Showing posts with label தத்துவம். Show all posts
Showing posts with label தத்துவம். Show all posts

15 March, 2011

ஏமாற்றாதே ஏமாறாதே

                                       வணக்கம் நண்பர்களே!!!மிக மிக மிக நீண்ண்ண்ண்ண்ட இடைவெளிக்கு பிறகு...மீண்டும் வந்துவிட்டேன்.என்னோட ப்ளாக் அட்ரஸ்கூட மறந்து போச்சுங்க..நான் போஸ்ட் எழுதி ஒரு வருஷத்துக்கு மேலயே ஆச்சு...இந்த ஒரு வருஷத்துல எத்தனையோ தடவ போஸ்ட் எழுதணும்னு நெனச்சுருகேன்.அட நெசந்தானுங்கோவ்..நம்ம தலைவர் பட ரிலீசுக்கு கூட ஒரு போஸ்ட் போட முடியாத பாவி ஆகிட்டேன்..சரி...விடுங்க.இப்போ விஷ்யத்த ஆரமிப்போமா.
விஷ்யம் நம்பர் ஒண்ணு--
ஜப்பானுக்கு இன்னும் எத்தன அதிர்ச்சிதான் காத்திருக்கு!!!!
ரொம்ப காலத்துக்கு மின்னாடி அமெரிக்கா போட்ட ஆட்டம் பாம்.
இப்போ ஆண்டவன் போட்டாங்கர பேர்ல சுனாமி + நில நடுக்கம்.போதாக்குறைக்கு அணு உலை வேற வெடிச்சு போச்சாம்.எனக்கு  தசாவதாரம் படம் பாக்கற மாதிரியே ஒரு பீலிங்கி. பாக்கவே ரொம்ப கோரமா இருந்தது அந்த விடியோஸ்.
கடவுளே...எந்த நாட்டுக்கும் இந்த நெலம இனிமே வரக்கூடாது!!!!!
விஷ்யம் நம்பர் ரெண்டு :
ஜப்பான் முழுகுது ஒரு பக்கம்..ஆனாலும் நமக்கு அதெல்லாம் பெருசா தெரியாது.சவுத் ஆப்பிரிகாகிட்ட தோத்துப்போச்சு இந்தியா..அந்த சோகத்துல தான் நாம முழுகி இருக்கோம்.(நான் ரொம்பவே முழுகிட்டேன்)
நான் செம்ம டென்ஷன் ஆகிட்டேன்.நம்ம சச்சு 111(அதுவே ராசி இல்லாத நம்பர்னு யாரும் நெனக்காதீங்க) அடிச்சும் ஜெய்க்கல.என்ன கொடும சார் இது!!!!!
என்னோட ப்ரெண்ட்ஸ் சொல்ராங்க சச்சு சதம் அடிச்சதாலதான் நாம மாச் ஜெய்க்கல...Its unlucky if he gets 100.
ஐயகோ என்ன ஒரு அவமானம் நம்ம தலைவருக்குன்னு களத்துல எறங்கி பின்னி எடுத்துட்டேன் அவங்கள...இருடந்தாலும் மனசு கேக்காம இங்கயும் பொலம்பிட்டேன்.
ஆரம்பத்துல நம்ம டீமுக்கு எல்லாரும் உட்ட பில்டப்ப பாக்கும்போது நெசமாவே ஜெய்ச்சுருவோம் உலககோப்பையன்னு தப்பு கணக்கு போட்டுட்டேன்.
நடுவர் நாட்டாமை வாய்ஸ்:அயர்லாந்துக்கு தான் நியாயமா கப்பு போயி சேரணும்ங்கிரது இந்த நாட்டாமயோட தீர்ப்புலே!!!!!

விஷ்யம் நம்பர் மூணு-- இன்னைக்கு ஒரு பிச்சக்காரனுக்கு 60 ரூபாய் தர்மம் பண்ணினதா நெனைக்க வெச்சுட்டான் இந்த ஏர்டெல்காரன்.நேத்துதான் 202 ரீசார்ஜ் பண்ணினேன்.அது புடிக்கல இந்த கட்டதொறைக்கு.இன்னைக்கு ஒரு போன் வந்துது.எடுத்தா ஏர்டெல் ரெப்ரெசெண்டேடிவ் பேசினான்.
ஏ.ரெ: வணக்கம் மேடம்.உங்க கூட ஒரு 2 நிமிஷம் பேசலாமா..
நான்:யெஸ் பேசலாமே.
ஏ.ரெ: நீங்க ஹலோ ட்யூனா வெச்சுருக்கற பாடலுக்கு  மாசம் 30 ரூபாய் சார்ஜ் பண்றோம்.ஆனா  ஒரு ஸ்பெஷல் ஆபர் ஒண்ணு வந்துருக்கு.அதுல நீங்க 3 மாசத்துக்கு 60 ரூபாய் கட்டினா போதும்.
நான்(மைண்ட் வாய்ஸ்): நாம இதை இந்த மாசம் எடுத்து உட்டுடலாம்னு நெனச்சோமே...இவன் என்ன இப்டி சொல்றான்!!!!60/3=20 ரூவா. இப்போ மாசம் 30 ரூவா கட்டுறோம்.மாசத்துக்கு 10 ரூபாய் மிச்சமா... ஆகா ஆகா..ஓ.கே சொல்லிட வேண்டிதுதான்
ஏ.ரெ:அதுல நீங்க சேர விரும்பரிங்களா..
நான்: கண்டிப்பா சேரலாமே!!!!
ஏ.ரெ:இப்போவே உங்க அக்கவுண்ட்லேந்து 60 ரூபாய எடுத்துடுவோம்.
சம்மதமா?
நான்:ஓக்கேங்க சேத்து விடுங்கங்க
ஏ.ரெ:ஓகேங்க ரொம்ப நன்றி.
--முற்றும்--
இதுல என்னா  அநியாயம் இருக்கு? அதுதானே உங்க கேள்வி!!!
நான் 2 நாள் முன்னாடிதாங்க இந்த மாசத்துகான 30 ருபாய கட்டினேன்.:(:(:(
60+30 -- 90...3 மாசத்துக்கு 90 ரூபாய வாங்கிட்டான் அவன்.
ஆகமொத்தம் அவனுக்கு போய் சேர வேண்டிய காசு போயிடிச்சு.
ஆகவே மக்களே மக்களே மக்களுக்கு மக்களே...தயவு செஞ்சுஇலவசங்களை நம்பி ஏமாறாதீர்கள்..
நான் கருத்து சொல்ற அளவு இந்த உலகம் ஆய்டுச்சா...ச்ச...
பின் குறிப்பூ:
ஆமா அவந்தான் கேட்டான்னா உனக்கு எங்கடீ போச்சு அறிவு...வேணாம்னு சொல்ல வேண்டியதுதானே??இத நீங்க உங்க மனசுல நெனச்சுருப்பீங்க கண்டிப்பா..அதுலயும் ஒரு மேட்டர் இருக்கு.
என் ஹலோ ட்யூன் என்ன தெர்யுமா!!!
கஷ்டபடாமே எதும் கெடிக்காது
கஷ்டபடாமே கெடிக்கர்து என்னிகுமே நெலக்காது.
அதிகமா ஆசேபட்ற ஆம்ப்ளேயும்
அதிகமா கோவப்பட்ற பொம்ப்ளேயும்
நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல!!!!
பை
மிஷ்டர்.ஆறுபடையப்பா..

பதிவின் இறுதிக்கு வந்தாயிற்று.
எழுத எக்கச்சக்க விஷயங்கள்.கொஞ்சங்கொஞ்சமா எழுதுகிறேன்.வாசக மற்றும் வாக்காளப்பெருமக்களே...எப்போதும் போல தங்கள் ஆதரவை எனக்கு தந்தருள்க.
நன்றி.வணக்கஹம்..ஹீ ஹீ
என்றும் அன்புடன்,
கிருத்திகா.


15 October, 2009

ஹாப்பி தீபாவளி நண்பர்களே மற்றும் நண்பிகளே...:)




அல்லாருக்கும் வணக்கமுங்கோவ்.....இது இன்னோரு சமூக அக்கரை கொண்ட பதிவு அப்டினும் வெச்சுக்கலாம்...சிலருக்கு உளர்ரேன் அப்டின்னு கூட தோணலாம்.நான் சொல்றது சரியோ இல்ல தப்போ(என்னை பொறுத்தவரை சரி)தெரியல...
விஷயத்துக்கு வரேன்.நாட்டுல நெறய மதங்கள் இருந்தாலும்  முக்கியமான 3 மதங்கள்(எனக்கு தெரிஞ்சவரை) இந்து,முஸ்லிம்,கிரிஸ்தவம்.இந்துவை தவிர மத்த மதங்களை எல்லாம் ஆராய்ஞ்சு பாத்திங்கன்னா இவங்க அடுத்த மதத்துகாரங்க கூட  சண்ட போட்டுப்பாங்களே தவிர தங்கள் மதத்துக்குள்ள சண்டை போட்டுக்கரது கம்மிதான்.சரி இது ஒரு பக்கம் இருக்கட்டும்.நம்ம  இந்துக்கள்ள கடவுள் இல்லைனு சொல்லுர கூட்டம் ஒண்ணு இருக்கு.அவங்களுக்கு ஆத்திகர்கள் வெச்சுருக்கர பேரு "நாத்திகர்கள்".அவங்களே வெச்சுக்கிட்ட பேரு "பகுத்தறிவாளர்கள்".இதை மனசுல வெச்சுக்குங்க.மேல படிங்க.
                 இப்போ ஒரு குட்டி கதை(தலைவர் ஸ்டைல்).ஒரு ஸ்கூல்ல படிக்கர ரெண்டு பேர எடுத்துக்கலாம்.(நெறய பேரு இருப்பாங்க.நம்ம கதைக்காக 2 பேரு மட்டும் :) ).அவங்கள்ள ஒரு பையன் நல்லா படிக்கரான்.இன்னொருத்தன் ப்டிக்கலை அப்டினு வெச்சுக்கலாம்.ஒரு நல்ல டீச்சர்(மிஸ்-1) என்ன பண்ணனும்??படிக்காத பையனை கூப்பிட்டு "தம்பி தம்பி!!! நீ ஏம்பா நீ படிக்க மாட்டேங்கர??நீ படிக்கரதுக்கு என்ன பண்ணலாம்?பாடத்துல எதாவது புரியலயா??எதவது கஷ்டமா இருந்துச்சுனா என்னை வந்து கேளு .இல்லனா படிக்கர பையன் கிட்ட உதவி கேட்டு படி.அப்படியும் இல்லனா டூஷன் சேர்ந்துக்க." அப்படினு சொல்லனும்.
இதே அந்த மிஸ்-2 "நீ கவலப்படாத தம்பி.அவனோட மார்க்க கொறச்சு விட்டுர்ரேன்.இல்லனா அவன பரீட்சை எழுத விடாமல் செஞ்சுரலாம்.நீ அவனை விட நல்லா மார்க் எடுத்துருப்ப"அப்படினு சொன்னா அவங்களை எந்த ரகத்துல சேர்க்குரது???இதை நான் ஏன் சொல்லுரேன்னு அனேகமா எல்லாருக்கும் புரிஞ்சுருக்கும்.
           என் ஊரு சிதம்பரம்.இங்கே நடந்துட்டு வர்ர பிரச்சனைய  தொடர் பதிவா எழுதலாம்.ஆனா நமக்கு தான் அரசியல்(!!!!!!!!) பிடிக்காதே( :) ஹி ஹி) .நடராஜர் கோவிலை அரசாங்கம் எடுத்துகிச்சு.அது கூடாதுனு கோவிலை பரம்பரை பரம்பரையா நடத்திட்டு வர்ர தீட்சிதர்கள் சொல்லுராங்க.இப்ப சீனுக்குள்ல நுழயராங்க நம்ம நாத்திகர்கள் @ "பகுத்தறிவாளர்கள்".இரண்டு நாட்கள் முன்னால் இங்கே  ஒரு மீட்டிங் போட்டுருந்தாங்க.அவ்வளவா கூட்டம் இல்லை.இருந்தாலும் ஒரு 50 பேருக்கு மேல இருந்தாங்க.என்னதான் பேசுராங்கனு பாப்போம்னு அடியேனும் அங்க ஐக்கியம் ஆனேன்.ஒரு அதிபுத்திசாலி பேசுராரு "ராத்திரி நம்மகூட டாஸ்மாக்ல உக்காந்து தண்ணி அடிக்கர பயலுங்க கிட்ட நாம அடுத்த நாளு காலைல கோவில்ல விபூதி வாங்க வேண்டிருக்கு.மதியானம் நம்ம கூட முணியாண்டி விலாஸ்ல சாப்டுர சல்லி பசங்க(நோட் த பாய்ண்ட்) கிட்ட சாயங்காலம் குங்குமம் வாங்க வேண்டி இருக்கு."அப்படிங்கர சில அருமையான(அபத்தமான) கருத்துக்களோட இதயும் சொன்னாரு"மாமி சின்ன மாமி மடிசார் அழகில் வாடி சிவகாமி"அப்படின்னு பாடுனார் இளையராஜா.அதுல குட பாருங்க மாமிக்களைதான் முன்னிலை படுத்திருக்காரு"அப்டின்னு ஒரே போடா போட்டாரே பாக்கணும்.அதோட எடுத்தேன் ஸ்கூட்டிய.ஜூட்டு தான்.இத ஏன் இங்க சொல்ரேன்னு யோசிக்கிரிங்களா???அங்க தான் விஷயமே இருக்கு.
                      அவங்க என்ன் சொல்லி மீட்டிங்க ஆரமிச்சாங்கன்னா "கோவிலை ஆக்கிரமித்திருக்கும் தீட்சிதர்களை விரட்டுவதே எங்கள் குறிக்கோள்.காலம் காலமாக அவர்களே ஆண்டுகொண்டிருக்கிரார்கள்.ஆன்மீகத்தை வளர்க்காமல் தீண்டாமை வளர்க்கின்ரார்கள்" அப்டின்னாங்க.எனக்கு ஒண்ணுதான் புரியல.எந்த காலத்துல இருக்கராங்க இவங்க....கிராமங்கள்ள போயி இத மாதிரி சொன்னாலும் அர்த்தம் இருக்கு.ஆனா இங்க வந்து இப்படி சொல்லுராங்களே..தீண்டாமை இன்னும் ஒரு சில இடங்களில் இருந்துக்கிட்டு தான் இருக்கு.அதை நான் இல்லைனு சொல்லல.தீண்டாமையை ஒழிக்கட்டும்.அதயும் வேணாம்னு சொல்லல.அதுக்கு அவங்க தாழ்ந்தவர்கள் அப்படினு அவங்களே ஒரு பிரிவை நினைக்கராங்க இல்லயா...அவங்க மிஸ்1 மாதிரி வளர உதவி செய்ய்யனும்.அதை விட்டுட்டு மிஸ்-2 மாதிரி அடுத்தவங்களை கால வாரி விட்டுட்டு ஒருத்தரை முன்னேத்தரது தப்பு....அதோடு இன்னொரு விஷயமும்...எதாவது வாகன்சி இருக்குனு போட்டு இருந்தாங்கன்னா அதை பாருங்க.சமீபத்துல ஒரு நிறுவனத்துல 50 இடங்கள் காலினு  ஒரு அறிவிப்பு.அதுல  பாத்திங்கன்னா எல்லாருக்கும் ஒதுக்கீடு போக ஜென்ரலுக்குனு 25 இடங்கள் தான்...இதை நான் புகாரா சொல்ல வரலை.இப்படி இருக்கும்போது ஏன் இன்னும் இன்னும் கீழ தள்ளராங்க??? இப்போ பாவப்பட்ட நிலையில இருக்கரது யாருனு நீங்களே சொல்லுங்க.....
                      

                               
           இதன் மூலமாக நாம் சொல்ல வரும் கருத்து என்னவென்றால் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.இவங்க புத்தியில இருக்கர அறியாமயும்,தீண்டாமையும் பொசுங்கட்டும்.....நல்ல இனிப்பு காரம் எல்லாத்தயும் சாப்புடுங்க.அதோட பட்டாசு வெடிக்குரப்போ பாத்து வெடிங்க...அக்கம் பக்கம் பாத்துகிட்டும் வெடிங்க.யாராவது போகும்போது லெஷ்மி வெடிய கொளுத்தி பயமுறுத்தரது,ராக்கெட்ட உட்டு ரகள பன்ரது...இதெல்லாம் வேணாம்...(சும்மா காமெடிக்கி :) )
ஹாப்பி தீபாவளி நண்பர்களே மற்றும் நண்பிகளே...:)

19 September, 2009

நில்,கவனி ,யோசிங்க மக்களே

என்னை ரொம்ப பாதிச்ச ஒரு(நேறய்யயயய) விஷயம்...
நேத்து காலைல 6 மணிக்கு வாக்கிங் போன ஒருத்தர் போனவர் தான்...வரவே இல்ல திரும்ப... பேருந்து நிறுத்தம்ல(பஸ் ஸ்டாப்...) வந்து பயணிகளை எறக்கி விட்டுட்டு ஸ்டார்ட் பண்ணி இருக்காரு..அப்போ இவரு ஒரமா தான் நடந்து போய்ருக்காரு..விதினு சொல்ரதா என்னனே தெரியல..அவருமேல பஸ் இடிச்சு அதே எடதுல அவர் கீழ விழுந்து அதே எடத்துல இறந்து போய்ட்டாரு..இதை நான் ஏன் சொல்ரேன்னா ஓரமா போனவருக்கே இந்த கதி...அதுவும் காலங்கார்தாலே..அவ்வளவா ட்ராபிக் இல்லாத நேரம் அது..
நாம எல்லாரும் எத்தன தடவ பாத்துருக்கோம்...செம ட்ராபிக்...அதுலயும் யாரு அந்த வெள்ளை கோட தாண்டி முதல்ல போரொம்னு போட்டி பொடுரது...ரோடுல எத்தன வண்டி நிக்குது....நாம முதல்ல நிக்கரோமா...எப்டியாவது ஒவர் டேக் பண்ணி பொகனுமே...வேலைக்கு நேரம் ஆச்சே...இதெல்லாம் யாரவது யோசிச்சுருக்கொமா?? ஏன் நானே அப்டித்தான்..8.40 கு பொகணும்..கெளம்புரதே 8.40கு தான்...
ஒழுங்கா ட்ராபிக் ரூல்ஸ் மதிச்சு பொ..ஸ்பீடா பொகாதே .இதெல்லாம் சொன்னா அம்பி,ரூல்ஸ் ராமானுஜம் அது இதுனு கிண்டல் பன்னியே ஒழிச்சுடுவொம்....இனிமேல தயவு செய்து யாரும் வேகமா பொரதோ,செல் போன் ல பெசிக்கிட்டே பொரதோ வேணாம்..இது மாதிரி விபத்து பக்கத்து வீட்லயோ இல்ல எதிர் வீட்லயோ நடந்தா பாவபட்டுட்ட்டு
விட்டுடுவோம்..நம்ம வீட்ல அப்டி ஒன்னு நடக்க வேனாம்னு தான் எல்லாருமே ஆசைப்படுவொம்..அப்டி நடக்காம இருக்கனும்னா ரோடுல பொகும்பொது தயவு செய்து வேகமா போகாதிங்க...நம்ம அப்பா போட்டு வெச்சுருக்கர ரோடுங்கர மாதிரி போரது..
செல்லுல பேசிக்கிட்டே பொரது
அக்கம் பக்கம் வேடிக்கை பாகுரது
இன்னும் எத்தனை விதம் இருக்கோ அத்தனையும்
இதெல்லாம் இனிமே வாணாம்...எப்பவுமே வாணாம்...
சரி...ரொம்ப பேசிட்டனோ??
கீழே சில படங்கள் குடுத்துருக்கேன்..சிரிங்க நல்லா
எப்பிடி பாக்கராய்ங்க எடுபட்ட பயலுங்க...
உயிரே உயிரே தப்பிச்சு எப்டியவது ஓடிவிடு.....
ஐயய்யோ..


வேனாம்...அழுதுடுவேன்...



ஷப்பா இப்பவே கண்ண கட்டுதே..




பிஸ்கோத்து வாங்கலயோ பிஸ்கோத்து..
ஐய்யா வாங்க அம்மா வாங்க...




ஏய் நில்லு ...ஸ்டாப்...
அசிங்கபடுத்தாதே..



மம்மி ஷிக்கரம் ஷாப்பாடு குடுக்கல..மத்த ரெண்டயும் ஷாப்ட்றுவேன்



பி.கு:இதை படித்து வோட்டு குத்தும் வாக்காளப்பெருமக்களே..
உங்க அடுத்த பதிவுக்கு நான் 1 வோட்டு பொடுரேன்..
இதை படித்து கருத்துகளை கும்மாங்குத்தாக குத்திட்டு போர வாசக பெருமக்களே

நன்றி..மீண்டும் வருக...
ஏன்னா உங்களுக்கு பெருசா ஒண்ணு இருக்கு...போக போக தெரியும்

13 September, 2009

நூறு தடவ சொல்லியாச்சு....


இன்னிகு என்னடா எதுவுமே எழுதலயேனு யொசிச்சிண்டே கோவில்ல நடந்து போயிண்டுறுந்தப்போ ஒரு விஷயத்த பார்தென்....ஆஹா இன்றய தத்துவத்துக்கு ஒரு இனா-வானா மாடிகிச்சி அப்டினு சந்தொஷமாகிட்டென்..
இது எல்லாரும் காலம் காலமா சொல்லிண்டு வர்ரதுதான்
ஆனா சில மடஜென்மங்கள் இன்னும் திருந்தமாடெங்கரதுகள்

விஷயம் இவளவுதான் :)
ஸ்வாமி தரிசனம் முடிஞ்சு வெளியே நவக்ரஹ சன்னதிலே பயபக்தியா சாமி கும்புட்டப்போ "என்னை தேடி காதல் என்ற வார்தை அனுப்பு...உன்னை தேடி வாழ்வில் மொத்த அர்த்தம் தருவேன்" அப்டினு கத்துது ஒருத்தரோட(சுமார் 60 வயசு இருக்கலாம் :) ) மொபைல்...
எல்லாரும் திரும்பி பாக்கராங்க..ஆன அதுக்கு சொந்தக்காரர் மட்டும் ரொம்ப பொறுமயா எங்கெயோ அடிக்குதுங்கர ரேஞ்சுக்கு
எடுத்து யார் கூப்ட்ரதுனு பாத்த்து (அந்த பாட்டு அரைவாசி முடிஞ்சது அதுக்குள்ள) எடுக்கரார்

மக்களே...உங்களுக்கு ஒரு வேண்டுகோ(கொ)ள் (கட்டளை)
தயவு செய்து மொபைலை சைலெண்ட் அதாவது சத்தம் போடாத மாதிரி செட் பன்னிக்ககொள்ளவும்..
தெரிந்தவர்களிடமும் சொல்லவும்..
சம்மந்தம் இல்லாத எடத்துல அடிச்சுதொலைக்கும்...
அப்பரம் உமாச்சி மட்டும் இல்ல...சுத்தி நிக்கரவங்களும் கண்ண குத்திடுவாங்க....ஜாக்கரதை (மெரட்டலைங்கொவ்..)