22 December, 2009

நேற்று மாட்ச் பாத்திங்களா???நம்ம சச்சு பிச்சுட்டார் :)

ரவீந்தர ஜடேஜாவும் அருமையாக ஆடினார்...
சரி இப்போ டீட்டைல் அனாலிசிஸ் பண்ணலாமா??
1)இலங்கை 17 ஓவர் இருக்கும்போதே 137 ரன் வந்துட்டாங்க..அப்போ ரவி சாஸ்த்திரி இவங்க கண்டிப்பா 400+ அடிக்க வாய்ப்பு இருக்கு.இதே நிலமைல தான் இந்தியா முதல் ஆட்டத்துல இருந்ததுன்னு.ஆனா எப்போ வேணா என்ன வேணா நடக்கலாம்."அப்படின்னு சொன்னார்.அவருடய வாக்குப்படி
21வது ஓவரில்  163/1 அப்டிங்கர நிலமைல இருந்த இலங்கை
25ஆவது ஓவர்ல 174/4 அப்டிங்கர நெலமைக்கு வந்துருச்சு

2)நாலாவது அம்பையர் அப்டின்னு நியோ ஸ்போர்ட்ஸ்ல போடுவாங்களே..அதுல நேத்து  ஜவகள் ஸ்ரீனாத் வந்தாரு.அருமையா பேசினாரு.சனத் ஜயசூரியாவை சேக்கலாமா வேணாமா? அப்டிங்கர கேள்விக்கு பதில் சொல்லும்போது "சனத்,2 வருஷத்துக்கு மின்னாடி நம்ம கங்கூலி எந்த நிலைல இருந்தாரோ அப்டி இருக்காரு.இவ்வளோ பெரிய சீனியர் மோஸ்ட் வீரரை டூருக்கு கூட்டிட்டு வந்து வாய்ப்பு குடுக்காமல் இருப்பதன் பலன் என்னனு ஸ்ரீலனகாவுக்கு சீக்கிரம் புரியும்"அப்டின்னாரு.அதேமாதிரி 7வது இடத்துல புது வீரர் இறங்கி டொப்னு அவுட்டும் ஆகிட்டாரு.
அதனால அவர் வாக்கும் பலிச்சுப்போச்சு.

3)ஒளிபரப்புப்படி பாத்தா நியோ கிரிக்கெட் ரொம்ப பொறுமய சோதிச்சுது. கமெண்டரில 150 க்ராஸ் பண்ணினதுக்கு க்லாப் தட்டராங்க..கீழ ஸ்கோர் 138லயே நிக்குது.ஒரு பக்கம்  4 அடிச்சா இன்னொரு பக்கம் போகுது காமேரா..

4)ஸ்டேடியம் நேத்து முழுதும் நிரம்பி விட்டது.அப்புடி ஒரு கூட்டம்.க்ரிஷ்னர் வேஷம் போட்டுகிட்டு ஒரு குரூப் வந்துருந்தது...நல்ல ரெஸ்பான்ஸ் மக்கள் கிட்டேருந்து.

5)சுரேஷ் ரைனா நெறய காட்ச் மிஸ் பண்ணரமாதிரியே எனக்கு ஃபீலிங்கி...அதுமட்டும் இல்ல ..ஏகப்பட்ட ஃபீல்டிங்க் குளறுபடிகளை நேத்தும் பாக்க முடிஞ்சது...தினேஷ் கார்த்திக் தான் ஸ்டாண்ட் பை  விக்கெட் கீப்பர்னு ஆகி போச்சு.அவரோட கல கலன்னு பேசினா என்னா..யாருமே அவ்வளவா அவர் கூட பேசலை நேத்து..அத்தோட சங்கக்காராவை ஸ்டம்பிங்க் பண்ணினாரே பாக்கணும்...சென்னை 28 கிலைமாக்சில வரமாதிரி பந்தை கீழ விட்டுட்டு கையால அடிச்சுட்டு,நல்லகாலம் மறுபடி வேகமா பந்தை எடுத்து  ஸ்டம்பிங்க் பண்ணிட்டார்...தப்பிச்சுது இந்தியா.

6)கவுதம் காம்பீர் அனியாயத்துக்கு நல்லவரா இருக்காரு.அவுட் ஆனாலும் போகாம  க்ரவுண்டிலேயே நிக்கும் பாட்ஸ்மான்களுக்கு  மத்தியில் அவுட்டே இல்லைனாலும் நேர்மயா வெளில போன காம்பிரை என்னானு சொல்லரது...

7)முன்னுரையில் சொன்ன படி சச்சு பிச்சுட்டார்..என் நண்பர்கள் பலர் தினேஷை மானாவாரியா திட்டினாங்க.சச்சினுக்கு ஆடும் வாய்ப்பே தரலேன்னு.அப்படி 100 அட்ச்சுருந்தா "இவனுக்கு டீமை பத்தி கவலயே இல்ல...தான் 100 அடிக்கணும்னுதான் கவல " அப்படின்னு உலகத்துல பாதி பேரு பொறாமைல ஒப்பாரி வெச்சுருப்பாங்க.நல்ல வேள..அப்படி நடக்கல....

ஜாலி கார்னர்..

கடவுள் கிட்ட என்னவேண்டிக்கணுமோ அதை லெட்டரா எழுதிக்குடுங்கன்னு கேட்டத்துக்கு குட்டி பசங்க சிலர் என்ன ரகள பண்ணிருக்காங்க  பாருங்க..





நான் ஒரு கல்யாணத்துக்கு போனேன்..அங்கே சர்சுலயே உம்மா குடுத்துக்கராங்களே...தப்பு தப்பு...

 
போ சாமி...நீ ரொம்ப மோசம்.எனக்கு தங்கச்சி பாப்பா வேணும்னா கேட்டேன்..பப்பி பாப்பா வேணூம்ம்ம்ம்ம்

 

 இந்த பீட்டர் நம்மள மாதிரி..
சாமி இன்னைகு மிஸ் வரகூடாது..லீடர் ஆப்செண்ட் ஆகிடனும் அப்டினு வேண்டிக்கரமாதிரி..இவன்!!!!

 

ரூம் போட்டு யோசிச்ச புள்ள இதுதான்
உங்கள் பொன்னான  கருத்துக்களையும்,வெள்ளியான வாக்குகளயும் அளிக்க மறவாதீர்...
என்றும் அன்புடன்
உங்கள் தோழி
கிருத்திகா

17 December, 2009

1 சீரியஸ் + 1 ஜாலி

இந்த பதிவை ஆரம்பிப்பதற்கு முன்...முந்தய பதிவான லீகல்லி ப்லண்ட் படத்தின் விமர்சனத்துக்கு பின்னூட்டம் இட்ட அனைத்து மக்களுக்கும் நன்றி...(வந்தது 14....இதுக்கேன் இத்தன பில்டப்பு)
சரி இப்போ சீரியஸ் மாட்டர்
சிலதை பார்க்க பாவமாவும் இருக்கும் அதே சமயம் அதுக்கு காரணமானவங்க மேல கடுப்பாவும் வரும்.நேத்து கோவிலுக்கு போயிருந்தேன் .அங்கே பாத்த காட்சிதான் இது.போட்டோ எடுக்கறதை யாராவது பாத்துருந்தா என் செல்லை அடக்கம் பண்ணிருப்பாங்க.தெரியாம படம் எடுக்கனும்கரதுக்காக நடந்துகிட்டே எடுத்தேன்.கொஞ்சம் அசைஞ்சு தான் இருக்கும்.அட்ஜஸ் பண்ணிக்கவும்.
படத்தை பார்த்தா எதாவது புரியுதா??ரொம்ப கொடூரமா ஷேக் ஆகி இருக்கும்...எடுக்கப்பட்ட நேரம்  காலை 11மணி 30 நிமிடம்..
பள்ளிக்கூடத்துல படிச்சுகிட்டு இருக்க வேண்டிய பையன்
ஒரு 7 அல்லது 8 வயசு தான் இருக்கும்.....தரையை கூட்டி சுத்தம் பண்றான்...









இந்த் பொண்ணுக்கு அதிகபட்சம் 10 வயசுதான்...அவ கைலயும் தொடப்பம்...




அதைவிட இன்னோரு கொடுமை இந்த  படத்துல இருக்கர  பாட்டி தான்..நடக்கவே முடியல..ஆனா அவங்களுக்கும் வேலை..
குழந்தைகளை வேலைக்கி அமர்த்தக்கூடாதுன்னு சட்டம் போட்டுருக்கும் அரசாங்கமே கோவிலில் கூட்டி பெருக்க குழந்தைகளை வேலைக்கு வெச்சுருக்கு.இந்த மாதிரி ஆளுங்களை நியமனம் செய்யரது யாருனு கண்டுபிடிக்க ஆசைதான்..ஆனா என்னால முடியலை...ஜூ.வி /ரிப்போர்டர் நிருபர்கள் யாராவது உங்களுக்கு தெரிஞ்சா இப்படி எல்லா கோவிலுக்கும் போயி யாரு சுத்தம் செய்யராங்கன்னு பாக்க சொல்லுங்க...இது சின்ன விஷயமா தெரியும்.ஆனா இன்னும் பல இடங்களில் சம்பளம் கம்மியா குடுக்கலாம்னு குழந்தைகளை வேலைக்கு வெய்க்கும் கொடுமை நடந்துகிட்டுதான்  இருக்கு.எவ்வளவுதான் தடுக்க நினைத்தாலும் முடியலை..

சீரியஸ் மாட்டர் ஓவர்...இப்போ ஜாலி ஐட்டத்துக்கு வருவோம்...

இலங்கை-இந்தியாவுக்கு நடுவில் நடந்த முதல் ஒரு நாள் போட்டி பத்தி எழுதாமல் இந்த பதிவை முடித்தால் நான் ஒரு கிரிக்கெட் ரசிகையே இல்லை...இந்த போட்டியை இந்திய அணி வென்றாலும் நம்ம மனசை வென்றது இலங்கை தான்(இந்த ஆட்டத்தை பொறுத்த வரை).414 அப்படிங்கர நம்பரை டெஸ்ட் போட்டிகளில் தான் பாக்க முடியும்.ஆனாலும் அதை ஒரு சவாலா எடுத்துண்டு வெறித்தனமா விளாசி 411 வரைக்கும் வந்தாங்களே...சபாஷ் சபாஷ்...பொறி பறந்த  சேவாகின் சதமாகட்டும்,தில்ஷானின் அதிரடி சதமாகட்டும் எல்லாமே இவருக்கு அடுத்தபடிதான்....யாரை சொல்றேன்னு பாக்கரிங்களா???கொஞ்ச நேரமே ஆடினாலும் 45 பந்துகளில் 90 அடித்து  தூள் கிளப்பிவிட்டு,பாவமாக பவிலியனில் ஒவ்வொரு பவுண்டரிக்கும் கை தட்டி உற்சாகப்படுத்தின  சங்ககாராதான் மனசுல சிம்மாசனம் போட்டு உக்கார்ந்துட்டார்......மொத்தத்தில் ரொம்ப நாள் கழிச்சு ஒரு நல்ல மாச் பார்த்த திருப்தி :)

கண்டிப்பாக உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யவும்...
என்றும் அன்புடன்
உங்கள் தோழி கிருத்திகா

14 December, 2009

சினிமா கொட்டாய்-லீகல்லி ப்ளண்ட்


 இதை ஆரம்பிப்பதற்கு முன்....நம் தலைவர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து சொல்லி போட்ட பதிவுக்கு கமெண்ட் சொல்லி வாழ்த்து தெரிவித்த அனைத்து  ரசிகப்பெருமக்களுக்கும் என் மனமார்ந்த நன்றி

லீகல்லி ப்ளண்ட்-
இதுதான் நாம இந்த வாரம் சினிமா கொட்டாய்ல பாக்கப்போர   திரைப்படம்

              இதுக்கு அப்படியே தமிழ்ல எப்படி சொல்லர்துன்னு  தெரியல...இல்லைன்னா எப்பவும் போல ஜாக்கிசான் ஸ்டைல்ல தமிழாக்கம் பண்ணிருக்கலாம்.இப்போ விமர்சனத்துக்கு போலாமா..

கதை-
           அதாகப்பட்டது  நம்ம ஹீரோயினாகப்பட்ட எல்லீ உட்ஸ் பாஷன் டிசைன் ஸ்டூடண்ட். நிறைய நடிகைகளுக்கு விதவிதமா உடைகள் வடிவமைத்துக்கொடுப்பாங்க.அவங்ளுடய பாய் ஃபிரண்டான வார்னர்,"நீ வெளயாட்டு பிள்ளயாவே இருக்க.எங்க வீட்ல என்னை லா அதாவது சட்டக்கல்லூரிக்கு அனுப்பப்போறாங்க.இன்னொரு வக்கீலைத்தான் கல்யாணம் பண்ணிக்க சொல்லுவாங்க.அதனால உனக்கும் எனக்கும் ஒத்து வராதுன்னு "சொல்லி வெட்டி உட்டுடரார்.உடனே இவங்க வீறு கொண்ட சிங்கம் போல அவர் படிக்கர அதே காலேஜிக்கு போயி சட்டம் படிக்க சேந்துக்கராங்க...
அவங்களை ஆரம்பத்தில் "ஐய்யயே!!!!!" அப்படின்னு கேவலமா பாத்தவங்களை எல்லாரையும் ஓரம் கட்டி படிப்பு முடியும்போது "ஆகா இதுவல்லவோ நல்ல பொண்ணுக்கு அழகு" அப்படின்னு சொல்ல வெய்க்கராங்க...எப்படி???இதுதான் கதை.

டுவிஷ்ட்டு--

    ஒரு கேசை துப்பறியும் அசைன்மெண்டை  கியூட்டா செஞ்சுமுடிக்கறாங்க..அந்த கேஸ் இவங்களுக்கு சாதகமா ஜட்ஜ்மெண்ட் வந்துடுது.அத கண்டுபுடிக்கறதுக்கு இவங்க பண்ணுர சேஷ்டைகள் இருக்குதே அடடடடடடா...ஹாட்ஸ் ஆப் சொல்ல வெய்க்கராங்க.எல்லாரும் கேவலப்படுத்தும்போது அவங்க முன்னாடி அழுவாம பியூட்டி பார்லருக்கு போயி ஃபேஷியல் பண்ணற சாக்குல வெப்பாங்களே ஒரு ஒப்பாரி...வாவ்....அவங்க பாய் ஃப்ரெண்டுக்கும் அவனோட பியன்சீக்கும் இவங்க குடுக்கர நோஸ் கட் ஆகடும்,கொடூரமா டீச்சர் கிலாஸ் எடுக்கும்  நேரத்திலும் இவங்க எதயும் கண்டுக்காம மிக்கீ மவுஸ் பேனாவை சரி பண்ணுவதில் ஆகட்டும் ...சூப்பர்...செம்ம காமெடி படம் இது.பார்க்க வாய்ப்பு கெடச்சா விடாதிங்க.

கருத்து--
           
                "நம்ம மேல நம்பிக்கை வெச்சா எந்த காரியத்தையும் செய்யலாம்.யாருக்காகவும் எதுக்காகவும் பயப்படதேவையில்லை".இதுதான் இவங்க சொல்ல வரும் கருத்து.

11 December, 2009

அன்புள்ள ரஜினிகாந்த்-இனிய பிறந்த நாள் வணக்கங்கள்...


பதினாறு வயதினிலே முரட்டுக்காளையாக இருந்தபோதிலும்
அன்புக்கு நான் அடிமை என்று ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த மன்னா...
தில்லுமுல்லு பண்ணாமல் தம்பிக்கு இந்த  ஊருஎன சொல்ல வைத்தவ மாவீரரே.....
 குரு பாலச்சந்தரின் சிஷ்யனே
நான் அடிமை இல்லை என்ற ராணுவ வீரா...
அன்னை ஓர் ஆலயம் என்ற  பாண்டியனே
புதுக்கவிதை படித்து மூன்று முடிச்சு போட்டு  தர்ம யுத்தம் செய்து சூப்பர் ஸ்டார் இடத்தை அடைந்த தளபதியே....
வாழ்க்கையில் பல முள்ளும் மலரும் கண்ட ராஜாதி ராஜா

யார் பாச்சாவும் பாட்ஷாவிடம் செல்லாது...
பூமி ஒன்று..சூரியன் ஒன்று...அதுபோல சூப்பர் ஸ்டாரும் நீங்க ஒருத்தர் தான்...

முத்து...நீ எங்கள் சொத்து...
நீங்கள் ஊர்க்காவலராகும் நேரத்தை எதிர் நோக்கி காத்திருக்கும் படை அப்பா நாங்கள்....


அன்புள்ள  ரஜினிகாந்த் @ ஷிவாஜி (பாஸ் )ராவ் அவர்களே....
வாழ்த்த வயதில்லை..வணங்குகிரோம்
இனிய பிறந்த நாள் வணக்கங்கள்...


இத்துடன் இன்னோரு முக்கியமான அறிவிப்பு...
இந்தியாவின் பவர்ஃபுல் மனிதர்கள் அப்படின்னு ஒரு புத்தகம் படித்தேன்.அதுல நம்ம தலைவர் 28வது இடத்துல  இருந்தாரு.அதனால அந்த புத்தகத்தின் ஈ.காப்பியை என் ப்ளாகில் இணைத்துள்ளேன்.தேவையானவர்கள் அதை டவுன்லோட் செய்து  தரிசித்துக்கொள்ளலாம்..
எப்பவும் போல வோட்டை குத்துங்கள்...கமெண்டயும் கொட்டுங்கள்.
என்றும் அன்புடன் உங்கள் தோழி
கிருத்திகா...

09 December, 2009

அதே நேரம் அதே இடம் +நச் கமெண்டர்




                  ஜெய்க்காக பாக்கலாமேன்னு(வயசுக்கோளாறுதான்) இந்த படத்தை எடுத்தேன்..ஐய்யகோ...இந்த மாதிரி ஒரு படத்தை பாக்க தவமா தவம் கெடக்கணும்.

                      விஜயலக்ஷ்மி காலேஜில் படித்துக்கொண்டிருக்கும் அழகான பொண்ணு...ஜெய் வேலை வெட்டி இல்லாமல் திரியும் அழகான பையன்.இவங்களுக்குள்ள லவ்ஸ்...ஜெய்யோட அப்பா  நிழல்கள் ரவிக்கு இந்த மாட்டர் தெரிஞ்சு,அவர் ஜெய்யை கூப்பிட்டு நீ  வேலைக்கு போகணும் முதல்ல..அப்போதான் உங்களுக்கு என்னால கல்யாணம் செஞ்சு வெக்க முடியும் அப்டிங்கராரு


ஜெய்க்கும் ஆஸ்த்ரேலியாவில வேலை பார்க்க போயிடுராரு.இந்த கேப்ல விஜயலஷ்மிக்கு வீட்ல மாப்பிள்ளை பாக்குராங்க.எதிர்பார்க்காத திருப்பம்..விஜயலக்ஷ்மி கல்யாணத்துக்கு ஒத்துக்கராங்க.ஏன்னா பையன் செம பணக்காரன்.இதுவரைக்கும் செமமமமமமமம பிலேடா போயிண்ட்ருந்துது..இதுக்கப்பரம் சூப்பரா இருக்கும்னு நிமிர்ந்து உக்காந்தோம்.வேஷ்டுங்க...தேவையே இல்லை...அப்புடியே தூங்கி இருக்கலாம்.

                  இப்போ என்ன ஆகுதுன்னா ஜெய் ஆஸ்திரேலியாவிலிருந்து வராரு.அவருக்கு இந்த கல்யாண விஷயமே தெரியாது.ப்ளேன்லே இவரும் இவரோட முன்னாள்  ஆளோட ஹஸ்பெண்டான ஷிவாவும் நண்பர்கள் ஆகிடராங்க.(அதுக்கு ஒரு மொக்க ஃப்லாஷ் பாக் வேற :()
இதுக்கப்பறம் கதை சூடு புடிக்குது(நாமளே கற்பனை பண்ணிக்க வேண்டியதுதான் ...வேற வழி!!!!சரி இதுக்கப்பறம் பல "திடுக்கிடும்" திருப்பங்களுக்குப்பின் கடசியா ஜெய் விஜயலக்ஷ்மியை கொன்னுடராரு..

பி.கு-- இந்த படம் சிம்பு வகையறா....அவர் நடிச்சுருந்தா பின்னு பின்னுனு பின்னிருக்கும்.ஹீரோ ,ஹீரோயின் ரெண்டு பேரும் கொழந்த புள்ளைங்க மாதிரி பேசுதுங்க...ப்ரேம்ஜி மியூசிக்கும் ரொம்பலாம் இம்ப்ரெஸ் பண்ணல...ரெண்டு பாட்டு பரவால்லே.அதனால இந்த படத்தை சன் டி.வியில் இந்திய தொ(ல்)லைக்காட்சிகளில் முதல் முறையாகன்னு போடும்போது பாத்துக்குங்க,....
முக்கியமான அறிவிப்பு-
ஸ்டில்லை பாத்து ஏமாந்துடாதிங்க..ஸ்டில்ஸ் நல்லா இருந்தா படம் நல்லா இருக்கும்னு அர்த்தம் இல்லை
அடுத்த படியாக...


போன பதிவில் வைத்த போட்டிக்கான முடிவுகள்...நச் கமெண்டர் அவார்டுக்கான சிறந்த கமெண்டுகள்...இதை நான் ஒன்று,இரண்டு அப்டின்னு வரிசைப்படுத்தல....இந்த அஞ்சுமே நல்லா இருந்ததால இவங்க 5 பேருக்கும் இந்த அவார்டை குடுக்கரேன்...
பேர் மற்றும் க்மெண்டுடன்--

பித்தனின் வாக்கு:
இதுக்குதான் அப்பவே சொன்னேன், பிளாக்ல வர்ற சமையல் டிஸ் எல்லாம் சமைக்காதன்னு. கேட்டியா இப்ப என்னால எந்துரிக்க கூட முடியவில்லை.  

யோ வொய்ஸ்
    தியானம் செஞ்சா நல்லது என்று சொல்றாங்க அதுதான் நம்மளும் தியானம் செய்றோம்...
ஸ்ரீராம்.

    ஒரே சமயத்துல 'ரெண்டு' வேலை.

தேவியர் இல்லம் ஜோதிஜி
   
    எப்ப பார்த்தாலும் ஹோம் ஒர்க், ஹோம் ஒர்க்ன்னு போட்டு படுத்தி எடுத்தா வேற எங்க தூங்றது?

ரசிக்கும் சீமாட்டி
"எங்கலாம் காமேராவ கொண்டுவராயிங்க... டோன்ட் ஆங்ரி மீ !!! "

இவர்களோடு இந்த விருதை பகிர்ந்து கொள்கிறார்கள் இவர்களும்...
பிரியமுடன்...வசந்த் , கோபி,kggouthaman ,பின்னோக்கி,இளந்தி,மகா,சிவன்,Chitra
அடுத்து உங்கள் எல்லாருக்கும் ஒரு வேண்டுகோள்...நீங்களும் இந்த மாதிரி போட்டி வெச்சு அவார்டை பாஸ் பண்ணுங்களேன்...:)

போற போக்குல வோட்டை குத்துங்க...கமெண்டயும் கொட்டுங்க...(தலைலயும் கொட்டுங்க)
என்றும் அன்புடன்
உங்கள் தோழி
கிருத்திகா

07 December, 2009

சேத்தன் பகத்-புத்தக அறிமுகங்கள்


இதை படிப்பதற்கு முன்னால்
சேத்தன் பகத்-இந்த பேரை முன்னால் கேள்விப்பட்டு இருக்கிங்களா....இல்லை அப்படின்னாலும் தப்பில்லை...இப்போ தெரிஞ்சுக்குங்க...இந்தியாவை சேர்ந்த புகழ் பெற்றுக்கொண்டே இருக்கும் ஒரு எழுத்தாளர்.இவரு ஐ.ஐ.டி அஹமடாபாத்தில எம்.பி.ஏ பட்டம் பெற்று  சிட்டி வங்கியில் பெரிய வேலை பார்தக்கும் மனிதர்...வயதுகூட 30-35க்குள்தான் இருக்கணும்..எழுத்தாளர் பற்றிய முன்னுரை முடிந்தது....எப்படி என்னாத்த எழுதுரார் இவுரு???அப்படின்னு நீங்க நெனைக்கரிங்களா???
 இங்கிலீஷ் நாவல்தான்.ஆனா ரொம்ப சிம்பிளா இருக்கும்..அதனால ஈசியா புரியும்...அத்தோட நம்ம ஸ்டைலுக்கு ஏத்தா மாதிரி கலகலப்பா எழுதுவார்...சிம்பிளா சொல்லணும்னா  கே.எஸ்.ரவிக்குமார் படம் பாக்கர மாதிரி இவர் நாவல் படிக்கரது "அல்வா சாப்படரமாதிரி".இதுவரை 4 நாவல் எழுதிருக்காரு...

5 point someone -இவருடைய முதல் நாவல் இது.ஐ.ஐ.டிக்களையே  ஒரு திருப்பு திருப்பி போட்ட நாவல் இது....ஐ.ஐ.டி அப்டின்னா என்னான்னு எல்லாருக்குமே தெரிஞ்சுருக்கும்(Indian Institute for Technology)...ரொம்ப ஹை -ஃபை  ,அதி புத்திசாலிகளில் கடைந்தெடுத்த  மேதாவிகள் மட்டுமே படிக்கக்கூடிய இடம்.ரொம்ப கொஞ்ச இடங்களுக்கு லட்சகணக்கில் மக்கள் பரிட்சை  எழுதுவார்கள்.இவர் அங்கே படிச்சப்போ சந்திச்சது,சாதிச்சது,எவ்வளவு கஷ்டப்பட்டு ராகிங்கை அனுபவித்து,சில "பல" இடர்களைக்கடந்து இஞ்சினீயர் டிகிரீ வாங்கின கதையை நல்லா எழுதீருப்பார்.இவரு புது எழுத்தாளர்  மாதிரியே தெரியாது.இதை படிங்க நீங்க.இது பிடிச்சுருக்கும் கண்டிப்பா உங்களுக்கு..டீட்டைல் விமர்சனம் தரவும் நான் ரெடி...நீங்க படிக்கரதா  இருந்தா!!!!!இன்னொரு முக்கியமான  விஷயம்...இந்த நாவல் படமா வரப்போகுது...அமீர்கான்,மாதவன்(நம்ம மேடி தாங்க...),ஷர்மான் இவங்களோட கரீனா வேர...கலகலப்புக்கு கேக்கவே வேணாம்.....படம் 100 நாள் ஷ்யூர் :)


One night at call centre-இவருடைய ரெண்டாவது நாவல் இது. கற்பனை கதைதான்.இருந்தாலும் படிக்க படிக்க சுவாரஸ்யமா இருக்கும்.ஒரு கால் செண்டர்ல வேலை பார்த்துக்கொண்டிருக்கும் சாதாரண கனவுகள் நிறைந்த நடுத்தர குடும்பத்து  இளைஞர்  சந்திக்கும் தடைகள் + துன்பங்கள்...அது எப்படி தீருது..இதுதான் அவுட்லைன்...முதல் கதையை விட இது இன்னும் டாப்பு..இது ஹிந்தில படமா வந்துருக்கு..ஆனா புதுமுகங்களா பண்ணினதால அவ்வளவா ஓடலை...

Three mistakes of my life-- "யானைக்கும் அடி சறுக்கும்"...சேத்தன் பகத்கூட சொதப்புவார் அப்படின்னு இந்த நாவலை படிச்சா தெரியும்...3 நண்பர்கள் சேர்ந்து ஒரு கடை  வைக்கராங்க....சம்மந்தமே இல்லாத ஒரு பையனை தத்து எடுத்து,ஆஸ்திரேலியா போயி,இப்படி எக்கச்சக்கமான ரீலோ ரீல்.....படிக்கவும் அவ்வளவு சுவாரஸ்யம் இல்ல...என்னடா பிள்ளை இப்படி சொதப்புதே அப்புடின்னு தலைல துண்ட போட்டாச்சு......

Two states-the story of my marriage---இந்த கதை கண்டிப்பா எல்லாரயும் நிமிர்ந்து உக்கார வைக்கும்...ஒரு தமிழ் பொண்ணு-பஞ்சாபி பையன் ரெண்டு பேருக்கும் லவ்ஸ் ....எத்தனை தடைகளைத்தாண்டி இவங்க கல்யாணம் நடக்குதுங்கரது தான் கதை...விழுந்து  விழுந்து சிரிக்கலாம்...இந்த புத்தக விமர்சனம் அடுத்த பதிவாக வர உள்ளது.....அதுக்குள்ள படிக்கரதுன்னா படிச்சுகிங்க..
என்றும் அன்புடன்
உங்கள் தோழி
கிருத்திகா

30 November, 2009

நன்றி நவிலல் +விருது பிரித்துக்கொடுத்தல்+ நச் கமெண்ட் போட்டி


 

பதிவுலகிற்கு வந்து நான் செய்த ஒரே சாதனை நிறய நண்பர்கள் கிடைக்கப்பெற்றதுதான்.....நம்மை ஒரு பதிவர் என  நமக்கு அவார்டெல்லாம் குடுத்துருக்காங்கோ.மனசுக்கு ரொம்ப சந்தோஷம்.நன்றி மேனகா அக்கா அவர்களே.....இதை நான் இவுங்களுக்கும் குடுக்க ஆசைப்படிரேன்...தயவுசெய்து வாங்கிக்கவும்...வேணாம்னு சொல்லிடாதிங்க...அத்தோட ஏற்கனவே  வாங்கி இருந்தாலும் இன்னொரு தபா இந்த நவீன குசேலினி கிருத்திகா குடுத்ததுன்னு (இவகிட்டேருந்தெல்லாம் !!!!!!!) வாங்கிக்குங்க...பிலீஸ்

கோபி -எடக்கு மடக்கில் ஜோக்கிரித்தனமாக எழுதுவதுக்காக
கடைக்குட்டி--வலைல பின்னி எடுக்கரத்துக்கு
யோ வாய்ஸ் ---இவர்கிட்டேருந்து நெறய விஷயங்கள் கத்துக்க்லாம்
எங்கள் ப்லாக்-ஆகா சேம் டே மெனி போஸ்ட் :)
பாஸ்டன் ஸ்ரீராம்-சச்சினை பத்தி பதிவு போட்டதை விட அவருக்காக சூப்பரா வாதாடுறத்துக்காகவும் :)
ரசிக்கும் சீமாட்டி--ராமலக்ஷ்மி என் அன்புத்தோழி

பித்தனின் வாக்கு-ஏற்கனவே ஏகப்பட்டது இருக்கு.இதயும் சேத்துக்குங்க


சரி இப்போ கதைக்கு வருவோமா???இந்த போட்டோசுக்கு நல்லா நச்சுன்னு கமெண்ட் எழுதுரவங்களுக்கு "நச் கமெண்டர்" **அப்படின்னு ஒரு அவார்ட் காத்திருக்கு......

**--நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

எடுத்துக்காட்டா 2 போட்டோக்கு நான் எழுதிருக்கேன் :)




 

மல்லாக்க படுத்து விட்டத்த பாக்கறது  என்ன ஒரு சுகம்.....ஷப்பா...டாய் கைப்புள்ள பேசிகிட்டு இருக்கர நேரம் இல்லை...தூங்கூஊஊஊஊஊஊஊஉ

 

ஐய்யோ அம்மா அப்பாவோட ஷூவை மாத்து....
தாங்கமுடியல கப்பு...இல்லைன்னா நானே  அப்பாவை  டைவார்ஸ் பண்ணிடுவேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்


 

ஆட்ரா ராமா ஆட்ரா ராமான்னு சொல்லி  சொல்லி என் தலயோட ராமர் தலயையும் சேர்த்து உருட்டுரிங்களே...சை....என்ன உலகமடா இது...


ஒகே  நான்  எடுத்துக்காட்டிட்டேன்.....இப்போ உங்க வேலை தான்...
ரெடி 1
2
3
கோ



இதுதான் உங்களுக்கான படம்



மறக்காமல் கமெண்ட் அடிக்கவும்....
என்றும் அன்புடன்
உங்கள் தோழி
கிருத்திகா

17 November, 2009

சினிமா கொட்டாய்-டாக்டர் டூலிட்டில்,இவ்வளவுதான் இவள்



டாக்டர் டூலிட்டில்-எம்.பி.பி.எஸ்-DOCTOR DOLITTLE
இதுதான் நாம இந்த வாரம் சினிமா கொட்டாய்ல பாக்கப்போர  முதல் திரைப்படம்

கதை-
     டாக்டர் டூலிட்டிலுக்கு(எடி மர்பி)  அனிமல்ஸ் அதாவது மிருகங்கள்  பேசுரதெல்லாம் சின்ன வயசுலேருந்தே  புரியும்.அவங்க அப்பாவின் கண்டிப்பினால இதை அவரு  வெளிப்படுத்திக்காம இருக்காரு.ஆனாலும் ஒரு கட்டத்துல கண்ட்ரோல்  பண்ணவே முடியல....அதனால விளையும் நன்மை என்ன(மிருகங்களுக்கு) ??? தீமை என்ன(அவருக்கு)???
இதுதான் கதை...
டுவிஸ்ட்-


                              இது திகில் கதையெல்லாம் இல்ல.அதனால ஜாலியா உக்கார்ந்து சிரிச்சுக்கிட்டே பாக்கலாம்.படம் முழுக்க அனிமல்ஸ் அட்டகாசம் பண்ணுங்க...இவரு டாக்டர் அப்டிங்கரதால தன்னோட நோய்களை சொல்லி குணப்படுத்திக்குதுங்க.ஒரு கட்டத்துல இவரு இப்டி எலி,பூனை,நாய்கிட்டலாம் பேசுரதை பாக்குர இவங்க குடும்பத்தினர் இவரை  பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கே அனுப்பிடுவாங்க.எப்படி அங்கேருந்து மீண்டு வரார்ங்கர்து  இன்னொரு காமெடி காட்சி.......கடசியா ஒரு புலிக்கி  அதாங்க டைகர்க்கு ஒரு ஆப்பரேஷன் பண்ணி காப்பாத்துவாரு.அதோட பார்ட் 1 ஓவர்...பார்ட்-2 பாத்துட்டு எப்புடி இருக்குனு சொல்லுரேன்....

கருத்து-
   விசில் படத்துல விவேக் பண்ணின காமெடி இதுலேருந்து உருவப்பட்டது என்பதை நேர்மையுடன் தெரிவித்துக்கொள்கிரது

இவ்வளவுதான் இவள்...(She is all that)


இதுதான் நாம இந்த வாரம் சினிமா கொட்டாய்ல பாக்கப்போர ரெண்டாவது திரைப்படம்
 கதை-
               தன்னோட ஆளு தன்னை விட்டுட்டு போற சோகத்துலயும்,தன்னோட நண்பர்கள் தன்னை கிண்டல் பண்ணிட்ரதால வரும்  வெறியாலயும்,சாக்(நம்ம ஹீரோ..கொஞ்சம் அழகாவே இருப்பாரு) ஒரு பெட் வெக்கரார்..காலேஜ் ஐகானா காலேஜ் மொத்தமும் கண்டு பயப்படுற லேனி அப்படிங்கர பொண்ணை ஆக்குரேன் அப்படிங்கரதுதான் சபதம்.செஞ்சாரா???(கண்டிப்பா செஞ்சாரு..ஆனா எப்புடி...அதான் கதை)

டுவிஷ்ட்-
                                  நடுவுல இவரு அந்த பொண்ண இம்ப்ரெஸ் பண்ரேன் பேர்வழின்னு ஒரு காமெடி பண்ணுவார்..பாக்க நல்லா இருக்கும்.அப்புறம் இவரோட முன்னாள் ஆளு மறுபடியும் ரீ-ஜாயின் ஆகிடலாமானு கேக்கும்போது ஒரு பல்ப் அடிப்பாரே...செம...
அந்த பொண்ணு தன்னோட அம்மா சின்ன வயசுலயே செத்துட்டாங்கன்னு சொல்லி ஃபீல் பண்ணும்போது செமயா ஆக்ட் பண்ணிருக்காங்க.இது ஒரு காமெடி படம் மாதிரி....பாக்கலாம் ஒரு தடவை..

கருத்து-
             சென்னை 28 டீமை வெச்சு வெங்கட் ப்ரபு எடுக்கவேண்டிய கதை இது...
மறக்காம வோட்ட குத்துங்க.
அன்புடன்
உங்கள் தோழி
கிருத்திகா

09 November, 2009

பெண்கள் ஸ்பெஷல்...கண்டிப்பாக ஆண்கள் படிக்கவும்



என்னை இந்த பதிவை எழுதுமாறு தூண்டிய நிகழ்ச்சி--((யார் மனதையும் புண்படுத்த அல்ல..இருந்தால் மன்னிக்கவும்)
                                           நல்ல ஜோனு மழை......எவ்வளோ நாள் தான் வீட்டுலயே உக்காந்து இருக்குரது...சரி எங்கயாவது வெளில போவோம் அப்டின்னு தில்லா கிளம்பியாச்சு....நமக்கு என்ன வேலை வெளில...
1)ப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு போறது
2)ப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு போறது
                     ஜாலியா நானும் என் நண்பியும் கடைக்கு கெளம்பிட்டோம்....இப்போதான் டுவிஷ்டு....சட சடனு அடிக்க ஆரமிச்சுது மழை...நாங்க  அங்க இருந்த ஒரு கடைல  ஒதுங்கிக்கிட்டோம்(தண்ணி நம்ம மேல பட்டாலே ஜலுப்பு புடிச்சுக்கும் ஆமாம் ).நம்ம நல்ல நேரம் அது ஒரு காஃபி கடை :)...
                                       குஷியா கடைக்குள்ள போனா  இந்த பக்கம் ரெண்டு  பசங்க டூஷன் முடிஞ்சு வந்து காஃபி + சமோசா ,இந்த பக்கம்  4  ஆண்கள் காஃபி,இப்பிடி எந்த பக்கம் பார்த்தாலும் ஆண்கள் மட்டும்தான் உக்காந்துண்டு,நின்னுண்டு  இப்படி பல போஸ்களில் மழயை எஞ்சாய் செய்துகொண்டு இருந்தார்கள்..சரி இதெல்லாம்  அந்த பக்கம்.நாங்க உள்ள போன ஒடனே  அங்கடோக்கன் குடுக்கரவரு விட்டாரு பாருங்க ஒரு லுக்கு......இது எங்க ஏரியா..உள்ள வராதே அப்டின்னு சொல்லாம சொன்னாரு....அப்படியும் விடுவோமா...முடியவே முடியாதுனு தடாலடியா 2 சமோசா வாங்கிட்டு காபி கௌண்டருக்கு (counter) போனா அங்க பேப்பர் கப் இல்லைஅப்டின்னுட்டாங்க...வேணும்னா க்ளாஸ் டம்ளர்ல குடிங்க அப்டின்னு  சொன்னாங்க...முன்னாடியே அந்த பெரியவரு சிக்னல் விட்டாரு.அலர்ட் ஆகாம போயிட்டோம்.வேணாம் அண்ணே அப்டின்னு சொல்லி பொதுவா ஒரு சிரிப்பு சிரிச்சு வெச்சிட்டு மறுபடியும் வெளியில வந்து நின்னோம்.
                                                         பக்கத்துல இருக்கர சி.டி கடைல  உச்ச ஸ்தாயில ஆறறை கோடி பேர்களில் ஒருவன் அப்டின்னு ரஹ்மான் பாடிகிட்டு இருந்தாரு.உள்ளார எட்டி பாத்தா ஏகப்பட்ட கய்ஸ் இது எங்க ஏரியா..உள்ள வராதே அப்படின்னாங்க......கொஞ்ச நேரத்துல மழை நின்னது.எப்புடியும இன்னைக்கு  காபி குடிக்காம போரதில்லைனு முடிவு எடுத்து,அடுத்த காபி கடைல  ஸ்டாப் பண்ணிணோம்.நல்ல வேளை...அங்க சுட சுட 2 காஃபிய மடக் மடக்குனு குடிச்சுட்டு(ஆஹா ஆஹா என்ன சுகம்...அடிக்கர குளிர்ல ஆவி பறக்கும்  காபி ) அங்க இருக்கரவங்களை வெற்றி பார்வை பார்த்துட்டு கெளம்புனோம்.


                        இப்போ நாம நோட் பண்ண வேண்டிய  விஷயம் என்னன்னா அந்த கடைலயும்  புல்லா ஆண்கள் தான்...
                       
                         வேற  ஒரு நாள் பானி பூரி கடைக்கு போனா அங்கயும்  ஷேம் டயலாக்.இது எங்க ஏரியா..உள்ள வராதே....
                        
                       தியேட்டர்ல  படம் பாக்க டிக்கெட்கு வரிசைல நிக்கமுடியல..அங்கயும் இது எங்க ஏரியா..உள்ள வராதே.....

                      உள்ளார தலைவர் எண்ட்ரி ....என்னமா  விசில் பறக்குது...பசங்க செம குத்து  ....நமக்கும் கால் நமனமங்கும்...ஆனா அங்கயும் இது எங்க ஏரியா..உள்ள வராதே....(என்னதான் இருந்தாலும்  அதை பார்ப்பதே தனி  சுகம்...தலிவர என்னமா  ரகளயா வெல்கம் பண்ணுவாங்க)

                     சனி,ஞாயிறு சாயங்காலம்  வெளில எட்டி பாத்தா   5,6 பேரு சேர்ந்து கிரிக்கெட் ஆடுவாய்ங்க...நமக்கு வெளயாடனும்போல குறு குறுனு ஆசயா இருக்கும்..அங்கயும்  இது எங்க ஏரியா..உள்ள வராதே....

                      இந்த ஆட்டோகாரங்களுக்கு என்னதான் அப்படி எளக்காரமோ...ரெண்டு லேடீஸ்  வண்டியில போனா என்ன வேலை காட்டுவாய்ங்க.....வழிய உடாத,ஹாரன அடிச்சு ஷப்பபபபபா.....
                  
                    இந்த அரட்டை அரங்கம்னு ஒண்ணு  வருது தெரியும்லா....அதுல பேசுர மக்கள்ள கொறஞ்சது  ஒருத்தராவது கொடுமைக்கார பொண்டாட்டி-பாவமான வீட்டுக்காரர்,வேலைக்காரி-சந்தேக பொண்டாட்டி ஜோக்கை சொல்லாம  இருக்கவே மாட்டார்....அவங்க பேசுரது நகைச்சுவையா இருக்கணும்னு எக்கச்ச்ச்ச்ச்ச்க்க்க பிட்டு.....இதுக்கு இன்னும் சிறந்த உதாரணம் நம்ம ராஜாதான்,....


                      நான் சொன்னது கொஞ்சம் தான்..இன்னும் எத்தனயோ இடங்கள்ள இதே நெலமைதான்....சில இடங்களில் வாண்டடா கூட பெண்கள் வராம இருப்பாங்க....நான் சொன்னது இந்த மாதிரி எங்க ஏரியா போன்ற மக்களை...

இது எப்போ மாறும்...33% வேண்டாம்.....அட்லீஸ்ட்  கேவலப்படுத்தாமலாவது இருங்களேன்.......
இது எல்லாருக்கும் பொறுத்தமல்ல...சில  நல்ல மனசு கொண்ட ஆண்களும் நாட்டுல  இருக்கத்தான் செய்கிறார்கள்....அவங்களுக்கு ஒரு  பெரிய சபாஷ்...அப்புறம் கீழ  சில படங்கள் இருக்கு...நானே கிறுக்குனது தான்...பாத்துட்டு அது யார்னு  சொல்லுங்க... 






 

எப்படி...யார்னு தெரியுதா ???

சொன்னது புடிச்சுருந்தா கமெண்டயும் வோட்டயும் போடுங்க...இல்லன்னா திட்டி தீட்துடுங்க....மனசுல மட்டும் வெச்சுக்காதிங்க :)

அன்புடன்
உங்கள் தோழி
கிருத்திகா


 



                            

08 November, 2009

கற்பனை குதிரை ஓடினால்!!!!!


                            
ஒரு சின்ன கம்பெனி...50 பேரு வேலை பாக்கராங்க..அந்த கம்பெனி இப்போ நஷ்டத்துல ஓடுது..இவங்களை அந்த  கம்பெனிக்கு எம்.டியா போட்டா என்ன செய்வாங்க....ஒரு சின்ன கற்பனை....(யார் மனதையும் புண்படுத்த அல்ல...எல்லாமே காமெடிக்கே)
1)யுவராஜ் சிங்
                                  ஏன்ப்பா இப்படி லூசுத்தனமா யானை படத்தயும் குருவி படத்தயும் மாட்டிர்க்கிங்க செவுத்துல...முதல்ல இத எடுத்துட்டு  தீபிகா படுகோனே படம் இந்த பக்கம்,ப்ரீதி ஜிந்தா படம் இந்த பக்கம்,மந்திரா பேடி நேரா...இந்த மூணையும் என் ரூம்ல மாட்டுங்க....நீங்களும் உங்களுக்கு புட்சவங்க படத்த மாட்டிக்குங்க...அப்பறம் பாருங்க... எப்புடி சிக்சர் பறக்குற மாதிரி கம்பெனியும் பறக்கும்....

2)ஹர்பஜன் சிங்-
                                 யாரு சார் அது...கம்பெனி நஷ்டத்துல ஓடுதுன்னு சொன்னது..இங்க வாய்யா...தைர்யம் இருந்தா மூஞ்ச காட்டு...அப்பறம் தெரியும் கத......எனக்கு முன்னாடியே குடுத்துருக்கவண்டிய பொறுப்பு சார்...ரொம்ப லேட்....

3)ல.தி.மு.க தலைவர்....
                                   தம்பி உழைச்சா தான் நமக்கு சோறு
                       சும்மா உக்காந்துருந்தா அடிக்கும் போரு
                      நீ உன் வேலய முதல்ல பாரு
                       கம்பெனி லாபம் ஆகணும் நூறூ(கோடி)
                    என் பையன்  அடுத்த சூப்பர் ஸ்டாரு
                       இதெல்லாம் சொல்ல நான் யாரா???
                    டி.ஆரு(east) ,டி.ஆரு(west),டி.ஆரு(north)(எக்கோ விட்டுக்கொள்ளவும்)
                 யே டண்டனக்கா யே டனக்குனக்கா...யெ நாக்க முக்கா

4)தோனி--
                                ஒரு தடவ தானே நஷ்டமாச்சு ...பரவால்ல...விடுங்க...அதான் நான் வந்துட்டேன்ல..நீங்க வேலய எப்டி வேணாலும் செய்ங்க...மறுபடியும் நஷ்டமாச்சுன்னா யார்மேலயாவது பழிய போட்டுறுவோம்...கவலபடாதிங்க...எனக்கு தெரியும் யுவராஜ் மேல தான் தப்பு எல்லாம்...(தீபிகா மறுபடியும் ஜாய்ன் ஆகிட்டாங்களாமே)......அடுத்து எதாவது பிள்ள பூச்சி கம்பெனிய வாங்கிடுவோம்...அப்புறம் ஒரு 6 மாசத்துக்கு யாரும் சத்தம் போடவே மாட்டாங்க...

5)ரிக்கி பாண்டிங்க்-
                                  நம்ம கம்பெனி தான் என்னிக்குமே நம்பர் 1...இது சும்ம தற்காலிக நெலமைதான்..எனக்கு தெரியும் நாம ஏன் சரியா பண்ணலைனு.....பாதி பேருக்கு உடம்பு சரி இல்லை....அதோட எம்.டி வேற சரி இல்லை..ஐய்யய்யோ...அது நாந்தானோ..:(சரி விடுங்க...என் வாய்ல தான் சனிஸ்வரன்  செண்சுரி அடிப்பார்.....

6)கவுண்டமணி
                அடங்கொக்கமக்கா....எங்கிட்ட பொயி இந்த பெரிய பொறுப்ப குடுக்கரிங்களே...ஐ ஆம் வெரி பிசி.....நாளக்கி டெல்லி போகணும்...ஃப்லைட் புக் பண்ணனும்.....பெரிய பெரிய தலைவருங்களாலயே செய்ய முடியல...என்ன போயி...ச ச ச ஒரே குஷ்டமப்பா
கடல்ல எங்கப்பன் நண்டு வறுத்து தின்னுகிட்டு இருப்பான் ...அவன கூப்டு சொல்லுங்க...என்ன புரியுதா...அட கோமுட்டி தலயா... ஏண்டா ஓடுர???
7)ஒபாமா
                                         ஸ்டாப் ஸ்டாப்..இப்போ நான் இங்க பேச வரல...முதல்ல எனக்கு ஒரு லிஸ்ட் ரெடி பண்ணிக்குடுங்க...நம்ம கம்பெனில எத்தன வெளினாட்டுக்கார பயலுங்க வேலை பாக்குராய்ங்கன்னு....அவ்ங்களை தூக்கிட்டு நம்மாளுங்களை போட்டாலே போதும்...கம்பெனி வெளங்கோ வெளங்குன்னு வெளங்கிரும்.....அப்புறம் 4 பேருகிட்ட சொல்லி நமக்கு 4 நல்ல பட்டங்களை குடுக்கஸ்சொல்லுங்கப்பூ

8)சச்சின் டெண்டுல்கர்
                           ஷப்பா....இந்த வயசான காலத்துல ஏன் மேல மேல என்ன கஷ்டப்படுத்துறிங்க...இன்னும் எத்தன நாள்தான் நானே இந்த கம்பெனியை சுமக்கணுமோ தெரியல....வேலயை பாருங்க......எனக்கு இதுக்கு மேல பேச தெரியாது....

9)தானைய தலைவர் திரு.கலைஞர்.டாக்டர்.மு.க
                                                                 என் இனிய உடன்பிறப்புகளே....எனக்கு பதவி கொடுத்து கவுரவப்படுத்தியதற்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை.....
                                ஆனால் கட்சிப்பொறுப்புகள் பல இருப்பதால் என்னுடய பதவியை பிரித்து தர இருக்கிரேன்......துணை எம்.டியாக நம் கட்சி இளைஞர் அணி தலைவர் ,நான் பெற்றெடுத்த தவ புதல்வர் மு.க.ஸ்டாலினயும்,இணை எம்.டியாக நம் கட்சி தென் தமிழக அணி தலைவர் ,பொறுமையின் சிகரம் மு.க.அழகிரியையும் ,துணை எம்.டியாக நம் கட்சி இளைஞர் அணி தலைவர்,கௌரவ  எம்.டியாக மகளிர் திலகம்,என் செல்ல புத்திரி கனிமொழியயும் நியமிக்கிறேன்.....

            இந்த பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கிரேன்....அடுத்த பதிவில் அம்மா,ஐய்யா,புரட்சி கலைஞர்,அன்னை,ஆத்தா  etc etc மற்றும் பலர் என்ன செய்வாங்கன்னு பாப்போம்...உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்ரன...இன்னும் யாரை எழுதினால் நன்றாக இருக்குனு நெனைக்கரிங்களோ அதயும் சொல்லுங்க...உங்கள் கற்பனையயும்  எழுதுங்கள்....
மறக்காம வோட்ட குத்துங்க.கருத்துக்களையும் கொட்டுங்கள்...
அன்புடன்
உங்கள் தோழி
கிருத்திகா

03 November, 2009

சினிமா கொட்டாய்-டான்ஸ் ஆடலாமா


இதுதான் நாம இன்னிக்கு சினிமா கொட்டாய்ல பாக்கப்போர  திரைப்படம்
டான்ஸ் ஆடலாமா?? SHALL WE DANCE....
                           நான் பார்த்ததில இந்த படம்தான் செம்மமமமம டீசண்டான படம்...ஜெனிபர் லோபஸ் நடிச்ச படம்....ஜான் பாங்க்ஸ்(ரிச்சர் கெரே) அப்படிங்கர ஒரு லாயர்,தன் வாழ்க்கை என்ற சாகரத்தில் சிக்கி,தன் வாழ்க்கை ஒரே மாதிரி போரா(bore) போகுதுன்னு நெனைக்குரார் அவருடய 20த் திருமண நாள் அன்னிக்கு...எவ்வளோ சீக்கரமா நெனைக்குரார் பாத்திங்களா.....அவரு  ஆபிஸ் போயிட்டு வரும்பொழுது தினமும் வழியில இருக்கர ஒரு டான்ஸ் ஸ்கூலை பார்த்துக்கிட்டே போவார்...அங்க தினமும் ஒரு பொண்ணு(ஜெ.லோ) ஜன்னல் வழியா சோகமான முகத்தோடு பார்த்துக்கிட்டு இருப்பாங்க.....ஏன் அவங்க முகத்துல அவ்வளோ சோகம்னு தெரிஞ்சுக்க ஆவலா ஒரு நாள் அந்த ஸ்டாப்புல இறங்கி ஜெ.லோவ பாத்து என்ன ஏதுன்னு கேட்டுடரதுனு அந்த ஸ்கூல்ல நுழஞ்சிடுவாரு.இப்போதான் திருப்பமே!!!!!!!
          
                           அவரை உள்ள இருக்குர டீச்சர் ஏன் இங்க வந்த?அப்டின்னு கேக்க உடனே இவரு திரு திருனு முழிச்சிக்கிட்டே நின்னாரு...அப்போ பக்கத்துல இருந்த ஒரு லேடி டான்ஸ் கத்துக்கதானே வந்துருக்கிங்க...அப்பறம் ஏன் வெக்கப்படுறிங்க??..வயசு ஒரு தடயே இல்ல இந்த ஸ்கூலோட கரஸ்பாண்டண்ட்க்கு வயசு 65...அவங்கதான் உங்களுக்கு டான்ஸ் சொல்லிக்குடுக்கப்போறாங்க அப்படின்னு சொல்லி இவர் மனசுல கட்டி வெச்சுருக்கர கோட்டயை உடைச்சுடராங்க......அதுக்கப்பரம் இவரும் ஜெ.லோகிட்ட பேச வாய்ப்பை எதிபார்த்துக்காத்திருக்கிரார்...ஒரு நாள் வாய்ப்பும் கிடைக்குது...அப்போ இவருனீங்க ஏன் சோகமாவே இருக்கிங்க??அப்புடின்னு கேக்க இவருடய நோக்கத்தை தப்பா புரிஞ்சுகிட்டு இவர திட்டி அனுப்பிடராங்க ஜெ.லோ.
                          

                   அடுத்த நாள் மனம் தளராம மறுபடியும் அதே சிரிச்ச முகத்தோட வராரு ஜான்..அவங்க உடனே "நாம தான் தப்பா புரிஞ்சுக்கிட்டோம்" அப்படின்னு உணர்ந்து சினேகமா பழக ஆரமிச்சு தன்னோட கதைய சொல்லுவாங்க ஜெ.லோ.அதுக்குள்ள ஒரு பெரிய போட்டில இவரையும் இன்னொரு அம்மாவையும் சேர்த்து அந்த டான்ஸ்க்கு அனுப்பி விட்டுடுவாங்க......இப்போ ஒரு புது பிரச்சனை வந்துடும்...ஜானோட பொண்டாட்டி இவரு அங்கங்க நின்னு நின்னு டான்ஸ் ஆடுரத பாத்துட்டு "பார்டி சரி இல்லையே என்ன விஷயம்னு" யோசிச்சு  இவர துப்பறிஞ்சு இவரு டான்ஸ் கத்துக்கரத கண்டுபுடிச்சுடராங்க...நேர அந்த காம்பெடிஷனுக்கே போயி நின்னுடராங்க......

               அதுவரை நல்லா ஆடிட்டு இருக்கர ஜான்  இவங்களை பார்த்த உடனே ஷாக் ஆகி  அப்பிடியே நின்னுடராரு...அங்க ஒரு கலவரமே நடக்குது...பொண்டாட்டி கோச்சுக்கிட்டு போயிடுராங்க...டாண்ஸ்க்கு இதுக்கு மேல போனா அவமானமா இருக்கும்!!!இப்போ என்ன பண்ணுராரு??ப்ரச்சனயை எப்படி சால்வ் பண்ணுரார்?? அதுதான் கதை...படம் ரொம்ப சூப்பர்...கண்டிப்பா பாருங்க...
மறக்காம வோட்ட குத்துங்க.
அன்புடன்
உங்கள் தோழி
கிருத்திகா

02 November, 2009

சும்மா காமெடிக்கி கிகிகிக்க்க்கி


           
எந்த மாதிரி படம் வேணாலும் எடுங்க...படத்த ஓட வெக்கனும்ணா நீங்க சன் பிக்சர்சை அணுகவும்....இதுவரை எடுத்த படங்களில் சொல்லிக்கொள்ளும்படியாக ஒண்ணுமே இல்லை..(சொல்லி கொல்லும்படி இருந்தது அதிகம் !!!!!)
                                 இந்த தீபாவளிக்கு ரிலீசான பேராண்மைனு ஒரு அருமயான படம்...அதோட டிரைலர் கூட வரல சன்னுல(எனக்கு தெரிந்த வரை.......1,2 தடவ வந்திருந்தால் மன்னிக்கவும் நண்பர்களே)...அதவிட கொடுமை என்னனா பசங்கனு ஒரு சூப்பர் படம்...அதுவும் வரல...இப்போ பாருங்க கண்டேன் காதலை ரிலீஸ் ஆகிரத்துக்கு முன்னாடியே அந்த பாட்ட போட்டு போட்டு காத கிழிச்சுட்டாங்க...சரி இதெல்லாம் கூட மன்னிச்சுடலாம்...(வேற வழி!!!!)..திரைவிமர்சனம்னு ஒண்ணு போடுராங்கல்லா ...அதுல குடுப்பாங்க பாருங்க ஒரு ஹைப்பு...யப்பா... படத்த  பாத்தே ஆவணும் போல...அப்ப்டினு ஒரு பீலிங்கி வந்துரும்...
         இந்த பீலிங்கியாலதான் மாசிலாமணிங்கர காதல் காவியத்த பாத்தேன் தியேட்டர்ல...அடடடடா என்ன அருமயான படம்...படம் ஃபுல்லா ஃப்லாஷ்பாக் தான்...நாம எல்ல காட்சியயும் ஏற்கனவே பாத்துருக்கோமே....அது எங்க??அப்படின்னு நம்மள கண்டிப்பா ஃப்லாஷ்பாக்குக்கு கூட்டிட்டு போயிடும்....ஆனா ஒரு  விஷயம் பாராட்டணும்....ஒரு தப்ப செஞ்சுட்டோம்னா அத அப்புடியே மெய்ண்டைன் பண்ணனும்...அதே மாதிரிதான் இவிங்க....ஒரு படத்த எடுத்துட்டோம்...எப்புடியாவது ஓடவெச்சே ஆகனும்னு  கங்கணம் கட்டிக்கிட்டு விளம்பர இடைவேளை எல்லா நேரத்துலயும் ட்ரைலர போட்டு உசிர எடுத்துடுவாங்க...
             இந்த படத்தோடயாவது அலர்ட் ஆகிருக்கணும்...மறுபடியும் இவங்களை நம்பி "நினைத்தாலே இனிக்கும்" படத்துக்கு போனா குதுகலமா இருக்க  வேண்டிய காலேஜ் காட்சிகள் இத்துப்போன பூமர் பப்பிள்கம் மாதிரி இழு இழுனு இழுத்துச்சு...சே இந்த சன் பிக்சர்ச்சே இப்புடித்தான்.,...இனிமே போகவே கூடாது...அப்படினு 99% சபதம் போட்டுட்டேன்..
             சபத்ததை டிஸ்டர்ப் பண்ணிச்சு கண்டேன் காதலை..இது ஜப் வி மெட்னு ஹிந்தில சக்க போடு போட்ட படம்...படத்துக்காக 10 தடவை,கரீனாவுக்காக 5 தடவை,பாட்டுக்காக 5 தடவை,இப்படி எத்தனையோ  தடவை பாத்தோம் இந்த படத்தை..தமிழ்ல எடுக்க போராங்க...அதுவும் பரத்,தமன்னா வெச்சுனு சொன்ன உடனே புஸ்னு போச்சு...எனக்கென்னவோ கரீனா பண்ணின ரோல் இங்க அசின் பண்ணிருந்தா நல்லாருக்கும்னு தோணிச்சு...பரத்கு பதிலா கூட வேற யாரயாவது போட்டுருக்கலாம்...அதுகூட பரவால்ல...கதய கன்னாபின்னானு இஷ்டத்துக்கு மாத்தி,பாட்டுகூட அவ்வ்வளோ இனிமயா இல்ல...இப்படி யேகப்பட்ட சொதப்பல்களுக்கிடயே
            வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிரது உங்கள் அபிமான திரை அரங்குகளில் கண்டேன் காதலை...
                 அடுத்தது என்ன பயம்னா பெரிய நடிகர்கள் நடிக்கர படம்  (எனக்கு தெரிஞ்சு 2) சன் பிக்சர்ஸ் பானெர்ல வருது...அது கண்டிப்பா ஓடும்..ஆனா இவங்க மேல ஒரு நல்ல மதிப்பு வந்துருச்சே நமக்கு...
(பி.கு-அடுத்ததா இவங்க படம் என்னாங்க ரிலீஸ் ஆவுது???தியேட்டர் போகணும்போல இருக்கு???சொன்னிங்கன்னா உஷாரா  இருப்போம் :) !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!)

மறக்காம வோட்ட குத்துங்க.
அன்புடன்
உங்கள் தோழி

சினிமா கொட்டாய்-பணத்துக்காக இருவர்

 இதுதான் நாம இந்த வாரம் சினிமா கொட்டாய்ல பாக்கப்போர  திரைப்படம்


பணத்துக்காக இருவர்-TWO FOR THE MONEY
இந்த படம்  ரொம்ப சீரியசான படம்.முழுக்க முழுக்க  பெட்டிங்க்,சூதாட்டம் பத்தின படம்.படத்தோட ஹீரோ ப்ராண்டன் லாங்க் ஒரு ரக்பி வீரர் 20வயது வரை.......ஒரு மாச் ஆடும்போது அவர் கால் உடைஞ்சு போய்டும்.அதுக்கப்பறம் டாக்டர்ஸ் அவரை  இதுக்கு மேல ரக்பி  விளயாடக்கூடாதுனு சொல்லிடுவாங்க.இவரும் அரை மனசோட வருஷா வருஷம் செலெக்ஷன் டீம்க்கு போவார் ப்ராக்டிஸ் பண்ணிட்டு.எல்லா தடவையும் ஒரே பதில் தான்...ரிஜெக்டெட்..இதுல பெட்டிங் எங்க வருதுனு யோசிக்கிறிங்க தானே???

               வரும் வரும் இப்போ.6 வருடங்களுக்கு பின்......வாழ்கயை ஓட்ட ப்ராண்டன்  ஒரு கால் செண்டர்ல கம்பியூட்டர் ஆப்பரேட்டரா வேலை பாக்குராரு.ஒரு நாள் அவரோட நண்பர் எந்த டீம் ஜெயிக்கும்னு கேக்க,இவருக்கு ரக்பி பத்தி ஏற்கனவே தெரிஞ்சதால அதுக்கு அவர் ஒரு மினி வகுப்பே எடுக்கராரு.அவரு சொன்னாமாதிரியே அந்த டீம்தான் ஜெய்க்குது.அப்பொலேருந்து  அவர டெலீ காலர் எக்சிக்யூட்டிவா ஆக்கிடுராங்க.அந்த கால் செண்டர்க்கு ஒரு நாள் ஒருத்தர் போன் பண்ணி "எந்த டீம் மேல பெட் கட்டுரது " அப்படினு கேக்க எல்லாரும்  கால டைவெர்ட் பண்ணிவிட்டுடராங்க.ப்ராண்டன்  அவருக்கு ஆன்சர் பண்ணுராரு.அப்போலேருந்து  இவருக்கு பெட்டிங்க் பத்தின கால் நெறய்ய வர ஆரமிச்சுடும்.
        இவரோட புகழ் பரவி,நியூயார்க்கில இருக்கரஒரு பெரிய கால் செண்டர் இவருக்கு அழைப்பு விடுது.அங்கே வால்டர்னு ஒரு பெரிய தல இவருக்கு இன்னும் நிறய விஷயங்களை கத்துகுடுத்து அந்த துறைல (அதாங்க எந்த டீம் மேல பெட் கட்டுனா ஜெய்க்கலாம்னு அட்வைஸ் பண்ணர வேலைல) பெரிய ஆள் ஆக்குராரு....அவரை கோடிக்கணக்குல பெட் பண்ணுர ஆள் கிட்ட அறிமுகம் செஞ்சு  வைக்கராரு.இப்போ தான் ஆரமிக்குது வினை.ப்ராண்டனால 5 மில்லியன் லாபம் கிடைக்குது.அதுல 10% வேணும்னு கேக்குராரு ப்ராண்டன்.இவரோ முடியாதுனு சொல்லிடராரு.அப்போலேருந்து வில்லத்தனம் பண்ணுரதுதான் ப்ரானடன் வேலை.காலர்ஸ்க்கு தப்பு தப்பா அட்வைஸ் பண்ணி கம்பெனி நஷ்டம் ஆகிடுது.
                 "பச்ச குழந்தயின்னு பாலூட்டிவளர்த்தேன் பால குடிச்சுப்புட்டு பாம்பாக கொத்துதடி கண்மணி" அப்படின்னு பாடாத குறயா வால்டர் கடன உடன வாங்கி மறுபடியும் இதே தொழில்ல முதலீடு பண்ணுராரு...ப்ராண்டன் "இன்னுமா இவன் நம்மள நம்பரான்?"அப்ப்டின்னு நெனச்சு தப்ப உணர்ந்து ரொம்ப வேதனைபடுராரு....அடுத்த மாச் எப்டியாவது இவருக்கு நாம லாபத்த சம்பாதிச்சு குடுக்கணும்னு முடிவு பண்ணி நெறய ஹோம் வர்க் பண்ணீ எந்த டீம் ஜெய்க்குதுனு சொல்லுராரு.ஆனா பாருங்க இவரோட நேரம் இவர் சொன்ன ரெண்டுமே புட்டுக்குது.
                 
                 கடசி வாய்ப்பு...ஒரே மாட்ச்...ஒரே பேரு...வாழ்வா சாவா??? இந்த நெலமைல அவரு ஜெய்க்கராரா???வழக்கம் போல ஹாப்பி எண்டிங்க் தான்...ஆனா முடிவுல ஒரு திருப்பம் இருக்கு...என்னனு பாத்து தெரிஞ்சுக்குங்க.......
இவளோ நாளா படங்கள் பத்தி எழுதரேன்..எத்தன பேரு பாக்குரிங்கனு தெரியல...இருந்தாலும் நானும் விடாம  எழுதரேன்...

மறக்காம வோட்ட குத்துங்க.
அன்புடன்
உங்கள் தோழி
கிருத்திகா

28 October, 2009

நான் ரசித்த கவிதை




இது நான் ரசித்தது மட்டும் தாங்க.. பக்கம் பக்கமா எழுதிக்கூட தள்ளீடுவேன்.ஆனா ஒரு குட்டி கவிதை கூட எழுத வராது எனக்கு....
(யாராவது கத்து குடுங்களேன்...)
சரி கவிதை இதுதான்...

ஏன்மா நீ இப்படி இருக்க??
உன்னால் எப்பவுமே உபத்ரவம்தான்
காச் மூச் என கத்திவிட்டு
ஆபீஸ் சென்றேன்.
அங்கே சென்றால்...
ஈமெய்ல் ஐ.டி முதல்
ஏ.டி.எம் வரை
உன் பெயரை அடித்தால் தான் வேலையே...
கடவுசொல்லாக இருந்து என்னை பார்த்து
சிரித்துகொண்டிருக்கிராயே அம்மா :)


எப்புடி இருக்கு????
நல்லாருக்கா??:)
இல்லயா??? :(
சரி எப்புடி இருந்தாலும் கமெண்டயும்,வோட்டயும் குத்த மறக்காதிங்க....
அன்புடன் உங்கள் தோழி
கிருத்திகா

27 October, 2009

சினிமா கொட்டாய்-கல்யாண பாட்டுக்காரன்,புது பையன்



கல்யாண பாட்டுக்காரன்(THE WEDDING SINGER)
இதுதான் நாம இந்த வாரம் சினிமா கொட்டாய்ல பாக்கப்போர  முதல் திரைப்படம்.இந்த படத்துல ஆடம் சாண்ட்லர்(ராபி),ட்ரூ பாரிமோர்(ஜூலியா) மற்றும் பலர் நடிச்சுஇருக்காங்க.  
               கதை-ராபி  கல்யாணத்துல பாடுற பாடகர்.ஜூலியா ஒரு waitressஆ வேலை பாப்பாங்க.ரெண்டு பேரும் ஒரு கல்யாணத்துல மீட் பண்ணிப்பாங்க.ராபிய கல்யாணம் பண்ணிக்கரேன்னு சொல்லி கல்யாணமேடை வரை வந்துட்டு எனக்கு உன்ன பிடிக்கலனு சொல்லிட்டு போயிடுவாங்க  ராபியோட ஆளு லிண்டா.இந்த கட்டத்துல தான் ஜூலியா இவருக்கு ஆறுதலா இருப்பாங்க.அப்போ ஜூலியாவுக்கு க்லென் அப்டிங்கரவனோட கல்யாண ஏற்பாடு நடந்துகிட்டு இருக்கும்.அந்த பய ஒரு தறுதல.அது தெரியாம இந்த பொண்ணு கல்யாணத்துக்கு ஒத்துக்கும்.ராபீக்கு இந்த விஷயம் தெரிஞ்சதும் கரொம்ப வருத்த படுவாரு.அப்பறம் கொஞ்ச நாள்ல ராபிக்கு ஜூலியாவை புடிச்சுடும்.ஆனா அண்ணிதான் ஏற்கனவே லாக் ஆகிட்டாங்களே...அப்பறம் அண்ணன் எப்டி அண்ணீகுட சேர்ந்தாருனு ஒரு பாதி படத்த ஓட்டுவாங்க...
படம் கொஞ்சம் சுமார் தான்..36/100 தான் குடுக்கலாம்..ரொமாண்டிக் படம் புடிச்சவங்க இந்த படத்தை தாராளமா பார்க்கலாம்.

புது பையன்-THE NEW GUY


முதல் படம் மொக்கயா இருந்ததால அடுத்த படத்தயும் இப்பவே ஓட்டிரலாம்.இந்த படத்துக்கு பேரு THE NEW GUY.இது ஒரு காமெடி+ஜாலி படம்.
 படத்தோட ஹீரோவ பாத்தா கொமட்டும்.அவ்வளோ கொடூரமா இருப்பான்.ஆனா கொஞ்ச நேரத்துலயே அவன் அழகா ஆகிடுவான்.அவன்  பாத்த ஒடனே பிடிக்கர ஜாதி இல்ல ...பாக்க பாக்க புடிக்கர ஜாதி...இந்த படத்துக்கு கதை இதுதான்.கில்லெஸ்பி(ஹீரோ பேரு) ஒரு காமெடி பீசு வனோட ஸ்கூல்ல.அவன எல்லாரும் கிண்டல் பண்ணவும் ஒரு நாள் குடிச்சுட்டு ஸ்கூல்க்கு வந்துடுவான்.அதனால அவனுக்கு தண்டனயா ஒரு நாள் ஜெய்ல்க்கு அனுப்பிடுவாங்க.ஜெய்ல்ல ஒரு சூப்பர் கைதி இருப்பான்.அவன கண்டா எல்லாரும் அலறுவாங்க.அவங்கிட்ட பொயி தன்னோட பிரச்சனய சொல்லி அழுவான்.உடனே அவனும் மனசு எளகி "1 நாளில் டெர்ரர் ஆவது எப்படி"அப்டினு சொல்லி குடுப்பான்.

டெரரை உருவாக்கும் இன்னொரு டெர்ரர்

            ஸ்டெப்-1
முதல்ல நீ படிக்கர ஸ்கூல விட்டு  வெளில வந்துடனும்.அவங்களே கழுத்த புடிச்சு தள்ளர மாதிரி ஒரு காரியத்த செய்யனும்
           ஸ்டெப்-2
நீ போர புது ஸ்கூல்ல இருக்கர தாதாபசங்களை முதல் நாளே அடி தூள் பண்ணனும்
           ஸ்டெப்-3
அங்க இருக்கரதுலயே வித்தியாசமான சேட்டை எல்லாம் பண்ணனும்
       இந்த கீதோபதேசத்தை பாலோ பண்ணி அவனும் டெர்ரர் ஆகிடுவான்.அப்போதான் வரும் பிரச்சனை.இவன் இப்போ படிக்கர ஸ்கூல்க்கும் பழய ஸ்கூல்க்கும் ஃபூட்பால் மாச் நடக்கும்.அங்க இவன் இருந்தே ஆகணும்.எப்படி அதை  இவன் சமாளிக்கரான்?
இதுதான் கதை...
ப்டம் ரொம்ப நல்லாருக்கு.ஹீரோவா நடிச்ச பைய்யன் தூள் கெளப்பிருப்பான்...முதல்ல படம் ஆரமிக்கும்போது நல்லருக்காதுனு ஒரு பீலிங்கி.போக போக நல்லாருந்துச்சு...
படம் பிடிச்சா பாருங்க.
மறக்காம வோட்ட குத்துங்க.
அன்புடன்
உங்கள் தோழி
கிருத்திகா

26 October, 2009

ஆதவன்-விமர்சனம் இல்லை...சும்மா படிக்க




காட்சி-1,சனிக்கிழமை,24/10/2009,4.35PM
                                                  2 நாள் பயணமாக புதுவைக்கு சென்றிருந்தேன்.அங்கே தான் ஆதவன் தரிசனம் கிடைத்தது.படம் பார்ப்பதற்கு முன்னால் சில நண்பர்கள் சொன்னதையும்  பதிவர்கள் இட்ட விமர்சனங்களையும் பார்த்து வெறுத்து போய் "படம் மட்டமாதான் இருக்கும்"நு ஒரு முடிவுக்கு வந்துட்டேன். ஆனாலும் எங்கள் குடும்பம் மொத்தமும் கிளம்பி போகலாம்னு முடிவெடுத்தோம். முருகா தியேட்டரிலும்,ஆட்லாப்சிலும் படம் ஓடுகிறது.நாங்கள் முருகா தியேட்டரையே தேர்ந்தெடுத்தோம்.ஏன்னு கேட்டா ஆட்லாப்ஸ்ல ஸ்னாக்ஸ் எதுவும் எடுத்திட்டு போககூடாதாம்....அது நமக்கு கஷ்டமாச்சே :)
காட்சி 2,6.30PM
                                  தியேட்டர்க்குள்ள போகும்போதே 6.30 ஆகிட்ச்சு.. title முடிஞ்சுருக்கும்னு நெனச்சு போனா படமின்னும் ஆரமிக்கவே இல்ல....கூட்டம் கடல் மாதிரி இருக்கு.ரொம்ப நாள் கழிச்சு(ஷிவாஜி படத்துக்கு அப்புறம்) ஹவுஸ்புல் போர்டை இந்த படத்துக்கு  தான் பார்த்தேன்.வண்டிய பார்க் பண்ணறத்துக்கு ஒரு கூட்டம்,தியேட்டர் உள்ள நுழய ஒரு கூட்டம் யப்பபபா ....எல்லாத்தயும் தாண்டி  c-13 - c-20  சீட்டை கண்டுபுடிச்சு  போயி ஒரு வழியா செட்டில் ஆனோம்.பிரீத்தி மிக்சி விளம்பரமும் ஏர்செல் விளம்பரமும் முடிஞ்சதுக்கப்பறம் கோவா டிரைலர் போட்டாங்கோ.படம் ரொம்ப குளுகுளுனு இருக்கு..அதயும் பாத்துரனும்னு மனசுல நெனச்சிகிட்டு இருக்கும்போதே ஒரு பாப்பா போட்டோ கறுப்பு வெள்ளைல....அப்போ ஆரமிச்ச விசில் சத்தம்  சூரியானு பேரு போட்டத்துக்கு அப்பறமும் ஓயல
காட்சி 3,6.45 PM
                                 ஆதவன் கதயை எழுத போறது இல்லை இப்போ.அத செய்யறத்துக்குனே சில பாப்புலர்  பதிவர்கள் இருக்குராங்க.நாம ஒதுங்கிக்கலாம்.நம்ம லிமிட் இங்கிலீசு படத்தோட முடிச்சுக்குவம்.அந்த கோட்ட தாண்டி நானும் வரமாட்டேன்*.இருந்தாலும் படத்துல எல்லாரும் ரசிச்ச காட்சிகளை பத்தி கொஞ்சம் சொல்லலாம்னு நெனைக்குரேன்.
                                படத்த தூக்கி  நிறுத்தறது 4 பேருதான்.
1)வடிவேலு
2)கே.எஸ்.ரவிக்குமார்
3)ஹாரிஸ் ஜெயராஜ்
4)சூரியா.
                 வடிவேலு ஸ்கிரீன்ல வரும்போது கண்டிப்பா  நமக்கு சிரிப்பு வந்துடும்.100% கியாரண்டீ...ரொம்ப நாள் கழிச்சு இவர இந்த படத்துலதான் அடி வாங்காதமாதிரி(ஏறக்கொறய) காட்டிறுக்காரு ரவி.அதோட பானர்ஜீயோட பெயர்க்காரணம்,பொறம்போக்கு -புது விளக்கம்,ஜிகர்தண்டா தூத் குடிச்சுட்டு உளறும் காட்சி, பாம் வெச்ச பஸ்ல ஏறிட்டு படாத பாடு
படு(த்)றது இப்படி படம் பூரா மின்னிருக்காரு.வின்னர் கைப்புள்ளை,தலை நகரம் நாய் சேகர்,சந்திரமுகி முருகேசன் வரிசையில் கண்டிப்பா இந்த பானஜீக்கும் இடம் உண்டு.
                   
                அடுத்து ரவிக்குமாரின் டைரக்ஷன் பத்தி சொல்லவே வாணாம். சரத்த நாட்டாமை ஆக்கி,ரஜினியை படயப்பாவாக்கி,கமலை 10 அவதாரம் எடுக்க வெச்சவருக்கு சூரியாவை ஆதவன் ஆக்கரதா கஷ்டம்?????அதோட 10 வயசு பைய்யனா சூர்யாவைக்காட்டி ஒரு புது ட்ரெண்ட் செட் பண்ணிட்டாரு.அடுத்து இனிமேல 2 மாச குழந்தை,4 வயசு பையன் இப்டிலாம் பிற்காலத்துல வரலாம்...

                     ஹசிலி ஃபிசிலியை ரசிக்காதவங்களே இல்ல.அதை விட என்னை பொறுத்த மட்டில் வாராயோ மோனாலிசா பாட்டு இன்னும் சூப்பர்.பிண்ணனி இசையிலும் ஹாரிஸ் கொடி நல்லாவே பறக்குது.

                    கடசியா சூர்யாவை சொல்லிருந்தாலும் தன்னோட வேலயை மிக சரியாகவும்,சிறப்பாகவும் செஞ்சு கலக்கோ கலக்குனு கலக்கி இருக்காரு சூர்யா.படத்துக்கு படம் அவருக்கு அழகு கூடிக்கிட்டே போகுது...அவரும் வடிவேலுவும் சேர்ந்து பின்னி பெடல் எடுத்துருக்காங்க.ஆக்ஷன் ரோல்,கொஞ்சம் காமெடி,அப்பப்போ நயன் தாராகுட சாங்க்கு டான்ஸ்.இவ்வளவேதான்.அதயும் நல்லா செஞ்சு கைதட்டல் வாங்குராரு.
                  கிலைமாக்சில் லேசாக ஒரு செயற்கைத்தனம் தெரிந்தாலும் கமர்ஷியல் படத்தில் யாராவது லாஜிக் பாக்கலாமா????
அதனால ஆதவன் நல்லா இல்லைனு யாரும் சொல்லாதிங்க நண்பர்களே....

படத்தை பார்த்துட்டு நீங்கள் வெளில வரும்போது  இதில் எதாவது ஒன்றை சொல்லுவிங்க
சூர்யா  ரசிகராக பார்த்தால்-சூப்பர்,செம படம்...வாய்ப்பே இல்லை

நடுனிலயாளராக- பரவாயில்லை ஒரு முறை பார்க்கலாம்...நல்லாருக்கு

சூர்யா பிடிக்காதவர்களும்,கமர்ஷியல் படம் பிடிக்காதவர்களும்---எப்பிடியும் குறை தான் சொல்ல போறிங்க.அத நீங்களே சொல்லிகுங்க
                                                                                              (நீங்கள் இந்த படத்தை பார்க்காமல் இருப்பதே உங்களுக்கும்,என்னைப்போல K.S,R  பிரியர்களுக்கும் நலம்...)

காட்சி 4-9.45 PM

       படம் முடிஞ்சு போச்சு...  அவளதான்...
நீங்க இந்த பதிவுக்கு வோட்ட குத்திட்டு போங்க...
கருத்துக்களயும் கொட்டிட்டு போங்க...

அன்புடன்
உங்கள் தோழி கிருத்திகா

19 October, 2009

சினிமா கொட்டாய்-கண்டிப்பாக,இருக்கலாம் !!!-விமர்சனம்





வனக்கம் வந்தனம் நமஸ்தே நமஷ்கார்
தீபாவளி நல்லா கொண்டாடிருப்பிங்க...:)
இந்த வாரம் நம்ம சினிமா கொட்டாய்ல பாக்கபோர திரைப்படம்  DEFINITELY,MAYBE
இந்த படத்த  ஹாலிவுட்டின் ஆட்டோகிராப்னு சொல்லலாம்.நம்ம ஹீரோ பேரு வில் ஹேய்ஸ்(ரே ரேனால்ட்ஸ்).அவரு வாழ்க்கைல வர்ர 3 பொண்ணுங்களை பத்தி சொல்லுராரு அவருடய பொண்ணுகிட்ட :).
 கதை ரொம்ப பெருசு.ஆன நான் சுருக்கமா சொல்லரேன்.
கதை ப்லாஷ் பாக்.இத அவரு பொண்ணுகிட்ட சொல்லரமாதிரி எடுத்துருக்காங்க.
"என்னோட அம்ம யாருனு" அந்த குட்டி பொண்ணு  வில் கிட்டகேக்குது.இப்போ மார்ட்டீன் காய்லை முசிக் விட்டுக்கொண்டே சுத்தவும்.
10 வருஷத்துக்கு முன்னாடி..........
வில் ஒரு speech writer. அதாவது அரசியல்வாதிகளுக்கு  மேடைப்பேச்சுகள் எழுதிதர்ரவரு.லோக்கல அரசியல்வாதிகளுக்கு எழுதுன ஸ்டைல பாத்துட்டு பிரசிடெண்ட் ஆபிஸ்லே வேலைக்கு சேர  கூப்ட்ராங்க.அப்போ இவரும்  எமிலி@சாரா அப்டிங்கரவங்களும் லிவிங்க்-டு.கெதர்...எமிலி ஒரு டைரியை அவங்க நண்பி சம்மர் அப்டிங்கரவங்ககிட்ட தர சொல்லி குடுத்துவிடராங்க.(மண்ண தானே தன் தலைல அள்ளி போட்டுகரதுன்னா இதுதான்).அவங்களை வீட்டுல விட்டுட்டு இவரு நியுயார்க்  போயிட்ராரு.ஆபிஸ்ல ஏப்ரல்னு ஒரு பொண்ணு வேல பாக்கராங்க.அவங்களும் இவரும் பிரன்ஸ் ஆகிட்ராங்க.அதுக்கப்பரம் சம்மர பாத்து டைரிய குடுக்கராரு.இப்ட்யே கொஞ்ச நாள் போகுது.இவரோட ஆளு ஒரு நாள் இவர பாக்க நியுயார்க் வருது.வந்து கல்யாணம் பண்ணிக்கபோராங்கன்னு பாத்தா அந்த பொண்ணு இவரு பிரண்டோட லிவிங்க்-டு.கெதர்....அப்ட்யே ஷாக் ஆகி இந்த கனெக்ஷன கட் பண்ணிடுராரு வில்.அதுக்கப்பரம் சம்மருக்கு இவருக்கும் ஒரே எடத்துல  வேலை ஆகிடுது.கொஞ்ச நாள்ள அந்த சம்மர் பொண்ணு மேல ஐயா  காதலில் விழுந்தேன் :) ஆகிட்ராரு.சரி இப்பனாச்சும் மனுஷன் கல்யாணம் பன்னுவான்னு பாத்தா அந்த பொண்ணு  ஒரு பெரிய தலைவரை பத்தி தப்பா பேச்சு எழுதி குடுத்துடுது.அதுக்கு இவர பொறுப்பாக்கி ஆபிஸ்லேர்ந்து வெளில தள்ளிட்ராங்க.அந்த சம்மரும் அவங்க ஆளோட போயிடுராங்க.இப்போ நம்ம கதைல மிச்சம் இருக்கரது ஏப்ரல் மட்டும் தான்.அவங்க ஊர விட்டே போயிட்ராங்க அவங்க ஆளோட சண்ட போட்டுட்டு.
அந்த குட்டி பொண்ணு குழம்பி போகுது.விரக்தில என்ன தத்து எடுத்து வளத்திங்களாப்பானு கேக்குது பாவமா.மீண்டும் கதய  கண்டினியூ பண்ணலாம் நீயே கண்டுபிடிப்ப அப்டினு சொல்லிட்டு தொடர்ராரு வில்.
கொஞ்ச நாள் கழிச்சு  எமிலி திரும்ப வராங்க இவர மீட் பண்ண.அந்த "கஸ்மாலம் என்ன உட்டுட்டு பூட்சுனு " ஒப்பரி வெக்காம வெக்கராங்க.
சம்மர் "என் ஆளு புட்டுகிட்டான்." அப்டின்னு இவருகிட்ட வந்து சொல்லுராங்க.ஏப்ரல இவர் போயி பாக்குராரு.அவங்கள லவ் பண்ரதா சொல்லுராரு.அவங்க "நமக்குள்ள நட்பு மட்டும்தான்"நு  இவருக்கு டாடா காட்டிடராங்க.
இப்போ அந்த குட்டி பொண்ணு குழம்புது மறுபடியும்.
கடசில ஹாப்பி எண்டிங்க்....யாரு அவர் லவ் பண்ணினாரு??யாரு அவங்க அம்மானு சொல்லி முடிக்கராரு கதைய.அது சஸ்பென்ஸ்.நீங்களே பாத்துக்குங்க.....
ஆட்டோகிராப் மாதிரிதானே இருக்கு????
செரி எப்பவும் போல படிச்சுட்டு முத்திரயை குத்திட்டு போங்க...
அன்புடன்
உங்கள் தோழி கிருத்திகா

15 October, 2009

ஹாப்பி தீபாவளி நண்பர்களே மற்றும் நண்பிகளே...:)




அல்லாருக்கும் வணக்கமுங்கோவ்.....இது இன்னோரு சமூக அக்கரை கொண்ட பதிவு அப்டினும் வெச்சுக்கலாம்...சிலருக்கு உளர்ரேன் அப்டின்னு கூட தோணலாம்.நான் சொல்றது சரியோ இல்ல தப்போ(என்னை பொறுத்தவரை சரி)தெரியல...
விஷயத்துக்கு வரேன்.நாட்டுல நெறய மதங்கள் இருந்தாலும்  முக்கியமான 3 மதங்கள்(எனக்கு தெரிஞ்சவரை) இந்து,முஸ்லிம்,கிரிஸ்தவம்.இந்துவை தவிர மத்த மதங்களை எல்லாம் ஆராய்ஞ்சு பாத்திங்கன்னா இவங்க அடுத்த மதத்துகாரங்க கூட  சண்ட போட்டுப்பாங்களே தவிர தங்கள் மதத்துக்குள்ள சண்டை போட்டுக்கரது கம்மிதான்.சரி இது ஒரு பக்கம் இருக்கட்டும்.நம்ம  இந்துக்கள்ள கடவுள் இல்லைனு சொல்லுர கூட்டம் ஒண்ணு இருக்கு.அவங்களுக்கு ஆத்திகர்கள் வெச்சுருக்கர பேரு "நாத்திகர்கள்".அவங்களே வெச்சுக்கிட்ட பேரு "பகுத்தறிவாளர்கள்".இதை மனசுல வெச்சுக்குங்க.மேல படிங்க.
                 இப்போ ஒரு குட்டி கதை(தலைவர் ஸ்டைல்).ஒரு ஸ்கூல்ல படிக்கர ரெண்டு பேர எடுத்துக்கலாம்.(நெறய பேரு இருப்பாங்க.நம்ம கதைக்காக 2 பேரு மட்டும் :) ).அவங்கள்ள ஒரு பையன் நல்லா படிக்கரான்.இன்னொருத்தன் ப்டிக்கலை அப்டினு வெச்சுக்கலாம்.ஒரு நல்ல டீச்சர்(மிஸ்-1) என்ன பண்ணனும்??படிக்காத பையனை கூப்பிட்டு "தம்பி தம்பி!!! நீ ஏம்பா நீ படிக்க மாட்டேங்கர??நீ படிக்கரதுக்கு என்ன பண்ணலாம்?பாடத்துல எதாவது புரியலயா??எதவது கஷ்டமா இருந்துச்சுனா என்னை வந்து கேளு .இல்லனா படிக்கர பையன் கிட்ட உதவி கேட்டு படி.அப்படியும் இல்லனா டூஷன் சேர்ந்துக்க." அப்படினு சொல்லனும்.
இதே அந்த மிஸ்-2 "நீ கவலப்படாத தம்பி.அவனோட மார்க்க கொறச்சு விட்டுர்ரேன்.இல்லனா அவன பரீட்சை எழுத விடாமல் செஞ்சுரலாம்.நீ அவனை விட நல்லா மார்க் எடுத்துருப்ப"அப்படினு சொன்னா அவங்களை எந்த ரகத்துல சேர்க்குரது???இதை நான் ஏன் சொல்லுரேன்னு அனேகமா எல்லாருக்கும் புரிஞ்சுருக்கும்.
           என் ஊரு சிதம்பரம்.இங்கே நடந்துட்டு வர்ர பிரச்சனைய  தொடர் பதிவா எழுதலாம்.ஆனா நமக்கு தான் அரசியல்(!!!!!!!!) பிடிக்காதே( :) ஹி ஹி) .நடராஜர் கோவிலை அரசாங்கம் எடுத்துகிச்சு.அது கூடாதுனு கோவிலை பரம்பரை பரம்பரையா நடத்திட்டு வர்ர தீட்சிதர்கள் சொல்லுராங்க.இப்ப சீனுக்குள்ல நுழயராங்க நம்ம நாத்திகர்கள் @ "பகுத்தறிவாளர்கள்".இரண்டு நாட்கள் முன்னால் இங்கே  ஒரு மீட்டிங் போட்டுருந்தாங்க.அவ்வளவா கூட்டம் இல்லை.இருந்தாலும் ஒரு 50 பேருக்கு மேல இருந்தாங்க.என்னதான் பேசுராங்கனு பாப்போம்னு அடியேனும் அங்க ஐக்கியம் ஆனேன்.ஒரு அதிபுத்திசாலி பேசுராரு "ராத்திரி நம்மகூட டாஸ்மாக்ல உக்காந்து தண்ணி அடிக்கர பயலுங்க கிட்ட நாம அடுத்த நாளு காலைல கோவில்ல விபூதி வாங்க வேண்டிருக்கு.மதியானம் நம்ம கூட முணியாண்டி விலாஸ்ல சாப்டுர சல்லி பசங்க(நோட் த பாய்ண்ட்) கிட்ட சாயங்காலம் குங்குமம் வாங்க வேண்டி இருக்கு."அப்படிங்கர சில அருமையான(அபத்தமான) கருத்துக்களோட இதயும் சொன்னாரு"மாமி சின்ன மாமி மடிசார் அழகில் வாடி சிவகாமி"அப்படின்னு பாடுனார் இளையராஜா.அதுல குட பாருங்க மாமிக்களைதான் முன்னிலை படுத்திருக்காரு"அப்டின்னு ஒரே போடா போட்டாரே பாக்கணும்.அதோட எடுத்தேன் ஸ்கூட்டிய.ஜூட்டு தான்.இத ஏன் இங்க சொல்ரேன்னு யோசிக்கிரிங்களா???அங்க தான் விஷயமே இருக்கு.
                      அவங்க என்ன் சொல்லி மீட்டிங்க ஆரமிச்சாங்கன்னா "கோவிலை ஆக்கிரமித்திருக்கும் தீட்சிதர்களை விரட்டுவதே எங்கள் குறிக்கோள்.காலம் காலமாக அவர்களே ஆண்டுகொண்டிருக்கிரார்கள்.ஆன்மீகத்தை வளர்க்காமல் தீண்டாமை வளர்க்கின்ரார்கள்" அப்டின்னாங்க.எனக்கு ஒண்ணுதான் புரியல.எந்த காலத்துல இருக்கராங்க இவங்க....கிராமங்கள்ள போயி இத மாதிரி சொன்னாலும் அர்த்தம் இருக்கு.ஆனா இங்க வந்து இப்படி சொல்லுராங்களே..தீண்டாமை இன்னும் ஒரு சில இடங்களில் இருந்துக்கிட்டு தான் இருக்கு.அதை நான் இல்லைனு சொல்லல.தீண்டாமையை ஒழிக்கட்டும்.அதயும் வேணாம்னு சொல்லல.அதுக்கு அவங்க தாழ்ந்தவர்கள் அப்படினு அவங்களே ஒரு பிரிவை நினைக்கராங்க இல்லயா...அவங்க மிஸ்1 மாதிரி வளர உதவி செய்ய்யனும்.அதை விட்டுட்டு மிஸ்-2 மாதிரி அடுத்தவங்களை கால வாரி விட்டுட்டு ஒருத்தரை முன்னேத்தரது தப்பு....அதோடு இன்னொரு விஷயமும்...எதாவது வாகன்சி இருக்குனு போட்டு இருந்தாங்கன்னா அதை பாருங்க.சமீபத்துல ஒரு நிறுவனத்துல 50 இடங்கள் காலினு  ஒரு அறிவிப்பு.அதுல  பாத்திங்கன்னா எல்லாருக்கும் ஒதுக்கீடு போக ஜென்ரலுக்குனு 25 இடங்கள் தான்...இதை நான் புகாரா சொல்ல வரலை.இப்படி இருக்கும்போது ஏன் இன்னும் இன்னும் கீழ தள்ளராங்க??? இப்போ பாவப்பட்ட நிலையில இருக்கரது யாருனு நீங்களே சொல்லுங்க.....
                      

                               
           இதன் மூலமாக நாம் சொல்ல வரும் கருத்து என்னவென்றால் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.இவங்க புத்தியில இருக்கர அறியாமயும்,தீண்டாமையும் பொசுங்கட்டும்.....நல்ல இனிப்பு காரம் எல்லாத்தயும் சாப்புடுங்க.அதோட பட்டாசு வெடிக்குரப்போ பாத்து வெடிங்க...அக்கம் பக்கம் பாத்துகிட்டும் வெடிங்க.யாராவது போகும்போது லெஷ்மி வெடிய கொளுத்தி பயமுறுத்தரது,ராக்கெட்ட உட்டு ரகள பன்ரது...இதெல்லாம் வேணாம்...(சும்மா காமெடிக்கி :) )
ஹாப்பி தீபாவளி நண்பர்களே மற்றும் நண்பிகளே...:)

07 October, 2009

கோடு போட்ட சட்டை போட்ட பையன்-திரை விமர்சனம்





THE BOY IN STRIPED PYJAMAS...இது உலகப்போர்-2 காலத்து படம்.
ஜூக்களை எப்படி கொடுமைப்படுத்தினார்கள் ஜெர்மானியர்கள் அப்டிங்கரத ஒரு சின்ன பைய்யன வெச்சு ரொம்ப அழகா சொல்லிருக்காரு இயக்குனர்.ஒடனே டாக்குமெண்டரினு நெனக்காதிங்க.ஷங்கர் படம் மாதிரி ,இந்த படத்த பார்த்த ரொம்ப நேரத்துக்கு அப்பறம் கூட அதன் தாக்கம் குறையல

 
(ப்ருனோவொட அப்பா,அம்மா)

     
                        ப்ருனோங்கர 8 வயசு பையன் தான்  கதாநாயகன்.அவனுடைய அப்ப(ரால்ப்)  ஜெர்மனியின் போர் கம்மாண்டெண்ட்.புருனோக்கு ஒரு அக்காவும் கூட.கதையின் ஆரம்பத்துல பெர்லின்லேருந்து அவங்க குடும்பம் வேற ஒரு கிராமத்துக்கு அதாவது யூதர்களை கொல்லும் காம்ப் இருக்கர எடத்துக்கு மாறிடுது.அழுதுகிட்டே நண்பர்களுக்கு டாடா சொல்லுராரு ப்ருனோ.புது வீடு  சுத்தமாபிடிக்கல அவனுக்கு.அந்த வீட்டை சுத்தி காவல் இருக்கும்.அதோட விளயாடவும் யாரும் சின்ன பசங்க அங்க இருக்கமாட்டாங்க.பாவெல் அப்டினு ஒரு வயசானவரு(ஜூ இனத்தை சேர்ந்தவர்) அங்க எடுபிடியா இருப்பாரு.ப்ருனோ பாவெலோட பேசுனாலே அவங்க அப்பாவுக்கு சுத்தமா பிடிக்காது. இப்டி தனிமையிலே வாடிப்போரான் ப்ருனோ.
                அப்போதான் அவன் வீட்டுக்கு  பின்னாடி ஒரு கதவு இருக்கரத கண்டுபிடிக்கரான்.அதுவழியா கொஞ்ச தூரம் போனா யூதர்களை அடைத்துவைத்திருக்கும்  காம்ப் வருது.அங்கே ஷ்முயேல் அப்டினு ஒரு சின்ன பையனை சந்திக்கரான் ப்ருனோ.அவன தினமும் பாக்க வர்ரான்.எதாவது விளயாட்டு பொருளும்,அதோட அவனுக்கு சாப்பிடவும் எதாவது கொண்டு வருவான்.அம்மா ,அப்பாக்கு நைசா டேக்கா குடுக்கரான்.தினமும் இது தொடருது.ஆனா அவங்க அப்பாவோ தினமும் நூத்துக்கணக்குல யூதர்களை கொன்னுட்டு வராரு.(இது ப்ருனோக்கும் அவன் அம்மாவுக்கும் தெரியாது). ப்ருனோக்கு ஒரு நாள் அடிபட்டுடவும் பாவெல்   வந்து மருந்து  போட்டு விடுராரு.அப்போதான் அவர் சொல்லுராரு தான் ஒரு டாக்டர்னு.அப்டியே ஷாக் ஆகிடரான் ப்ருனோ.அவன் மனசுல அவங்க அப்பா செய்ரது தப்புனு மைல்டா தோண ஆரமிச்சுடுது.அவன் அம்மாவும் கண்டுபிடிச்சுடராங்க இவர் செய்ரத.அவங்களுக்கு தன் கணவர் ஜூக்களை கொல்லுரது சுத்தமா பிடிக்காது.அதனால சண்ட போட்டுட்டு வேற எடத்துக்கு குழந்தைகளை அனுப்பனும்னு சொல்லிடராங்க.
                அன்னிக்கு ப்ருனோ,ஷ்முயேல் கிட்ட தான் வீடு மாறி போகபோறதாக சொல்லுரான்.உடனே ஷ்முயேல் தன்னோட அப்பாவ காணும்,நேத்திக்கி இந்த சோல்ஜர்ஸ் வந்து கூட்டிட்டு போனாங்க.அதுக்கப்பரம் திரும்ப வரவே இல்லனு சொல்லுரான்.அப்போதான் விபரீதமா ஒரு யோசனை தோணுது ரெண்டு பேருக்கும்.ப்ருனோ அந்த காம்ப்க்குள்ள வந்து அவன் அப்பாவ தேடிக்குடுக்கரதாக சொல்லுரான்.அவனுக்கும் ஒரு கோடு போட்ட சட்டை தர சொல்லுரான்.ஷ்முயேலும் போய் கொண்டுவந்து தரான்.ப்ருனோவும் காம்ப்குள்ள போய்ட்ரான்.ரெண்டு பேரும் தேடிக்கிடே இருக்கும்போதே அந்த எடத்துல இருக்கர யூதர்களை எல்லாம் கொல்ல  நாஜிவீரர்கள் இழுத்துட்டு போராங்க.அதுல ரெண்டு பேரும் மாட்டிக்கராங்க.அந்த பக்கம் அவங்க அம்மா,அப்பா,அக்கா எல்லாரும் அவன தேடிக்கிட்டு இந்த காம்ப் வரை வந்துடராங்க.கடசில யூதர்களை கொல்லர காட்சி ரொம்ப கொடுமயா இருக்கும்.ஒரு சின்ன ரூம்ல எல்லாரயும் நிக்கவெச்சு விஷவாயுவை அனுப்பராங்க உள்ள.கதவையும் சாத்திடராங்க.அப்டியே அந்த சாத்தின கதவுகளோட படம் முடியுது.
                 கண்டிப்பா இந்த படத்த பாருங்க எல்லாரும்.கண்டிப்பா ஒரு எடத்துலயாவது கண்ணுல குளம் தேங்கி நிக்கும்.அட்லீஸ்ட்  கொஞ்சம் வருத்தமாவது படுவிங்க.நிறைய்ய டுவிஸ்டு வரும் படத்தின் நடுவில.அந்த பாவெல்ல தண்ணிய கீழ கொட்டிட்டாருன்னு  அடிச்சே கொன்னுடுவாங்க.அதுமட்டும் இல்ல இன்னும் ஏகப்பட்ட விஷயங்கள்.
படத்த பார்த்துட்டு எப்டி இருக்குதுனு கண்டிப்பா சொல்லுங்க.அதோட வோட்டு பிலீஸ் :) ஹி ஹி

05 October, 2009

மைக்ரோசாப்ட்-வேகம்


சமீபத்தில்  Microsoft  நிறுவனம் வெளியிட்ட Windos Speed Secrets அப்டின்னு ஒரு புத்தகத்தை படித்தேன்..அதுல சொல்லிருந்தத இங்கே பகிர்ந்துக்கரேன்....
முதலில் விண்டௌஸ் xp (நான் அததான்  உபயொகிக்கரேன் :) )
(விஸ்டா வேணும்னா உங்க மின் அஞ்சல் முகவரியை குடுக்கவும்..அதற்கு அனுப்பபடும்)
வழி ஒன்னு:
1)Disable Extra Startup Programs
அதாவது நீங்கள்  உங்கள் கம்ப்யுட்டரை ஆன் செய்யும்பொது சில வகை ப்ரொக்ராம்கள் ப்ரொசெச்சரை தொல்லை பண்ணும்...அதனால Startup ல அதிகமா ப்ரொக்ரம்ஸ் இருக்க கூடாது...இதை எப்படி குறைப்பது??
இதை ஃபால்லோ பன்னுங்கோ..
       1)start -->Run அப்டினு டைப் பண்ணுங்க..
       2)அதுல வரும் பாக்ஸ்ல msconfig  அப்டினு டைப் பண்ணுங்க..
       3)அப்றம் ok குடுங்க
       4)இப்போ உங்களுக்கு System configuration utility அப்டினு ஒரு விண்டோ திறக்கும்
       5)startup ல போய் எதெல்லாம் தேவ இல்லயோ எல்லத்தயும் unchek  பண்ணுங்க..நிற்க...எல்லாத்தயும்  கட கடனு unchek செஞ்சுடாதிங்க....தேவ இல்லாததுனு எத நெனக்கிரிங்களோ...உதாரனமா  AOL, RealPlayer, instant messengers,download  and video managers, dictionaries etc etc எல்லாதயும்  எடுத்துடலாம் ஆனா Antivirus மடடும் அப்டியே இருக்கட்டும்..எடுத்துடாதிங்க
       6)இப்போ ok அழுத்துங்க...உடனே புதுசா ஒரு விண்டோ உங்களை restart பண்ண சொல்லும்..
       7)ஒகே குடுத்துட்டு  restart ஆனத்துக்கு அப்புரமா  ஒரு விண்டோ  வரும்..இதை இனிமேல் காட்ட வேண்டாம்  அப்டினு டிக்  பண்ணி விடுங்க...
இது உங்கள் கணிணியின் வேகத்தை  250% அதிகரிக்கும் அப்டினு சொல்ராங்க
வழி 2:
2)அடுத்ததா என்ன சொல்ராங்கன்னா இந்த உலகத்துல ஆறுல ஒரு கணிணி Spyware,Adware and Malware இவைகளால பாதிக்கப்பட்டுருக்காம்.அதனால உங்க கணிணியை அடிக்கடி scan  செஞ்சுக்கனும்.ஒரு நல்ல ஆண்டிவைரஸ் உபயொகப்படுத்துங்க..

என் அனுபவத்ததுல சொல்ரேன்  தயவு செய்து  AVG,NORTON,AVAST இவைகளை உபயோகிக்க வேண்டாம்..
kaspersky,MCAFEe ரெண்டும்தான் பெஸ்ட்...ஆனா எதுவுமே இல்லாமல் இருப்பதர்க்கு AVG பரவால்லை

வழி 3:
3)ஸ்க்ரீன் செட்டிங்க்ஸ்
அடுத்ததாக நீங்க உங்க ஸ்க்ரீன்ல என்ன மாதிரி செட்டிங்க்சை மாத்தனும்னு சொல்ராங்க
a)முதலில் எப்பவும் போல start -->control panelகு போங்க
b)அதுல system அப்டிங்கரத க்ளிக் பன்னுங்க ரெண்டு தடவ(double clik)
c)அதுல advanced அப்டிங்கரத தேர்ந்தெடுங்க
d)இப்போ performance settingsல போயி நீங்க என்ன செய்யனும்னு கீழே குடுதுருக்காங்க
இந்த 5 டப்பால மட்டும் டிக் பண்ணுங்க.மத்தத எடுத்துடுங்க.
         a.  Show shadows under menus
          b. Show shadows under mouse pointer
          c.  Show translucent selection rectangle
          d. Use drop shadows for icons labels on the desk
             e.  Use visual styles on windows and buttons
f)செஞ்சுட்டு Apply குடுத்துட்டு  ok குடுங்க..
இப்போ இன்னும்கொஞ்சம் வேகமா இயங்கும்..

வழி 4
4)கணிணி வேகத்த அதிகரிக்க இருக்கறதுலயே சுலபமான ம்ற்றும் முக்கியமான வழி ரெஜிஸ்ட்ரி மாற்றம்.
அதுல என்னன்ன செய்ய்யலாம்னு அடுத்த பதிவில சொல்ரென்...(கை வலி தாங்கமுடியல....:(....)

30 September, 2009

போலாம் ரைட்...



இந்த பதிவை ஒரு இனிப்பான விஷயத்தோடு ஆரமிப்போமே...
"பாஸ் "ஒட  துப்பாக்கியிலே இன்னொரு தோட்டா  சேர்ந்துள்ளது.தமிழ் நாடு  அரசு விருதுகளில சிறந்த நடிகர் விருது கெடச்சுருக்கு பாஸ்க்கு...பேர கேட்டாலே சும்மா அதிருதில்ல.....நம்ம கமல்ஜியும் விருது வாங்கிருக்காரு..மொழி படத்துக்காக சிறந்த நடிகை விருதை திருமதி.ஜோதிகா சூர்யா அவர்களும்,வாரணம் 1000  படத்துக்காக சிறந்த நடிகர் விருதை திரு சூர்யா அவர்களும் வாங்கிருக்காங்க...
                   சரி இப்போ விசயத்துக்கு வருவோம்....நான் எழுதனும்னு நெனச்சது கலைஞர் டீவில விடுமுறை கொண்டாட்டத்த பத்தி...மத்த சானல் எல்லாம்  சரஸ்வதி பூஜயும் விஜ்யதசமியும்  கொண்டாடுரப்போ இவிங்கே வித்தியாசமா விடுமுறைய கொண்டாடுராங்க...ஆனா கடுமையான வேலைபளுவினால் (கொட்டிகரதுதான் :) !!!!!!!!!!!!!)சர்யான  நேரத்தில் அதை பற்றி  எழுத முடியவில்லை.அதனால் சின்னதாக முடித்துவிட்டேன்.


                எழுத எக்கச்ச்ச்ச்ச்க்கமான விஷ்யங்கள் இருக்கு...இப்போ  என் மனசுல நின்ன பஸ் கண்டக்டர்  பத்தி எழுதப்போரேன்.என் உறவுக்காரங்க வீட்டுலேருந்து வந்துகிட்டே இருந்தேன்.பஸ் ஸ்டாண்டிலே எகச்சக்க கூட்டம்.எப்டியோ துண்ட போட்டு எடத்த புடிச்சு ஏறிட்டேன்.புளி மூட்டை மாதிரி கூட்டம்.அதுல பாருங்க லேச ட்ரைவர் கொழம்பிட்டாரு.
15 நிமிஷம் போனதுக்குஅப்பறம் தான் தெரியுது  "ரே ரே" "விஷ் விஷ்"(விசில் சத்ததை கற்பனை செய்யவும்) சொல்ர  ஆள காணும்..வண்டிய ஓரமா நிறுத்திட்டு  வழி மேல விழி வைத்து காத்திருந்தோம்.ஒரு 15 நிமிஷம் கழிச்சு ரகளயா எண்ட்ரி விட்டாரு கண்டக்டரு.(படம் டி.வி.டி வாங்க போயிட்டாராம். என்னே கடமை :)!!!!!).ட்ரைவரை செம காச்சு...செரினு  டிக்கெட் குடுத்து முடிச்சுட்டு படத்த போட்டா  அந்த டி.வி.டி ப்லே  ஆகல...பஸ் மொத்தமா செம சிரிப்பு.பாட்டு சீ.டி ஒன்ன எடுத்து  போட்டாரு."சட்ட கிழிஞ்ஜுருந்தா தச்சு முடிச்சுடலாம்" அப்டினு  சிச்சுவேஷன் சாங்கு ஓடிச்சு.அப்போவே அலர்ட் ஆகிருக்கணும்.அடுத்தது ஒரு 7.5(எழரை) பஸ்லே ஏரிச்சு
14 ருவ டிக்கெட்டுக்கு 20 ரூவாய குடுத்துடு 100 ரூவா குடுத்தேன்னு ஒரு புருடாவ உட்டுது.அதுமட்டும் இல்ல...பளார்னு கண்டக்டர் கன்னத்துல ஒரு அறை..அரண்டுட்டாங்க எல்லாரும்.அப்பறம் சுதாரிச்சு பஸ்ல இருக்கர சில ஆசாமிகள் எல்லாம் அவர செம காட்டு காட்டி பக்கத்துல இருக்கர போலிஸ் நிலயத்திலே கொண்டு பொய் விட்டுட்டாங்க..இத்தனையும் தாங்கிகிட்டு அந்த கண்டக்டர் சிரிச்சாரு பாருங்க ஒரு சிரிப்பு...இதே மாதிரி பல விஷயங்களை நீங்களும்சந்திச்சுருபிங்க..அதையும எழுதுங்க..கண்டக்டர்னு சொன்ன ஒடனே ரஜினியை பத்தியும் எழுதனும்னு தோனிச்சு.அதனால அடுத்த பதிவு(கூடிய சீக்கிரத்தில்) அவரைபற்றி தான்.(கோபி உங்களுக்காகத்தான்)