொட ஆத்ம நண்பன் லீலண்ட் ஆறுதலா இருக்கும்னு(!!!!) ஒரு பார்டிக்கு கூட்டிட்டு போராரு.அங்கே இவரு பாலிய மீட் பண்ணராரு.பாலியும் ரூபென்னும் ஸ்கூல்ல ஒண்ணா படிசவங்க.பாலி ஸ்கூல் நாட்கள்ல செம ஷார்ப்.தனக்கு இந்த பொண்ணு ஒத்து வரும்னு நெனச்சு அவளோட நல்ல பழக ஆரமிக்கராரு ரூபென்.கொஞ்ச நாள் கழிச்சுதான் தெரியுது பாலி ஒரு ப்லே கேர்ள்னு...(விளயாட்டு பிள்ளை)
ஆனாலும் பரவாலனு அவளுக்காக என்னனமோ கொமெடி பன்ராரு.ரெண்டு பேரு காரெக்டரும் அப்டியே எதிர்-புதிர்.பாலி சல்சா டான்ஸ் கிளப்க்கு கூட்டிட்டு போவாங்க ரூபென..இவருக்கு ஆடவே தெரியாம முழிப்பார்.அப்பரம் அவங்களுக்காக சல்சா கத்துகிட்டு காமெடி பண்ணுவாரு.காரமா சாப்பிட்டா இவருக்கு ஒத்துக்காது.ஒரு ரெஸ்டாரெண்ட்ல போய் காரசாரமா சாப்பாடு வாங்குவாங்க பாலி.அத வேணாம்னு சொல்ல முடியாம தின்னுட்டு பாத்ரூம்ல போய் ஒரு அலம்பல் பண்ணுவாரு பாருங்க..மின்னலே மாதவன் ரீமா சென்னுக்காக சிக்கென் சாப்டு முழிப்பாரே..அந்த காட்சி இதுலருந்து உருவுனது தான்..அதோட இயற்கைனு ஒரு படம் வந்துதுல்ல அதுகுட இதுலேருந்து உருவுனதா இருக்கலாம்.(ஒரு மாற்றம் அதுல 1 பொண்ணு,2 பையன்)..இதேபொல
ஏகப்பட்ட காமெடி நடக்குது.பாலியும் ஒகே சொல்லர நெலமைக்கு வரும்போது லிசா நடுவுல வந்துடுராங்க அந்த பையன புடிக்கலயாம்.ரூபென் தான் வாழ்கைனு ஓடி வந்துட்டாங்களாம்....இத பாத்து பாலி இந்த கல்யானம்லாம் நமக்கு ஒத்து வராதுனு சொல்லிட்ராங்க.(இல்லனாலும் வேணாம்னு சொல்ரதாதான் இருந்தாங்க..அவங்க காரெக்டரயே புரிஞ்சுக்கல ரூபென் :) )
ரூபென் தவிக்கரார் என்ன பண்துனு தெரியாம..
கடசில யாரோட வாழ்க்கைனு முடிவு பண்றாரு??அதான் எண்ட்...அதுல பெரும்பங்கு வகிப்பது அவரொட நண்பன் லீலண்ட்.
யாரா இருக்கும்??
சரியான பதில் சொன்ன உங்க அடுத்த பதிவுக்கு நான் 1 வோட்டு பொடுரேன்..
தப்பா இருந்தாலும் 1 வோட்டுதான்......
நீங்க சொன்னா மட்டும் போதும்....
இத படிச்சா மட்டும் போதும்..
அடுத்ததாக இந்த பகுதியில் இடம்பெறப்போகும் திரைப்படம் "த ப்ரபோசல்"
துண்டு போட்டு எடம் புடிச்ச்டேன்...யாரும் எழுதக்கூடாது....
நெஷ்ட்டு மீட் பண்ணுவோம்...
வர்ட்டா

2 comments:

  1. நல்ல படம்... படத்தோட பெயரையே பதிவோட தலைப்பா வச்சுருக்கலாம் னு தோணிச்சு...
    அப்புறம் இப்படி பெரிய பெரிய பத்தியா ( paragraph a ) எழுதாம சின்ன சின்ன பிரிச்சு எழுதிருக்கலாம் னு தோணிச்சு...
    சின்ன ரோசன தான்... ஏத்துக்கறதும் ஏதுக்கததும் உன்ர இஷ்டம் அம்மணி...!!!

    ReplyDelete
  2. ஏனுங்கொவ்
    உங்க பேச்ச கேட்டு தானுங்கொவ் ஒரு தப்பு இல்லாம க(கு)ஷ்ட்டப்பட்டு அடிச்சுருக்கேன் :(
    பேர கூட மாத்திட்டேன்.
    அதனால இதயும் கண்டிப்பா கேக்கரேன்..
    படத்த பாத்திங்களாக்கும்????

    ReplyDelete