மார்கரெட்,ஆண்டுரூ
போன பதிவிலே நான் சொல்லிருந்தது போல (படிக்காதவங்களுக்கு இதோ ) இந்த பதிவுல த ப்ரபோசல் அப்டிங்கர படம் பத்தி தான் நான் எழுதப்போரென்..
அதுக்கு முன்னாடி ,,மின்னலே,நள தமயந்தி போல ரொம்ப சாஃப்டாக வந்த படங்கள் உங்களுக்கு பிடிக்கும்னா நீங்க கண்டிப்பா பார்க்கவேண்டிய படம்.அதோட யூத்(நாங்கதானுங்கோ!!!!) மக்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.
கதை இதுதான்..
மார்கரெட் டாடியா ஒரு புத்தக பப்லிஷெர் கம்பெனிலே எடிட்டரா இருப்பாங்க.ரொம்ப கண்டிப்பானவங்க.ஆண்டுரூ பாக்ஸ்டன் அங்கே சப்-எடிடர் மற்றும் மார்கரெட்டின் எடுபிடி(மத்தவங்க மார்கரெட் கிட்டயே வரமாட்டாங்க)..மார்கரெட்ட கண்டா அந்த ஆபிசே நடுங்கும்.எதவது வெலை செய்யலனா சீட்டகிழிச்சு அனுப்பிகிட்டே இருப்பாங்க.ஆண்டுரூவுக்கு அந்த பப்லிஷர்ஸ்ல எடிட்டர் ஆகனும்ங்கரதுதான் கனவு.அதனாலே மார்கரெட் ஏவர வேலை எல்லாம் பொறுமையா செய்வாரு.மார்கரெட் அங்கே வேலை பாக்கர இன்னொரு எடிட்டரான பாப் அப்டிங்கரவர ஒரு சின்ன வேலய தப்பா செஞ்சதுனால வேலய விட்டு தூக்கிட்ராங்க..அடுத்த நாளே அவங்க citizenshiptime expire ஆகிடுது..அதனாலே அவங்கள கெளம்ப சொல்ராங்க பப்லிகேஷன் ஓனர்.
அடுத்த எடிட்டரா பாப் தான் வருவாருனு சொன்னதும் இவங்களுக்கு ஈகோ தடுக்குது.அதனால நம்ம ஆண்டுரூவ கூப்பிட்டு நான் இவரைத்தான் கல்யாணம் பண்ணிக்க போரென்.இவரு அமெரிக்கர்தான்.அதனால எனக்கு இங்கே citizenship குடுத்துடுவாங்கனு ஒரு பாறாங்கல்ல தூக்கி ஆண்டுரூ தலைலே "பொட்"னு ஒடச்சுட்ராங்க.ஆபிசே "ஆண்டுரூ எங்க்ளுக்கு உன்னை பாத்தா பாவமா இருக்ககுனு"கைப்புள்ள ரேஞ்சுக்கு சொல்லுராங்க.இமிகிரேஷன்ல போய் நாங்க கல்யாணம் பண்ணிக்கரோம்னு அப்ளை பண்ராங்க.அப்போ அந்த ஆபிசர் நீங்க ஏமாத்துரீங்கனு தெரிஞ்சா மார்கரெட்ட ஊர விட்டு வெரட்டிடுவோம்,ஆண்டுரூ 5 வருஷம் ஜெய்ல்,25ஆயிரம்டாலர் அபராதம் கட்டணும்னு சொல்லிடுராரு.அதோட உங்களை கண்காணிப்போம்.நீங்க உண்மை சொல்ரிங்கனு எப்போ நாங்க நம்புரோமோ அப்போ approve செஞ்சுடுவொம்னு சொல்லிடுராரு.
ஆண்டுரூ கிட்டத்தட்ட ஒரு வாரமா அவரோட பாட்டியோட 90த் பிறந்த நாளுக்கு ஊருக்கு போகனும்னு லீவு கேட்டு கெஞ்சுராரு.அப்போலாம் நோ நோ சொல்லிட்டு அந்த ஆபிசர் முன்னாடி இவங்க பாட்டி பிறந்த நாளுக்கு நாங்க "சிட்கா" போரொம்,அங்கே வந்து எங்கள கண்காணிச்சுக்குங்க அப்டினு சொல்லிடுராங்க.வெளில வந்து ஆண்டுரூ "என்ன வெச்சு காமெடி கீமெடி பண்ணலயேங்கர" ரேஞ்சுக்கு இவங்ககிட்ட பேசுராரு.அப்பொவும் நீ இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டா நீயும் எடிட்டர் ஆகிடலாம்,கொஞ்ச நாள்ல நான் உன்னை டைவர்ஸ் பண்ணிடுவேன்.நீ ஒத்துக்கிட்டுதான் ஆகணும்னு மிரட்டுராங்க.ஏற்கனவே நொந்து போயி உக்கார்ந்து இருந்த நம்ம ஆண்டுரூ செத்து சுண்ணாம்பா ஆயிட்ராரு இதை கேட்டுட்டு.
கதையே இப்போதான் சூடு பிடிக்குது..இப்போ ஒவர் டு சிட்கா.அதுதான் ஆண்டுரூ தங்கி இருக்கர கிராமம் (மாதிரி).அங்கே ஏகப்பட்ட காமெடி நடக்குது.பாட்டி திடுதிப்னு என் பிறந்த நாள் அன்னைக்கே நீங்க கல்யாணம் பண்ணிக்கனும்னு சொல்லிட்ராங்க.
அந்த குடும்பமே விழுந்து விழுந்து கவனிக்குது.அதுல பாருங்க கொஞ்ச கொஞ்சமா மார்கரெட் ஆண்டுரூவே லவ் பண்ண ஆரமிச்சுடுராங்க.கடைசிலே இவங்கள சேர்த்து வெய்க்கரது பாட்டி தான்..ஆன அதுக்குள்ள மார்கரெட் ஊர விட்டு போய்டுவாங்க..அதுக்கப்பறம் என்ன ஆகுதுங்கரத நீங்களே பார்த்து தெரிஞ்சுக்குங்க...
படம் ரொம்ப நல்லா இருக்கு...
வோட்டு போடுங்க ஐயா :)
//கெடைக்கரது கெடைக்காம இருகாது. கெடைக்காம இருக்கரது கெடைக்காது ஸ்வாமி-ரஜினிகாந்தானந்தா//
ReplyDeleteஅடடடட அசத்துது உன் ஸ்டைல்...இந்த டைட்டில இதுவரைக்கும் பாக்கவே இல்லையே... ஹா..ஹா...ஹா...யச்சச்ச கச்சச்ச...கச்சச்ச யச்சச்ச... கண்ணா, ஒண்ணும், ஒண்ணும் ரெண்டு, இது புரிஞ்சா நீ என் ஃப்ரெண்டு... மூணும், ரெண்டும் அஞ்சு, உன் கையில விரலும் அஞ்சு... இது எப்படி இருக்கு...
//அதோட யூத்(நாங்கதானுங்கோ!!!!) மக்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.//
ஆ..ஹா... அது நீங்க தானா.... வாங்க...
//"என்ன வெச்சு காமெடி கீமெடி பண்ணலயேங்கர" ரேஞ்சுக்கு இவங்ககிட்ட பேசுராரு.//
ஹீ...ஹீ...ஹீ........
//அதுக்குள்ள மார்கரெட் ஊர விட்டு போய்டுவாங்க..அதுக்கப்பறம் என்ன ஆகுதுங்கரத நீங்களே பார்த்து தெரிஞ்சுக்குங்க...//
ஓகே...ஓகே.. நாங்க பார்த்து தெரிஞ்சுக்கறோம்... நன்றி...
//படம் ரொம்ப நல்லா இருக்கு...//
அப்போ டபுள் ஓக்கே...
//வோட்டு போடுங்க ஐயா :) //
போட்டுடறேன் தாயி...... நல்லா இரு....
கிருத்திகா...
ReplyDeleteஎன் www.jokkiri.blogspot.com வலைத்தளத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினி பற்றிய ஒரு மினி தொடர் (10 பகுதிகள்), "பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல" நான் எழுதினேன்...
நீங்கள் படித்தீர்களா?? படித்து இருந்தால் நன்றி... இல்லையென்றால் படியுங்கள்...
//போய்டுவாங்க..அதுக்கப்பறம் என்ன ஆகுதுங்கரத நீங்களே பார்த்து தெரிஞ்சுக்குங்க...படம் ரொம்ப நல்லா இருக்கு..//
ReplyDeleteம்ம்கும்...தமிழே நமக்கு (எனக்கு) தத்துபித்து....இதுல ஆங்கிலிஸ்ல வேறயா....பாக்கி கதையும் நீங்களே சொல்லியிருந்தா பரவாயில்ல...
ஆமா நீங்க இன்னும் தமிழ்மணத்துல இணையலையா?....
கோபி கண்ணா....
ReplyDeleteசெல் போன் அடிச்சா ரிங்கு
ஷிவாஜி அடிச்சா சங்கு
கோபி நீங்க ஒரு கிங்கு
கலக்கிடிங்க....பத்துமே அருமை...எங்கேருந்து நண்பா எடுக்கரிங்க..
அதோட ஒரு சின்ன வேண்டுகோள்...உங்க மன்றத்துல என்னையும் சேர்த்துக்குங்களேன்...
தமிழ்மணத்தில் சீக்கிரம் இணைஞ்சுடரேன் பாலா...
ReplyDeleteஎன்ன தயக்கம்னா இருக்கரதுலயே யாரும் பாக்கமாடெங்கராங்க..
இதுல இன்னொன்னு வெரயா...
அதோட இன்னொரு விஷயம்..மத்த படங்கள் பதி தெரியல....ஆன இந்த படம் பாக்க ரொம்ப ஷேக்ஸ்பியர் அளவுக்கெல்லாம் தேவைல்ல.....கேக்குரதா இருந்தா மிச்ச கதையும் சொல்ல தயார்...:)
// kiruthiga said...
ReplyDeleteகோபி கண்ணா....
செல் போன் அடிச்சா ரிங்கு
ஷிவாஜி அடிச்சா சங்கு
கோபி நீங்க ஒரு கிங்கு
கலக்கிடிங்க....பத்துமே அருமை...எங்கேருந்து நண்பா எடுக்கரிங்க..
அதோட ஒரு சின்ன வேண்டுகோள்...உங்க மன்றத்துல என்னையும் சேர்த்துக்குங்களேன்...//
யப்பா... பஞ்ச் டயலாக் பட்டையை கெளப்புதே கிருத்திகா...
இந்த 10 பதிவுகளின் பின் என் உழைப்பு, பல வருடங்கள்...
எங்க மன்றத்துல சேரணும்னா, நீங்க துபாய் வரணும்... ஏன்னா, நான் இப்போது துபாய் வாசம்...வர்றீங்களா... (ஹீ..ஹீ..)
தலைவரின் அன்பு நெஞ்சத்தில் இருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் / ரசிகைகளில் நீங்களும் இருக்கின்றீர்களே, அது ஒன்று போதுமே கிருத்திகா...
தலைவரின் பிறந்த நாளின் போது (2008), நான் அவருக்காக எழுதிய வாழ்த்து மடல், இந்த லின்க்கில் இருக்கிறது... படித்து விட்டு உங்கள் மேலான கருத்தை சொல்லுங்கள் கிருத்திகா...
http://edakumadaku.blogspot.com/2008/12/blog-post_28.html
சீக்கிரமே படத்த பார்க்கனும். நன்றி
ReplyDeleteநள தமயந்தி படம் மற்றும் நயன்தாராவும் சுள்ளானும் நடிச்ச யாரடி நீ மோகினி படத்தோட நெடி நெறைய அடிக்குதே. இப்ப அவங்க கூட நம்ப படத்த பாத்து காப்பி அடிக்கராங்களா என்ன?
ReplyDeleteகிருத்திகா என் பின்னூட்டம் எங்க. இது நியாயமா.நீங்க வேணா என் ப்லோக்ல தப்பா எழுதுங்க
ReplyDelete