15 October, 2009

ஹாப்பி தீபாவளி நண்பர்களே மற்றும் நண்பிகளே...:)




அல்லாருக்கும் வணக்கமுங்கோவ்.....இது இன்னோரு சமூக அக்கரை கொண்ட பதிவு அப்டினும் வெச்சுக்கலாம்...சிலருக்கு உளர்ரேன் அப்டின்னு கூட தோணலாம்.நான் சொல்றது சரியோ இல்ல தப்போ(என்னை பொறுத்தவரை சரி)தெரியல...
விஷயத்துக்கு வரேன்.நாட்டுல நெறய மதங்கள் இருந்தாலும்  முக்கியமான 3 மதங்கள்(எனக்கு தெரிஞ்சவரை) இந்து,முஸ்லிம்,கிரிஸ்தவம்.இந்துவை தவிர மத்த மதங்களை எல்லாம் ஆராய்ஞ்சு பாத்திங்கன்னா இவங்க அடுத்த மதத்துகாரங்க கூட  சண்ட போட்டுப்பாங்களே தவிர தங்கள் மதத்துக்குள்ள சண்டை போட்டுக்கரது கம்மிதான்.சரி இது ஒரு பக்கம் இருக்கட்டும்.நம்ம  இந்துக்கள்ள கடவுள் இல்லைனு சொல்லுர கூட்டம் ஒண்ணு இருக்கு.அவங்களுக்கு ஆத்திகர்கள் வெச்சுருக்கர பேரு "நாத்திகர்கள்".அவங்களே வெச்சுக்கிட்ட பேரு "பகுத்தறிவாளர்கள்".இதை மனசுல வெச்சுக்குங்க.மேல படிங்க.
                 இப்போ ஒரு குட்டி கதை(தலைவர் ஸ்டைல்).ஒரு ஸ்கூல்ல படிக்கர ரெண்டு பேர எடுத்துக்கலாம்.(நெறய பேரு இருப்பாங்க.நம்ம கதைக்காக 2 பேரு மட்டும் :) ).அவங்கள்ள ஒரு பையன் நல்லா படிக்கரான்.இன்னொருத்தன் ப்டிக்கலை அப்டினு வெச்சுக்கலாம்.ஒரு நல்ல டீச்சர்(மிஸ்-1) என்ன பண்ணனும்??படிக்காத பையனை கூப்பிட்டு "தம்பி தம்பி!!! நீ ஏம்பா நீ படிக்க மாட்டேங்கர??நீ படிக்கரதுக்கு என்ன பண்ணலாம்?பாடத்துல எதாவது புரியலயா??எதவது கஷ்டமா இருந்துச்சுனா என்னை வந்து கேளு .இல்லனா படிக்கர பையன் கிட்ட உதவி கேட்டு படி.அப்படியும் இல்லனா டூஷன் சேர்ந்துக்க." அப்படினு சொல்லனும்.
இதே அந்த மிஸ்-2 "நீ கவலப்படாத தம்பி.அவனோட மார்க்க கொறச்சு விட்டுர்ரேன்.இல்லனா அவன பரீட்சை எழுத விடாமல் செஞ்சுரலாம்.நீ அவனை விட நல்லா மார்க் எடுத்துருப்ப"அப்படினு சொன்னா அவங்களை எந்த ரகத்துல சேர்க்குரது???இதை நான் ஏன் சொல்லுரேன்னு அனேகமா எல்லாருக்கும் புரிஞ்சுருக்கும்.
           என் ஊரு சிதம்பரம்.இங்கே நடந்துட்டு வர்ர பிரச்சனைய  தொடர் பதிவா எழுதலாம்.ஆனா நமக்கு தான் அரசியல்(!!!!!!!!) பிடிக்காதே( :) ஹி ஹி) .நடராஜர் கோவிலை அரசாங்கம் எடுத்துகிச்சு.அது கூடாதுனு கோவிலை பரம்பரை பரம்பரையா நடத்திட்டு வர்ர தீட்சிதர்கள் சொல்லுராங்க.இப்ப சீனுக்குள்ல நுழயராங்க நம்ம நாத்திகர்கள் @ "பகுத்தறிவாளர்கள்".இரண்டு நாட்கள் முன்னால் இங்கே  ஒரு மீட்டிங் போட்டுருந்தாங்க.அவ்வளவா கூட்டம் இல்லை.இருந்தாலும் ஒரு 50 பேருக்கு மேல இருந்தாங்க.என்னதான் பேசுராங்கனு பாப்போம்னு அடியேனும் அங்க ஐக்கியம் ஆனேன்.ஒரு அதிபுத்திசாலி பேசுராரு "ராத்திரி நம்மகூட டாஸ்மாக்ல உக்காந்து தண்ணி அடிக்கர பயலுங்க கிட்ட நாம அடுத்த நாளு காலைல கோவில்ல விபூதி வாங்க வேண்டிருக்கு.மதியானம் நம்ம கூட முணியாண்டி விலாஸ்ல சாப்டுர சல்லி பசங்க(நோட் த பாய்ண்ட்) கிட்ட சாயங்காலம் குங்குமம் வாங்க வேண்டி இருக்கு."அப்படிங்கர சில அருமையான(அபத்தமான) கருத்துக்களோட இதயும் சொன்னாரு"மாமி சின்ன மாமி மடிசார் அழகில் வாடி சிவகாமி"அப்படின்னு பாடுனார் இளையராஜா.அதுல குட பாருங்க மாமிக்களைதான் முன்னிலை படுத்திருக்காரு"அப்டின்னு ஒரே போடா போட்டாரே பாக்கணும்.அதோட எடுத்தேன் ஸ்கூட்டிய.ஜூட்டு தான்.இத ஏன் இங்க சொல்ரேன்னு யோசிக்கிரிங்களா???அங்க தான் விஷயமே இருக்கு.
                      அவங்க என்ன் சொல்லி மீட்டிங்க ஆரமிச்சாங்கன்னா "கோவிலை ஆக்கிரமித்திருக்கும் தீட்சிதர்களை விரட்டுவதே எங்கள் குறிக்கோள்.காலம் காலமாக அவர்களே ஆண்டுகொண்டிருக்கிரார்கள்.ஆன்மீகத்தை வளர்க்காமல் தீண்டாமை வளர்க்கின்ரார்கள்" அப்டின்னாங்க.எனக்கு ஒண்ணுதான் புரியல.எந்த காலத்துல இருக்கராங்க இவங்க....கிராமங்கள்ள போயி இத மாதிரி சொன்னாலும் அர்த்தம் இருக்கு.ஆனா இங்க வந்து இப்படி சொல்லுராங்களே..தீண்டாமை இன்னும் ஒரு சில இடங்களில் இருந்துக்கிட்டு தான் இருக்கு.அதை நான் இல்லைனு சொல்லல.தீண்டாமையை ஒழிக்கட்டும்.அதயும் வேணாம்னு சொல்லல.அதுக்கு அவங்க தாழ்ந்தவர்கள் அப்படினு அவங்களே ஒரு பிரிவை நினைக்கராங்க இல்லயா...அவங்க மிஸ்1 மாதிரி வளர உதவி செய்ய்யனும்.அதை விட்டுட்டு மிஸ்-2 மாதிரி அடுத்தவங்களை கால வாரி விட்டுட்டு ஒருத்தரை முன்னேத்தரது தப்பு....அதோடு இன்னொரு விஷயமும்...எதாவது வாகன்சி இருக்குனு போட்டு இருந்தாங்கன்னா அதை பாருங்க.சமீபத்துல ஒரு நிறுவனத்துல 50 இடங்கள் காலினு  ஒரு அறிவிப்பு.அதுல  பாத்திங்கன்னா எல்லாருக்கும் ஒதுக்கீடு போக ஜென்ரலுக்குனு 25 இடங்கள் தான்...இதை நான் புகாரா சொல்ல வரலை.இப்படி இருக்கும்போது ஏன் இன்னும் இன்னும் கீழ தள்ளராங்க??? இப்போ பாவப்பட்ட நிலையில இருக்கரது யாருனு நீங்களே சொல்லுங்க.....
                      

                               
           இதன் மூலமாக நாம் சொல்ல வரும் கருத்து என்னவென்றால் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.இவங்க புத்தியில இருக்கர அறியாமயும்,தீண்டாமையும் பொசுங்கட்டும்.....நல்ல இனிப்பு காரம் எல்லாத்தயும் சாப்புடுங்க.அதோட பட்டாசு வெடிக்குரப்போ பாத்து வெடிங்க...அக்கம் பக்கம் பாத்துகிட்டும் வெடிங்க.யாராவது போகும்போது லெஷ்மி வெடிய கொளுத்தி பயமுறுத்தரது,ராக்கெட்ட உட்டு ரகள பன்ரது...இதெல்லாம் வேணாம்...(சும்மா காமெடிக்கி :) )
ஹாப்பி தீபாவளி நண்பர்களே மற்றும் நண்பிகளே...:)

3 comments:

  1. //இந்து,முஸ்லிம்,கிரிஸ்தவம்.இந்துவை தவிர மத்த மதங்களை எல்லாம் ஆராய்ஞ்சு பாத்திங்கன்னா இவங்க அடுத்த மதத்துகாரங்க கூட சண்ட போட்டுப்பாங்களே தவிர தங்கள் மதத்துக்குள்ள சண்டை போட்டுக்கரது கம்மிதான்//

    கிருத்திகா... எப்படி இப்பூடி எல்லாம்???

    //நம்ம இந்துக்கள்ள கடவுள் இல்லைனு சொல்லுர கூட்டம் ஒண்ணு இருக்கு.அவங்களுக்கு ஆத்திகர்கள் வெச்சுருக்கர பேரு "நாத்திகர்கள்".அவங்களே வெச்சுக்கிட்ட பேரு "பகுத்தறிவாளர்கள்".//

    ம்ம்... என்ன இன்னிக்கு பதிவுல விஷயம் எல்லாம் ஒரு மாதிரி போகுது??!!

    //இப்போ ஒரு குட்டி கதை(தலைவர் ஸ்டைல்).//

    அப்போ அதிரடிதான்... தூள்...... மேல‌ ப‌டிக்க‌லாம் (நான் க‌தைய‌ சொன்னேன்...!!)

    //நீ கவலப்படாத தம்பி.அவனோட மார்க்க கொறச்சு விட்டுர்ரேன்.இல்லனா அவன பரீட்சை எழுத விடாமல் செஞ்சுரலாம்.நீ அவனை விட நல்லா மார்க் எடுத்துருப்ப"அப்படினு சொன்னா அவங்களை எந்த ரகத்துல சேர்க்குரது???//

    ஆஹா... அதிர‌டி திருப்ப‌மா இருக்கே கிருத்திகா??

    //இதை நான் ஏன் சொல்லுரேன்னு அனேகமா எல்லாருக்கும் புரிஞ்சுருக்கும்.//

    லேசா லேசா புரியுதுங்கோ...

    //என் ஊரு சிதம்பரம்.இங்கே நடந்துட்டு வர்ர பிரச்சனைய தொடர் பதிவா எழுதலாம்.ஆனா நமக்கு தான் அரசியல்(!!!!!!!!) பிடிக்காதே( :) ஹி ஹி) //

    ஹா...ஹா...ஹா... உன் வ‌ழி த‌னி வ‌ழி (த‌லைவ‌ர் போல்...)

    //"மாமி சின்ன மாமி மடிசார் அழகில் வாடி சிவகாமி"அப்படின்னு பாடுனார் இளையராஜா.அதுல குட பாருங்க மாமிக்களைதான் முன்னிலை படுத்திருக்காரு"அப்டின்னு ஒரே போடா போட்டாரே பாக்கணும்.அதோட எடுத்தேன் ஸ்கூட்டிய.ஜூட்டு//

    அட‌...ஸ்கூட்டி கீதா... ஜூப்ப‌ரு.....அங்க‌ எல்லாம் ஏங்க‌ போய் நின்னீங்க‌... உங்க‌ள‌ சொல்ல‌ணும்.... ந‌ம‌க்கு பாக்க‌ற‌துக்கு வேலையா இல்ல‌... இந்த வெட்டி/வெறும் ப‌ய‌லுவ‌ பேச‌ற‌த‌ ஏன் கேக்க‌ணும்??

    //எனக்கு ஒண்ணுதான் புரியல.எந்த காலத்துல இருக்கராங்க இவங்க....கிராமங்கள்ள போயி இத மாதிரி சொன்னாலும் அர்த்தம் இருக்கு.ஆனா இங்க வந்து இப்படி சொல்லுராங்களே//

    இப்போ தெரியுதா... அவிய்ங்க‌ளுக்கு எவ்ளோ வேலை இருக்குன்னு!!???

    //ஒரு நிறுவனத்துல 50 இடங்கள் காலினு ஒரு அறிவிப்பு.அதுல பாத்திங்கன்னா எல்லாருக்கும் ஒதுக்கீடு போக ஜென்ரலுக்குனு 25 இடங்கள் தான்...இதை நான் புகாரா சொல்ல வரலை.இப்படி இருக்கும்போது ஏன் இன்னும் இன்னும் கீழ தள்ளராங்க??? இப்போ பாவப்பட்ட நிலையில இருக்கரது யாருனு நீங்களே சொல்லுங்க.....//

    எல்லாருக்கும் தெரியும் கிருத்திகா... இருந்தாலும், இது வெறும் வெட்டிப்பேச்சு...

    //இதன் மூலமாக நாம் சொல்ல வரும் கருத்து என்னவென்றால் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.//

    உங்க‌ளுக்கும், குடும்ப‌த்தார்க்கும், உற்றார், உற‌வின‌ர், ந‌ண்ப‌ர்க‌ள் அனைவ‌ருக்கும் என் ம‌ன‌ம் கனிந்த‌ தீபாவ‌ளி ந‌ல்வாழ்த்துக்க‌ள்... என் தீபாவளி பதிவிற்கு வாருங்க‌ள்... உங்க‌ளுக்காக‌ ஒரு "ஸ்பெஷ‌ல் தீபாவ‌ளி கிஃப்ட்" உள்ள‌து.. ம‌றுக்காம‌ல், ம‌ற‌க்காம‌ல் பெற்று செல்ல‌வும்...

    ந‌ண்ப‌ர்க‌ள் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய‌ தீபாவ‌ளி ந‌ல்வாழ்த்துக்க‌ள்... http://edakumadaku.blogspot.com/2009/10/blog-post.html

    ReplyDelete
  2. தீப திரு நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. இதற்கு பதில் சொல்லலாம் ..ஆனா அப்புறம் வர பின்னூட்டத்திற்கு பதில் கூறுவதே ஒரு பெரிய வேலையா இருக்கும் :-)

    உங்கள் தலைப்பு வாழ்த்தா இருந்ததால உங்க பதிவுல இருக்கிற விஷயம் பலர் கண்ணுல படாம போய் இருக்கும்.. இல்லைனா இங்கே ஒரு ரணகளமே நடந்து இருக்கும் ;-)

    தீபாவளி வாழ்த்துக்கள்

    ReplyDelete