03 November, 2009

சினிமா கொட்டாய்-டான்ஸ் ஆடலாமா


இதுதான் நாம இன்னிக்கு சினிமா கொட்டாய்ல பாக்கப்போர  திரைப்படம்
டான்ஸ் ஆடலாமா?? SHALL WE DANCE....
                           நான் பார்த்ததில இந்த படம்தான் செம்மமமமம டீசண்டான படம்...ஜெனிபர் லோபஸ் நடிச்ச படம்....ஜான் பாங்க்ஸ்(ரிச்சர் கெரே) அப்படிங்கர ஒரு லாயர்,தன் வாழ்க்கை என்ற சாகரத்தில் சிக்கி,தன் வாழ்க்கை ஒரே மாதிரி போரா(bore) போகுதுன்னு நெனைக்குரார் அவருடய 20த் திருமண நாள் அன்னிக்கு...எவ்வளோ சீக்கரமா நெனைக்குரார் பாத்திங்களா.....அவரு  ஆபிஸ் போயிட்டு வரும்பொழுது தினமும் வழியில இருக்கர ஒரு டான்ஸ் ஸ்கூலை பார்த்துக்கிட்டே போவார்...அங்க தினமும் ஒரு பொண்ணு(ஜெ.லோ) ஜன்னல் வழியா சோகமான முகத்தோடு பார்த்துக்கிட்டு இருப்பாங்க.....ஏன் அவங்க முகத்துல அவ்வளோ சோகம்னு தெரிஞ்சுக்க ஆவலா ஒரு நாள் அந்த ஸ்டாப்புல இறங்கி ஜெ.லோவ பாத்து என்ன ஏதுன்னு கேட்டுடரதுனு அந்த ஸ்கூல்ல நுழஞ்சிடுவாரு.இப்போதான் திருப்பமே!!!!!!!
          
                           அவரை உள்ள இருக்குர டீச்சர் ஏன் இங்க வந்த?அப்டின்னு கேக்க உடனே இவரு திரு திருனு முழிச்சிக்கிட்டே நின்னாரு...அப்போ பக்கத்துல இருந்த ஒரு லேடி டான்ஸ் கத்துக்கதானே வந்துருக்கிங்க...அப்பறம் ஏன் வெக்கப்படுறிங்க??..வயசு ஒரு தடயே இல்ல இந்த ஸ்கூலோட கரஸ்பாண்டண்ட்க்கு வயசு 65...அவங்கதான் உங்களுக்கு டான்ஸ் சொல்லிக்குடுக்கப்போறாங்க அப்படின்னு சொல்லி இவர் மனசுல கட்டி வெச்சுருக்கர கோட்டயை உடைச்சுடராங்க......அதுக்கப்பரம் இவரும் ஜெ.லோகிட்ட பேச வாய்ப்பை எதிபார்த்துக்காத்திருக்கிரார்...ஒரு நாள் வாய்ப்பும் கிடைக்குது...அப்போ இவருனீங்க ஏன் சோகமாவே இருக்கிங்க??அப்புடின்னு கேக்க இவருடய நோக்கத்தை தப்பா புரிஞ்சுகிட்டு இவர திட்டி அனுப்பிடராங்க ஜெ.லோ.
                          

                   அடுத்த நாள் மனம் தளராம மறுபடியும் அதே சிரிச்ச முகத்தோட வராரு ஜான்..அவங்க உடனே "நாம தான் தப்பா புரிஞ்சுக்கிட்டோம்" அப்படின்னு உணர்ந்து சினேகமா பழக ஆரமிச்சு தன்னோட கதைய சொல்லுவாங்க ஜெ.லோ.அதுக்குள்ள ஒரு பெரிய போட்டில இவரையும் இன்னொரு அம்மாவையும் சேர்த்து அந்த டான்ஸ்க்கு அனுப்பி விட்டுடுவாங்க......இப்போ ஒரு புது பிரச்சனை வந்துடும்...ஜானோட பொண்டாட்டி இவரு அங்கங்க நின்னு நின்னு டான்ஸ் ஆடுரத பாத்துட்டு "பார்டி சரி இல்லையே என்ன விஷயம்னு" யோசிச்சு  இவர துப்பறிஞ்சு இவரு டான்ஸ் கத்துக்கரத கண்டுபுடிச்சுடராங்க...நேர அந்த காம்பெடிஷனுக்கே போயி நின்னுடராங்க......

               அதுவரை நல்லா ஆடிட்டு இருக்கர ஜான்  இவங்களை பார்த்த உடனே ஷாக் ஆகி  அப்பிடியே நின்னுடராரு...அங்க ஒரு கலவரமே நடக்குது...பொண்டாட்டி கோச்சுக்கிட்டு போயிடுராங்க...டாண்ஸ்க்கு இதுக்கு மேல போனா அவமானமா இருக்கும்!!!இப்போ என்ன பண்ணுராரு??ப்ரச்சனயை எப்படி சால்வ் பண்ணுரார்?? அதுதான் கதை...படம் ரொம்ப சூப்பர்...கண்டிப்பா பாருங்க...
மறக்காம வோட்ட குத்துங்க.
அன்புடன்
உங்கள் தோழி
கிருத்திகா

14 comments:

  1. தினமும் ஒரு படம் பார்த்துருவீங்க போல... இதே கதை தாங்க தினமும் மெகா சீரியல்ல போடுறாங்க

    ReplyDelete
  2. அக்கா நான் சினிமா விமர்சங்களுக்கு பின்னூட்டம் இடுவதில்லை. ஆனாலும் இது நல்ல கதைதான் போல இருக்கு. அவங்க ஏன் சேகமா இருந்தாங்கனு சொல்லவில்லை. அதான் கதையின் முக்கியம் இல்லையா. நன்றி.

    ReplyDelete
  3. நான் இந்த இடுகையை சினிமா கொட்டாயில டான்ஸ் ஆடுலாமன்னு தப்பா படிச்சுட்டேன். ஆனாலும் நீங்களும் நம்ம அண்ணாத்தை இரசிகையாதலால் ஒரு விஷயம் சொல்லறன். நான் ஏழாது படிக்கும் போது ரிலீஸ் ஆச்சு முரட்டுக்காளை. அதுள்ள நம்ம அண்ணாத்த பாட்டு "பொதுவாக எம் மனசு தங்கம்" பாட்டுக்கு நாங்க கொட்டாயில்ல ஆடுன்னம் பாருங்க ஒரு ஆட்டம். அப்ப ஆட்டத்தில்ல பொஞ்சுல முழங்கால் இடித்து அப்புறம் ஒருவாரம் மயிலு,மயிலுன்னு சப்பானி கணக்கா விந்தி விந்தி நடந்ததும் தனிக்கதை.இந்த தலைப்ப பார்த்ததும் பழைய ஞாபகம் நயாகரா மாதிரி வந்துருச்சு. இரஜினிகாந்தானந்தா அதுக்கு முதல்ல கை கொடுங்க. உங்களுக்கு ஒரு சபாஷ்.

    என் சமையல் பதிவில் கொள்ளு இரசம் போட்டுருக்கன். சமைப்பிங்கனா படிக்கவும். நன்றி.

    ReplyDelete
  4. //ஜான் பாங்க்ஸ்(ரிச்சர் கெரே) அப்படிங்கர ஒரு லாயர்,//

    இவரு தானே ஷில்பா ஷெட்டியை கட்டி பிடித்து கிஸ் அடித்து பிரபலமானவர்!!!....

    //என் சமையல் பதிவில் கொள்ளு இரசம் போட்டுருக்கன். சமைப்பிங்கனா படிக்கவும். நன்றி.//

    தலைவர் ரசிகரான பித்தனின் வாக்கு அவர்களே... உங்கள் சப்பாணி எபிஸோட் சூப்பர்...

    கொள்ளு ரசம் வச்ச லொள்ளு மனுசரே... அப்புறம் வந்து கவனிக்கறேன் உங்கள.... ஆமாம், நீங்கள் சமையல் விற்பன்னரோ?? ஹோட்டல் ஏதாவது வச்சு இருக்கீங்களா??

    ReplyDelete
  5. நல்லா இருக்கே. இப்படியான படங்கள் சில இனிமையான நினைவுகளை நமக்குள் ஏற்ப்படுத்தும்.

    படத்த பார்த்திட வேண்டியது தான்..

    ReplyDelete
  6. ஆமா தலைவர ரொம்ப புடிக்குமோ?

    ReplyDelete
  7. இந்த முறை தான் சரியாக உள்ளே வர முடிந்தது. பெயர் காரணம், மந்திர காரணம், இடுகை காரணம் என்று எல்லாமே மறுபடியும் வரத்தூண்டியது.

    உங்கள் நகைச்சுவை இன்று எனது ஆரோக்கியத்தை மேம்படுத்தியது.

    உண்மை. உண்மையைத்தவிரவேறென்றுமில்லை,

    ReplyDelete
  8. dont u like kamalhasan kiruthika?
    please try to display your own picture. it is bore to see rajnikant and so on... thank you.
    u pls try to watch my articles at http://tiruppurtvsundar.blogspot.com/

    ReplyDelete
  9. பி.வ அண்ணா.....
    எவ்வளோ குடுத்து வெச்சவங்க இந்த ஆண்கள்...டான்ஸ் எல்லாம் பட்டய கெளப்பரிங்க...தியேட்டர்ல லேச பொண்ணுங்க எந்திருச்சு நின்னாலே சத்தம் போட்டுடரது...பரவால....எஞ்சாய்
    கோபி...
    அப்படியா..ஆனா படத்துல இந்த பூனையும் பால் குடிக்குமா?அப்ப்டினு நடிச்சுருக்காரு....என்ன ஒரு வில்லத்தனம் :)

    சிம்பா

    அமாமுங்க...செம படம்...கண்டிப்பா பாருங்க

    தலைவரை ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப புடிக்கும்

    ஜோதிஜி

    நன்றீங்க :) ரொம்ப நன்றி...ஆனாலும் நீங்க இன்னும் நம்ம வழக்குல தீர்ப்பு சொல்லல


    சுந்தர வடிவேலு

    பிடிக்காதுனு கிடயாது...ரஜினி அதிகமா பிடிக்கும் அவளதான்..
    சொந்த படத்தை போட்டா யாருக்குங்க தெரியும்...

    ReplyDelete
  10. நல்லதொரு விமர்சணம்.

    பார்த்திடுவோம் ...

    ReplyDelete
  11. "ஆங்கில படங்களுக்கு தமிழில் டப்பிங் செய்யவோ அல்லது பெயர் மாற்றம் செய்யவோ அணுகவும்"

    அப்படினு உங்க வீட்டு வாசல்ல போர்டு வைக்கலாம்.

    நல்லா வைக்கறீங்க பேரு...

    கல்யாண பாட்டுக்காரன் - ஜூப்பர்.

    ReplyDelete
  12. ரொம்ப தாங்க்சுங்க.....வாய்ப்பு கெடச்சா சும்மாவா உடுவோம் :)

    ReplyDelete
  13. My friend Krithika

    Superb a kalakkuriiga

    eppa vena vaanga enga viitula nalla saputtu

    lets dance and enjoy

    :-)))))))))))))))))))

    ReplyDelete
  14. :)
    நல்லா வக்கிரீங்க தலைப்பு

    நல்ல இடுகை

    ReplyDelete