Showing posts with label உதவி. Show all posts
Showing posts with label உதவி. Show all posts

01 May, 2011

ஆன்லைன்ல யாராவது புத்தகம் வாங்கி இருக்கீங்களா!!!ப்லீஸ் ஹெல்ப்

3 சந்தேகங்கள்

 1) ஜெயா டீவில மந்திரம் ஒரு தந்திரம்னு ஒரு மேஜிக் நிகழ்ச்சி வருது.அதுல அவர் பண்ற மேஜிக்லாம் ரொம்ப ஆச்சர்யமூட்டும் விதத்துல இருக்கு.பொதுவா எனக்கு மேஜிக் மேல அவ்வளோ நல்ல அபிப்பிராயம் கடயாது.இருந்தாலும் இந்த நிகழ்ச்சி ரொம்ப பிரம்மிக்க வைக்குது!!!!இப்போ கேள்வி-- அவர் பண்ற மேஜிக் எல்லாம் நிஜமாவே பண்றாரா இல்ல காமரா ட்ரிக்கா!!!!! பார்த்தவங்க,விஷயம் தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்!!!!

***********************************

2)டாடா மீதும் அவர்களுடய கம்பெனி பொருட்கள் மீதும் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பவள் நான்!!!! அவருடய வாழ்க்கை வரலாறு நிறய பேருக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை!!!! ரொம்ப இன்ஸ்பைரிங்கா இருக்கும்!!!நான் பதிவா போடறேன் சமயம் கிடைக்கும்போது!!!! அவர்களுடய குழுமத்துல இருந்து டாடா ஃபோட்டான் ப்லஸ் அப்படிங்கற ப்ராடக்ட் பெஸ்ட் ப்ராடக்ட் ஆப் த இயர் விருது வாங்கிருக்கு.டாடா ஃபோட்டான் ப்லஸ் மட்டும் இல்ல அந்த வகைல வர்ர யூ.எஸ்.பீ மோடம் எதுவுமே நல்ல சர்வீஸ் குடுக்கல!!!! நான் உபயோகித்தபோது 3ஜி வரவில்லை!!! இனிமேலும் அது மற்ற நாடுகள்ள வந்த அளவு இங்க ரீச் ஆகுமான்னு தெரியல!!!!  எந்த அடிப்படைல இந்த பொருளுக்கு பெஸ்ட் ப்ராடக்ட் விருது குடுத்தாங்க!!!!!! இப்போ என்னோட சந்தேகம் எங்கிட்ட தண்டமா ஒரு டாடா ஃபோட்டான் யூ.எஸ்.பி மோடம் கெடக்கு.அதை எப்படி டிஸ்போஸ் பண்றதுன்னு கொஞ்சம் சொல்லுங்களேன்!!!

**************************************

3)லாஷ்ட்டா ஒண்ணு!!! ஆன்லைன்ல யாராவது புத்தகம் வாங்கி இருக்கீங்களா!!! எந்த தளத்தில்!!! எப்போ...அதை பத்தி கொஞ்சம் விவரம் சொன்னீங்கன்னா எனக்கு ரொம்பவும் உபயோகமா இருக்கும்!!!! எதாவது ஹிட்டன் காஸ்ட் இருக்கா ஏமாத்திபுடுவாய்ங்கேளா!!!! அவசரமாக 1 புத்தகம் தேவைப்படுகிறது!!!!அதனால ப்லீஸ் ஹெல்ப்

விஷஸ் !!!!

நம்ம கே.பாலச்சந்தருக்கு தாதா சாகேப் பால்கே(டைப் அடிக்கரத்துக்குள்ள மூச்சு முட்டுது!!! யப்பா)  விருது குடுத்துருக்காங்க!!!யூ ஆர் ரியல்லி க்ரேட் சார்!!!! ஹாட்ஸ் ஆப்!!!
மே 1 இந்த பதிவ போடுவதால்

1)இனிய மே தின வாழ்த்துக்கள்!!!
2)ஹாப்பி பர்த்டே தல!!! இந்த வேஉஷமாவது ஒரு ஹிட்டு குடுங்க...ரொம்ப நாளாச்சு உங்க ஹிட்ட பாத்து!!!!