08 November, 2009

கற்பனை குதிரை ஓடினால்!!!!!


                            
ஒரு சின்ன கம்பெனி...50 பேரு வேலை பாக்கராங்க..அந்த கம்பெனி இப்போ நஷ்டத்துல ஓடுது..இவங்களை அந்த  கம்பெனிக்கு எம்.டியா போட்டா என்ன செய்வாங்க....ஒரு சின்ன கற்பனை....(யார் மனதையும் புண்படுத்த அல்ல...எல்லாமே காமெடிக்கே)
1)யுவராஜ் சிங்
                                  ஏன்ப்பா இப்படி லூசுத்தனமா யானை படத்தயும் குருவி படத்தயும் மாட்டிர்க்கிங்க செவுத்துல...முதல்ல இத எடுத்துட்டு  தீபிகா படுகோனே படம் இந்த பக்கம்,ப்ரீதி ஜிந்தா படம் இந்த பக்கம்,மந்திரா பேடி நேரா...இந்த மூணையும் என் ரூம்ல மாட்டுங்க....நீங்களும் உங்களுக்கு புட்சவங்க படத்த மாட்டிக்குங்க...அப்பறம் பாருங்க... எப்புடி சிக்சர் பறக்குற மாதிரி கம்பெனியும் பறக்கும்....

2)ஹர்பஜன் சிங்-
                                 யாரு சார் அது...கம்பெனி நஷ்டத்துல ஓடுதுன்னு சொன்னது..இங்க வாய்யா...தைர்யம் இருந்தா மூஞ்ச காட்டு...அப்பறம் தெரியும் கத......எனக்கு முன்னாடியே குடுத்துருக்கவண்டிய பொறுப்பு சார்...ரொம்ப லேட்....

3)ல.தி.மு.க தலைவர்....
                                   தம்பி உழைச்சா தான் நமக்கு சோறு
                       சும்மா உக்காந்துருந்தா அடிக்கும் போரு
                      நீ உன் வேலய முதல்ல பாரு
                       கம்பெனி லாபம் ஆகணும் நூறூ(கோடி)
                    என் பையன்  அடுத்த சூப்பர் ஸ்டாரு
                       இதெல்லாம் சொல்ல நான் யாரா???
                    டி.ஆரு(east) ,டி.ஆரு(west),டி.ஆரு(north)(எக்கோ விட்டுக்கொள்ளவும்)
                 யே டண்டனக்கா யே டனக்குனக்கா...யெ நாக்க முக்கா

4)தோனி--
                                ஒரு தடவ தானே நஷ்டமாச்சு ...பரவால்ல...விடுங்க...அதான் நான் வந்துட்டேன்ல..நீங்க வேலய எப்டி வேணாலும் செய்ங்க...மறுபடியும் நஷ்டமாச்சுன்னா யார்மேலயாவது பழிய போட்டுறுவோம்...கவலபடாதிங்க...எனக்கு தெரியும் யுவராஜ் மேல தான் தப்பு எல்லாம்...(தீபிகா மறுபடியும் ஜாய்ன் ஆகிட்டாங்களாமே)......அடுத்து எதாவது பிள்ள பூச்சி கம்பெனிய வாங்கிடுவோம்...அப்புறம் ஒரு 6 மாசத்துக்கு யாரும் சத்தம் போடவே மாட்டாங்க...

5)ரிக்கி பாண்டிங்க்-
                                  நம்ம கம்பெனி தான் என்னிக்குமே நம்பர் 1...இது சும்ம தற்காலிக நெலமைதான்..எனக்கு தெரியும் நாம ஏன் சரியா பண்ணலைனு.....பாதி பேருக்கு உடம்பு சரி இல்லை....அதோட எம்.டி வேற சரி இல்லை..ஐய்யய்யோ...அது நாந்தானோ..:(சரி விடுங்க...என் வாய்ல தான் சனிஸ்வரன்  செண்சுரி அடிப்பார்.....

6)கவுண்டமணி
                அடங்கொக்கமக்கா....எங்கிட்ட பொயி இந்த பெரிய பொறுப்ப குடுக்கரிங்களே...ஐ ஆம் வெரி பிசி.....நாளக்கி டெல்லி போகணும்...ஃப்லைட் புக் பண்ணனும்.....பெரிய பெரிய தலைவருங்களாலயே செய்ய முடியல...என்ன போயி...ச ச ச ஒரே குஷ்டமப்பா
கடல்ல எங்கப்பன் நண்டு வறுத்து தின்னுகிட்டு இருப்பான் ...அவன கூப்டு சொல்லுங்க...என்ன புரியுதா...அட கோமுட்டி தலயா... ஏண்டா ஓடுர???
7)ஒபாமா
                                         ஸ்டாப் ஸ்டாப்..இப்போ நான் இங்க பேச வரல...முதல்ல எனக்கு ஒரு லிஸ்ட் ரெடி பண்ணிக்குடுங்க...நம்ம கம்பெனில எத்தன வெளினாட்டுக்கார பயலுங்க வேலை பாக்குராய்ங்கன்னு....அவ்ங்களை தூக்கிட்டு நம்மாளுங்களை போட்டாலே போதும்...கம்பெனி வெளங்கோ வெளங்குன்னு வெளங்கிரும்.....அப்புறம் 4 பேருகிட்ட சொல்லி நமக்கு 4 நல்ல பட்டங்களை குடுக்கஸ்சொல்லுங்கப்பூ

8)சச்சின் டெண்டுல்கர்
                           ஷப்பா....இந்த வயசான காலத்துல ஏன் மேல மேல என்ன கஷ்டப்படுத்துறிங்க...இன்னும் எத்தன நாள்தான் நானே இந்த கம்பெனியை சுமக்கணுமோ தெரியல....வேலயை பாருங்க......எனக்கு இதுக்கு மேல பேச தெரியாது....

9)தானைய தலைவர் திரு.கலைஞர்.டாக்டர்.மு.க
                                                                 என் இனிய உடன்பிறப்புகளே....எனக்கு பதவி கொடுத்து கவுரவப்படுத்தியதற்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை.....
                                ஆனால் கட்சிப்பொறுப்புகள் பல இருப்பதால் என்னுடய பதவியை பிரித்து தர இருக்கிரேன்......துணை எம்.டியாக நம் கட்சி இளைஞர் அணி தலைவர் ,நான் பெற்றெடுத்த தவ புதல்வர் மு.க.ஸ்டாலினயும்,இணை எம்.டியாக நம் கட்சி தென் தமிழக அணி தலைவர் ,பொறுமையின் சிகரம் மு.க.அழகிரியையும் ,துணை எம்.டியாக நம் கட்சி இளைஞர் அணி தலைவர்,கௌரவ  எம்.டியாக மகளிர் திலகம்,என் செல்ல புத்திரி கனிமொழியயும் நியமிக்கிறேன்.....

            இந்த பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கிரேன்....அடுத்த பதிவில் அம்மா,ஐய்யா,புரட்சி கலைஞர்,அன்னை,ஆத்தா  etc etc மற்றும் பலர் என்ன செய்வாங்கன்னு பாப்போம்...உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்ரன...இன்னும் யாரை எழுதினால் நன்றாக இருக்குனு நெனைக்கரிங்களோ அதயும் சொல்லுங்க...உங்கள் கற்பனையயும்  எழுதுங்கள்....
மறக்காம வோட்ட குத்துங்க.கருத்துக்களையும் கொட்டுங்கள்...
அன்புடன்
உங்கள் தோழி
கிருத்திகா

16 comments:

 1. தோனி, டெண்டுல்கர்னு கலக்கிட்டீங்க!!

  ReplyDelete
 2. காமெடி... நகைச்சுவை... அருமை!
  தொடருங்கள்.
  //தானய தலைவர் திரு.கலைங்கர்.டாக்டர்.மு.க//
  போன்ற எழுத்துப் பிழைகளைத் தவிர்த்தால் சுவையாயிருக்கும்.

  ReplyDelete
 3. வாவ்வ்வ்வ் கிருத்திகா கலக்கிட்டீங்க.சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுப்பாஅடுத்த பதிவு சீக்கிரம் போடுங்க..

  ReplyDelete
 4. தேவன் மாயம்...

  வருகைக்கும் ,கமெண்டுக்கும் நன்றி....

  NIZAMUDEEN
  நல்ல கமெண்ட்...சரி செய்துவிட்டேன்...
  நமக்கு பேச வர்ர அளவு டைப் பண்ண வராது :)
  அதனால அடியேனின் பிழைகளை தயவு கூர்ந்து மேலும் மேலும் சுட்டிக்காட்டவும்

  Mrs.Menagasathia
  நன்றி...அடுத்தது சீக்கிரமே வந்துகிட்டு இருக்கு :)
  கண்டிப்பாக ஆதரவு தரவும்..
  சரி விருந்துக்கு கூப்புட்டீங்களே...எப்போ????(எங்களுக்கு கிட்னெய் கொஞ்சம் அதிகம்....புரியல????மூளை தான்)

  ReplyDelete
 5. டீ ஆரு,கவுண்டர் காமெடி கலக்கல்ங்க...

  ReplyDelete
 6. தோனி க‌மெண்ட் சூப்பர்..

  -Toto
  www.pixmonk.com

  ReplyDelete
 7. நல்ல நகைச்சுவையான கற்பனை. வாழ்த்துக்கள் கிருத்திகா. ஆனா எதா இருந்தாலும் எங்க அண்ணன் தான் முதலில் வரனும். நம்ம ரஜினி வந்தால்தான் சூடும் சுவையும் இருக்கும். ஆறு மாச எம் டி ஆறு மாசம் இமாலயம் போவார். சிங்கிள் சாங்ல கம்பனி லாபம் மூன்று மடங்கு அதிகரிக்கும். அவரை விட்டு விட்டீர்கள் நன்றி.

  ReplyDelete
 8. நன்றி வசந்த் :)
  நல்லவேலை டீ.ஆரை பாராட்டிட்டீங்க...இல்லைனா அடுத்த பதிவுல அவர கத்த உட்டு இருப்பேன் :)


  டொடொ

  நன்றி...இன்னும் காரமா எழுதலாம்னு பாத்தேன்...அதுக்கு ஏத்தாப்புல இந்தியா வேர தோத்து போச்சு...செரி போகட்டும்னு விட்டிட்டேன்....

  பி.வ

  அண்ணா உங்களை தான் எதிர்பார்த்தேன்...தலைவரயும் இந்த பதிவுல சேர்த்தாச்சு...ஆனா அடுத்த பதிவு இண்டெரெஸ்டிங்கா வரணுமே...அதனால அடுத்ததுல அவருடயதுதான் பஸ்ட்.... :)
  நன்றி அண்ணா வருகைக்கு :)

  ReplyDelete
 9. வயிறு கு(க)லங்க சிரிக்க வைத்துவிட்டீர்கள்.சீக்கிரம் அடுத்த பதிவைப்போடுங்கள்.

  ReplyDelete
 10. ரிக்கி பாண்டிங் நல்ல காமெடி..சனீஸ்வரன் வாயில தான் செஞ்சுரி அடிப்பான்..ஹா ஹா.!!!

  ReplyDelete
 11. முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. ஸாதிகா
  தாங்க் யூ :)
  சீக்கிரத்தில் வருகிறது பாகம்2

  செய்யது.அ.மு

  நன்றி...வருகைக்கும் கமெண்ட்டுக்கும்

  அதி ப்ரதாபன்

  நன்றிங்க....அடுத்த பதிவுக்கும் வருகை தரவும் :)

  ReplyDelete
 13. கிருத்திகா..
  சச்சினின் கமெண்ட்டை மிகவும் ரசித்தேன்!!!

  ReplyDelete
 14. DEAR FRIEND KIRTHIKA

  ALL COMEDYS SUPER ESPECIALLY MY THALIVAR SUPERSTAR COMEDY

  CONGRATS

  S MAHARAJAN
  DUBAI

  ReplyDelete
 15. வழக்கம் போல டி.ஆரு கலக்கிட்டாரு.

  ReplyDelete