30 September, 2009

போலாம் ரைட்...



இந்த பதிவை ஒரு இனிப்பான விஷயத்தோடு ஆரமிப்போமே...
"பாஸ் "ஒட  துப்பாக்கியிலே இன்னொரு தோட்டா  சேர்ந்துள்ளது.தமிழ் நாடு  அரசு விருதுகளில சிறந்த நடிகர் விருது கெடச்சுருக்கு பாஸ்க்கு...பேர கேட்டாலே சும்மா அதிருதில்ல.....நம்ம கமல்ஜியும் விருது வாங்கிருக்காரு..மொழி படத்துக்காக சிறந்த நடிகை விருதை திருமதி.ஜோதிகா சூர்யா அவர்களும்,வாரணம் 1000  படத்துக்காக சிறந்த நடிகர் விருதை திரு சூர்யா அவர்களும் வாங்கிருக்காங்க...
                   சரி இப்போ விசயத்துக்கு வருவோம்....நான் எழுதனும்னு நெனச்சது கலைஞர் டீவில விடுமுறை கொண்டாட்டத்த பத்தி...மத்த சானல் எல்லாம்  சரஸ்வதி பூஜயும் விஜ்யதசமியும்  கொண்டாடுரப்போ இவிங்கே வித்தியாசமா விடுமுறைய கொண்டாடுராங்க...ஆனா கடுமையான வேலைபளுவினால் (கொட்டிகரதுதான் :) !!!!!!!!!!!!!)சர்யான  நேரத்தில் அதை பற்றி  எழுத முடியவில்லை.அதனால் சின்னதாக முடித்துவிட்டேன்.


                எழுத எக்கச்ச்ச்ச்ச்க்கமான விஷ்யங்கள் இருக்கு...இப்போ  என் மனசுல நின்ன பஸ் கண்டக்டர்  பத்தி எழுதப்போரேன்.என் உறவுக்காரங்க வீட்டுலேருந்து வந்துகிட்டே இருந்தேன்.பஸ் ஸ்டாண்டிலே எகச்சக்க கூட்டம்.எப்டியோ துண்ட போட்டு எடத்த புடிச்சு ஏறிட்டேன்.புளி மூட்டை மாதிரி கூட்டம்.அதுல பாருங்க லேச ட்ரைவர் கொழம்பிட்டாரு.
15 நிமிஷம் போனதுக்குஅப்பறம் தான் தெரியுது  "ரே ரே" "விஷ் விஷ்"(விசில் சத்ததை கற்பனை செய்யவும்) சொல்ர  ஆள காணும்..வண்டிய ஓரமா நிறுத்திட்டு  வழி மேல விழி வைத்து காத்திருந்தோம்.ஒரு 15 நிமிஷம் கழிச்சு ரகளயா எண்ட்ரி விட்டாரு கண்டக்டரு.(படம் டி.வி.டி வாங்க போயிட்டாராம். என்னே கடமை :)!!!!!).ட்ரைவரை செம காச்சு...செரினு  டிக்கெட் குடுத்து முடிச்சுட்டு படத்த போட்டா  அந்த டி.வி.டி ப்லே  ஆகல...பஸ் மொத்தமா செம சிரிப்பு.பாட்டு சீ.டி ஒன்ன எடுத்து  போட்டாரு."சட்ட கிழிஞ்ஜுருந்தா தச்சு முடிச்சுடலாம்" அப்டினு  சிச்சுவேஷன் சாங்கு ஓடிச்சு.அப்போவே அலர்ட் ஆகிருக்கணும்.அடுத்தது ஒரு 7.5(எழரை) பஸ்லே ஏரிச்சு
14 ருவ டிக்கெட்டுக்கு 20 ரூவாய குடுத்துடு 100 ரூவா குடுத்தேன்னு ஒரு புருடாவ உட்டுது.அதுமட்டும் இல்ல...பளார்னு கண்டக்டர் கன்னத்துல ஒரு அறை..அரண்டுட்டாங்க எல்லாரும்.அப்பறம் சுதாரிச்சு பஸ்ல இருக்கர சில ஆசாமிகள் எல்லாம் அவர செம காட்டு காட்டி பக்கத்துல இருக்கர போலிஸ் நிலயத்திலே கொண்டு பொய் விட்டுட்டாங்க..இத்தனையும் தாங்கிகிட்டு அந்த கண்டக்டர் சிரிச்சாரு பாருங்க ஒரு சிரிப்பு...இதே மாதிரி பல விஷயங்களை நீங்களும்சந்திச்சுருபிங்க..அதையும எழுதுங்க..கண்டக்டர்னு சொன்ன ஒடனே ரஜினியை பத்தியும் எழுதனும்னு தோனிச்சு.அதனால அடுத்த பதிவு(கூடிய சீக்கிரத்தில்) அவரைபற்றி தான்.(கோபி உங்களுக்காகத்தான்)

30 comments:

  1. //போலிஸ் நிலயத்திலே கொண்டு பொய் விட்டுட்டாங்க..இத்தனையும் தாங்கிகிட்டு அந்த கண்டக்டர் சிரிச்சாரு பாருங்க ஒரு சிரிப்பு...//

    உண்மையிலேயே அவரு ரொம்ம்ம்ம்ப......நல்லவருங்க....

    நல்லாருக்கு உங்களின் காமெடி பீஸ்......

    ReplyDelete
  2. அடுத்த பதிவு ரஜினி பத்தியா..காத்திருக்கிறோம்

    ReplyDelete
  3. அடுத்த பதிவை நானும் எதிர்பார்த்துக் காத்திருகிறேன்...

    ReplyDelete
  4. அனுபவம் பேசுகிறது காமெடியா நல்லாருக்கு

    ReplyDelete
  5. கண்டக்டர்னாலே ரஜினிதானா?

    ReplyDelete
  6. \\"சட்ட கிழிஞ்ஜுருந்தா தச்சு முடிச்சுடலாம்" அப்டினு சிச்சுவேஷன் சாங்கு ஓடிச்சு.அப்போவே அலர்ட் ஆகிருக்கணும்.அடுத்தது ஒரு 7.5(எழரை) பஸ்லே ஏரிச்சு\\

    :-))

    ReplyDelete
  7. //"பாஸ் "ஒட துப்பாக்கியிலே இன்னொரு தோட்டா சேர்ந்துள்ளது.தமிழ் நாடு அரசு விருதுகளில சிறந்த நடிகர் விருது கெடச்சுருக்கு பாஸ்க்கு..///

    "த‌லைவ‌ரின்" தொப்பியில் ம‌ற்றொரு இற‌கு... த‌லைவ‌ரை உங்க‌ளுட‌ன் இணைந்து நானும் வாழ்த்துகிறேன்...

    அப்ப‌டியே விருது வாங்கிய‌ க‌ம‌ல்ஜி, சூர்யா, ஜோ உள்ளிட்ட‌ அனைவ‌ருக்கும் வாழ்த்துக்க‌ள்...

    //கடுமையான வேலைபளுவினால் (கொட்டிகரதுதான் :) //

    அட‌ட‌ட‌ட‌.... அச‌த்துது உன் ஸ்டைல்... ஏப்ப‌ம்..ஏப்ப‌மே...ஏப்ப‌ம‌ஸ்யே..ஏவ்..ஏவாய‌ ந‌ம‌...

    //"ரே ரே" "விஷ் விஷ்"(விசில் சத்ததை கற்பனை செய்யவும்) சொல்ர ஆள காணும்..//

    ய‌ப்பா... காது கிழியுது....

    //படம் டி.வி.டி வாங்க போயிட்டாராம். என்னே கடமை :)//

    இருக்காதா பின்ன‌... உங்க‌ எல்லாரையும் குஷிப்ப‌டுத்த‌ வேணாமா??

    //."சட்ட கிழிஞ்ஜுருந்தா தச்சு முடிச்சுடலாம்" அப்டினு சிச்சுவேஷன் சாங்கு ஓடிச்சு.//

    அட‌... இது த‌லைவ‌ர் ந‌டிச்ச‌ "வேலைக்கார‌ன்" ப‌ட‌ப்பாட‌ல் (பெத்து எடுத்தவ தான்..)ஆச்சே...

    //இத்தனையும் தாங்கிகிட்டு அந்த கண்டக்டர் சிரிச்சாரு பாருங்க ஒரு சிரிப்பு.//

    அட‌... தெய்வீக‌ சிரிப்பு ஐயா உங்க‌ சிரிப்பு...ஹி...ஹி...ஹி...

    //கண்டக்டர்னு சொன்ன ஒடனே ரஜினியை பத்தியும் எழுதனும்னு தோனிச்சு.அதனால அடுத்த பதிவு(கூடிய சீக்கிரத்தில்) அவரைபற்றி தான்.(கோபி உங்களுக்காகத்தான்)//

    த‌லைவ‌ரை ப‌த்தி அடுத்த‌ ப‌திவா... சூப்ப‌ர்... வெயிட் ப‌ண்றேன் கிருத்திகா... என‌க்காக‌ எழுத‌ போறீங்க‌ளா... அட‌... ஆச்ச‌ரியமா இருக்கே... ச‌ரி... ச‌ஸ்பென்ஸ் தாங்க‌ முடிய‌லியே...

    சீக்கிர‌ம் எழுதுங்க‌ கிருத்திகா...

    ReplyDelete
  8. ////கண்டக்டர்னு சொன்ன ஒடனே ரஜினியை பத்தியும் எழுதனும்னு தோனிச்சு.அதனால அடுத்த பதிவு(கூடிய சீக்கிரத்தில்) அவரைபற்றி தான்.(கோபி உங்களுக்காகத்தான்)//
    /

    பிச்சைக்காரன் , பிக்பாக்கெட் பத்தி எப்போ எழுதுவீங்க

    ReplyDelete
  9. //"பாஸ் "ஒட துப்பாக்கியிலே இன்னொரு தோட்டா சேர்ந்துள்ளது//

    சூப்பர். தலைவருக்கு வாழ்த்துகள்..

    //கண்டக்டர்னு சொன்ன ஒடனே ரஜினியை பத்தியும் எழுதனும்னு தோனிச்சு.அதனால அடுத்த பதிவு(கூடிய சீக்கிரத்தில்) அவரைபற்றி தான்.(கோபி உங்களுக்காகத்தான்)//

    கலக்குங்க, ஆவலுடன் :)

    ReplyDelete
  10. @ க.பாலாஜி
    நன்றி பாலாஜி.....இன்னோரு விஷயம். இந்த பதிவு கற்பனை இல்ல..நிஜம்

    ReplyDelete
  11. @சந்த்ரு,பாசகி,கோபி
    நன்றி இப்போதைக்கி....தீபாவளி பரிசு(எனக்கு) காத்திருக்கிறது. :)
    (சும்மா )

    ReplyDelete
  12. @ ராஜு
    வருகைக்கும்,கமெண்ட்டுக்கும் நன்றி

    @ செல்வகுமார்
    அப்டிலாம் இல்லைங்க.எதோ அடியேனுடைய மனசுல உதிச்சத எழுதினேன்.

    @ jaisankar jaganathan

    சீக்கிரத்துல உங்களுக்காகவே எழுதிட்டா போச்சு.
    அப்ட்யே என்ன எழுதனும்னும் சேர்த்து சொல்லிடுங்க சார்....

    ReplyDelete
  13. நான் தமிழன். எங்கிருந்தோ வந்த ஒரு பிச்சைக்காரனுக்கு அனுதாபப்பட்டு இப்போ அவர் அரசியலுக்கு வந்து என்னை காப்பாற்றவேண்டும் என்று நினைக்கும் ஒரு சராசரி

    ReplyDelete
  14. சராசரி ___________________???????அதுக்கப்பரம் சொல்ல தெரியலயா இல்ல நாகரிகம் கருதி விட்டுடிங்களா??
    ஒருவருடய சுய விருப்பு வெறுப்புகளை பற்றி விமர்சிக்கவும் கருத்து சொல்லவும் உரிமை இல்லை....அதை விட திட்டுவதற்கு சுத்தமாக உரிமை கிடயாது.

    ReplyDelete
  15. நான் யாரையும் திட்டவில்லை. இதெல்லாம் சும்மா ஜோக். இதை ஏன் ஒரு கருத்து என்று உங்களால் உங்களால் நினைக்க முடியவில்லை. ரஜினியப்பத்தி ஏதாவது சொன்னா தாங்க முடியலை. ஏன்னா நீங்க ரஜினி அடிக்ட்.

    ReplyDelete
  16. பிச்சைக்காரன்,பிக்பாகெட் அப்டிங்கறது நல்ல வார்த்தைநு அறிவிச்சதற்கு நன்றி.இனி வேற எதெல்லாம் அந்த லிஸ்ட்ல செர்ந்துருகுனு சொலுங்க....ஏன்னா நாளகி நீங்க நல்ல வார்த்தை சொல்லி நான் அதை திட்டுரிங்கனு தப்பா புரிஞ்சிப்பேன் பாருங்க.
    அப்பறம் ரஜினி அடிக்ட் அப்டின்னு சொல்லிருக்கிங்க என்ன.சந்தோசம் சார்.இப்டி ஒரு பட்டதுக்க்காகதன் வெயிட் பண்ணினேன்.நன்றி.அடிக்ட் ஆ இருக்றதுல என்ன தப்பு???

    ReplyDelete
  17. /பிச்சைக்காரன்,பிக்பாகெட் அப்டிங்கறது நல்ல வார்த்தைநு அறிவிச்சதற்கு நன்றி.இனி வேற எதெல்லாம் அந்த லிஸ்ட்ல செர்ந்துருகுனு சொலுங்க...//
    அது ஒரு ஜோக். நீங்க சீரியஸா எடுத்துக்கிட்டீங்க. சரி இனிமே உங்க ப்லொக்ல நல்லா வார்த்தையா தேடி(அகராதியிலிருந்து) போடுரேன் சரியா)

    ReplyDelete
  18. ஆல் டைம் ஆன்லைன் அஹ...எவளவு வேகமா பதில் வருது....சண்டைனா சட்டை கிழியதானே செய்யும்....:)

    ReplyDelete
  19. ஆமா . அப்படியே ரஜினி பயேடேட்டாவும் குடுத்தா சமமா இருக்கும் இல்லையா. இது oneside aa இருக்குதே

    ReplyDelete
  20. நீங்க அந்த பயோ டேட்டா வ படிக்கலைன்னு நெனைக்கறேன்...அத படிங்க..அது எதோ ஒரு ஊர்ல யாரோ ஒரு கமல்...

    ReplyDelete
  21. //அது எதோ ஒரு ஊர்ல யாரோ ஒரு கமல்..//

    நான் கூட எதோ ஒரு ஊர்ல யாரோ ஒரு ரஜினிய பத்திதான் கேட்டேன். தப்பா நினைச்சுட்டீங்களே

    ReplyDelete
  22. உங்க ஆசைய ஏன் கெடுப்பானேன்????கண்டிப்பா இனும் கொஞ்ச நாள்ல ரஜினி பயோ டேட்டா இங்கு பதிவாகும்

    ReplyDelete
  23. அது எப்படி இருக்கும்னு எனக்கு தெரியும்.

    வாழும் மகாத்மா
    எதிர்கால இந்தியா
    மனிதருள் மாணிக்கம்
    விடிவெள்ளி தப்பு சூரியன்
    தமிழகத்தை காப்பாற்ற வந்த பாபா

    ReplyDelete
  24. கிருத்திகா

    ஜெய்சங்கர் போன்றோருக்கு பதில் சொல்ல தேவையில்லை என்பதே என் கருத்து...

    அவரோட கமெண்ட் கூட அப்ரூவ் பண்ண வேணாமே...

    ரஜினியை தூற்றுபவர்களுக்கு ரஜினி ரசிகையின் வலையில் என்ன வேலை?

    இவரை நீங்கள் விரும்பி அழைக்கவில்லை தானே...
    நீங்க ரஜினி ரசிகை என்று தெரிந்தும், உள்ளே வந்து அனாகரிகமாக பேச அவருக்கு ஏன் உரிமை அளித்தீர்க்கள்...

    ReplyDelete
  25. /*"சட்ட கிழிஞ்ஜுருந்தா தச்சு முடிச்சுடலாம்" அப்டினு சிச்சுவேஷன் சாங்கு ஓடிச்சு.*/

    ஹி ஹி ஹி..

    நல்ல காமெடியா இருந்துதுங்க... கிராமத்துல இந்த மாதிரி காமெடியெல்லாம் ரொம்பவே நடக்கும் :))

    ஆனா ரஜினிக்கும், கமலுக்கும் விருது கொடுத்தத பொறுத்துக்க முடியல... தமிழக அரசுல இருக்குறவங்க நல்ல எல்லாருக்குமே ஜால்ரா தட்டிட்டு இருக்காங்க...

    போன வருஷம் சூர்யா ‘வாரணம் ஆயிரம்’-ல கலக்கி இருந்தாரு... அதே மாதிரி 2007-ல கார்த்திக் ‘பருத்தி வீரன்’ கலக்கி இருந்தாரு... அவங்க ரெண்டு பேருக்கு தான் நியாயமா கிடச்சி இருக்கணும்... :)

    ReplyDelete
  26. //ஜெய்சங்கர் போன்றோருக்கு பதில் சொல்ல தேவையில்லை என்பதே என் கருத்து...
    //
    கோபி ஏன் இவ்வளவு கோபம். எல்லா கருத்தும் உங்களுக்கு ஆதரவா தான் வரும் என்று ஏன் நினைத்தீர்கள். தவிர தூற்றும்படி நான் எதுவும் எழுதவில்லை.

    நான் மட்டும் பின்னூட்டம் இப்படி போடவில்லை என்றால் இவ்வளவு பின்னூட்டம் வருமா. யோசித்துப்பாருங்கள்.

    கிருத்திகா உங்கள் தோழி என்று எழுதியிருந்தார்கள். அதனால இதையும் தோழமையோட எடுத்துக்கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.அவங்களுக்கு பொறுமை அதிகம்.

    ReplyDelete
  27. ///கிருத்திகா உங்கள் தோழி என்று எழுதியிருந்தார்கள். /////
    பொறுமை அதிகம்தான்.இல்லேனா இத்தனக்கும் பொறுமையா பதில் சொல்லிருப்பனா...இல்ல கம்மென்ட் டெலிட் பண்ணாம விட்டுஇருப்பெனா
    ...இது எங்க போயி முடியும்னு தெரில.....

    ///தவிர தூற்றும்படி நான் எதுவும் எழுதவில்லை./////
    நீங்க இதுவரைக்கும் சொன்னது குட பரவாலைங்க ....ஆனா இது ரொம்ப ஓவருங்க.வேணாம்...இதெல்லாம் நல்லால ஆமா

    ReplyDelete
  28. //நீங்க இதுவரைக்கும் சொன்னது குட பரவாலைங்க ....ஆனா இது ரொம்ப ஓவருங்க.வேணாம்...இதெல்லாம் நல்லால ஆமா
    //

    சப்போட்டுக்கு கோபி வந்தவுடனே இவ்வ்வளவு கோவமா.

    ReplyDelete
  29. //...இது எங்க போயி முடியும்னு தெரில.....
    //
    எனக்கும் தான் . பயமா இருக்கு. உங்க அடுத்த பதிவில் இருந்து நல்ல கமெண்டா போடுறேன். முதல் கோணல் முற்றும் கோணல்னு நினைக்கவேண்டாம்

    ReplyDelete