07 October, 2009

கோடு போட்ட சட்டை போட்ட பையன்-திரை விமர்சனம்

THE BOY IN STRIPED PYJAMAS...இது உலகப்போர்-2 காலத்து படம்.
ஜூக்களை எப்படி கொடுமைப்படுத்தினார்கள் ஜெர்மானியர்கள் அப்டிங்கரத ஒரு சின்ன பைய்யன வெச்சு ரொம்ப அழகா சொல்லிருக்காரு இயக்குனர்.ஒடனே டாக்குமெண்டரினு நெனக்காதிங்க.ஷங்கர் படம் மாதிரி ,இந்த படத்த பார்த்த ரொம்ப நேரத்துக்கு அப்பறம் கூட அதன் தாக்கம் குறையல

 
(ப்ருனோவொட அப்பா,அம்மா)

     
                        ப்ருனோங்கர 8 வயசு பையன் தான்  கதாநாயகன்.அவனுடைய அப்ப(ரால்ப்)  ஜெர்மனியின் போர் கம்மாண்டெண்ட்.புருனோக்கு ஒரு அக்காவும் கூட.கதையின் ஆரம்பத்துல பெர்லின்லேருந்து அவங்க குடும்பம் வேற ஒரு கிராமத்துக்கு அதாவது யூதர்களை கொல்லும் காம்ப் இருக்கர எடத்துக்கு மாறிடுது.அழுதுகிட்டே நண்பர்களுக்கு டாடா சொல்லுராரு ப்ருனோ.புது வீடு  சுத்தமாபிடிக்கல அவனுக்கு.அந்த வீட்டை சுத்தி காவல் இருக்கும்.அதோட விளயாடவும் யாரும் சின்ன பசங்க அங்க இருக்கமாட்டாங்க.பாவெல் அப்டினு ஒரு வயசானவரு(ஜூ இனத்தை சேர்ந்தவர்) அங்க எடுபிடியா இருப்பாரு.ப்ருனோ பாவெலோட பேசுனாலே அவங்க அப்பாவுக்கு சுத்தமா பிடிக்காது. இப்டி தனிமையிலே வாடிப்போரான் ப்ருனோ.
                அப்போதான் அவன் வீட்டுக்கு  பின்னாடி ஒரு கதவு இருக்கரத கண்டுபிடிக்கரான்.அதுவழியா கொஞ்ச தூரம் போனா யூதர்களை அடைத்துவைத்திருக்கும்  காம்ப் வருது.அங்கே ஷ்முயேல் அப்டினு ஒரு சின்ன பையனை சந்திக்கரான் ப்ருனோ.அவன தினமும் பாக்க வர்ரான்.எதாவது விளயாட்டு பொருளும்,அதோட அவனுக்கு சாப்பிடவும் எதாவது கொண்டு வருவான்.அம்மா ,அப்பாக்கு நைசா டேக்கா குடுக்கரான்.தினமும் இது தொடருது.ஆனா அவங்க அப்பாவோ தினமும் நூத்துக்கணக்குல யூதர்களை கொன்னுட்டு வராரு.(இது ப்ருனோக்கும் அவன் அம்மாவுக்கும் தெரியாது). ப்ருனோக்கு ஒரு நாள் அடிபட்டுடவும் பாவெல்   வந்து மருந்து  போட்டு விடுராரு.அப்போதான் அவர் சொல்லுராரு தான் ஒரு டாக்டர்னு.அப்டியே ஷாக் ஆகிடரான் ப்ருனோ.அவன் மனசுல அவங்க அப்பா செய்ரது தப்புனு மைல்டா தோண ஆரமிச்சுடுது.அவன் அம்மாவும் கண்டுபிடிச்சுடராங்க இவர் செய்ரத.அவங்களுக்கு தன் கணவர் ஜூக்களை கொல்லுரது சுத்தமா பிடிக்காது.அதனால சண்ட போட்டுட்டு வேற எடத்துக்கு குழந்தைகளை அனுப்பனும்னு சொல்லிடராங்க.
                அன்னிக்கு ப்ருனோ,ஷ்முயேல் கிட்ட தான் வீடு மாறி போகபோறதாக சொல்லுரான்.உடனே ஷ்முயேல் தன்னோட அப்பாவ காணும்,நேத்திக்கி இந்த சோல்ஜர்ஸ் வந்து கூட்டிட்டு போனாங்க.அதுக்கப்பரம் திரும்ப வரவே இல்லனு சொல்லுரான்.அப்போதான் விபரீதமா ஒரு யோசனை தோணுது ரெண்டு பேருக்கும்.ப்ருனோ அந்த காம்ப்க்குள்ள வந்து அவன் அப்பாவ தேடிக்குடுக்கரதாக சொல்லுரான்.அவனுக்கும் ஒரு கோடு போட்ட சட்டை தர சொல்லுரான்.ஷ்முயேலும் போய் கொண்டுவந்து தரான்.ப்ருனோவும் காம்ப்குள்ள போய்ட்ரான்.ரெண்டு பேரும் தேடிக்கிடே இருக்கும்போதே அந்த எடத்துல இருக்கர யூதர்களை எல்லாம் கொல்ல  நாஜிவீரர்கள் இழுத்துட்டு போராங்க.அதுல ரெண்டு பேரும் மாட்டிக்கராங்க.அந்த பக்கம் அவங்க அம்மா,அப்பா,அக்கா எல்லாரும் அவன தேடிக்கிட்டு இந்த காம்ப் வரை வந்துடராங்க.கடசில யூதர்களை கொல்லர காட்சி ரொம்ப கொடுமயா இருக்கும்.ஒரு சின்ன ரூம்ல எல்லாரயும் நிக்கவெச்சு விஷவாயுவை அனுப்பராங்க உள்ள.கதவையும் சாத்திடராங்க.அப்டியே அந்த சாத்தின கதவுகளோட படம் முடியுது.
                 கண்டிப்பா இந்த படத்த பாருங்க எல்லாரும்.கண்டிப்பா ஒரு எடத்துலயாவது கண்ணுல குளம் தேங்கி நிக்கும்.அட்லீஸ்ட்  கொஞ்சம் வருத்தமாவது படுவிங்க.நிறைய்ய டுவிஸ்டு வரும் படத்தின் நடுவில.அந்த பாவெல்ல தண்ணிய கீழ கொட்டிட்டாருன்னு  அடிச்சே கொன்னுடுவாங்க.அதுமட்டும் இல்ல இன்னும் ஏகப்பட்ட விஷயங்கள்.
படத்த பார்த்துட்டு எப்டி இருக்குதுனு கண்டிப்பா சொல்லுங்க.அதோட வோட்டு பிலீஸ் :) ஹி ஹி

7 comments:

 1. யாரு த‌ச்ச‌ ச‌ட்டை
  என் தாத்தா த‌ச்ச‌ சட்டை

  இந்த பாட்டு இந்த‌ ப‌ட‌த்தில‌யா?

  கோடு போட்ட‌ ச‌ட்டை போட்ட‌ பைய‌ன்... த‌மிழ் டைட்டில் ரொம்ப‌ ந‌ல்லா இருக்கு கிருத்திகா.

  //ஷங்கர் படம் மாதிரி ,இந்த படத்த பார்த்த ரொம்ப நேரத்துக்கு அப்பறம் கூட அதன் தாக்கம் குறையல‌//

  ஆஹா... இங்க‌யும் ஷ‌ங்க‌ர் வந்துட்டாரா?? பேஷ்...பேஷ்...

  //படத்த பார்த்துட்டு எப்டி இருக்குதுனு கண்டிப்பா சொல்லுங்க.அதோட வோட்டு பிலீஸ் :)//

  ப‌ட‌ம் சூப்ப‌ர்... அப்ப‌டின்னு பாத்துட்டு சொல்றேன்... இப்போதைக்கு என் பொன்னான‌ வாக்கு அளித்தாயிற்று...

  க‌ல‌க்க‌றீங்க‌ கிருத்திகா...

  ReplyDelete
 2. நல்ல படமா தான் தெரியுது... நா சோகாச்சி படம் அவ்ளவா பாக்கமாட்டேன்... நீ சொல்றியே இத பாக்குறேன்...

  ஆமா நீ "லைப் இஸ் பியுட்டிபுல்" படம் பாத்துருக்கியோ??!! அதுவும் உலக போர் நடந்த காலத்துல வர கதை தான்... எனக்கு ரொம்ப பிடிச்ச படம் அது....

  ReplyDelete
 3. //ஷங்கர் படம் மாதிரி ,இந்த படத்த பார்த்த ரொம்ப நேரத்துக்கு அப்பறம் கூட அதன் தாக்கம் குறையல/

  ஷங்கர் படம் மாதிரியா? ஷங்கர் மசாலாப் பட டைரக்டர்ங்க. இவர் கூட கம்பேர் பன்றதைவிட படம் ரொம்ப கேவலம்னு சொல்லி இருக்கலாம். என்னவோ போங்க.

  நெறய ஒலக படம் பார்ப்பியளோ? நல்லா எழுதறேள்.. கண்டினியூ..

  ReplyDelete
 4. தேர்ட் பார்ட்டி ஸ்க்ரிப்ட்ஸ் ரொம்ப உபயோகிக்காதிங்க.. எங்க க்ளிக் பண்ணாலும் உடனே பாப் அப் விளம்பரம் வந்து டரியல் ஆக்குது.. :(

  ReplyDelete
 5. தமிழ் தலைப்பு வித்யாசமா இருக்கு....

  மற்றபடி ஆங்கில படங்கள் பார்ப்பது ரொம்ப குறைவு

  வாய்ப்புகிடைப்பதில்லைன்றதவிட புரியாது...

  ReplyDelete
 6. @கோபி
  நன்றி தலைவாவாவாவா :)

  @ரசிக்கும் சீமாட்டி(மத்தவங்களுக்கு) & ராம்(எனக்கு) :)
  பாத்துடாரென் ராம் சீக்கரத்துல


  @ SanjaiGandhi
  இப்போதாங்க அவர் அப்படி.ஆன ஜெண்டில்மான்,முதல்வன் எல்லாம் வாய்ப்பே இல்லைதானே...நான் அந்த படங்களை பட்றித்தான் சொன்னேன்.பாய்ஸ்,காதலன் படங்களுக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை இல்லை இல்லை...அது சும்ம ஒரு திகிலுக்காக.சீக்கிரத்துல எடுத்துடரேன்.. :)

  @வசந்த்
  நானும் கூட ஆங்கிலப்படங்கள் பார்க்க மாட்டேன் அவ்வளவா.ஆனால் தலைப்பு வித்தியாசமா இருந்ததால இந்த படத்த பார்த்தேன்.நீங்களும் பார்க்க முயற்சி பன்னுங்க :)

  ReplyDelete
 7. வணக்கம் கிருத்திகா, நல்ல படம் நல்ல விமர்சனம் அல்லது அறிமுகம். வாழ்த்துகள். தொடர்ந்து நல்ல படங்களின் அறிமுகங்களை கொடுங்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

  ReplyDelete