02 November, 2009

சும்மா காமெடிக்கி கிகிகிக்க்க்கி


           
எந்த மாதிரி படம் வேணாலும் எடுங்க...படத்த ஓட வெக்கனும்ணா நீங்க சன் பிக்சர்சை அணுகவும்....இதுவரை எடுத்த படங்களில் சொல்லிக்கொள்ளும்படியாக ஒண்ணுமே இல்லை..(சொல்லி கொல்லும்படி இருந்தது அதிகம் !!!!!)
                                 இந்த தீபாவளிக்கு ரிலீசான பேராண்மைனு ஒரு அருமயான படம்...அதோட டிரைலர் கூட வரல சன்னுல(எனக்கு தெரிந்த வரை.......1,2 தடவ வந்திருந்தால் மன்னிக்கவும் நண்பர்களே)...அதவிட கொடுமை என்னனா பசங்கனு ஒரு சூப்பர் படம்...அதுவும் வரல...இப்போ பாருங்க கண்டேன் காதலை ரிலீஸ் ஆகிரத்துக்கு முன்னாடியே அந்த பாட்ட போட்டு போட்டு காத கிழிச்சுட்டாங்க...சரி இதெல்லாம் கூட மன்னிச்சுடலாம்...(வேற வழி!!!!)..திரைவிமர்சனம்னு ஒண்ணு போடுராங்கல்லா ...அதுல குடுப்பாங்க பாருங்க ஒரு ஹைப்பு...யப்பா... படத்த  பாத்தே ஆவணும் போல...அப்ப்டினு ஒரு பீலிங்கி வந்துரும்...
         இந்த பீலிங்கியாலதான் மாசிலாமணிங்கர காதல் காவியத்த பாத்தேன் தியேட்டர்ல...அடடடடா என்ன அருமயான படம்...படம் ஃபுல்லா ஃப்லாஷ்பாக் தான்...நாம எல்ல காட்சியயும் ஏற்கனவே பாத்துருக்கோமே....அது எங்க??அப்படின்னு நம்மள கண்டிப்பா ஃப்லாஷ்பாக்குக்கு கூட்டிட்டு போயிடும்....ஆனா ஒரு  விஷயம் பாராட்டணும்....ஒரு தப்ப செஞ்சுட்டோம்னா அத அப்புடியே மெய்ண்டைன் பண்ணனும்...அதே மாதிரிதான் இவிங்க....ஒரு படத்த எடுத்துட்டோம்...எப்புடியாவது ஓடவெச்சே ஆகனும்னு  கங்கணம் கட்டிக்கிட்டு விளம்பர இடைவேளை எல்லா நேரத்துலயும் ட்ரைலர போட்டு உசிர எடுத்துடுவாங்க...
             இந்த படத்தோடயாவது அலர்ட் ஆகிருக்கணும்...மறுபடியும் இவங்களை நம்பி "நினைத்தாலே இனிக்கும்" படத்துக்கு போனா குதுகலமா இருக்க  வேண்டிய காலேஜ் காட்சிகள் இத்துப்போன பூமர் பப்பிள்கம் மாதிரி இழு இழுனு இழுத்துச்சு...சே இந்த சன் பிக்சர்ச்சே இப்புடித்தான்.,...இனிமே போகவே கூடாது...அப்படினு 99% சபதம் போட்டுட்டேன்..
             சபத்ததை டிஸ்டர்ப் பண்ணிச்சு கண்டேன் காதலை..இது ஜப் வி மெட்னு ஹிந்தில சக்க போடு போட்ட படம்...படத்துக்காக 10 தடவை,கரீனாவுக்காக 5 தடவை,பாட்டுக்காக 5 தடவை,இப்படி எத்தனையோ  தடவை பாத்தோம் இந்த படத்தை..தமிழ்ல எடுக்க போராங்க...அதுவும் பரத்,தமன்னா வெச்சுனு சொன்ன உடனே புஸ்னு போச்சு...எனக்கென்னவோ கரீனா பண்ணின ரோல் இங்க அசின் பண்ணிருந்தா நல்லாருக்கும்னு தோணிச்சு...பரத்கு பதிலா கூட வேற யாரயாவது போட்டுருக்கலாம்...அதுகூட பரவால்ல...கதய கன்னாபின்னானு இஷ்டத்துக்கு மாத்தி,பாட்டுகூட அவ்வ்வளோ இனிமயா இல்ல...இப்படி யேகப்பட்ட சொதப்பல்களுக்கிடயே
            வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிரது உங்கள் அபிமான திரை அரங்குகளில் கண்டேன் காதலை...
                 அடுத்தது என்ன பயம்னா பெரிய நடிகர்கள் நடிக்கர படம்  (எனக்கு தெரிஞ்சு 2) சன் பிக்சர்ஸ் பானெர்ல வருது...அது கண்டிப்பா ஓடும்..ஆனா இவங்க மேல ஒரு நல்ல மதிப்பு வந்துருச்சே நமக்கு...
(பி.கு-அடுத்ததா இவங்க படம் என்னாங்க ரிலீஸ் ஆவுது???தியேட்டர் போகணும்போல இருக்கு???சொன்னிங்கன்னா உஷாரா  இருப்போம் :) !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!)

மறக்காம வோட்ட குத்துங்க.
அன்புடன்
உங்கள் தோழி

8 comments:

 1. நான் ஒரிஜினல் படம் பார்க்கலை, ஆனாலும் தாங்க முடியல, போதாதற்கு தூங்கிகிட்டிருந்த நண்பனை எழுப்பி (அவன் ஹிந்தில பார்த்துட்டான்) கூட்டிகிட்டு போய் நல்லா வாங்கி கட்டிகிட்டேன், ஆனா அவன்தான் என்னை நினைத்தாலே இனிக்கும் கூட்டிக்கிட்டு போனது, பழிதீர்த்தாச்சு

  ReplyDelete
 2. இல்லைங்க..இப்ப வந்த படம் எதுவும் அவங்களுக்கு ஓட மாட்டேங்குது.. ரொம்ப நாள் மக்கள ஏமாத்த முடியாது. நிறைய பேர் எரிச்சலோட பேசுறத கேட்டுருக்கேன். இவங்க பண்றது ஊடகத்தில் ஒரு வன்முறை. இவங்களை அடக்க இன்னொருத்தன் வருவான் பாருங்க.

  ReplyDelete
 3. காமெடியா இருந்தாலும் க‌ச‌ப்பான‌ உண்மைங்க‌.. டீவி, எப்.எம்னு வெறித்த‌ன‌மான‌ விள‌ம்ப‌ர‌ம்..பின்னோக்கி ஸார்.. ரெட் ஜ‌ய‌ன்ட் மூவிஸ்சை சொல்றார்னு நினைக்கிறேன் ;)

  -Toto
  www.pixmonk.com

  ReplyDelete
 4. அதுக்காக வேட்டைக்காரனை பார்க்காம இருந்துராதிங்க. வந்தா கண்டிப்பா பாருங்க. டாப் டென்ல அதுதான் டாப்பா வரும். ஒரு கொடுமை என்றால் எல்லாரும் அனுபவிக்கனும் இல்லையா? நன்றி.

  ReplyDelete
 5. சங்கர்...என்ன வேலை செஞ்சிங்க...பாவ்ம் உங்க நண்பர்.....ஆனால் சர்யான தண்டனை தான் :)

  ReplyDelete
 6. பின்னோக்கி--
  நீங்க சொன்னது 100% சரி...இவங்க வன்முறை தான் பண்றாங்க..ஆன இதுங்கள மாதிரி இன்னொன்னு வேனம்வேனாம் வேணவே வேணாம் ...நாடு தாங்காது

  ReplyDelete
 7. டொடொ
  ரெட் ஜெயண்டை அவர் சொல்லலை...ஏன்னா இப்பொவே அந்த அனியாயம் தான் பண்ணுது...மானாட மயிலாட பாத்திங்களா??????
  ஆதவன் திருவிழாவா ஆக்கிட்டாங்களே!!!!!!!!!!!!

  ReplyDelete
 8. @ பித்தனின் வாக்கு
  ஆமாம்...நீங்க சொல்லுரது சரி...படம் கண்டிப்ப 100 நாள்...சின்ன சின்ன பீசை வெச்சே படத்த 50 நாள் ஓட்டுராங்க...இதுல இளய தளபதி டாக்டர் வேர நடிக்கராரு(!!!!!)...

  ReplyDelete